தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 63 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 48 இடங்களில் போட்டியிட்டது. இதில் 34 இடங்களில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற தொகுதிகள் மற்றும் வெற்றி பெற்றவர்கள் வருமாறு:-
1. அரியலூர் (அமர மூர்த்தி), 2. சோழிங்கர் (அருள் அன்பரசு), 3 திருவாடானை (ராமசாமி), 4. பள்ளிப்பட்டு (இ.எஸ்.எஸ்.ராமன்), 5. பரமக்குடி (ராம்பிரபு), 6. மதுராந்தகம் (காயத்திரி தேவி), 7. உதகமண்டலம் (கோபாலன்), 8. ஓசூர் (கோபிநாத்), 9. வால்பாறை (கோவை தங்கம்), 10. ரிஷி வந்தியம் (சிவராஜ்), 11. பூந்த மல்லி (டி. சுதர்சனம்), 12. ஆத்தூர் (எம்.ஆர்.சுந்தரம்), 13. காரைக்குடி ((ந.சுந்தரம்), 14. திருமயம் (சுப்புராம்), 15. காங்கேயம் (விடியல் சேகர்), 16. வேலூர் (ஞானசேகரன்), 17. வேடச்சந்தூர் (தண்டபாணி). 18. மொடக்குறிச்சி (எம்.ஆர். பழனிசாமி), 19. கடைய நல்லூர் (பீட்டர் அல்போன்ஸ்), 20. ஸ்ரீபெரும் புதூர் (யசோதா), 21. பட்டுக் கோட்டை (ரங்கராஜன்), 22. சாத்தான்குளம் (ராணி வெங்கடேசன்), 23. மயிலாடுதுறை (ராஜகுமார்), 24. தொட்டியம் (ராஜசேகரன்), 25. நாங்குனேரி (வசந்தகுமார்), 26. செங்கம் (போளூர் வரதன்), 27. போளூர் (விஜயகுமார்), 28. செய்யாறு (விஷ்ணுபிரசாத்), 29. சேரன்மகாதேவி (வேல் துரை), 30. கிள்ளியூர் (ஜான் ஜேக்கப்), 31. நாமக்கல் (ஜெயக்குமார்), 32. குளச்சல் (ஜெயபால்), 33. ராமநாதபுரம் (ஹசன்அலி), 34. ஸ்ரீவைகுண்டம் (செல்வ ராஜ்).
இடைத் தேர்தலில் மதுரை மேற்கு (ராஜேந்திரன்), தொண்டாமுத்தூர் (எம்.என்.கந்தசாமி) ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றது. இந்த 36 தொகுதிகளிலும் காங்கிரஸ் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளது.
அதற்கு ஏற்ப, காங்கிரஸ் வெற்றி பெற்ற 36 தொகுதிகளும் மீண்டும் அந்தக் கட்சிக்கே கிடைக்கும் என்று அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மீதம் உள்ள 27 தொகுதிகளில் எந்த தொகுதிகள் கிடைக்கும் என்பது தொகுதி ஒதுக்கீடு குறித்து தி.மு.க. வுடன் நடைபெறும் பேச்சு வார்த்தையின் போது முடிவு செய்யப்படுகிறது. அதன் பிறகு காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதிகளும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது.
No comments:
Post a Comment