Search This Blog

Sunday, March 6, 2011

விடுதலை பெற்றது காங்கிரஸ் : இளங்கோவன் சிறப்பு பேட்டி

காங்கிரஸ் கட்சி விடுதலை பெற்றது போல் உணர்கிறேன்,'' என, முன்னாள் மத்திய இணை அமைச்சர் இளங்கோவன் கூறினார்.
தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் இருந்த போதும், முதல்வர் கருணாநிதியையும், தி.மு.க.,வையும் கடுமையாக விமர்சித்தவர், முன்னாள் மத்திய இணை அமைச்சர் இளங்கோவன். மத்திய அரசின் திட்டங்களை, தன் திட்டங்களாக தி.மு.க., அரசு விளம்பரப்படுத்துவதாக குறை கூறியவர்.
தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி முறிவுற்ற நிலையில், டில்லியில் உள்ள இளங்கோவன், போன் மூலம் அளித்த பேட்டி :தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி முறிவுற்றதன் மூலம், காங்கிரஸ் தொண்டர்கள் விடுதலை பெற்றது போல் உணர்கிறேன். காங்கிரஸ் மேலிடம் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்தாலும், அதற்காக பாடுபடுவோம்.இவ்வாறு இளங்கோவன் கூறினார்.
தி.மு.க., - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு முறிவுற்று, மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாக, தி.மு.க., நேற்று முன்தினம் அறிவித்தது. இது, ஈரோடு மாவட்டத்தில் உள்ள இளங்கோவன் ஆதரவாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இளங்கோவன் ஆதரவாளர்களும், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளும், தங்களுக்கு தெரிந்த போன் மொபைல் எண்களுக்கெல்லாம், "விஸ்யூ ஹேப்பி கூட்டணி முறிவு; கிரெடிட் கோஸ் டூ அவர் லீடர் ஸ்ரீ ஈ.வி.கே.எஸ்' என, எஸ்.எம்.எஸ்., அனுப்பினர்.பட்டாசு வெடித்து, கொண்டாடவும் தயாராகினர். ஆனால், முன்னாள் மத்திய அமைச்சர் அர்ஜுன் சிங் மறைவால், அம்முயற்சியை கைவிட்டனர்.

No comments: