Search This Blog

Sunday, May 27, 2012

5வது ஐபிஎல் தொடரின் சாம்பியன் கொல்கத்தா

ஐபிஎல் 5 தொடரின் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது. 191 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கடைசி வரை போராடி, மிக சிறப்பாக ஆடி அபார வெற்றி பெற்றது. துவக்க வீரர் பிஸ்லா, காலிஸ் ஆகியோர் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு உதவினார். ஐபிஎல் 5 தொடரின் இறுதிப் போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. போட்டியின் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. துவக்க வீரர்களாக களமிறங்கிய மைக்கேல் ஹஸ்ஸி, முரளி விஜய் ஜோடி அணிக்கு அதிரடி துவக்கத்தை அளித்தது. முதல் 10 ஓவர்களுக்கு விக்கெட் எதுவும் எடுக்க முடியாமல் தவித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ராஜத் பாட்டியா கை கொடுத்தார். முரளி விஜய் 32 பந்துகளில் 1 சிக்ஸ், 4 பவுண்டரிகள் அடித்து 42 ரன்களை எடுத்த நிலையில், பாட்டியா வீசிய பந்தை அடித்து ஆட அதை சாகிப் அல் ஹசன் அருமையாக கேட்ச் பிடித்து அவுட்டாகினார். அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா அதிரடியாக ஒரு சிக்ஸ் அடித்து மைக்கேல் ஹஸ்ஸி உடன் ஜோடி சேர்ந்து ஆடினார். 38 பந்துகளில் அரைசதம் கடந்த மைக்கேல் ஹஸ்ஸி தொடர்ந்து அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து அதிரடியாக ஆடிய சுரேஸ் ரெய்னா 27 பந்துகளில் அரைசதம் கடந்தார். மைக்கேல் ஹஸ்ஸி 43 பந்துகளில் 2 சிக்ஸ், 4 பவுண்டரிகள் அடித்து 54 ரன்கள் எடுத்த நிலையில் காலிஸ் பந்தில் போல்டானார். அதன்பிறகு வந்த கேப்டன் டோணி, ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினார். சுரேஷ் ரெய்னா 38 பந்துகளில் 5 சிக்ஸ், 3 பவுண்டரிகள் அடித்து 73 ரன்கள் குவித்து, போட்டியின் கடைசி பந்தில் பிரட் லீயிடம் கேட்சாகி வெளியேறினார். கேப்டன் டோணி 14 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாமல் இருந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்களை இழந்து 190 ரன்களை குவித்தது. 191 ரன்களை சேஸ் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு, துவக்க வீரர் கெளதம் கம்பிர் 2 ரன்கள் எடுத்து போல்டாகி அதிர்ச்சி அளித்தார். அதன்பிறகு மற்றொரு துவக்க வீரர் பிஸ்லா அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். 27 பந்துகளில் அரைசதம் கடந்த பிஸ்லா தொடர்ந்து அதிரடியாக ஆடினார். ஆனால் 48 பந்துகளில் 5 சிக்ஸ், 8 பவுண்டரிகள் அடித்து 89 ரன்களை குவித்த அவர், மார்கலின் பந்தில் கேட்சாகி வெளியேறினார். அதன்பிறகு காலிஸ் பொறுமையாக ஆடி அரைசதம் கடக்க, அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய சுக்லா 3 ரன்களில் பிராவோ பந்தில் அவுட்டானார். அடுத்து வந்த யூசுப் பதான் 1 ரன் மட்டுமே எடுத்து அவுட்டானார். சாகிப் அல் ஹசன் பொறுமையாக ஆடி அணியின் வெற்றிக்கு பாடுபட்டார். ஆனால் பொறுப்பாக ஆடி வந்த காலிஸ் 49 பந்துகளில் 1 சிக்ஸ், 7 பவுண்டரிகள் அடித்து ஜடேஜாவிடம் கேட்கி வெளியேறினார். இறுதிக்கட்டத்தில் சாகிப் அல் ஹசன், திவாரி ஜோடி பொறுப்பாக ஆடி அணியின் வெற்றியை உதவினார். கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் திவாரி 2 பவுண்டரிகளை அடித்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. சூப்பர் சிக்ஸ்-ரெய்னா: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா போட்டியில் 105 மீட்டர் கொண்ட சிக்ஸ் அடித்து அதிக தூரம் கொண்ட சிக்ஸ் அடித்த விருதை பெற்றார். ரைசிங் ஸ்டார் விருது: ஐபிஎல் தொடரின் மூலம் இந்தியாவில் வளரும் இளம்வீரராக அடையாளம் காணப்பட்ட மன்தீப் சிங்கிற்கு ரைசிங் ஸ்டார் விருது வழங்கப்பட்டது. ஆரஞ்சு நிற தொப்பி விருது: ஐபிஎல் 5 தொடரில் அதிகபட்ச ரன்களை சேர்த்து ஆரஞ்சு நிற தொப்பியை தன்வசம் வைத்திருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர் கிறிஸ் கெய்லுக்கு, ஆரஞ்சு நிற தொப்பி விருது அளிக்கப்பட்டது. கத்திரிப்பூ நிற தொப்பி விருது: தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பந்துவீச்சாளர் மோனி மார்கலுக்கு, கத்திரிப்பூ நிற தொப்பி விருது வழங்கப்பட்டது. அவரது விருதை சகோதரர் ஆல்பி மார்கல் பெற்று கொண்டார். கார்பன் கமால் கேட்ச் விருது: ஐபிஎல் 5 தொடரிலேயே சிறப்பான கேட்ச் பிடித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வீரர் டேவிட் ஹஸ்ஸிக்கு, கார்பன் காமல் கேட்ச் விருது வழங்கப்பட்டது. இறுதிப் போட்டியில் சிறப்பான கேட்ச் பிடித்த சாகிப் அல் ஹசனுக்கு விருது வழங்கப்பட்டது. மென்மையான ஆட்ட விருது: ஐபிஎல் 5 தொடரில் பங்கேற்ற போட்டிகளில் மென்மையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பேர் பிளே விருது வழங்கப்பட்டது. இந்த விருதை கேப்டன் ராகுல் டிராவிட் பெற்று கொண்டார். ஆட்டநாயகன் விருது: இறுதிப் போட்டியில் அதிரடியாக பேட்டிங் செய்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கிய பிஸ்லாவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருது: ஐபிஎல் 5 தொடரில் சிறப்பான பந்துவீச்சு மூலம் விக்கெட்களை வீழ்த்தி, எதிரணியின் ரன் வேகத்தை குறைத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரேனுக்கு கோல்டன் பிளேயர் விருது (தொடர் நாயகன் விருது) வழங்கப்பட்டது.

Friday, May 25, 2012

தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா ! தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா ! வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவினை மிதிக்கலாமா ! குழு: உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா ! உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா ! தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா ! விடியலுக்கு இல்லை தூரம் விடிஞ்சும் மனதில் இன்னும் ஏன் பாரம் ! உன் நெஞ்சம் முழுவதும் வீரம் !இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ! குழு: உரிமை இழந்தோம் உடமை இழந்தோம் உணர்வை இழக்கலாமா ! உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா ! தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா ! வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவினை மிதிக்கலாமா ! விடியலுக்கு இல்லை தூரம் விடிஞ்சும் மனதில் இன்னும் ஏன் பாரம் ! உன் நெஞ்சம் முழுவதும் வீரம் !இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ! யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா ! ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா ! உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா ! உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா ! யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா ! ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா !