Search This Blog

Sunday, May 29, 2011

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றத்தை விரும்பும் வாக்காளர்கள்

கடந்த 1989ல், தேர்தலுக்கு பிறகு நடந்த ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றத்தை தமிழக வாக்காளர்கள் ஏற்படுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் 1977, 1980 மற்றும் 1984ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல்களில், தொடர்ந்து எம்.ஜி.ஆர்., வெற்றி பெற்று முதல்வராக 10 ஆண்டுகள் இருந்தார். அதற்கு பிறகு 1989ல் நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., அதிக இடங்களை பிடித்து கருணாநிதி முதல்வரானார். பின் 1991ல் நடந்த தேர்தலில், அ.தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வரானார். 1996ல் நடந்த தேர்தலில், மீண்டும் தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெற்று கருணாநிதி முதல்வரானார்.தொடர்ந்து 2001ல் நடந்த தேர்தலில், காங்கிரஸ், பா.ம.க., கூட்டணியுடன் அ.தி.மு.க., அதிக இடங்களை பிடித்து ஜெயலலிதா முதல்வரானார். 2006 தேர்தலில், மீண்டும் தி.மு.க., ஆட்சியை பிடித்து கருணாநிதி முதல்வரானார். 2011 தேர்தலில், மீண்டும் அ.தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெற்று ஜெ., முதல்வராக பொறுப்பேற்று உள்ளார். இவ்வாறு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நடைமுறை தமிழகத்தில், கடந்த 22 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.

இந்த வரலாறு இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு தொடரும் என்பதை காலம் உணர்த்தும். மறைந்த எம்.ஜி.ஆருக்கு பிறகு யாரும் தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கு மேல் முதல்வராக இருந்தது இல்லை என்ற வரலாறும் நீடிக்கிறது.இதேபோன்ற பெருமை, அண்டை மாநிலமான கேரளாவுக்கும் உண்டு. கேரளாவில் 1957ல், இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் முதல்வராக இருந்த காலத்தில் இருந்து, அம்மாநில மக்கள் ஆட்சியை மாற்றி மாற்றி கொடுத்துள்ளனர். 1969-70 மற்றும் 1970-77ம் ஆண்டுகளில் சி.அச்சுதமேனன் தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்துள்ளார். 1981-82 மற்றும் 1982-87ம் ஆண்டுகளில், கருணாகரன் தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்துள்ளார். இவை மட்டுமே விதிவிலக்காக உள்ளன. மற்ற தேர்தல்களில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநில மக்களின் வரலாறாக இருந்து வருகிறது.

மாநில அரசுகளை காலி செய்யும் விவசாய நில ஆர்ஜித விவகாரம்

நாடு முழுவதும் இன்று புயலை கிளப்பி வரும் சம்பவம் விவசாய நில ஆர்ஜிதம். ரோடு, மேம்பாலம், ரயில் பாலங்கள், தண்டவாளம், விமான நிலைய விரிவாக்கம், புதிய தொழிற் பேட்டைகள், என மக்களின் உபயோகத்திற்கு பயன்படும் பணிகளுக்கு ஆர்ஜிதம் செய்யப்படுகிறது. ஒரு பக்கம் விவசாயம் என்பது நாட்டின் முதுகெலும்பு போன்றது. மறுபக்கம், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த, வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க உள்கட்டமைப்பு நன்றாக இருக்க வேண்டும்.

தவிர்க்க முடியாத அரசின் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு விவசாய நிலங்கள் எடுக்கப்படும்போது, விவசாயிகளுக்கு உரிய விலை கொடுக்க வேண்டும். இதை தான் விவசாயிகள் கேட்கின்றனர். மேற்குவங்க மாநிலத்தில், 34 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த இடது சாரி ஆட்சி, காணாமல் போவதற்கு, மம்தாவுக்கு ஆயுதமாக விளங்கியது, நந்திகிராம் மற்றும் சிங்கூர் விவசாய நில எடுப்பு சம்பவங்கள் தான். தற்போது, உத்தரப்பிரதேச மாநிலத்தில், இப்பிரச்னை புயலை கிளப்பி வருகிறது.இம்மாநிலமும், 2012ல் சட்டசபை தேர்தலை எதிர்நோக்கியுள்ளது. சிங்கூர், நந்திகிராம் சம்பவங்கள் மம்தாவுக்கு கை கொடுத்தது போல், நொய்டா சம்பவம் தங்களுக்கு, சட்டசபை தேர்தலில் கைகொடுக்கும் என்று காங்கிரஸ், பா.ஜ., உட்பட அனைத்து கட்சிகளும் கணக்கு போட்டு, இப்பிரச்னையை கையில் தூக்கி கொண்டன.உத்தரப்பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள பட்டா பர்சவுல் கிராமத்தில், ஆக்ராவில் இருந்து டில்லிக்கு, யமுனா எக்ஸ்பிரஸ் ரோடு அமைக்க தான் விவசாயம் நிலம் ஆர்ஜிதம் செய்தது.

ஆனால், ரோடு போடுவதற்கு பயன்படுத்தாமல், பல மாடிகள் கொண்ட அபார்ட்மென்ட்கள் கட்டுவதற்கு விற்கப்பட்டது. அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், நில மாபியாக்கள், புரோக்கர்கள் என கூட்டு சேர்ந்து விவசாய நிலத்தை, உள்கட்டமைப்பு என்ற பெயரில் ஆக்கிரமிப்பு செய்து, பெரிய, பெரிய வீடு கட்டுமான நிறுவனங்களுக்கு விற்று விடுகின்றனர்.தற்போது, நாடு முழுவதும் இதுதான் நடந்து வருகிறது. இந்திய பொருளாதாரம் 65 சதவீதம் விவசாயத்தை நம்பி இருக்கிறது. அப்படி இருக்கும் போது, விவசாய நிலங்கள், அத்தியாவசிய தேவையை தவிர மற்ற பயன்பாட்டிற்கு எடுத்து கொள்ள கூடாது. ஆனால், முக்கியமாக விவசாய நிலங்களை, அதுவும், அடிமாட்டு விலைக்கு அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், மாபியாக்கள் கூட்டு சேர்ந்து கொள்ளை அடிக்கின்றனர்.

நாட்டில், நிலத்திற்கு தான் இன்று அதிகளவில் மதிப்பும், கிராக்கியும் இருக்கிறது. இதை பினாமி, மாபியா பெயர்களில் அரசியல்வாதிகள் கொள்ளையடித்து வருகின்றனர். இப்பிரச்னையை தீர்க்க மத்திய, மாநில அரசுகள், விவசாய நிலம் மற்றும் தொழிற்சாலைகள் நிறுவுவதற்கு என தனியாக நிலங்களை முதலில் அடையாளம் காண வேண்டும். அப்போது தான், அரசியல்வாதிகள் மற்றும் மாபியாக்களின் கண்களில் இருந்து விவசாய நிலத்தை பாதுகாக்க முடியும். தொழிற்சாலைகள் நிறுவ ஒவ்வொரு மாநிலத்திலும், தனியாக நிலங்களை அடையாளம் காண வேண்டும்.நில ஆர்ஜிதம் செய்யும் போது எந்த நோக்கத்திற்காக செய்யப்படுகிறது என்பதை தீர்மானிக்க வேண்டும். நிலத்தின் வளத்தை கருத்தில் கொள்ள வேண்டும். விவசாயிகள் மற்றும் பொது மக்களின் கருத்து பெற வேண்டும்.

பட்டா பர்சவுல் கிராமத்தில், ஆக்ரமிப்பு செய்யப்பட்ட விவசாய நிலம் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது சிறிய உதாரணம் தான். மேலும், 2010, ஜூலை மாதம், நில ஆக்கிரமிப்பு செய்யும் போது, விவசாயிகளுக்கு உரிய விலை வழங்கப்பட்டது என்று உத்தரப்பிரதேச அரசு கூறுகிறது. ஆனால், வழங்கவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர். தற்போது, அவர்கள் கேட்பது மார்க்கெட் விலை.கடந்த தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பார்லிமென்ட்டில், நில சீர்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. ஆனால், அமலாக்கப்படவில்லை. அதற்குள், அந்த ஆட்சி முடிந்து, தேர்தலை சந்தித்தது. இன்னும், பார்லிமென்டில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படவில்லை.

மேற்குவங்க மாநிலத்தின் முதல்வராக உள்ள மம்தா பானர்ஜிக்காக இந்த மசோதா காத்திருப்பு பட்டியலில் உள்ளது. சிங்கூர் மற்றும் நந்திகிராமில் விவசாய நிலங்கள் ஆர்ஜிதம் செய்யப்பட்டது. சிங்கூரில், அரைகுறையாக நிறுத்தப்பட்டுள்ள, டாடாவின், நானோ கார் தொழிற்சாலை பணிகள் முழுமையாக்கப்பட்டு, திறக்கப்படுமா என்பது அடுத்த எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், விவசாயிகளிடம் இருந்து வாங்கப்பட்ட நிலத்தில், 400 ஏக்கர் நிலத்தை விவசாயிகள் திரும்ப கேட்டு வருகின்றனர். இவர்களுக்கு போதிய இழப்பீடும் தரவேண்டும் என்று மம்தா கூறி வருகிறார்.நில சீர்திருத்த மசோதாவில், 70:30 என்ற விகிதத்தில், அதாவது, தனியாருக்கு 70 சதவீத நிலத்தை மார்க்கெட் விலைக்கு விற்க வேண்டும். அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு தொழிற்சாலையில் வேலை கொடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு மறு வாழ்வாதாரம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். நீண்ட நாட்கள் தொழிற்சாலை துவங்கப்படா விட்டால், அந்த நிலத்தை விவசாயிக்கே திரும்ப கொடுக்க வேண்டும் போன்றவை இடம் பெற்றுள்ளன.

ஆனால், இந்த மசோதாவில் 90:10 என்று மாற்றும்படி மம்தா கோரி வருகிறார். அதாவது, 90 சதவீத நிலத்தை, மார்க்கெட் விலையில் தான் தனியாருக்கு விற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.தொழிற்சாலைக்கு நிலம் தேர்வு செய்ய வேண்டும். அந்த நிலத்தை சுற்றிலும், போதிய உள்கட்டமைப்பு வசதிகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தி தரவேண்டும். அரசின் பயன்பாட்டிற்கு விவசாய நிலம் ஆக்ரமிப்பு செய்யும் போது, விவசாயிகளுக்கு முழு இழப்பீடும் கொடுத்துவிட வேண்டும். தொழிற்சாலைகள் நிறுவ தனி இடத்தை, அரசு தேர்வு செய்து விட்டால், நிலம் தேடி, முதலீட்டாளர்கள் அலைய வேண்டியதில்லை.

இது, அவர்களது நேரத்தை, பணத்தை மிச்சப்படுத்தும். நகரங்களில் மட்டுமே, தொழிற்சாலைகள் நிறுவுவதை நிறுத்தி, கிராமங்களுக்கும் தொழிற்சாலைகளை கொண்டு செல்ல வேண்டும். அப்போது தான், பொருளாதாரம் நகரம் முதல் கிராமம் வரை சமன் செய்யப்படும். கிராமங்களும் வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும். நகரங்களில் மக்கள் நெருக்கடி குறையும்.விவசாயிகளின் நிலங்கள் திரைமறைவில் கொள்ளை அடிக்கப்பட்டு வந்தது. தற்போது, அரசியல்வாதிகளே நடத்தும் போராட்டங்களால் இவை வெளிச்சத்திற்கு வருகிறது. நில சீர்திருத்த மசோதா மூலம், விவசாயத்தில், தொழிற்சாலை வளர்ச்சியில் மாறுபட்ட இந்தியாவை அரசியல்வாதிகள் உருவாக்க வேண்டும்.

எம்.எல்.ஏ.,க்கு சாணி அடி:ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரகு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சயாரி என்ற கிராமத்தில், பழங்குடியின மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இங்குள்ள தும்ரிகுடா காட்டு பகுதியில், பூமிக்கு அடியில் பீங்கான் பொருட்கள் தயாரிக்க பயன்படும், "சைனா க்ளே' என்ற விலை உயர்ந்து களிமண் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் "சைனா க்ளே' இருப்பது தெரிய வந்தது. இதற்கான சுரங்க கான்ட்ராக்ட்டை எடுக்க அரசியல்வாதிகள் போட்டா போட்டி போட்டனர். சுரங்கம் தோண்டினால், தங்கள் வாழ்வு பாதிக்கப்படும் என்று பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.இவர்களது பிரச்னையை சட்டசபையில், அரகு சட்டசபை எம்.எல்.ஏ.,வான சிவேரு சோமா (தெலுங்கு தேசம் கட்சி) எழுப்பவில்லை. இந்நிலையில், இவர்களை சமாதானம் செய்ய சென்ற எம்.எல்.ஏ., சிவேரு சோமாவை, பழங்குடியின மக்கள் சூழந்து கொண்டு சாணம் வீசி, தடியால், கற்களால் அடித்து காயப்படுத்தினர்.இவர்களிடம் பேசி, குறைகளை நிவர்த்தி செய்திருந்தால், இவர்கள் இதுபோன்ற போராட்டத்திற்கு சென்று இருக்க வாய்ப்பில்லை. மறு வாழ்வாதாரத்தை தான் எதிர்பார்த்து இருப்பார்கள். இவர்களது கோரிக்கையை பூர்த்தி செய்ய வேண்டியது அரசின் கடமை.

கூட்டணியால் மரியாதை இழந்தேன்: வைகோ பேச்சு

கூட்டணி ஏற்படுத்தியதன் மூலம் மரியாதையை இழந்தேன்; மதிப்பை இழந்தேன்; பரிகாச பேச்சுகளுக்கு ஆளாகினேன்,'' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசினார்.

ம.தி.மு.க., 18வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், சென்னை சைதாப்பேட்டை தேரடி திடலில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசியதாவது:ம.தி.மு.க., துவக்கி 18 ஆண்டுகளில் இடைத்தேர்தல், பொதுத்தேர்தல் என, பல தேர்தலை சந்தித்துள்ளோம். ம.தி.மு.க., தனியாகவும், கூட்டணியும் அமைத்து போட்டியிட்டுள்ளது. தனியாக நின்று தோல்வி அடைந்த போது, கூட்டணி அமைக்க வேண்டும் என, கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் வலியுறுத்தினர்.ம.தி.மு.க., கூட்டணி வேண்டுமென அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் அழைப்பு விடுத்தன. இதற்கு கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் சம்மதம் தெரிவித்தனர். பல சமரசங்களை செய்து கொண்டு, கூட்டணி ஏற்படுத்தியதன் மூலம் மரியாதையை இழந்தேன்; மதிப்பை இழந்தேன்; பரிகாச பேச்சுகளுக்கு ஆளாகினேன்.

கூட்டணிக் கட்சியான ம.தி.மு.க.,வை, அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் தான் கூட்டணியை விட்டு வெளியேற்றின. நாங்களாக வெளியேறவில்லை. வெற்றி, தோல்வி எங்களுக்கு கிடைத்தாலும் தமிழக மக்களுக்காக தொடர்ந்து போராடி வருகிறோம். அது என்றும் தொடரும். பணம் வாங்கிக் கொண்டு கூட்டணி அமைத்ததாக எங்கள் மீது பழி சுமத்தினர். ஆனால், நடந்து முடிந்த தேர்தலை நாங்கள் சந்திக்காததால், அப்பழியிலிருந்து விடுபட்டுள்ளோம்.அ.தி.மு.க.,வின் புதிய அரசு பதவி ஏற்றுள்ளது. இந்த அரசின் நல்ல திட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்போம். ராஜபக்ஷேவை போர்க்குற்றவாளி என அறிவித்து, சர்வதேச கோர்ட்டில் விசாரிக்க, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இலங்கை அரசுக்கு மத்திய அரசு, பணம் மற்றும் ஆயுத உதவிகளை வழங்கக் கூடாது என, அ.தி.மு.க., அரசு வலியுறுத்த வேண்டும்.

சமச்சீர் கல்வி திட்டத்தில் குறைபாடுகள் இருந்தால், அவற்றை களைந்து விட்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். புதிய தலைமைச் செயலக கட்டடம் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. அதை, தொடர்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ம.தி.மு.க., தனக்கென தனிப்பாதையை வகுத்துக் கொண்டு மக்களுக்காக, தொடர்ந்து பாடுபடும்.இவ்வாறு வைகோ பேசினார்.

கர்நாடக பா.ஜ., அரசியலைக் கலக்கும் ரெட்டி சகோதரர்கள்

கர்நாடக அரசியலில் ரெட்டி சகோதரர்கள் வளர்ச்சி அடைந்தது, மிகவும் சுவாரசியமான விஷயம்.

ஒரு சாதாரண போலீஸ்காரரின் மகன்களாக பிறந்த கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி, சோமசேகர ரெட்டி ஆகிய மூவரும், நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால், சாதாரண பள்ளியில் தான் கல்வி கற்றனர்.கடந்த, 1999ம் ஆண்டு வரை அரசியல் வட்டாரத்தில் ரெட்டி சகோதரர்கள் யார் என்பதே தெரியாது. அந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பா.ஜ., தலைவர் சுஷ்மா ஸ்வராஜும், பெல்லாரி தொகுதியில் போட்டியிட்ட போது தான், ரெட்டி சகோதரர்கள், சுஷ்மா ஸ்வராஜின் தேர்தல் பொறுப்பேற்று முழுவீச்சில் அரசியலில் இறங்கினர். தேர்தலில் சுஷ்மா தோல்வியடைந்தார். ஆனாலும், அவரது நம்பிக்கைக்கு உரியவர்களாக பெயர் பெற்ற ரெட்டி சகோதரர்களுக்கு, அரசியலில் உறுதுணையாக வழிகாட்ட, பிற்படுத்தப்பட்ட பழங்குடி இனத்தை சேர்ந்த ஸ்ரீராமுலு துணை சேர்ந்தார்.

கடந்த 2000ம் ஆண்டிலிருந்து அரசியலிலும், வியாபாரத்திலும் அவர்களது கனவு நனவாக துவங்கியது. 2001ல் ஓபலாபுரம் சுரங்கத்தை விலைக்கு வாங்கினார். முதன் முறையாக அவர்களது குடும்பத்தில் இருந்து சோமசேகர், நகராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2002-03ம் ஆண்டுகளில் சுரங்க தொழில் கொடிகட்டி பறக்கத் துவங்கியது.கடந்த 2004ல் கருணாகர ரெட்டி, லோக்சபா தேர்தலிலும், ஸ்ரீராமுலு கர்நாடக சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். மாவட்ட தலைவர் பொறுப்புடன் பா.ஜ., கட்சியின் மாவட்ட விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பும் இவர்களுக்கு அளிக்கப்பட்டது. காங்கிரசின் கோட்டையாக இருந்த பெல்லாரி, ஸ்ரீராமுலுவின் உதவி மற்றும் பண பலத்துடன் ரெட்டி சகோதரர்கள் கைக்குள் வந்தது.

அதிகாரத்தின் மூலம் ஜனார்த்தன ரெட்டி, மேலவை உறுப்பினரானார். ம.ஜ.த., - பா.ஜ., கூட்டணி ஆட்சியில் ஸ்ரீராமுலு அமைச்சரானார். முன்னாள் முதல்வராக இருந்த குமாரசாமி, தன்னிடம், 150 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறியதன் மூலம், ஜனார்த்தன ரெட்டி தேசியளவில் தலைப்பு செய்திக்குள்ளானார்.கடந்த 2008ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தலின் போது, பெல்லாரி மாவட்டத்திற்குட்பட்ட ஒன்பது தொகுதிகளில், எட்டு தொகுதிகளை கைப்பற்றியதன் மூலம் பா.ஜ.,வில் முக்கிய இடத்தை ரெட்டி சகோதரர்கள் பெற்றனர். கருணாகர ரெட்டி, சோமசேகர ரெட்டி, ஸ்ரீராமுலு ஆகியோர் வெற்றி பெற்றதோடு, அமைச்சரவையில் இடம் பெறும் தகுதி ஜனார்த்தன ரெட்டிக்கும் கிடைத்தது. கூடவே பெல்லாரி, சித்ரதுர்கா, ராய்ச்சூர் மாவட்ட பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது.

சுரங்க தொழில், ஆந்திர மாநிலம் கடப்பாவில் இரும்பு தொழிற்சாலை என, வியாபாரத்தையும் விரிவுபடுத்திக் கொண்டனர். கர்நாடக சுற்றுலா துறை அமைச்சராக உள்ள ஜனார்த்தன ரெட்டி, அவரது வீட்டில் அமர்வதற்காக பயன்படுத்தப்படும் தங்க நாற்காலியின் மதிப்பு, 2.2 கோடி ரூபாய். பூஜை அறையில் பயன்படுத்தப்படும் பொருட்களின் மதிப்பு, 2.58 கோடி ரூபாய். இடுப்பில் அணியும் தங்க பெல்டின் மதிப்பு, 13.15 லட்சம் ரூபாய். சாப்பாட்டு மேஜையில் பயன்படுத்தப்படும் தங்க தட்டுகள், ஸ்பூன், கத்தி, கிண்ணங்கள் போன்றவைகளின் மதிப்பு, 20.87 லட்சம் ரூபாய்.

கடந்த, 2010 மார்ச் 31ம் தேதி வரையிலான தன் சொத்து குறித்து, கடந்தாண்டு ஜூன் 25ம் தேதி, லோக் ஆயுக்தாவிற்கு தன் கைப்பட அளித்த அறிக்கையில் இந்த தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.வீட்டு சாமான்கள், தங்க நகைகள், ஏர் கண்டிஷன், "டிவி', மரச்சாமான்கள் உட்பட பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை மூன்று பக்கங்களில் எழுதிக் கொடுத்துள்ளார். இது தவிர விவசாய நிலங்கள், கட்டடங்கள், முன்னோர்கள் சொத்து என, 153.49 கோடி ரூபாய் என்றும், சம்பளமாக பெற்ற தொகை, 31.54 கோடி ரூபாய் என்றும், வியாபாரங்களின் மூலம் கிடைத்த வருவாய், 18.30 கோடி ரூபாய் என்றும் குறிப்பிட்டுள்ளார்.அவரது மனைவி அருணா லட்சுமி, தன் நிர்வாகத்தின் மூலம் சம்பளமாக ஆண்டுக்கு, 16.5 கோடி ரூபாய், வியாபாரத்தின் மூலம், 22.69 கோடி ரூபாய் லாபம் பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது தவிர அவர்களது குழந்தைகளான பிரமணி, கீர்த்தி ஆகியோர் வியாபாரத்தின் மூலம் ஆண்டுக்கு, 3.7 கோடி ரூபாய் வருமானம் பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.திருப்பதிக்கு தங்க கிரீடம் உட்பட பல கோவில்களுக்கு வாரிவழங்கியுள்ளார்.இத்தகைய புகழுடன் விளங்கி வரும் ரெட்டி சகோதரர்களால் பா.ஜ., மேலிடத்தில் தற்போது புகைச்சல் கிளம்பியது. இவர்கள் இருவரும் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மாவுக்கு வேண்டியவர்களா அல்லது ராஜ்யசபா பா.ஜ., எதிர்க்கட்சித் தலைவர் அருண்ஜெட்லிக்கு வேண்டியவர்களா என்பதை பா.ஜ., வெளிப்படுத்த வேண்டிய அளவுக்கு விவாதம் எழுந்திருக்கிறது.

Tuesday, May 17, 2011

5 தொகுதிகளில் பா.ஜனதா ஓட்டை பிரித்ததால் காங்கிரசுக்கு வெற்றி

சட்டசபை தேர்தலில் தமிழ்நாடு காங்கிரஸ் 63 தொகுதிகளில் போட்டியிட்டது. பெரும்பாலான இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள், முக்கிய தலைவர்கள் தோல்வி அடைந்தனர். விளவங்கோடு, குளச்சல், கிள்ளியூர், பட்டுக்கோட்டை, ஓசூர் ஆகிய 5 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. விளவங்கோடு தொகுதியில் விஜயதரணி, குளச்சலில் பிரின்ஸ், கிள்ளியூரில் ஜான்ஜேக்கப், பட்டுக்கோட்டையில் ரெங்கராஜன், ஓசூரில் கோபிநாத் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இந்த 5 தொகுதிகளிலும் பாரதீய ஜனதா வேட்பாளர்கள் அதிக ஓட்டுகள் பெற்றுள்ளனர். அ.தி.மு.க. கூட்டணிக்கு கிடைக்க வேண்டிய ஓட்டு பிரிந்து பா.ஜனதாவுக்கு சென்றுள்ளது. எனவே, 5 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-

கிள்ளியூரில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளருக்கு அடுத்த இடத்தில் உள்ள பா.ஜனதா வேட்பாளர் 32 ஆயிரத்து 446 ஓட்டுகள் பெற்றுள்ளார். அ.தி.மு.க. வேட்பாளருக்கு 3-வது இடம்தான் கிடைத்தது. விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணி 23 ஆயிரத்து 789 ஓட்டுகள் வித்தியாசத்தில் மார்க்சிஸ்டு கம்யூ. வேட்பாளர் லீமாரோசை தோற்கடித்தார். இங்கு பா.ஜனதா வேட்பாளர் 37 ஆயிரத்து 763 ஓட்டுகள் பெற்றுள்ளார். இதனால் காங்கிரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது.

குளச்சல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரிடம் அ.தி.மு.க. வேட்பாளர் லாரன்ஸ் 11 ஆயிரத்து 821 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இங்கு பா.ஜனதா பெற்ற ஓட்டுகள் 35 ஆயிரத்து 778. ஓசூரில் காங்கிரஸ் வேட்பாளரிடம் 14 ஆயிரத்து 15 ஓட்டு வித்தியாசத்தில் தே.மு.தி.க. தோற்றது. இங்கு பா.ஜனதா பெற்ற ஓட்டுகள் 19 ஆயிரத்து 217 தே.மு.தி.க.வுக்கு இது கிடைத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும்.

பட்டுக்கோட்டையில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தே.மு.தி.க. வேட்பாளர் 8 ஆயிரத்து 779 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இங்கு பாரதீய ஜனதா 3-வது இடத்தை பிடித்தது. அந்த கட்சி வேட்பாளர் வாங்கிய ஓட்டு 10 ஆயிரத்து 164. இங்கு பா.ஜனதா போட்டியிடாமல் இருந்திருந்தால் ஓட்டுகள் பிரியாமல் அ.தி.மு.க. கூட்டணி கட்சியான தே.மு.தி.க.வுக்கு கிடைத்திருக்கும். இதனால் தே.மு.தி.க. வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பார் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்

பொள்ளாச்சி தொகுதியை அ.தி.மு.க. மீண்டும் கைப்பற்றியது சுற்றுவாரியாக ஓட்டுவிவரம்

பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துகருப்பண்ணசாமி 30,308 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஓட்டு விவரம்

பொள்ளாச்சி தொகுதியில் சுற்றுகள் வாரியாக ஓட்டு விவரம் வருமாறு:-

மொத்த ஓட்டு-1,77,052

பதிவான ஓட்டு-1,41,502

முதல் சுற்று

முத்துகருப்பண்ணசாமி(அ.தி.மு.க)-5,308

நித்தியானந்தம்(கொ.மு.க.)-3,301

ரகுநாதன்(பாரதீய ஜனதா)-261

2-வது சுற்று

முத்துகருப்பண்ணசாமி(அ.தி.மு.க.)-6,050

நித்தியானந்தம்(கொ.மு.க.)-3,115

ரகுநாதன்(பாரதீய ஜனதா)-256

3-வது சுற்று

முத்துகருப்பண்ணசாமி(அ.தி.மு.க.)-6,230

நித்தியானந்தம்(கொ.மு.க.)-3,323

ரகுநாதன்(பாரதீய ஜனதா)-282

4-வது சுற்று

முத்துகருப்பண்ணசாமி(அ.தி.மு.க.)-5,978

நித்தியானந்தம்(கொ.மு.க.)-3,377

ரகுநாதன்(பாரதீய ஜனதா)-254

5-வது சுற்று

முத்துகருப்பண்ணசாமி(அ.தி.மு.க.)-5,331

நித்தியானந்தம்(கொ.மு.க.)-3,684

ரகுநாதன்(பாரதீய ஜனதா)-338

6-வது சுற்று

முத்துகருப்பண்ணசாமி(அ.தி.மு.க.)-6,640

கே.நித்தியானந்தம்(கொ.மு.க.)-4,057

ரகுநாதன்(பாரதீய ஜனதா)-227

7-வது சுற்று

முத்துகருப்பண்ணசாமி(அ.தி.மு.க.)-6,058

கே.நித்தியானந்தம்(கொ.மு.க.)-2,810

ரகுநாதன்(பாரதீய ஜனதா)-254

8-வது சுற்று

முத்துகருப்பண்ணசாமி(அ.தி.மு.க.)-5,374

கே.நித்தியானந்தம்(கொ.மு.க.)-3,717

ரகுநாதன்(பாரதீய ஜனதா)-256

9-வது சுற்று

முத்துகருப்பண்ணசாமி(அ.தி.மு.க.)-4,799

கே.நித்தியானந்தம்(கொ.மு.க.)-3,109

ரகுநாதன்(பாரதீய ஜனதா)-191

10-வது சுற்று

முத்துகருப்பண்ணசாமி(அ.தி.மு.க.)-5,055

கே.நித்தியானந்தம்(கொ.மு.க.)-3,901

ரகுநாதன்(பாரதீய ஜனதா)-242

11-வது சுற்று

முத்துகருப்பண்ணசாமி(அ.தி.மு.க.)-5,185

கே.நித்தியானந்தம்(கொ.மு.க.)-4,066

ரகுநாதன்(பாரதீய ஜனதா)-425

12-வது சுற்று

முத்துகருப்பண்ணசாமி(அ.தி.மு.க.)-4,908

கே.நித்தியானந்தம்(கொ.மு.க.)-3,613

ரகுநாதன்(பாரதீய ஜனதா)-287

13-வது சுற்று

முத்துகருப்பண்ணசாமி(அ.தி.மு.க.)-5,617

கே.நித்தியானந்தம்(கொ.மு.க.)-3,019

ரகுநாதன்(பாரதீய ஜனதா)-205

14-வது சுற்று

முத்துகருப்பண்ணசாமி(அ.தி.மு.க.)-6,464

கே.நித்தியானந்தம்(கொ.மு.க.)-3,847

ரகுநாதன்(பாரதீய ஜனதா)-314

15-வது சுற்று

முத்துகருப்பண்ணசாமி(அ.தி.மு.க.)-2,657

கே.நித்தியானந்தம்(கொ.மு.க.)-1,853

ரகுநாதன்(பாரதீய ஜனதா)-86

15 சுற்றுகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துகருப்பண்ணசாமி முன்னணி பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

மொத்த ஓட்டுகள்-1,77,017

பதிவானவை-1,41,747

செல்லாதவை-64

முத்துகருப்பண்ணசாமி(அ.தி.மு.க.)-81,446

நித்தியானந்தம்(கொ.மு.க.)-51,138

ரகுநாதன்(பாரதீய ஜனதா)-3,909

எம்.காந்திமுத்து(பி.எஸ்.பி.)-1,528

கே.மணிமாறன்(இந்திய ஜனநாயக கட்சி)-1,056

சி.கே.ஆறுமுகம்(சுயே)-1,221

என்.பிரவீன்குமார்(சுயே)-1,449

தபால் ஓட்டுகள்

முத்துகருப்பண்ணசாமி(அ.தி.மு.க.)-92

நித்தியானந்தம்(கொ.மு.க.)-346

ரகுநாதன்(பாரதீயஜனதா)-14

20 சுற்றுகளிலும் முன்னணி பெற்று கவுண்டம்பாளையம் தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி

கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 20 சுற்றுகளிலும் முன்னணி பெற்று அ.தி.மு.க. வேட்பாளர் வி.சி.ஆறுக்குட்டி 69,260 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கவுண்டம்பாளையம்

கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் சுற்றுகள் வாரியாக ஓட்டு விவரம் வருமாறு:-

முதல் சுற்று

வி.சி.ஆறுக்குட்டி(அ.தி.மு.க.)-6,228

டி.பி.சுப்பிரமணியம்(தி.மு.க.)-3,949

நந்தகுமார்(பாரதீய ஜனதா)-288

2-வது சுற்று

வி.சி.ஆறுக்குட்டி(அ.தி.மு.க.)-6,216

டி.பி.சுப்பிரமணியம்(தி.மு.க.)-3,625

நந்தகுமார்(பாரதீய ஜனதா)-416

3-வது சுற்று

வி.சி.ஆறுக்குட்டி(அ.தி.மு.க.)-7,307

டி.பி.சுப்பிரமணியம்(தி.மு.க.)-3,853

நந்தகுமார்(பாரதீய ஜனதா)-383

4-வது சுற்று

வி.சி.ஆறுக்குட்டி(அ.தி.மு.க.)-6,672

டி.பி.சுப்பிரமணியம்(தி.மு.க.)-3,828

நந்தகுமார்(பாரதீய ஜனதா)-414

5-வது சுற்று

வி.சி.ஆறுக்குட்டி(அ.தி.மு.க.)-7,444

டி.பி.சுப்பிரமணியம்(தி.மு.க.)-4,513

ஆர்.நந்தகுமார்(பாரதீய ஜனதா)-495

6-வது சுற்று

வி.சி.ஆறுக்குட்டி(அ.தி.மு.க.)-6,840

டி.பி.சுப்பிரமணியம்(தி.மு.க.)-3,258

ஆர்.நந்தகுமார(பாரதீய ஜனதா)-366

7-வது சுற்று

வி.சி.ஆறுக்குட்டி(அ.தி.மு.க.)-7,353

டி.பி.சுப்பிரமணியம்(தி.மு.க.)-3,428

ஆர்.நந்தகுமார(பாரதீய ஜனதா)-266

8-வது சுற்று

வி.சி.ஆறுக்குட்டி(அ.தி.மு.க.)-7,489

டி.பி.சுப்பிரமணியம்(தி.மு.க.)-3,393

ஆர்.நந்தகுமார்(பாரதீய ஜனதா)-302

9-வது சுற்று

வி.சி.ஆறுக்குட்டி(அ.தி.மு.க.)-6,028

டி.பி.சுப்பிரமணியம்(தி.மு.க.)-2,806

ஆர்.நந்தகுமார்(பாரதீய ஜனதா)-222

10-வது சுற்று

வி.சி.ஆறுக்குட்டி(அ.தி.மு.க.)-6,385

டி.பி.சுப்பிரமணியம்(தி.மு.க.)-3,598

ஆர்.நந்தகுமார்(பாரதீய ஜனதா)-261

11-வது சுற்று

வி.சி.ஆறுக்குட்டி(அ.தி.மு.க.)-7,732

டி.பி.சுப்பிரமணியம்(தி.மு.க.)-3,090

ஆர்.நந்தகுமார்(பாரதீய ஜனதா)-263

12-வது சுற்று

வி.சி.ஆறுக்குட்டி(அ.தி.மு.க.)-7,080

டி.பி.சுப்பிரமணியம்(தி.மு.க.)-3,019

ஆர்.நந்தகுமார்(பாரதீய ஜனதா)-246

13-வது சுற்று

வி.சி.ஆறுக்குட்டி(அ.தி.மு.க.)-7,050

டி.பி.சுப்பிரமணியம்(தி.மு.க.)-2,768

ஆர்.நந்தகுமார்(பாரதீய ஜனதா)-274

14-வது சுற்று

வி.சி.ஆறுக்குட்டி(அ.தி.மு.க.)-6,769

டி.பி.சுப்பிரமணியம்(தி.மு.க.)-3,721

ஆர்.நந்தகுமார்(பாரதீய ஜனதா)-247

15-வது சுற்று

வி.சி.ஆறுக்குட்டி(அ.தி.மு.க.)-8,494

டி.பி.சுப்பிரமணியம்(தி.மு.க.)-3,166

ஆர்.நந்தகுமார்(பாரதீய ஜனதா)-426

16-வது சுற்று

வி.சி.ஆறுக்குட்டி(அ.தி.மு.க.)-7,678

டி.பி.சுப்பிரமணியம்(தி.மு.க.)-3,494

ஆர்.நந்தகுமார்(பாரதீய ஜனதா)-296

17-வது சுற்று

வி.சி.ஆறுக்குட்டி(அ.தி.மு.க.)-7,044

டி.பி.சுப்பிரமணியம்(தி.மு.க.)-3,762

ஆர்.நந்தகுமார்(பாரதீய ஜனதா)- 236

18-வது சுற்று

வி.சி.ஆறுக்குட்டி(அ.தி.மு.க.)-6,618

டி.பி.சுப்பிரமணியம்(தி.மு.க.)-3,341

ஆர்.நந்தகுமார்(பாரதீய ஜனதா)-276

19-வது சுற்று

வி.சி.ஆறுக்குட்டி(அ.தி.மு.க.)-7,030

டி.பி.சுப்பிரமணியம்(தி.மு.க.)-3,461

ஆர்.நந்தகுமார்(பாரதீய ஜனதா)-357

20-வது சுற்று

வி.சி.ஆறுக்குட்டி(அ.தி.மு.க.)-3,533

டி.பி.சுப்பிரமணியம்(தி.மு.க.)-1,391

ஆர்.நந்தகுமார்(பாரதீய ஜனதா)-125

ஆறுக்குட்டி வெற்றி

20 சுற்று முடிவுகளில் அ.தி.மு.க. வேட்பாளர் வி.சி.ஆறுக்குட்டி 69,260 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தபால் ஓட்டுகள்-வி.சி.ஆறுக்குட்டி(அ.தி.மு.க.)-69, டி.பி.சுப்பிரமணியம்(தி.மு.க.)-334, நந்தகுமார்(பாரதீயஜனதா)-16, விசுவநாதன்-1

ஓட்டு விவரம் வருமாறு:-

மொத்த ஓட்டுகள்-2,94,632

பதிவான ஓட்டுகள்-2,16,785

செல்லாதவை-265

வி.சி.ஆறுக்குட்டி(அ.தி.மு.க.)-1,37,058

டி.பி.சுப்பிரமணியம்(தி.மு.க.)-67,798

நந்தகுமார்(பாரதீயஜனதா)-6,175

கணேசன்(சுயே)-1,749

வசந்தகுமார்(சுயே)-1,436

விசுவநாதன்(சுயே)-1,331

ஆர்.பார்த்திபன்(ஜார்கண்ட் முக்திமோர்ச்சா)-654

குமணன்(சுயே)-584

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகள் நிலவரம்

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகள் நிலவரம் வருமாறு:-

1.மேட்டுப்பாளையம் தொகுதி

-

மொத்த ஓட்டுகள்

பதிவான ஓட்டுகள்

ஓ.கே.சின்னராஜ் (அ.தி.மு.க.)

கே.பி.அருண்குமார்(தி.மு.க.)

கே.ஆர்.நந்தகுமார்(பா.ஜனதா)

எஸ்.ஏ.காந்தி குமார்(உழைப்பாளி மக்கள் கட்சி)

சு.ராசேந்திரன்(இந்திய ஜனநாயக கட்சி)

ஆர்.ஜானகிராமன்(இ.கம்ïனிஸ்டு மார்க்சிஸ்டு லெனிஸ்டு)

பி.குமார்(சுயே)பா

ரவிச்சந்திரன்(சுயே)

2.சூலூர் தொகுதி

-

மொத்த ஓட்டுகள்

பதிவான ஓட்டுகள்

ஈ.ஆர்.ஈஸ்வரன்(கொ.மு.க.)

பனப்பட்டி தினகரன்(.தே.மு.தி.க)

கே.செந்தில்குமார்(பா.ஜனதா)

பி.அப்துல் ஹக்கீம்(பகுஜன் சமாஜ் )

பொன்.கார்த்திகேயன் (இந்து மக்கள் கட்சி)

சி.தங்கவேலு(சுயே),

க.தங்கமுத்து (சுயே)

க.தினகரன் (சுயே)

டாக்டர் மு.மாரியப்பன்(சுயே)

ஏ.சி.ராஜா(சுயே)

ஜெரால்டு அமல ஜோதி(சுயே).

3.கவுண்டம்பாளையம் தொகுதி

-

மொத்த ஓட்டுகள்

பதிவான ஓட்டுகள்

வி.சி.ஆறுக்குட்டி(அ.தி.மு.க.)

டி.பி. சுப்பிரமணியம்(தி.மு.க.)

ஆர்.நந்தகுமார்(பா.ஜனதா)

பி.பார்த்தீபன்(ஜார்கண்ட் முத்தி மோர்சா)

வி.விஸ்வநாதன்(சுயே)

டி.கணேசன்( சுயே) ஆர்.குமணன்( சுயே)

டி.வசந்த குமார்( சுயே)

4.கோவை வடக்குதொகுதி

-

மொத்த ஓட்டுகள்

பதிவான ஓட்டுகள்

வி.வீரகோபால்(தி.மு.க.)

தா.மலரவன் (அ.தி.மு.க.)

ஜி.எம்.சுப்பையன்(பா.ஜனதா)

வி.புஷ்பானந்தம்(பகுஜன் சமாஜ் கட்சி)

சதீஷ்குமார்(உழைப்பாளர் கட்சி)

கே.துரைராஜ் (லோக் சத்தா கட்சி)

ம.சீ.சாமிநாதன்(சுயே).

5.தொண்டாமுத்தூர் தொகுதி

-

மொத்த ஓட்டுகள்

பதிவான ஓட்டுகள்

எஸ்.பி.வேலுமணி(அ.தி.மு.க.)

எம்.என்.கந்தசாமி(காங்கிரஸ்)

ஏ.ஸ்ரீதர் மூர்த்தி(பா.ஜனதா )

டி.எம். உமர் கத்தாப்(சோஷியல் டெமாக்ரக்டிக் பார்ட்டி)

கண்ணம்மாள் ஜெகதீசன்(லோக் சத்தா கட்சி)

முத்து செல்வம்(சுயே)

ஏ.கந்தசாமி (சுயே)

கே.கந்தசாமி (சுயே) கே.பழனிச்சாமி(சுயே)

எஸ்.பழனிச்சாமி (உழைப்பாளி மக்கள் கட்சி),

6.கோவை தெற்கு தொகுதி

-

மொத்த ஓட்டுகள்

பதிவான ஓட்டுகள்

பொங்கலூர் பழனிச்சாமி(தி.மு.க.)

சேலஞ்சர் துரை என்ற ஆர்.துரைசாமி(அ.தி.மு.க.)

சி.ஆர்.நந்தகுமார்(பா.ஜனதா )

பி.கோவிந்தராஜ் (பகுஜன் சமாஜ் கட்சி)

கே.ஆர்.ஈஸ்வரன்(இந்திய ஜனநாயக கட்சி)

ரவி தேவேந்திரன் என்கிற ரவி (தமிழக முன்னேற்ற கழகம்)

மு.விஜய் ஆனந்த்(லோக் சத்தா கட்சி)

நா.சரவணன்(சுயே)

வி.சிவராஜ் (சுயே)

சு.பொகலூர் பழனிச்சாமி(சுயே)

ஆர்.பாபுராஜன்(சுயே)

எம்.முருகன் (சுயே)

எம்.எல். முகமது அனீப்(சுயே)

டி.லாசர்(சுயே)

7.சிங்காநல்லூர் தொகுதி

-

மொத்த ஓட்டுகள்

பதிவான ஓட்டுகள்

ஆர்.சின்னச்சாமி(அ.தி.மு.க.)

மïரா ஜெயக்குமார்(காங்கிரஸ்)

ஆர்.ராஜேந்திரன் (பா.ஜனதா)

எஸ்.பி.அய்யாசாமி (பகுஜன் சமாஜ் கட்சி)

பி.தண்டபாணி(லோக் சத்தா கட்சி)

ஆர்.தேவராஜ்(உழைப்பாளி கட்சி)

என்.கனகராஜ்(சுயே)

கே.சரவணன்(சுயே)

கே.சுந்தர் ராஜன்(சுயே)

எஸ்.எம்.ராஜா(சுயே)

வி.வி.வாசன்(சுயே),

8.கிணத்துக்கடவு தொகுதி

-

மொத்த ஓட்டுகள்

பதிவான ஓட்டுகள்

செ.தாமோதரன்(அ.தி.மு.க.)

மு.கண்ணப்பன்(தி.மு.க.)

கே.தர்மலிங்கம்(பா.ஜனதா)

பி.இளங்கோ(மக்கள் சக்தி கட்சி)

சு.நாகராஜ்(சுயே)

ஏ.நூர்முகமது(சுயே)

கி.முருகானந்தம்(சுயே),

9.பொள்ளாச்சி தொகுதி

-

மொத்த ஓட்டுகள்

பதிவான ஓட்டுகள்

ஏ.கே.முத்து கருப்பண்ணசாமி(அ.தி.மு.க.)

கே.நித்தியானந்தன்(கொ.மு.க.)

வி.கே.ரகுநந்தன்(பா.ஜனதா)

எம்.காளிமுத்து(பகுஜன் சமாஜ் கட்சி)

க.மணிமாறன் (இந்திய ஜனநாயக கட்சி)

பி.கே.ஆறுமுகம் (சுயே)

பி.பிரவீன்குமார்(சுயே),

10.வால்பாறை தொகுதி

-

மொத்த ஓட்டுகள்

பதிவான ஓட்டுகள்

எம்.ஆறுமுகம்(இ.கம்ïனிஸ்டு கட்சி)

கோவை தங்கம்(காங்கிரஸ்)

பி.முருகேசன்(பா.ஜனதா )

எம்.ராமச்சந்திரன்(பகுஜன் சமாஜ் கட்சி)

எம்.ஆறுமுகம்( சுயே)எம்.ரங்கசாமி(சுயே)

சங்ககிரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் விஜயலட்சுமி பழனிசாமி வெற்றி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் 35 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி

சங்ககிரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் விஜயலட்சுமி பழனிசாமி வெற்றி பெற்றார். இங்கு அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சுமார் 35 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

நேரடி போட்டி

சேலம் மாவட்டம் சங்ககிரி தொகுதியில் தமிழக வேளாண்மை துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தி.மு.க. சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிசாமி அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டார்.

இவர்களை தவிர பா.ஜனதா சார்பில் பி.நடராஜன், இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மோகன்குமார், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சனாஉல்லாகான் மற்றும் 9 சுயேச்சைகள் போட்டியிட்டனர்.

அ.தி.மு.க. முன்னணி

இந்த தொகுதி ஓட்டுகள் சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று எண்ணப்பட்டன. ஓட்டு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே அ.தி.மு.க. வேட்பாளர் விஜயலட்சுமி பழனிசாமி அதிக ஓட்டுகள் பெற்று முன்னணியில் இருந்தார்.

ஒவ்வொரு சுற்று முடிவிலும் அவர் முன்னணியில் இருந்தார். அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் 2-வது இடத்தில் இருந்தார்.

அபார வெற்றி

இறுதியில் 19 சுற்றுகள் ஓட்டுகள் எண்ணப்பட்டதில் அ.தி.மு.க. வேட்பாளர் விஜயலட்சுமி பழனிசாமி 1,05,502 ஓட்டுகள் பெற்று, 35,070 ஓட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் 70,432 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார்.

இந்த தொகுதியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட முடிவு விவரம் வருமாறு:-

மொத்த ஓட்டுகள் - 2,14,549

பதிவான ஓட்டுகள் - 1,84,859

விஜயலட்சுமி பழனிசாமி (அ.தி.மு.க.) - 1,05,502

வீரபாண்டி ஆறுமுகம் (தி.மு.க.) - 70,432

மு.பூபதி (சுயே) - 1194

நடராஜன் (பா.ஜனதா) - 1124

எஸ்.கே.வெங்கடாசலம் (சுயே) - 1103

மு.மோகன்குமார்(இந்திய ஜனநாயக கட்சி) - 1095

புஷ்பராஜ் (சுயே) - 851

சனா உல்லாகான் (பகுஜன் சமாஜ் கட்சி) - 844

சு.சக்திவேல் (சுயே) - 551

க.சரவணன் (சுயே) - 537

எம்.மாது (சுயே) - 509

மா.இளங்கோ (சுயே) - 402

தினேஷ்குமார் (சுயே) - 383

மு.சந்திரன் (சுயே) - 337

மேட்டூர் தொகுதியில் இறுதிவரை பரபரப்பு: கடும் இழுபறியில் தே.மு.தி.க. வெற்றி பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தோல்வி

மேட்டூர் தொகுதியில் கடும் இழுபறியில் தே.மு.தி.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் வெற்றி பெற்றார். இங்கு முடிவு அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் இறுதிவரை பரபரப்பு நிலவியது.

பா.ம.க.-தே.மு.தி.க.

சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி மாநில தலைவர் ஜி.கே.மணி போட்டியிட்டார். அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தே.மு.தி.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் களம் கண்டார்.

சேலம் மாவட்டத்தில் பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் நேரடியாக போட்டியிட்ட ஒரே தொகுதி இந்த தொகுதிதான். இந்த தொகுதிக்கான ஓட்டுகள் மேச்சேரி காவேரி பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று எண்ணப்பட்டன.

கடும் இழுபறி

இதில் தொடக்கத்தில் பா.ம.க. வேட்பாளர் ஜி.கே.மணி கூடுதல் ஓட்டு பெற்று முன்னணியில் இருந்தார். ஆனால், இறுதிச்சுற்றுகளில் தே.மு.தி.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் முன்னிலை பெற்றார். அவருக்கும், ஜி.கே.மணிக்கும் ஒவ்வொரு சுற்றுகளிலும் கடும் போட்டி நிலவியது.

இறுதிச்சுற்று நெருங்கும் சமயம் தே.மு.தி.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு ஓட்டுகள் சற்று கூடுதலாக கிடைத்ததால் அவரது வெற்றி நம்பிக்கை துளிர்த்தது. ஆனால், 15-வது சுற்றில் ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனால் முடிவு அறிவிப்பதில் இரவுவரை பரபரப்பு நிலவியது.

தே.மு.தி.க. வெற்றி

எந்திரத்தின் கோளாறு சரி செய்யப்பட்டப்பின், தே.மு.தி.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். அவர் 75,672 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜி.கே.மணியை காட்டிலும் 2,594 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார். 73,078 வாக்குகள் பெற்று ஜி.கே.மணி தோல்வி அடைந்தார்.

அதிகாரப்பூர்வ முடிவு விவரம் வருமாறு:-

பதிவான ஓட்டுகள்:- 2,12,608

பதிவான ஓட்டுகள்:- 1,69,607

1) எஸ்.ஆர்.பார்த்திபன் (தே.மு.தி.க.)- 75,672

2) ஜி.கே.மணி (பா.ம.க.)- 73,078

3) கே.பத்மராஜன் (சுயே.)- 6,273

4) ஏ.பாக்கியம் (சுயே.)-2738

5) ஆர்.செந்தில்குமார் (இந்திய ஜனநாயக கட்சி)- 2487

6) பி.பாலசுப்பிரமணியன் (பா.ஜனதா)- 2286

7) எஸ்.கே.பார்த்திபன் (சுயே.)- 1338

8) ஆர்.மணி (சுயே.)-1254

9) வி.ரஞ்சித் (சுயே.)- 1254

10) பி.முருகன் (சுயே.)-1110

11) பி.பார்த்திபன் (சுயே.)-672

12) ஜி.பார்த்திபன் (சுயே.)-605

13) கே.பழனி (சுயே.)-473

14) கே.பழனிசாமி (சுயே.)- 367.

சேலம் மாவட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி 11 இடங்களையும் வென்றது அ.தி.மு.க.-8, தே.மு.தி.க.-3

சேலம் மாவட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி மொத்தமுள்ள 11 இடங்களையும் வென்றது. இதில் அ.தி.மு.க. 8 இடங்களையும், தே.மு.தி.க. 3 இடங்களையும் கைப்பற்றி உள்ளன.

சேலம் மாவட்டம்

சேலம் மாவட்டத்தில் 1.சேலம் மேற்கு, 2.சேலம் தெற்கு, 3.சேலம் வடக்கு, 4.கெங்கவல்லி (தனி), 5.ஆத்தூர் (தனி), 6.ஏற்காடு (தனி), 7.ஓமலூர், 8.மேட்டூர், 9.இடைப்பாடி, 10.சங்ககிரி, 11.வீரபாண்டி ஆகிய 11 தொகுதிகள் உள்ளன.

இவை அனைத்திலும் தி.மு.க. கூட்டணியும், அ.தி.மு.க. கூட்டணியும் நேரடியாக மோதின. இவற்றுடன் பா.ஜனதா, இந்திய ஜனநாயக கட்சி உள்பட இதர சில கட்சிகளும், சுயேச்சைகளும் போட்டியிட்டன.

அமோக வெற்றி

நேற்று 11 தொகுதிகளின் ஓட்டுகளும் சேலம் நகரில் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி, தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி, சேலம் பாலிடெக்னிக் கல்லூரி, ஆத்தூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி, மேச்சேரி காவேரி பாலிடெக்னிக் கல்லூரி, சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நடுவலூர் கோல்டன் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த மையங்களில் எண்ணப்பட்டன.

இவற்றில் 10 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றனர். மேட்டூர் தொகுதியில் நீண்ட இழுபறிக்கு பிறகு தே.மு.தி.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் கடைசி 3 சுற்றுகளில் அதிக ஓட்டுகள் பெற்று, பா.ம.க. வேட்பாளரான ஜி.கே.மணியை 2,594 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். இதன்மூலம் 11 தொகுதிகளையும் அ.தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது.

அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தோல்வி

இந்த தேர்தலில் சங்ககிரி தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளரான அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் 35,328 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

அவரை அ.தி.மு.க. வேட்பாளரான முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிசாமி வென்றார். இவர் வீரபாண்டி ஆறுமுகத்தின் அண்ணன் மகள் ஆவார்.

11 தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு:-

1) சங்ககிரி:- முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிசாமி (அ.தி.மு.க.)

2) சேலம் மேற்கு:- ஜி.வெங்கடாசலம் (அ.தி.மு.க.)

3) சேலம் தெற்கு:- எம்.கே.செல்வராஜ் (அ.தி.மு.க.)

4) வீரபாண்டி:- எஸ்.கே.செல்வம் (அ.தி.மு.க.)

5) ஆத்தூர் (தனி):- சு.மாதேஸ்வரன் (அ.தி.மு.க.)

6) ஏற்காடு (தனி):- சி.பெருமாள் (அ.தி.மு.க.)

7) இடைப்பாடி:- இடைப்பாடி பழனிசாமி (அ.தி. மு.க.)

8) ஓமலூர்:- பல்பாக்கி கிருஷ்ணன் (அ.தி.மு.க.)

9) சேலம் வடக்கு:- அழகாபுரம் மோகன்ராஜ் (தே.மு.தி.க.)

10) கெங்கவல்லி (தனி):- ஆர்.சுபா (தே.மு.தி.க.)

11) மேட்டூர்:- எஸ்.ஆர்.பார்த்திபன் (தே.மு.தி.க.).

ஒவ்வொரு தொகுதிகளிலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட முடிவு விவரம் வருமாறு:-

சேலம் மேற்கு தொகுதி

சேலம் மேற்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜி.வெங்கடாசலம் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ஆர்.ராஜேந்திரனைவிட 27,661 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

மொத்த ஓட்டுகள்- 2,12,357

பதிவான ஓட்டுகள்-1,69,785

1. ஜி.வெங்கடாசலம் (அ.தி.மு.க.) - 95,935

2. ஆர்.ராஜேந்திரன் (தி.மு.க.) - 68,274

3. கே.கே.ஏழுமலை (பா.ஜனதா) - 1,327

4. அண்ணாதுரை (அம்பேத்கார் மக்கள் இயக்கம்) - 853

6. கே.ஆர்.பாலாஜி (இந்திய ஜனநாயக கட்சி) - 796

7. ஜீவானந்தம் (சுயே.)- 603

8. சங்கர் (சுயே.) - 458

9. சந்திரசேகரன் (சுயே.) - 458

10. பரமேஸ்வரி (பகுஜன் சமாஜ் கட்சி) - 357

11. சீனிவாசன் (சுயே.) - 246

12. குழந்தைவேலு (சுயே.) - 225

13. ஜி.அருள்முருகன்(சுயே.) - 135

14. எஸ்.கமலக்கண்ணன் (சுயே.) -118

சேலம் தெற்கு தொகுதி

சேலம் தெற்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.கே.செல்வராஜ் வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கத்தைவிட 60,215 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

மொத்த ஓட்டுகள்-2,19,891,

பதிவான ஓட்டுகள்-1,73,464,

1. எம்.கே.செல்வராஜ் (அ.தி.மு.க.) -1,12,691

2. எஸ்.ஆர்.சிவலிங்கம் (தி.மு.க.) - 52,476

3. என்.அண்ணாதுரை (பா.ஜனதா)- 2377

4. மகாலிங்கம் (சுயே.) -2325

5. எம்.ஆர்.சிவானந்தம் (இந்திய ஜனநாயக கட்சி) -622

6. ஆர்.பாண்டியன் (பகுஜன் சமாஜ்) - 600

7. பாலகிருஷ்ணன் (சுயே.) -462

8. எம்.ஏ.ஷாஜகான் (சுயே.) -423

9. ஜானகிராமன் (சுயே.)- 395

10. கலைச்செழியன் (சுயே.) -287

11. விசுவநாதன் (சுயே.) - 279

12. சபரிமுத்து (சுயே.) - 156

13. அன்பு (அகில இந்திய குடியரசு கட்சி) - 125

14. என்.சண்முகம் (சுயே.) -95

15. தாமஸ் (சுயே.) - 88

16. கோபால் (சுயே.) - 63

சேலம் வடக்கு தொகுதி

சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜெயப்பிரகாசைவிட 29,365 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

மொத்த ஓட்டுகள்-2,19,254

பதிவான ஓட்டுகள்-1,63,356

1. அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் (தே.மு.தி.க.) - 88,956

2. ஜி.ஜெயப்பிரகாஷ் (காங்கிரஸ்) - 59,591

3. சி.சின்னுசாமி (உழைப்பாளி மக்கள் கட்சி) - 4,517

4. மோகன் (பா.ஜனதா கட்சி) - 4133

5. வி.வெங்கடேசன் (இந்திய ஜனநாயக கட்சி) - 1965

6. ஜி.கம்பர் (அகில இந்திய குடியரசு கட்சி) - 804

7. எம்.ஏ.ஷாஜகான் (சுயே.) - 579

8. ரமேஷ்பாபு (பகுஜன் சமாஜ் கட்சி) -541

9. ஏ.ராஜா (சுயே.) - 429

10. மோகன் (சுயே.) - 404

11. வி.யுவராஜா (சுயே.)- 392

12. கே.ஆர்.சின்னப்பையன் (சுயே.) - 265

13. முகமது இலியாஸ் (சுயே.) - 218

14. முத்துசாமி (சுயே.) - 205

15. கண்ணன் (சுயே.) - 194

16. சி.சக்கரவரத்தி (சுயே.) - 163

கெங்கவல்லி (தனி) தொகுதி

கெங்கவல்லி (தனி) தொகுதியில் போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளர் ஆர்.சுபா தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் கு.சின்னத்துரையைவிட 13,465 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

மொத்த ஓட்டுகள்-1,83,203

பதிவான ஓட்டுகள்- 1,50,047

1.ஆர்.சுபா (தே.மு.தி.க.)- 72,922

2.கு.சின்னத்துரை (தி.மு.க.) - 59,457

3. ஜெ.மணிமாறன் (சுயே.) - 5,978

4. சிவகாமி (இந்திய ஜனநாயக கட்சி) -4,048

5. முருகேசன் (சுயே.) - 2,452

6.ஜி.மதியழகன் (பா.ஜனதா) - 1,787

7. ராஜா (லோக் ஜன சக்தி) - 1,520

8. சுபா (சுயே.) - 657

9. அழகுவேல் (சுயே.) - 624

10. விஜயா (பகுஜன் சமாஜ்) -602.

ஆத்தூர் (தனி) தொகுதி

ஆத்தூர் (தனி) தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.மாதேஸ்வரன் வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் டி.கே.அர்த்தநாரியை காட்டிலும் 29,856 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

மொத்த ஓட்டுகள்-1,96,796

பதிவான ஓட்டுகள்-1,58,536

1. எஸ்.மாதேஸ்வரன் (அ.தி.மு.க.) - 88,036

2. டி.கே.அர்த்தநாரி (காங்கிரஸ்) - 58,180

3. என்.அருள்குமார் (இந்திய ஜனநாயக கட்சி) - 2,993

4. பழனிராஜா (சுயே.) - 2,348

5. க.அண்ணாதுரை (பா.ஜனதா) - 1,690

6.ராஜமாணிக்கம் (சுயே.) - 1,462

7. எம்.மாரியப்பன் (பகுஜன் சமாஜ் கட்சி) - 1,366

8. மகேஸ்வரன் (சுயே.) - 729

9. வடிவேல் (சுயே.) - 648

10.ஆறுமுகம் (சுயே.) - 393

11.அணையரசு (சுயே.) - 388

12.தனசேகரன் (சுயே.) - 303

ஏற்காடு (தனி) தொகுதி

ஏற்காடு (தனி) தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சி.பெருமாள் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் தமிழ்ச்செல்வனைவிட 37,582 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

மொத்த ஓட்டுகள்-2,09,981

பதிவான ஓட்டுகள்-1,79,492

1. சி.பெருமாள் (அ.தி.மு.க.) - 1,04,221

2. தமிழ்ச்செல்வன் (தி.மு.க.) - 66,639

3. செல்வம் (சுயே.) - 2,437

4. பி.ராஜசெல்வம் (பா.ஜனதா) - 2,266

5. கு.மகேஸ்வரன் (இந்திய ஜனநாயக கட்சி) - 2,185

6. சிவகுமார் (சுயே.) - 1,744

ஓமலூர் தொகுதி

ஓமலூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பல்பாக்கி கிருஷ்ணன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் அ.தமிழரசுவைவிட 46,544 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

மொத்த ஓட்டுகள்-2,27,088

பதிவான ஓட்டுகள்-1,87,770

1. பல்பாக்கி சி.கிருஷ்ணன் (அ.தி.மு.க.) -1,12,102

2. அ.தமிழரசு (பா.ம.க.) - 65,558

3. பி.சிவராம் (பா.ஜனதா) -2,139

4. எஸ்.கந்தசாமி (இந்திய ஜனநாயக கட்சி) -1,863

5. ராமச்சந்திரன் (சுயே.)- 1,840

6. செல்வராஜு (சுயே.) - 1,262

7. எஸ்.தங்கமணி (பகுஜன் சமாஜ்) - 907

8. பாலசுப்பிரமணியன் (அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி) - 718

9. கு.நடராஜ் (சுயே.) - 495

10. கோவிந்தராஜ் (ஜம்மு காஷ்மீர் நேஷனல் பேந்தர்ஸ் பார்ட்டி) - 444

11. சோமசுந்தரம் (சுயே.) - 442.

இடைப்பாடி தொகுதி

இடைப்பாடி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.பழனிசாமி தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் மு.கார்த்தியை காட்டிலும் 34,738 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

மொத்த ஓட்டுகள்- 2,16,907

பதிவான ஓட்டுகள்- 1,85,494

1. கே.பழனிச்சாமி (அ.தி.மு.க.) - 1,04,586

2. மு.கார்த்தி (பா.ம.க.) - 69,848

3. மா.வெங்கடேசன் (இந்திய ஜனநாயக கட்சி) - 3,638

4. ந.ரா.புருசோத்தமன் (சுயே.) - 1,924

5. பா.தங்கராஜ் (பா.ஜனதா) - 1,901

6. முத்துராஜ் (சுயே.) - 1,899

7. அ.ஞானமணி (சுயே.) - 755

8. கோ.அரவகிரி (சுயே.) - 530

9. எஸ்.சிவக்குமார்(சுயே.) - 413

வீரபாண்டி தொகுதி

வீரபாண்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.கே.செல்வம் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் வீரபாண்டி ராஜாவை காட்டிலும் 26,498 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

மொத்த ஓட்டுகள்- 2,01,493.

பதிவான ஓட்டுகள்- 1,79,729.

1. எஸ்.கே.செல்வம் (அ.தி.மு.க.) - 1,00,155

2. ஏ.ராஜேந்திரன் (தி.மு.க.) - 73,657

3. எம்.வைத்தி (சுயே.)- 1,558

4. தமிழரசன் (சுயே.)- 1,355

5. ஆர்.ராஜரத்தினம் (சுயே.)- 724

6. சி.விஜயக்குமார்(பகுஜன் சமாஜ் கட்சி) - 683

7. கே.எஸ்.வெங்கடாசலம் (பா.ஜனதா)- 644

8. கே.ரவிச்சந்திரன் (சுயே.)- 270

9. வி.சி.அன்பரசன் (இந்திய ஜனநாயக கட்சி)- 259

10. யுவராஜ் (சுயே.)- 156

11. எஸ்.தனபால் (சுயே.)- 93

12. கே.மதியழகன் (சுயே.)- 90

13. கே.தனபால் (சுயே.)- 85.

Monday, May 16, 2011

தமிழக அமைச்சரவையில் ஒவ்வொரு சமூகம் பெற்ற பிரதிநிதித்துவம்

அ.தி.மு.க., அமைச்சரவையில் இடம் பெற்ற 33 அமைச்சர்களில், வெள்ளாளர் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எட்டு பேரும், முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆறு பேரும், வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஐந்து பேரும் இடம் பெற்றுள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதா தலைமையில், 33 அமைச்சர்கள் நேற்று பதவி ஏற்றனர். அதில் 24 பேர், புதுமுகங்களாக இடம் பெற்றுள்ளனர். கொங்கு மண்டலம் எப்போதும் அ.தி.மு.க., கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில், அனைத்து தொகுதிகளிலும் ஆயிரக்கணக்கான ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க., வெற்றி வாகை சூடியது.வெள்ளாளர் கவுண்டர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவான கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் என்ற கட்சி, சட்டசபை தேர்தலில் தி.மு.க., அணியில் இடம் பெற்றிருந்தது. அக்கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால், அ.தி.மு.க., அணியில் இடம் பெற்ற கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள், அமோக வெற்றி பெற்றனர். எனவே, அச்சமுதாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், எட்டு பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளாளர் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த செங்கோட்டையனுக்கு விவசாயத் துறை, கே.வி.ராமலிங்கத்திற்கு பொதுப்பணித் துறை, தங்கமணிக்கு வருவாய் துறை, சண்முகவேலுக்கு தொழில் துறை, எடப்பாடி பழனிச்சாமிக்கு நெடுஞ்சாலைத் துறை, செந்தில் பாலாஜிக்கு போக்குவரத்து துறை போன்ற முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல, எஸ்.பி.வேலுமணிக்கு சிறப்பு திட்டங்கள் அமலாக்கம் என்ற புதிய துறையும் உருவாக்கி வழங்கப்பட்டுள்ளது.

கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க. வின் ஓட்டு வங்கியாக அருந்ததியர் சமுதாய ஓட்டுகளும் கணிசமாக உள்ளது. அந்த சமுதாயத்தினருக்கு உள்ஒதுக்கீடு, கடந்த தி.மு.க., ஆட்சியில் வழங்கப்பட்டிருந்தது.ஆனால், அச்சமுதாயத்தினரின் ஓட்டுகளும் அ.தி.மு.க.,வுக்கு கிடைத்துள்ளது. ஆனால், அமைச்சரவையில் அருந்ததியர் சமுதாயத்தினருக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. அச்சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தனபாலுக்கு துணை சபாநாயகர் பதவி கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

வடசென்னை மாவட்டத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லை என்ற குறையும் அக்கட்சியில் நீடிக்கிறது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என, வடசென்னை மாவட்ட அ.தி.மு.க.,வினர் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.ஆனால், அமைச்சரவை பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை என தெரிய வந்ததும், அதிருப்தி அடைந்தனர். மூன்று முறை எம்.எல்.ஏ., இரண்டு முறை அமைச்சராக பணியாற்றிய அனுபவம் வாய்ந்த ஜெயக்குமாருக்கு சபாநாயகர் பதவி வழங்கப்படலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. தென் மாவட்டங்களில் அ.தி.மு.க., தனது வெற்றியை கோலோச்சியுள்ளதால் முக்குலத்தோர் சமுதாயத்தினர் ஆறு பேருக்கு அமைச்சரவையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம், மின் துறை அமைச்சராக நத்தம் விஸ்வநாதன், வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக வைத்திலிங்கம், கூட்டுறவுத்துறை அமைச்சராக செல்லூர் ராஜு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக ஆர்.பி.உதயகுமார், சட்டத்துறை அமைச்சராக சுப்பையா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இடம் பெற்றிருந்தாலும், வட மாவட்டங்களிலும் அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்றுள்ளது. வன்னியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தென்சென்னை மாவட்டச் செயலர் செந்தமிழனுக்கு, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பதவி சி.வி.சண்முகத்திற்கும், சிறுதொழில்கள் துறை அமைச்சர் பதவி எம்.சி.சம்பத்திற்கும், உள்ளாட்சித் துறை அமைச்சர் பதவி கே.பி.முனுசாமிக்கும், சமூக நலத்துறை அமைச்சர் பதவி, செல்வி ராமஜெயத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.

தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கருப்பசாமிக்கு கால்நடைத்துறை அமைச்சர் பதவியும், ஆதிதிராவிடர் சமுதாயத்தினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பதவி சுப்பிரமணியனுக்கும் வழங்கப்பட்டுள்ளது.யாதவர் சமுதாயத்தில் கோகுல இந்திராவுக்கு வணிக வரித்துறையும், முத்தரையர் சமுதாயத்தில் சிவபதிக்கு விளையாட்டுத் துறையும், உடையார் சமுதாயத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு உணவுத் துறையும், முதலியார் சமுதாயத்தில் டாக்டர் விஜய்க்கு சுகாதாரத்துறையும், முஸ்லிம் சமுதாயத்தினருக்கு மரியம் பிச்சைக்கு சுற்றுச்சூழல் துறையும், படுகர் சமுதாயத்தில் புத்திசந்திரனுக்கு சுற்றுலா துறையும், மீனவர் சமுதாயத்தில் ஜெயபாலுக்கு மீன்வளத்துறையும் வழங்கப்பட்டுள்ளது.

செட்டியார் சமுதாயத்தில் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன், சமீபத்தில் பிஎச்.டி., முடித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ள வைகைச்செல்வன் ஆகியோர் அமைச்சர் பதவியை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்துள்ளனர். பழ.கருப்பையாவுக்கு சபாநாயகர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அவர் பட்டிமன்றம், இலக்கியக் கூட்டங்களில் சிறப்பாக பேசுவார். ஆனால், சட்டசபைக்கு புதியவர் என்பதால் அவருக்கு அப்பதவி வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.அமைச்சரவை பட்டியலில் இடம் பெற்றுள்ள பெயர்களும் முரண்பாடாக வெளியிடப்பட்டுள்ளது. அதாவது புதிய அமைச்சராக பதவி ஏற்ற அக்ரி கிருஷ்ணமூர்த்தி பெயர், எட்டாவது இடத்தில் இருந்தது. ஆனால், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த சி.வி.சண்முகம் பெயர் 10வது இடத்திலும், எம்.சி.சம்பத் பெயர் 19வது இடத்திலும், எஸ்.பி.சண்முகநாதன் பெயர் 15வது இடத்திலும் இடம் பெற்றிருந்தது.

சுகாதாரம், நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, வருவாய் துறை, உயர்கல்வித் துறை, போக்குவரத்து துறை புதியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் திறமையாக நிர்வாகப் பணியாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. மின் துறை தவிர, அனைத்து துறைகளுக்கும் பொறுப்பேற்றிருப்பவர்கள், துறை பற்றி இனிமேல் தான் தெரிந்து கொள்ள வேண்டும். அதேசமயம், ஓரிரு மாவட்டங்களைத் தவிர அனைத்து மாவட்டங்களுக்கும் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

விரைவில் கேபிள் டிவி அரசுடமையாக்கப்படும்-ஜெயலலிதா

தமிழ்நாடு விடுதலை அடைந்துவிட்டது. நேற்றைய தினமே சங்கிலி பறிப்பு சம்பவங்கள் வெகுவாக குறைந்துவிட்டதாக கேள்விப்பட்டேன். சங்கிலியை பறிக்கும் ஆட்கள் எல்லாம் ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக கேள்விப்பட்டேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

முதல்வராக பொறுப்பேற்ற பின் சென்னை ஜார்ஜ் கோட்டையில் அவர் அளித்த பேட்டி:

கேள்வி: தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்டுள்ள இலவச மிக்சி, கிரைண்டர் எப்போது தரப்படும்?

பதில்: இப்போதுதானே பதவி ஏற்றிருக்கிறேன்.

கேள்வி: அரசு எதற்கெல்லாம் முன்னுரிமை தரும் என்ற தகவலை நீங்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளீர்கள். தற்போது மின்சார வெட்டை நீங்குவதற்கு குறுகிய கால திட்டம் எதையும் வைத்திருக்கிறீர்களா?

பதில்: நான் இன்றுதான் பதவி ஏற்றேன். அமைச்சர்களும் இன்றுதான் தங்களுக்கான பதவிகளை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். எனவே எதுவென்றாலும், துறைரீதியாக அவற்றைப் பற்றி பரிசீலனை செய்வதற்கு எங்களுக்கு போதிய கால அவகாசம் தேவைப்படுகிறது. இதுபோன்ற பிரச்சனைகளை தீர்ப்பதற்காக எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்பதை முடிவு செய்ய கால அவகாசம் தேவை.

கேள்வி: கேபிள் டி.வி. அரசுடமை ஆக்கப்படுமா?

பதில்: இதை எங்கள் தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறோம். விரைவில் நிறைவேற்றப்படும்.

கேள்வி: இந்த அமைச்சரவையை புதியவர்களையும், பழையவர்களையும் கலந்து நீங்கள் நல்ல கலவையாக அமைத்திருக்கிறீர்கள். இதன் பின்னணியைப் பற்றி சொல்ல முடியுமா?

பதில்: இந்த அமைச்சரவையில் தமிழகத்தின் எல்லா பகுதிகள், சமுதாயம், மதம், சாதியினரின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். இந்த முயற்சியில் நான் நல்ல வெற்றியை அடைந்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன். நான் ஏற்கனவே சொன்னது போல இந்த அமைச்சரவை, பழையவர்கள், அவர்களின் அனுபவம் மற்றும் புதியவர்கள் ஆகியோர் கலந்த நல்ல கலவைதான்.

கேள்வி: நீங்கள் ஜார்ஜ் கோட்டையில் பதவி ஏற்றிருக்கிறீர்கள். கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் என்னாகும்?

பதில்: இப்போதே அது குறித்து எதுவும் கூற முடியாது. அமைச்சரவைக் கூட்டத்தில்தான் அதுபற்றிய முடிவை எடுப்போம்.

கேள்வி: முதல்வராக பதவி ஏற்றுள்ள இந்த முதல் நாளில் மக்களுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: கடந்த 5 ஆண்டு காலத்தில் தமிழகத்தில் நிர்வாகமே இல்லாத ஒரு சூழ்நிலை இருந்தது. அரசு நிர்வாகம் என்பதே இல்லாமல் இருந்தது. அரசாங்கப் பணி என்பது நடைபெறவே இல்லை. எனவே கடந்த 5 ஆண்டு காலத்தில் இந்த மாநிலம் வெறும் 5 ஆண்டு கால பின்னடைவை மட்டும் அடையவில்லை. கற்காலத்துக்கே சென்றுவிட்டது. ரத்தினச் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் எல்லாமே சீரழிக்கப்பட்டுவிட்டது, சீரழிந்து போய்விட்டது. எனவே தமிழ்நாட்டை மீண்டும் நிர்மாணிக்க வேண்டும், மீண்டும் கட்ட வேண்டும். விலைவாசியை குறைக்க வேண்டும். மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். சட்டம்-ஒழுங்கை சீர்படுத்த வேண்டும்.

விவசாயத் துறையை மேம்படுத்த வேண்டும். நெசவுத்துறையை மேம்படுத்த வேண்டும். ஒட்டுமொத்த தொழில்துறையை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் திட்டங்களை கொண்டு வர வேண்டும். இப்படி துறை தோறும் ஏராளமான பணிகள் இருக்கின்றன. ஒட்டு மொத்தத்தில் தமிழகத்தை புனரமைக்க வேண்டும்.

கடந்த 5 ஆண்டு காலத்தில் மக்கள் ஒரு அச்ச உணர்வுடனேயே வாழ்க்கையை நடத்தினர். ஊடகங்களுக்கு கூட சுதந்திரம் இல்லாத நிலை இருந்தது. இனிமேல் எல்லாரும் சுதந்திரமாக வாழலாம். தேர்தல் பிரசாரத்தின் போதே ஒவ்வொரு கூட்டத்திலும் இதைச் சொன்னேன்.

ஒரு கொடுங்கோல் ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்து இருக்கிறார்கள். மீண்டும் ஒரு விடுதலைப் போராட்டம் தமிழகத்தில் நடைபெற்று இருக்கிறது. தமிழ்நாடு விடுதலை அடைந்துவிட்டது. நேற்றைய தினமே சங்கிலி பறிப்பு சம்பவங்கள் வெகுவாக குறைந்துவிட்டதாக கேள்விப்பட்டேன். சங்கிலியை பறிக்கும் ஆட்கள் எல்லாம் ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக கேள்விப்பட்டேன்.

எனவே படிப்படியாக நிலமை மாறும். தமிழக மக்களைப் பொறுத்தவரை இனி அச்ச உணர்வு தேவையில்லை. நம் எதிர்காலம் எப்படி இருக்குமோ, நமது குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்குமோ, கணவர் காலையில் அலுவலகத்துக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பும்போது மனைவி உயிருடன் இருப்பாளா? இல்லையா? என்றெல்லாம் கவலைப்படத் தேவையில்லை.

ஒரு சராசரி மனிதர் வேலைக்கு சென்று வீட்டுக்கு வரும்போது வயதான தாயார் உயிருடன் இருப்பாரா? இல்லையா? என்ற கவலை தேவையில்லை. சூழ்நிலைகள் மாறும். சட்டம்-ஒழுங்கு செம்மையாக காக்கப்படும், பராமரிக்கப்படும். மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படும். தமிழ்நாடு செழிப்படையும். இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக தமிழகம் உயர்வு பெறும்.

கேள்வி: நீங்கள் இந்த பொறுப்புக்கு வரும்போது, தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவின் பொருளாதாரம் உயரும். பொருளாதாரம் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: முதலில் உங்களது மங்களகரமான வார்த்தைகளுக்கு ரொம்ப நன்றி. நிச்சயமாக தமிழகத்தின் பொருளாதார நிலை உயரும். அதை புனரமைத்த பிறகு நிச்சயம் மேலே நோக்கி செல்லும். கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தின் பொருளாதாரம் அழிந்துபோன நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தது. எனவே தமிழகத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வர வேண்டும். அதை மேலேங்கி வளரச் செய்வதற்கான நடவடிக்கைகளை தொடர வேண்டும்.

கேள்வி: தமிழகத்தில் வசிக்கும் மற்றவர்களுக்கும் பாதுகாப்பு பற்றிய கவலை உள்ளதே?

பதில்: யாரும் பாதுகாப்பு பற்றி கவலைப்படத் தேவையில்லை. எல்லாருக்கும் முழுமையான பாதுகாப்பு தரப்படும் என்றார்.

நிருபர்களுடன் டீல்:

பேட்டியின் முடிவில் ஜெயலலிதா கூறுகையில், `நட்புரீதியாக நமக்குள் ஒரு டீல் வைத்துக் கொள்வோம். வாரத்துக்கு ஒருமுறை உங்களை சந்திக்கிறேன். நீங்கள் கேட்கும் கேள்வி அனைத்துக்கும் பதிலளிக்கிறேன். அதை விட்டுவிட்டு, நுழைவாயிலில் அருகே, வீட்டருகே, ஹோட்டல் அருகே என்று நின்று கொண்டு கேள்விகள் கேட்கக் கூடாது. சரியா?' என்று கேட்க, நிருபர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டனர்.

நிருபருக்கு அட்வைஸ்:

முன்னதாக அவர் பேட்டியளித்துக் கொண்டிருந்தபோது ஒரு நிருபரின் செல்போனில் இருந்து சினிமா பாட்டு ரிங் டோனாக ஒலித்தது. அப்போது ஜெயலலிதா`நீங்கள் கேட்டுக்கொண்டதால்தான் மரியாதை நிமித்தமாக உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். எனவே என்னை சந்திக்க வருவதற்கு முன்பு செல்போன்களை நீங்கள் அணைத்து வருவதை கடைப்பிடித்திருக்க வேண்டும்' என்றார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதவி ஏற்றதும் கையெழுத்திட்ட திட்டங்கள் ரேஷனில் கிலோ அரிசி ஒரு ரூபாய் திட்டத்திற்கு பதிலாக 20 கிலோ அரிசி இலவசம்

படித்த ஏழைப்பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கம் இலவசம்

* பட்டம் அல்லது பட்டயம் பெற்ற பெண் திருமணத்துக்கு ரூ.50 ஆயிரத்துடன் தாலிக்கு 4 கிராம் தங்கம் இலவசம்

* முதியோர் உதவிபெறும் பெண்களின் ஓய்வு ஊதியம் ரூ.500-ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்வு

* மீனவர்களுக்கு மீன்பிடி தடைகால உதவி பணம் ரூ.1,000-ல் இருந்து இரண்டாயிரம் ஆக உயர்வு

* அரசு பெண் ஊழியரின் மகப்பேறு கால விடுப்பு சலுகை 6 மாதமாக உயர்வு

* தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை

முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்றதும், ரேஷனில் கிலோ அரிசி ஒரு ரூபாய் திட்டத்துக்கு பதிலாக 20 கிலோ அரிசியை இலவசமாக வழங்குவது உ∙ளிட்ட 7 திட்டங்களை நிறைவேற்ற உத்தரவு பிறப்பித்து கையெழுத்திட்டார்.

சென்னை, மே.17-

தமிழ்நாட்டின் புதிய முதல்-அமைச்சராக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று பதவி ஏற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.

கோட்டைக்கு சென்ற ஜெயலலிதா

முதல்-அமைச்சராக பதவி ஏற்ற ஜெயலலிதா, நேற்று மாலை 6.40 மணிக்கு சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்கு வந்தார். அப்போது அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை, புதிதாக பதவி ஏற்ற அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர். தலைமைச்செயலக சங்கத்தினர் எழுச்சிமிகு வரவேற்பு கொடுத்தனர். பெண்கள் நீண்ட வரிசையில் நின்று மலர்தூவி வரவேற்றனர். `புரட்சித்தலைவி வாழ்க' என்று கட்சியினர் முழக்கமிட்டனர். காரில் இருந்தபடியே முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருகரம் கூப்பியபடி நன்றி தெரிவித்து, வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டார்.

7 திட்டங்களுக்கு அனுமதி அளித்து கையெழுத்து

தலைமை செயலகத்தில் பணிநேரம் முடிந்த பிறகும், அரசு ஊழியர்கள் ஏராளமான பேர் காத்திருந்து முதல்-அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஐ.பி.எஸ்.அதிகாரிகளும் பூச்செண்டுடன் வந்து வாழ்த்து தெரிவித்தார்கள். முதல்-அமைச்சரின் வருகையையொட்டி புனித ஜார்ஜ் கோட்டை விழாக்கோலம் பூண்டிருந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

கோட்டையில் 10-ம் எண் `கேட்' நுழைவுவாயில் முன்பு முதல்-அமைச்சரின் கார் வந்து நின்றதும், தலைமைச்செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி மலர்கொத்து கொடுத்து வரவேற்றார். அதையடுத்து முதல்-தளத்தில் உள்ள முதல்-அமைச்சர் அறைக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்றார்.

முதல் பணியாக 7 திட்டங்களுக்கு அனுமதி அளித்து அதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார். அதையடுத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

4 கிராம் தங்கத்துடன் திருமண உதவித்திட்டம்

முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள முதல்-அமைச்சர் அறைக்கு வந்து முதலில் 7 கோப்புகளில் கையெழுத்திட்டு உள்ளேன். தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து அதற்குரிய கோப்புகளில் கையெழுத்திட்டேன்.

படித்த ஏழைப்பெண்களுக்கு திருமண நிதி உதவியாக தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.25 ஆயிரம் நிதி உதவியோடு, மணப்பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் (அரை சவரன்) தங்கம் இலவசமாக வழங்கப்படும். அதற்கான ஆணையைப் பிறப்பித்து அதற்குரிய கோப்பில் கையெழுத்திட்டு உள்ளேன்.

இளநிலை பட்டம் அல்லது டிப்ளமோ பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகையை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்குவதோடு, மணப்பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்க உத்தரவிட்டு அதற்கான கோப்பில் கையெழுத்திட்டேன்.

20 கிலோ இலவச அரிசி

முதியோர், மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு, ஓய்வூதிய திட்டங்களின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு தற்போது வழங்கப்படும் 500 ரூபாய் மாத ஊதியத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டு அதற்குரிய கோப்பில் கையெழுத்திட்டேன்.

பொதுவிநியோகத் திட்டத்தில் அரிசி பெற தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கவும், அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 35 கிலோ அரிசியை இலவமாக வழங்கிடவும் உத்தரவிட்டு அதற்குரிய கோப்பில் கையெழுத்திட்டுள்ளேன்.

மீனவர்களுக்கு ரூ.2 ஆயிரம் உதவித்தொகை

தமிழகத்தில் கடலோர மீன்வளத்தை பாதுகாக்க வேண்டி ஒவ்வொரு ஆண்டும் 45 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். அந்த காலக்கட்டத்தில் பாதிக்கப்படும் மீனவ குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்க ஒப்புதல் அளித்து அதற்கான கோப்பில் கையெழுத்திட்டேன்.

அரசு பணிபுரியும் தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளை பேணி பாதுகாக்க மகப்பேறு கால சலுகையாக 6 மாத காலம் மகப்பேறு விடுப்பு அளிக்க ஒப்புதல் அளித்து அதற்கான கோப்பில் கையெழுத்து போட்டு உள்ளேன்.

`சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை'

அத்துடன் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவும், அதற்கான திட்டங்களை வகுத்து சிறப்புடன் அமல்படுத்தவும், அரசின் சிறப்பு திட்டங்களை செம்மையோடு விரைந்து செயல்படுத்தவும் புதிய துறை ஒன்றை தொடங்க உத்தரவிட்டு அதற்குரிய கோப்பில் கையெழுத்திட்டுள்ளேன். இந்த துறை `சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை' எனும் பெயரில் அழைக்கப்படும். இந்த துறைக்கென தனி அமைச்சரும் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

பேட்டியின்போது, தமிழக அரசின் புதிய தலைமைச்செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, முதல்-அமைச்சரின் செயலர் ராமமோகனராவ் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஜெயலலிதா அமைச்சரவையின் 33 அமைச்சர்கள்: ஒரு பார்வை

ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் 33 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் குறித்த ஒரு பார்வை...

ஓ.பன்னீர் செல்வம்

போடிநாயக்கனூர் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ஓ.பன்னீர் செல்வம். 60 வயதாகும் பன்னீர்செல்வம், பி.ஏ. படித்தவர். பெரியகுளம் நகராட்சியின் தலைவராக இருந்துள்ளார்.

முதல் முறையாக 2001-ம் ஆண்டு பெரியகுளம் சட்டசபை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த ஆட்சியில் வருவாய்த்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் ஜெயலலிதா மீதான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து அவர் முதல்வர் பதவியிலிருந்து விலகியபோது 6 மாத காலத்திற்கு முதல்வர் பதவியை வகித்தார் ஓ.பன்னீர் செல்வம்.

பின்னர் மீண்டும் ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றபோது பன்னீர் செல்வம் பொதுப் பணித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

எளிமையானவராக அறியப்படும் ஓ.பன்னீர் செல்வம் தீவிர ஜெயலலிதா விசுவாசி ஆவார். ஜெயலலிதா எள் என்றால் எண்ணெயாக நிற்கும் அளவுக்கு தீவிரமான அதிமுக விசுவாசியும் கூட.

இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், ரவீந்திரநாத்குமார், ஜெயபிரதீப் என இரு மகன்களும், கவிதா என்ற மகளும் உள்ளனர்.

கே.ஏ.செங்கோட்டையன்

ஜெயலலிதாவின் விசுவாசிகள் படையின் தளபதி செங்கோட்டையன். திட்டமிடுதலில் சிறந்தவரான இவர்தான் ஜெயலலிதாவின் பிரசாரத் திட்டங்களை வகுத்துக் கொடுப்பவர்.

அடக்கமாக இருப்பார் அதேசமயம் எதை செய்தாலும் ஆணித்தரமாக செய்து ஜெயலலிதாவிடம் நற்பெயர் பெறுபவர். ஈரோடு மாவட்டத்திலும், கொங்கு மண்டலத்திலும் அதிமுக தொடர்ந்து பலமுடன் இருக்க செங்கோட்டையனின் தீவிரப் பணிகளும் ஒரு காரணம்.

விவசாயியானசெங்கோட்டையன் இன்றளவும் விவசாயத்தை விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு அரசியல் தலைவர். எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே அதிமுகவில் தீவிரமாக செயல்பட்டு வரும் செங்கோட்டையன் அமைச்சராவது இது 2வது முறையாகும்.

கோபிச்செட்டிப்பாளையத்திலிருந்து 6வது முறையாக வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழையும் செங்கோட்டையன், 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக அரசின் போக்குவரத்து மற்றும் வனத்துறை அமைச்சராக பதவி வகித்தார். கடந்த 2001-ம் ஆண்டு முதல் தற்போது வரை அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், கதிர் என்ற மகனும் உள்ளனர்.

ஆர். விஸ்வநாதன்

நத்தம் விஸ்வநாதன் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து அமைச்சராக செயல்பட்டார். இந்த முறை மின்சாரத் துறை அமைச்சராகியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள உலுப்பகுடி கிராமத்தைச் சேர்ந்தவர்.

சொந்த செல்வாக்குடன் கூடிய வெகுசில அதிமுக தலைவர்களில் இவரும் ஒருவர். 62 வயதான விஸ்வநாதன் பிஎஸ்சி படித்தவர். திண்டுக்கல் மாவட்ட செயலாளராக இருக்கும் விஸ்வநாதனுக்கு அமர்நாத் என்ற மகனும், கவிதா,
ரஞ்சிதா ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

கே.பி.முனுசாமி

59 வயதான கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். முதல் முறையாக அமைச்சராகியுள்ளார். மிகவும் முக்கியமான உள்ளாட்சித் துறையை இவருக்குக் கொடுத்துள்ளார் ஜெயலலிதா.

பி.ஏ., பி.எல் படித்துள்ளமுனுசாமி கவுண்டர் ஆவார். இவருக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

சி.சண்முகவேலு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சண்முகவேலு. தொழில்துறை அமைச்சராகியுள்ளார். எம்.ஏ. படித்துள்ள இவர் கொங்கு வேளாள கவுண்டர் வகுப்பைச் சேர்ந்தவர்.

ஆர்.வைத்திலிங்கம்

ஒரத்தநாடு தொகுதியின் எம்.எல்.ஏ. வைத்திலிங்கம். வீட்டு வசதித்துறை அமைச்சராகியுள்ளார். ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சர் பதவியை இவர் ஏற்பது இது 2வது முறையாகும்.

பி.ஏ. படித்துள்ள வைத்திலிங்கம் 2001ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று தொழில்துறை அமைச்சரானார். பின்னர் வனத்துறைக்கு மாற்றப்பட்டார்.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி

ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிகளில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் ஒருவர். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்று அமைச்சராகியுள்ளார். அமைச்சராவது இது அவருக்கு முதல் முறை.

எஸ்.கருப்பசாமி

சங்கரன்கோவிலைச் சேர்ந்த கருப்பசாமி மிகவும் எளிமையானவர். கால்நடைத்துறை அமைச்சராகியுயள்ளார். கருப்பசாமி அமைச்சராவது இது 2வது முறையாகும்.

பி.பழனியப்பன்

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பழனியப்பன், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியிலிருந்து வென்று முதல் முறையாக அமைச்சராகியுள்ளார். எடுத்த எடுப்பிலேயே உயர் கல்வித்துறை என்ற உயரிய துறையைப் பெற்றுள்ளார் பழனியப்பன்.

எம்.எஸ்.சி படித்துள்ள இவர் விவசாயம் செய்து வருகிறார். மனைவி, ொரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

சி.வி. சண்முகம்

ஜெயலலிதாவின் படைத் தளபதிகளில் இவரும் ஒருவர். பாமகவையும், டாக்டர் ராமதாஸையும் மிகக் கடுமையாக எதிர்ப்பவர்களில் இவரும் ஒருவர். பாமகவின் தீவிர பாலிட்டிக்ஸை சமாளித்து விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவை உயிர்ப்புடன் வைத்திருப்பவர்.

கடந்த ஆட்சியில் இவர்கல்வித்துறை அமைச்சராக இருந்தார். தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகியுள்ளார்.

இவரது தந்தை வேணுகோபால் வந்தவாசி தொகுதி எம்.பியாக இருந்தவர்.

செல்லூர் ராஜு

முதல் முறையாக அமைச்சராகியுள்ளார் செல்லூர் ராஜு. மதுரை திமுக ஜாம்பவான் மு.க.அழகிரியின் வீடு அடங்கியுள்ள மதுரை மேற்குத் தொகுதியில் அபார வெற்றி பெற்று அதற்குப் பரிசாக அமைச்சர் பதவியைப் பிடித்துள்ளார் ராஜு.

முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்த செல்லூர் ராஜு, உள்ளூர் அதிமுகவினரின் போட்டிகளையும் சமாளித்து அதிமுகவில் முக்கிய இடத்தைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கே.டி.பச்சமால்

கன்னியாகுமரியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் பச்சமால். நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த பச்சமாலுக்குச் சொந்த ஊர் நாகர்கோவிலுக்கு அருகே உள்ள தம்மத்துக்கோணமாகும்.

1979ம் ஆண்டிலிருந்து அதிமுகவில் செயல்பட்டு வரும் பச்சமால், அதிமுகவில் குமரி மாவட்ட கிழக்கு செயலாளராக செயல்பட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகியுள்ள பழனிச்சாமி அடிப்படையில் ஒரு சிவில் என்ஜீனியர் ஆவார். பொதுப்பணித்துறையில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றி பின்னர் அதை உதறி விட்டு அதிமுகவில் இணைந்தார்.

நீண்ட காலமாக அதிமுகவில் செயல்பட்டு தீவிர ஜெயலலிதா விசுவாசி ஆவார். சேவல் சின்னத்தின் கீழ் போட்டியிட்டு ஜெயலலிதா அணி சார்பில் எம்.எல்.ஏ. ஆனவர்களில் இவரும் ஒருவர்.

எஸ்.பி.சண்முகநாதன்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் சண்முகநாதன். தற்போது இந்து அறநிலையத்துறை அமைச்சராகியுள்ளார்.

இவர் கடந்த 2001-ம் ஆண்டும் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வெற்றி பெற்றவர். அப்போது கைத்தறி துறை அமைச்சராக பதவி வகித்தார்.

கே.வி.ராமலிங்கம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்தவரான ராமலிங்கம் முதல் முறையாக அமைச்சராகியுள்ளார். எடுத்த எடுப்பிலேயே பொதுப்பணித்துறை அமைச்சராகியுள்ளார் ராமலிங்கம்.

மடத்துக்குளம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராமலிங்கத்திற்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

எஸ்.பி.வேலுமணி

முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு திட்ட செயலாக்க துறைக்கு அமைச்சராகியுள்ளார் எஸ்.பி.வேலுமணி.முதல் முறையாக இவர் அமைச்சராகியுள்ளார்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியிலிருந்து சட்டசபைக்குள் நுழைந்துள்ள வேலுமணி, எம்.ஏ. எம்.பில் படித்தவர். குனியமுத்தூர் நகராட்சி தலைவராக இருந்தவர்.

டி.கே.எம்.சின்னையா

காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் தொகுதியிலிருந்து சட்டசபைக்குள் முதல் முறையாக நுழைகிறார் சின்னையா. 48 வயதான பி.ஏ. பட்டதாரியான இவர் தாம்பரத்திலேயே பிறந்து வளர்ந்தவர். அதிமுக நகரச் செயலாளாக இருந்து வருகிறார்.

நகராட்சி கவுன்சிலராக செயல்பட்டு வந்த சின்னையா, சட்டசபைத் தேர்தலில் நின்று போட்டியிட்டு வென்றுள்ளார். தற்போது அமைச்சர் பதவியும் இவரைத் தேடி வந்துள்ளது.

மு.சி. சம்பத்

2வது முறையாக அமைச்சராகியுள்ளார் மு.சி.சம்பத். வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவரான சம்பத் கடலூர் தொகுதியில் சட்டசபை உறுப்பினராகியுள்ளார்.

கடந்த 2001 தேர்தலில் நெல்லிக்குப்பம் தொகுதியில் போட்டியிட்டு வென்று வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தார். பின்னர் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் செயல்பட்டார்.

பி.தங்கமணி

முதல் முறையாக அமைச்சராகியுள்ள தங்கமணிக்கு, வருவாய்த்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. குமாரபாளையம் தொகுதியிலிருந்து சட்டசபைக்குள் நுழைந்துள்ளார்.

ஜி.செந்தமிழன்

சென்னை சைதாப்பேட்டை தொகுதியிலிருந்து 2வது முறையாக வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைந்துள்ள செந்திழன், செய்தி, ஒளிபரப்புத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.

வழக்கறிஞரான இவர் அதிமுகவில் மாணவர் அணியின் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். தற்போது தென் சென்னை மாவட்ட செயலாளராக செயல்படும் செந்தமிழன், 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். தற்போது மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

கோகுல இந்திரா

ராமநாதபுரத்தைச் சேர்ந்தவரான கோகுல இந்திரா, சிவகங்கையில் வக்கீலாகப் பணியாற்றியவர். அரசியலில் படிப்படியாக முன்னேறிய கோகுல இந்திரா சிறந்த பேச்சாளர். இதனால் அவரை ராஜ்யசபா எம்.பியாக்கினார் ஜெயலலிதா. 2001 முதல் 2007 வரை ராஜ்யசபா உறுப்பினராகப் பணியாற்றிய கோகுல இந்திரா, அதிமுகவில் மாநில அமைப்புச் செயலாளராகப் பணியாற்றினார். தற்போது அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்.எல்.ஏவாகி அமைச்சராகியுள்ளார்.

செல்வி ராமஜெயம்

புவனகிரி சட்டசபைத் தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செல்வி ராமஜெயம், 2 முறை பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவியாக இருந்தவர். தற்போது சமூக நலத்துறை அமைச்சராக முதல் முறையாக அமைச்சராகியுள்ளார்.

பி.வி.ரமணா

முதல் முறையாக அமைச்சராகியுள்ள ரமணா, எம்.எல்.ஏ. பதவிக்கு வந்துள்ளதும் முதல் முறையாகும்.

கம்மவார் வகுப்பைச் சேர்ந்த இவர் பார்மஸி படித்தவர். இவருக்கு மனைவி, ஒரு மகள் உள்ளனர்.

ஆர்.பி.உதயக்குமார்

முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்த உதயக்குமார் முதல் முறையாக அமைச்சராகியுள்ளார். வழக்கறிஞரான உதயக்குமார் மதுரை அரசு சட்டக் கல்லூரியில் அதிமுக மாணவர் அணிச் செயலாளராக செயல்பட்டவர்.

மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டவர்.

முதல் முறையாக எம்.எல்.ஏவாகியுள்ள உதயக்குமார், சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வென்று அமைச்சராகியுள்ளார்.

ந.சுப்பிரமணியன்

கந்தர்வகோட்டை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற ந.சுப்பிரமணியன். இவர் விராலிமலை அருகே உள்ள நம்பம்பட்டியைச் சேர்ந்தவர். சாலை ஆய்வாளராக பணிபுரிந்து வந்த இவர் முதல் முறையாக எம்எல்.ஏவாகி அமைச்சர் பதவியையும் அடைந்துள்ளார்.

செந்தில் பாலாஜி

கரூர் தொகுதியிலிருந்து 2வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, உள்ளூர் அதிமுகவில் பல போராட்டங்களையும், எதிர்ப்புகளையும் சந்தித்து வெற்றி பெற்று தற்போது அமைச்சர் பதவி என்ற ஜெயலலிதாவின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.

கரூர் மாவட்ட செயலாளராக இருந்து வரும் செந்தில் பாலாஜி, பி.காம். பட்டதாரி. 2000-ம் ஆண்டில் மாவட்ட மாணவர் அணி இணை செயலாளராக பணியாற்றினார். படிப்படியாக உயர்ந்து தற்போது அமைச்சர் பதவியை எட்டியுள்ளார்.

மரியம்பிச்சை

கே.என். நேருவை படு தோல்வியடையச் செய்ததால் பரிசாக அமைச்சர் பதவியைப் பெற்றுள்ளார் மரியம் பிச்சை. திருச்சி மேற்குத் தொகுதியிலிருந்து தேர்வாகியுள்ள மரியம் பிச்சை, பி.ஏ. படித்தவர். இவர் எம்.எல்.ஏ ஆவதும் இதுவே முதல் முறையாகும்.

கே.ஏ.ஜெயபால்

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபால் மீன்வளத்துறை அமைச்சராகியுள்ளார். முதல் முறையாக எம்.எல்.ஏ.வாகியுள்ள ஜெயபால், அமைச்சர் பதவிக்கு வருவதும் இதுவே முதல முறையாகும். நாகை மாவட்ட அதிமுக பொருளாளர் பொறுப்பையும் தற்போது ஜெயபால் வகித்து வருகிறார்.

இசக்கி சுப்பையா

அம்பாசமுத்திரம் தொகுதியில், ஆவுடையப்பனை வீழ்த்தி ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்த்தவரான இசக்கி சுப்பையா சட்ட அமைச்சராகியுள்ளார்.

முதல் முறையாக எம்.எல்.ஏவான இவர் பெரும் தலையை வீழ்த்தியதால் அமைச்சர் பதவியையும் பரிசாக பெற்றுள்ளார். மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் பொறுப்பையும் வகித்து வருகிறார்.

புத்திசந்திரன்

நீலகிரி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புத்தி சந்திரன், படுகர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். சுற்றுலா அமைச்சராகியுள்ளார். படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் எம்.எல்.ஏ பதவிக்கும், அமைச்சர் பதவிக்கும் உயர்வது இதுவே முதல் முறை என்பதால் படுகர் சமுதாயமே மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.


சி.த.செல்லப்பாண்டியன்

தூத்துக்குடி தொகுதியிலிருந்து வென்றுள்ள செல்லப்பாண்டியன், தொழிலாளர் நலத்துறை அமைச்சராகியுள்ளார். காய்கறி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவரான செல்லப்பாண்டியன் அமைச்சர் பதவிக்கு வருவது இதுவே முதல் முறையாகும்.

எம்ஏ படித்துள்ள இவருக்கு இந்திரா என்ற மனைவியும், ராஜாசிங், ஜெபசிங் ஆகிய 2 மகன்களும், எஸ்தர் தங்கமணி என்ற மகளும் உள்ளனர்.

டாக்டர் வி.எஸ்.விஜய்

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரான டாக்டர் வி.எஸ்.விஜய், வேலூர் அரசு
மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்தவர். இவருடைய மனைவி ஜெயந்தி. மகள் டாக்டர் அனிதா, மகன் அருண் எம்.பி.பி.எஸ் படித்து வருகிறார்.

டாக்டர் வி.எஸ்.விஜய் அரசு டாக்டர்கள் சங்க வேலூர் மாவட்ட தலைவராகவும், மாநில செயலாளராகவும் பணியாற்றியவர். கட்சியில் மருத்துவப்பிரிவு மாவட்ட துணை செயலாளராக இருந்தவர். முதன்முறையாக வேலூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் தொகுதியிலிருந்து தொடர்ந்து எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த ஞானசேகரனை வீழ்த்தியதால் அமைச்சர் பதவி பரிசாக கிடைத்துள்ளது.

என்.ஆர்.சிவபதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரான அறிவிக்கப்பட்டுள்ள சிவபதி 1963-ல்
பிறந்தவர். தொட்டியம் அருகே உள்ள நத்தம் கிராமத்தை சேர்ந்தவர். எம்.ஏ. பி.எல்., படித்துள்ளார்.

1991-ல் சட்டமன்ற தேர்தலில் தொட்டியம் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கட்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை
செயலாளர், மாநில மாணவர் அணி செயலாளர், மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர், மாவட்ட துணை செயலாளர், மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர், திருச்சி மாநகர், புறநகர் மாவட்ட இளைஞர்-இளம்பெண்கள் பாசறை பொறுப்பாளர் என கட்சி பணி ஆற்றியுள்ளார்.

முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்துள்ளார் சிவபதி.

சரிவை சந்தித்த தி.மு.க - பா.ம.க.,: உயர்வை சந்தித்த அ.தி.மு.க

2006, 2011 தேர்தல்களில் பதிவான ஓட்டுகளையும், கட்சிகள் பெற்ற ஓட்டுகளையும் ஒப்பிட்டால், தி.மு.க., மிகப்பெரிய சரிவையும், அ.தி.மு.க., அமோக உயர்வையும் சந்தித்துள்ளன. பா.ம.க., - காங்கிரஸ் கட்சிகளும் சரிவில் இருந்து தப்பவில்லை.

இந்த தேர்தல்களை ஒப்பிட்டால், தி.மு.க.,வின் ஓட்டு சதவீதம், 2006 தேர்தலை விட, 2011ல் 4.08 சதவீதம் குறைந்துள்ளது. அ.தி.மு.க.,வின் ஓட்டு சதவீதம், 2006 தேர்தலை விட, 6.44 சதவீதம் அதிகரித்துள்ளது. காங்கிரசின் ஓட்டு சதவீதம், சென்ற தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் 0.92 சதவீதம் சரிந்துள்ளது.அதே நேரம், தே.மு.தி.க.,விற்கு, 2006ல் பெற்றதை விட இப்போது 0.5 சதவீத ஓட்டுகள் குறைந்துள்ளன. ஆனால், வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையும், பெற்ற ஓட்டுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், 2006ல் 232 தொகுதிகளில் தே.மு.தி.க., போட்டியிட்டதும், 2011ல் 41 இடங்களில் மட்டுமே போட்டியிட்டதும் தான். இது தான், சதவீதம் குறைய காரணம். பா.ம.க.,வின் ஓட்டுகளிலும் 0.42 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட், பா.ஜ., இந்திய கம்யூ., ஓட்டு சதவீதத்தில் பெரிய மாற்றம் இல்லை.

ஆடம்பர பேனர்கள், ஆளுயர கட்-அவுட் இல்லாத விழா அமைதியும், கலகலப்பும் கலந்த பதவி ஏற்பு நிகழ்ச்சி

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற விழாவில், ஆளுயர கட்-அவுட்களோ, ஆடம்பர பேனர்களோ வைக்கப்படவில்லை. ஆனால், கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் விழாவில் மகிழ்ச்சி கரைபுரண்டோடியது.

சென்னை பல்கலை நூற்றாண்டு மண்டபத்தில், முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் நேற்று பதவியேற்று கொண்டனர். போயஸ்கார்டனில் இருந்து விழா மண்டபத்துக்கு ஜெயலலிதா வந்த போது, போக்குவரத்தை தடை செய்யவில்லை. இதனால், அவரது கார் கடற்கரை சாலையில் வாகன நெரிசலில் சிக்கி கொண்டது. பின், போக்குவரத்து சரி செய்யப்பட்டது.போக்குவரத்து நெரிசலில் கவர்னர் காரும் சிக்கியதால், அவரது வருகை சில நிமிடங்கள் தாமதமானது. விழா மண்டபம் அமைதியாக கவர்னரை எதிர்நோக்கி இருந்தது. இதனால், விழா மேடையில் ஜெயலலிதா மற்றும் புதிய அமைச்சர்கள் பதவியேற்புக்காக சில நிமிடங்கள் காத்திருந்தனர்.விழா மண்டப முன்வரிசையில் சசிகலா, சுலோச்சனா சம்பத், சோ ராமசாமி, சுதீஷ், விஜயகாந்த், பண்ருட்டி ராமச்சந்திரன், அஜித்சிங், சந்திராபாபு நாயுடு, நரேந்திர மோடி, ஏ.பி.பரதன், ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், சரத்குமார், ராதிகா மற்றும் ஐகோர்ட் நீதிபதிகள் இருந்தனர். கவர்னரிடம் அறிமுகமாகி கைகொடுத்த போது, ஜெயலலிதா, பெண் அமைச்சர்கள் கோகுல இந்திரா, செல்வி ராமஜெயம் ஆகியோர் கைகொடுக்காமல், தமிழர் மரபுப்படி கைகூப்பி வணக்கம் தெரிவித்தனர்.

அமைச்சர்கள் பதவியேற்று உறுதிமொழிகளை வாசிக்கும்போது, மரியம் பிச்சை மிகவும் நிறுத்தி தாமதமாக ஒவ்வொரு வார்த்தையாக வாசித்தார். கொஞ்சம் டென்ஷனாக காட்சியளித்த முதல்வர் ஜெயலலிதா, சங்கரன்கோவிலை சேர்ந்த கருப்பசாமி பதவியேற்க வந்ததை பார்த்தவுடன் சிரித்து விட்டார். குள்ளமான அவர் நெற்றியில் விபூதியிட்டு, கடகடவென உறுதிமொழி ஏற்றதை பார்த்து, சோ ராமசாமி கையை இருபக்கமும் அசைத்து உற்சாகம் ஊட்டினார். நகைச்சுவை சுபாவங்களுக்கு பெயர் போன கருப்பசாமி, அமைச்சராக பதவியேற்ற போது, ஜெயலலிதா உட்பட அரங்கத்தினர் அனைவரும் கலகலப்பாக சிரித்தனர். இதேபோல், முனுசாமி அமைச்சராக பதவியேற்று, உறுதிமொழி ஏற்க வந்த போது சட்டையிலிருந்த கண்ணாடியை எடுத்து மெதுவாக வாசித்ததை பார்த்ததும், ஜெயலலிதா புன்முறுவலிட்டார்.

ஜெயலலிதா பதவி ஏற்றதும், மண்டபத்தில் இருந்த தொண்டர்கள், "அநீதியை அழித்த நீதி தேவதை, தமிழகத்தை மீட்ட தாரகை' என, கோஷமிட்டு வாழ்த்தினர். விழா மேடையின் பின்புறம் பச்சை வண்ணத்தில், மிக எளிமையாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மண்டபத்திலோ, வெளியிலோ ஆடம்பர கட்-அவுட்டுகள், ஆளுயர வாழ்த்து பேனர்கள், தோரணங்கள் போன்ற அனாவசிய செலவுகளும், தேவையற்ற கூச்சல், குழப்ப ரகளைகளும் இல்லை.ஆனால், மண்டபம் நிரம்பியதால் ஆயிரக்கணக்கானோர் வெளியே கடற்கரையில் வைத்திருந்த டிஜிட்டல் திரையில் நிகழ்ச்சிகளை பார்த்தனர். கடற்கரை முழுவதும் பதவியேற்புக்காக வந்தோர் நிரம்பி மக்கள் அலையாக காணப்பட்டது.

ஜெ., காதில் மினுமினுத்த கல் கம்மல் : தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா, விழா மேடையில் மிகவும் எளிமையாக காணப்பட்டார். சிவப்பு நிறம் கலந்த, "பிரவுன்' சேலை கட்டி வந்த அவர், புதிதாக காதில் மிகவும் சிறிய கம்மல் அணிந்திருந்தார். அதிலிருந்த கல் மினுக்கியதால் வந்த ஒளி, அவரது கம்மலை காட்டிக் கொடுத்தது.கடந்த 1996ல், சொத்து சேர்ப்பு வழக்கு உள்ளிட்ட வழக்குகளில் சிக்கிய ஜெயலலிதா, "நான் இனி எந்த நகையும் அணிய மாட்டேன்' என்றார். அதன்படி, நகை அணியாமல் இருந்து வந்தார். சில ஆண்டுகளாக நேரம் பார்க்க, கைக்கடிகாரம் மட்டும் அணிந்தார். இதுவரை நகை அணியாமல் இருந்த நிலையில், தற்போது சிறிய கம்மல் அணிந்துள்ளார். எப்போதும் கண்ணாடியுடன் காணப்படும் அவர், நேற்று உறுதிமொழி வாசிக்கும் போது மட்டும் கண்ணாடி அணிந்தார்.

மதுரை விசுவாசிகள்' அமைச்சரான பின்னணி

எதிர்கட்சியாக இருந்தபோது அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்த போராட்டங்களை முன்னின்று சிறப்பாக நடத்தி முடித்த, "மதுரையின் இரு விசுவாசிகளுக்கு' அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது.

கூட்டுறவு துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட செல்லூர் ராஜூ, மதுரை நகர் செயலாளராகவுள்ளார். வார்டு கவுன்சிலர் பதவியில் இருந்து படிப்படியாக வளர்ச்சி பெற்று, நகர் செயலாளரானார். மேயர் தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர். மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட போது, அன்றைய ஆளுங்கட்சியினரின் பண பலத்திற்கு மத்தியில் கடும் போட்டியை ஏற்படுத்தி, வெற்றி வாய்ப்பை இழந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக, எதிர்கட்சியாக, தி.மு.க.,வினருக்கு எதிராக, மதுரையில் அரசியல் செய்ய கடுமையாக போராடியவர். கடந்தாண்டு அக்., 18ல் மதுரை ரிங் ரோட்டில் ஜெயலலிதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. எதிர்பார்க்காத வகையில் அதிகளவு தொண்டர்கள் திரண்டனர். இதற்கான ஏற்பாடுகளை செய்து, ஜெ.,யின் மதிப்பை பெற்றார். இந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வினர் மீது தேர்தல் கமிஷனில் பல்வேறு புகார்கள் கொடுத்து, அவர்களுக்கு சவாலாக இருந்தார்.லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் மதுரையில் ஜெயலலிதா தங்கி பக்கத்து மாவட்டங்களுக்கு சென்று பிரசாரம் செய்தார். அதற்கான ஏற்பாடுகளிலும் இவரது பங்களிப்பு இருந்தது. கட்சியினரிடமும் பொதுமக்களிடமும் எளிமையாக பழகுபவர். தி.மு.க., செயலாளர் தளபதியை தோற்கடித்து, முதன்முதலாக சட்டசபை செல்லும் இவரை கவுரவிக்க அமைச்சரவையில் இடம் அளித்துள்ளார் ஜெ.,

சாத்தூர் தொகுதியில் வென்று, தகவல் தொழில் நுட்ப அமைச்சராக நியமிக்கப்பட்ட ஆர்.பி.உதயக்குமாரும் மதுரையை சேர்ந்தவர். சட்ட கல்லூரி மாணவரணி செயலாளராக இருந்து அதன் நகர் செயலாளரானார். பின் மாநில செயலாளரானார். கட்சிக்கு அதிக மாணவர்களை இழுத்து வருவதில் ஆர்வம் காட்டியதுடன், ஒவ்வொரு கல்லூரியாக சென்று அ.தி.மு.க., அமைப்புகளை ஏற்படுத்தினார். வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்கள், மாணவர் பிரச்னைக்காக போராட்டங்களை முன்னின்று நடத்தினார். மதுரையில் ஆளுங்கட்சியை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். கடந்தாண்டு ஜெயலலிதா தலைமையிலான ஆர்ப்பாட்டத்திற்கு தேவையான இடத்தை தேர்வு செய்த போது, இவரது முயற்சியால் ரிங் ரோடு மைதானம் கிடைத்தது. தேர்தலுக்கு முன் இவரது ஏற்பாட்டில் பிரசார "சிடி' தயாரிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டு, வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தலைமைக்கு விசுவாசமானவராக இருந்ததால், இவருக்கும் அமைச்சரவையில் இடம் கிடைத்தது.

மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மாநில அரசியல் களத்திற்கு முற்றுப்புள்ளி

சட்டசபை தேர்தல் முடிவில், மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் 14 பேரும் தோல்வியை தழுவினர். இதன் மூலம், அவரது தமிழக அரசியல் களத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக, எதிர்கோஷ்டியினர் கருதுகின்றனர்.

தமிழகத்தில் காங்., செல்வாக்கு சரிந்து வரக்காரணமே, அமைச்சர்கள் சிதம்பரம், வாசன், முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு போன்றவர்களின் கோஷ்டி பூசல் தான். காங்., எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கிறதோ அது வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது. அது இபோது தலைகீழாக மாறியுள்ளது.மத்திய அமைச்சர் சிதம்பரம், தமிழக அரசியலில் கால் பதித்து, தனது மகன் கார்த்திக்கை பெரிய பதவியில் அமர்த்தி விடவேண்டும் என்ற ஆவலில், அரசியல் நடத்தினார். இதனால், காங்.,ல் கோஷ்டி அரசியல் உருவானது. தி.மு.க., கூட்டணியில் காங்.,க்கு 63 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில், சிதம்பரம் தனது ஆதரவாளர்களான, சிவகங்கை தொகுதியில் ராஜசேகரன், கே.ஆர்., ராமசாமி, ராம.சுப்புராம் உட்பட மாநிலத்தில், 14 பேருக்கு சீட்டுக்களை பெற்று தந்தார். முடிவில், இவர்கள் அனைவரும் தோல்வியடைந்து, இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டனர்.

இது குறித்து காங்., மூத்த நிர்வாகிகள் கூறுகையில்,"இத்தேர்தல் முடிவு, சிதம்பரத்தின் தமிழக அரசியல் களத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்து விட்டது. இனி, நிச்சயம் மாநில அரசியலுக்கு வரமாட்டார். காங்கிரசை வளர்த்தால் தான், நாம் அரசியல் செய்யமுடியும் என்பதை தலைவர்கள் மறந்து விடுகின்றனர். இதனால் தான், காங்., நாளுக்கு நாள் தனது பலத்தை இழந்து வருகிறது,' என்றனர்.

அ.தி.மு.க., விஸ்வரூபம்: முன்னிறுத்தப்படும் 5 முக்கிய காரணங்கள்

தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி, 203 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க., 146 இடங்களில் வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையை பெற்றுள்ளது. தேர்தல் அறிவித்த பின்னும், ஓட்டுப்பதிவுக்கு பின்னும் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புகளில், அ.தி.மு.க., கூட்டணி இப்படி ஒரு மெகா வெற்றியை பெரும் என கூறவும் இல்லை; எதிர்பார்க்கவும் இல்லை.

அ.தி.மு.க.,வுக்கு இப்படிப்பட்ட வெற்றி கிடைக்க ஸ்பெக்ட்ரம் ஊழல், மின்வெட்டு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, தி.மு.க.,வினரின் ரவுடியிசம் ஆகிய ஐந்து விஷயங்களே முக்கிய காரணங்களாக அமைந்து விட்டன. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா கைதாகி சிறையில் உள்ளார். தி.மு.க., தலைவர் கருணாநிதியின் குடும்பமும் "2ஜி' ஊழல் விவகாரத்தில் சிக்கி பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகியுள்ளது. இதை, தேர்தல் பிரசாரத்தின் போது, ஜெயலலிதா, மக்கள் மத்தியில் எடுத்து வைத்தார். அதுதான், மக்கள் மத்தியில் பரவி, தேர்தலில் தி.மு.க., தோல்வியை தழுவ வைத்துள்ளது. அ.தி.மு.க.,வின் விஸ்வரூப வெற்றிக்கு முக்கிய காரணமாக, ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் முதல்காரணமாக உள்ளது.

ஒரு துறைக்கு அமைச்சராக இருப்பவர், தன்னுடைய துறையால் தான் கட்சிக்கு தோல்வி ஏற்படும் என்று பகிரங்கமாக ஒப்புக் கொண்டது தமிழகத்தில் மட்டும்தான். மின்துறை அமைச்சரான ஆற்காடு வீராசாமி, ஒரு கூட்டத்தில் இப்படி பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், அதுதான் உண்மை நிலை என்பதை, தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளது. தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்களும், வழங்கப்பட்ட இலவசங்களும் பெண்களை அதிகம் கவர்ந்துள்ளது என்ற கணக்கில், தி.மு.க., இருந்தது. எனவே, சட்டசபை தேர்தலில் பெண்களின் ஓட்டு தி.மு.க.,வுக்கு தான் என்று அக்கட்சி பலமாக நம்பியது. ஆனால், விலைவாசி உயர்வு என்ற பிரச்னை தி.மு.க.,வின் கணிப்பை தவறாக்கிவிட்டது.

அ.தி.மு.க.,வின் வெற்றிக்கு, விலைவாசி உயர்வும் முக்கிய காரணமாக அமைந்து விட்டது. தமிழக போலீசாரின் செயல்பாடுகளை தி.மு.க.,வினர் முடக்கி வைத்திருந்ததால், தமிழகத்தில் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, திருட்டு, கொள்ளை, கொலை ஆகியவை சர்வசாதாரணமாகிவிட்டது. ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்பதால், கண்ணெதிரே நடந்த குற்றங்களையும் தடுக்க முடியாத சூழலுக்கு போலீசார் தள்ளப்பட்டிருந்தனர். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மக்கள்,, அ.தி.மு.க.,வுக்கு ஆளுங்கட்சி வாய்ப்பை வழங்கிவிட்டனர். நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க.,வின் வெற்றிக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், மேற்கண்ட ஐந்து காரணங்கள்தான் அ.தி.மு.க., பக்கம் மக்களை திருப்பியது என்றால் மிகையாகாது.

மக்கள் இனி அச்சமின்றி, சுதந்திரமாக வாழலாம்: ஜெ.

மக்கள் இனி அச்சமின்றி சுதந்திரமாக வாழலாம்,'' என்று, முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா தெரிவித்தார்.

முதல்வராக பொறுப்பேற்ற பின், கோட்டைக்கு வந்த ஜெயலலிதா, கோப்புகளில் கையெழுத்திட்ட பின், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

* இலவச அரிசி போன்ற திட்டங்களை செயல்படுத்த கையெழுத்திட்டுள்ளீர்கள். இலவச மிக்சி, கிரைண்டர் எப்போது வழங்கப்படும்?

இப்போது தான் பொறுப்பேற்று உள்ளேன். சில மணி நேரங்களே ஆகிறது. தேர்தல் அறிக்கையில் தெரிவித்த அனைத்தும் வழங்கப்படும்.

* மின்வெட்டு பிரச்னையை தீர்க்க என்ன செய்ய உள்ளீர்கள்?

அவை பற்றி எல்லாம் துறையினருடன் ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டியுள்ளது. அதன்பின், நடவடிக்கை எடுக்கப்படும்.

* கேபிள், "டிவி' கார்ப்பரேஷன் செயல்படுத்தப்படுமா?

கேபிள், "டிவி' தொடர்பாக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை, விரைவில் செயல்படுத்துவோம்.

* நிதி நிலைமை மோசமாக இருப்பதாக தெரிவித்தீர்கள். அதை எவ்வாறு சரி செய்வீர்கள்?

நிதிநிலை மிகவும் மோசமாக உள்ளது. அனைத்து விஷயங்களையும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

* அமைச்சரவையில் பழையவர்கள், புதியவர்கள் என கலந்து உள்ளார்களே?

அனைத்து மாவட்டங்கள், மதங்கள், ஜாதிகள் போன்றவற்றுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டுமென்பது எனது குறிக்கோள். அதற்கேற்ப, அமைச்சரவை பட்டியல் தயாரித்ததில் வெற்றி பெற்றுள்ளேன். அனுபவம் வாய்ந்த பழைய கட்சியினரும், புதியவர்களும் கலந்ததாக அமைச்சரவை அமைந்துள்ளது.

* கோட்டையில் நிர்வாகத்தை நடத்துகிறீர்கள், புதிய தலைமைச் செயலகம் என்ன ஆகும்?

அதுபற்றி அமைச்சரவை கூட்டத்தை நடத்தி முடிவு எடுக்கப்படும்.

* முதல்வர் பொறுப்பேற்றது தொடர்பாக மக்களுக்கு தாங்கள் தெரிவிக்கும் தகவல் என்ன?

கடந்த ஐந்து ஆண்டுகளாக நிர்வாகமே இல்லாத நிலை இருந்தது. அரசு நிர்வாகப் பணிகள் நடக்கவில்லை. ஐந்து ஆண்டுகள் மட்டும் மாநிலம் பின்தங்கவில்லை. கற்காலத்துக்கே சென்றுவிட்டது. அனைத்தும் சீரழிக்கப்பட்டு விட்டது; சீரழிந்துவிட்டது. மீண்டும் நிர்வாகத்தை நிர்மாணிக்கும் பணியை துவக்க வேண்டும். விலைவாசியை குறைக்கவும், மின்வெட்டு பிரச்னையை தீர்க்கவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், வேளாண்மை, நெசவுத் துறை போன்றவற்றை வளர்க்கவும், அனைத்துவித தொழில்களையும் வளர்ச்சிப் பாதைக்கு திட்டமிட்டு கொண்டு வர வேண்டும் என்பதே என் நோக்கம்.

* சட்டம் ஒழுங்கு நிலைமை எப்படி உள்ளது?

கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு அச்ச உணர்வுடன் மக்கள் வாழ்ந்தனர். ஊடகங்கள் கூட சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை இருந்தது. இனி, அனைவரும் சுதந்திரமாக வாழலாம். ஒரு கொடுங்கோல் ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்துள்ளனர். மீண்டும் ஒரு விடுதலைப் போராட்டம் நடந்துள்ளது. மக்கள் முழு விடுதலை பெற்றுள்ளனர். நேற்று கூட, செயின் பறிப்பு சம்பவங்கள் குறைந்து விட்டதாக கேள்விப்பட்டேன். செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் ஆந்திரா மாநிலத்துக்கு சென்றுவிட்டதாக கேள்விப்பட்டேன். தமிழக மக்களுக்கு இனி அச்ச உணர்வு தேவையில்லை. கணவன் காலையில் அலுவலகத்துக்கு சென்றுவிட்டு, மாலையில் வீடு திரும்பினால், வீட்டில் மனைவி உயிருடன் இருப்பாரா என்று அச்சப்பட தேவையில்லை. சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படும். தமிழகம் செழிப்பாகும். இந்தியாவிலேயே முதல் மாநிலம் என்ற நிலைக்கு தமிழகம் உயர்வு பெறும்.

* டில்லிக்கு செல்வீர்களா, சோனியா அளிக்கும் விருந்தில் கலந்து கொள்வீர்களா?

டில்லிக்கு சென்று பிரதமரை சந்திக்க உள்ளேன். டில்லி செல்லும் போது, மற்ற சந்திப்புகள் குறித்து உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறுவோம்' : காங்., தொண்டர்களின் புது கோஷம்

தமிழகத்தில், காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரும் தோல்விக்கு தி.மு.க.,வின் ஊழல், மக்கள் விரோதப் போக்கு தான் காரணம்; கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும்' என, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் புது கோஷத்தை எழுப்பி வருகின்றனர்.

தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ், 63 தொகுதிகளில் போட்டியிட்டது; தேர்தல் முடிவு வெளியானது. காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. வெறும் ஐந்து தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, தான் போட்டியிட்ட மயிலாப்பூர் தொகுதியில் படுதோல்வியை சந்தித்தார். முக்கிய தலைவர்களான மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா ஈரோடு மேற்கு தொகுதியிலும், பீட்டர் அல்போன்ஸ் கடையநல்லூர் தொகுதியிலும், திருநாவுக்கரசர் அறந்தாங்கி தொகுதியிலும், யசோதா ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும் தோல்வியைத் தழுவினர்.

விளவங்கோடு தொகுதியில், பாரதிய ஜனதா பெற்ற, 37 ஆயிரம் ஓட்டுகள், பட்டுக்கோட்டையில் சுயேச்சை வேட்பாளர் யோகானந்தத்துக்கு கிடைத்த, 22 ஆயிரம் ஓட்டுகள், குளச்சல் தொகுதியில் பாரதிய ஜனதா பெற்ற, 35 ஆயிரம் ஓட்டுகள், கிள்ளியூரில் அ.தி.மு.க.,வை மூன்றாமிடத்துக்கு தள்ளி, இரண்டாமிடம் பெற்ற பாரதிய ஜனதாவுக்கு கிடைத்த, 32 ஆயிரம் ஓட்டுகள், ஓசூரில் சுயேச்சையாக போட்டியிட்டு சத்யா பெற்ற, 24 ஆயிரம் ஓட்டுகள் என, தி.மு.க., கூட்டணிக்கு எதிராக பிரிந்த ஓட்டுகளே காங்கிரஸ் வெற்றி பெற காரணமாக இருந்தன. இல்லையெனில், தமிழகத்தில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற்றிருக்காது.

"இத்தனைக்கும் காரணம், மாநில தலைவர் தங்கபாலுவின் செயல்பாடுகள் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு மரியாதை தராத தி.மு.க.,வுடன் தொடர்ந்த கூட்டணி தான். தொடர்ந்து இதே கூட்டணியில் இருந்தால், கட்சி வளர்ச்சி பாதிக்கும். எனவே, கூட்டணியிலிருந்து வெளியேறுவது தான் வழி' என்கின்றனர், கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள்.

தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யா

தமிழகத்தில் குறுநில மன்னர்களை போல் பாவித்து, சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு, தி.மு.க.,வுக்கு அவப்பெயரை ஏற்படுத்திய மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்களாக இருந்தவர்கள் என, முக்கிய தலைவர்கள் ஓரங்கட்டப்பட வேண்டும் என்பதே உண்மையான தி.மு.க.,தொண்டர்களின் கருத்தாக உள்ளது.

தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வின் தோல்விக்கு விலைவாசி உயர்வு, மின் வெட்டு மட்டுமே முக்கிய காரணம் என்று கூறினாலும், அதற்கு மேல் முக்கிய காரணமாக இருப்பது, கட்சியின் முக்கிய தலைவர்கள், அமைச்சர் பொறுப்பில் இருந்தவர்கள் செய்த சட்ட விரோத செயல்பாடுகளே, அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தி.மு.க.,வுக்கு கடும் எதிர்ப்பை பெற்று தந்தது.

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத, கட்சி நலம் விரும்பும் தொண்டர்கள் கூறியதாவது: தி.மு.க., தோல்விக்கு விலைவாசி உயர்வு, மின் வெட்டு தான் காரணம் என்று கூறுவது தவறு. இப்பிரச்னைகள் உள்ள சில மாநிலங்களில் நடந்த தேர்தலில், ஆளும்கட்சியே வெற்றி பெற்றுள்ளது. உதாரணத்துக்கு, அஸ்ஸாமில் நடந்த தேர்தலில் ஆளும்கட்சியாக உள்ள காங்கிரஸ், தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளது. பல இலவசங்களை அள்ளி வழங்கிய தமிழகத்தில் மட்டும் தி.மு.க., ஏன் தோற்க வேண்டும். அதற்கு முக்கிய காரணம், அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்கள், தங்கள் பகுதிகளில் குறு நில மன்னர்களாக செயல்பட்டனர். அவர்கள் மன்னர்களாக இருந்து மக்களுக்கு நல்லது செய்திருந்தால் எல்லோரும் வரவேற்றிருப்பர். ஆனால், அவர்கள், உண்மையான கட்சி தொண்டரை அவமதித்தனர். தங்கள் உறவினர்களையும், தங்களின் சட்டவிரோத செயல்களுக்கு புகலிடம் தேடி, நெருங்கி வந்தவர்களையும் வளர்த்து விட்டனர்.

சில குறிப்பிட்ட அமைச்சர்கள், தங்கள் மாவட்டத்தில் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வாங்குபவர்களிடம், "குறிப்பிட்ட தொகையை கொடுத்தால் மட்டுமே, பத்திரப்பதிவு செய்ய முடியும்' என்று மிரட்டி வசூல் வேட்டையில் ஈடுபட்டனர். முக்கிய இடங்களில் உள்ள மதிப்புமிக்க சொத்துக்களையும், குறைந்த விலையில் தங்களுக்கு விற்க கோரி, சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களை மிரட்டினர். இதெல்லாம், தி.மு.க.,வின் மீது மக்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அரசு அலுவலகங்களில் புகுந்து, அனைத்து பணிகளிலும் தலையிட்டனர். எதிர்ப்பு தெரிவித்த அரசு அதிகாரிகளை மிரட்டி, ஆட்சிக்கு எதிராக செயல்படும் அதிகாரிகள் போல் காட்டி, அமைச்சர்கள் மூலம் இடம் மாற்றினர்.

பார்லிமென்ட் தேர்தலை போல, பணம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கி விட முடியும் என்று நினைத்தது தவறு. அத்தேர்தலில், மத்தியில் கிளீன் இமேஜ் பெற்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங்க்கு ஆதரவான நிலையை தான் மக்கள் எடுத்திருந்தனர். தற்போது, ஆதர்ஷ் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று, காங்கிரஸ் மேல் இருந்த மதிப்பும் மக்களிடையே பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இனி நடக்கும் பார்லிமென்ட் தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடும் எந்த கட்சியும் தோல்வியடையும் என்ற நிலை உள்ளது.

தற்போது, அ.தி.மு.க., கூட்டணி பெற்றுள்ள ஓட்டுக்கள் அனைத்தும், ஜெயலலிதாவுக்காக விழுந்த ஓட்டுக்கள் அல்ல... தி.மு.க.,வுக்கு எதிரான ஓட்டுக்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க., இனி மக்களிடையே நல்ல பெயரை பெற வேண்டுமானால், சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட முக்கிய நிர்வாகிகளை கட்சியை விட்டே ஓரங்கட்ட வேண்டும். கருணாநிதி குடும்பத்தினர், அதிகாரத்தை பயன்படுத்தி, சில குறிப்பிட்ட தொழில்களில் ஆதிக்கம் செலுத்துவதை விட்டு, கட்சி பணியில் முழுமையாக ஈடுபட வேண்டும். அப்போது தான், தி.மு.க., மக்களிடையே மீண்டும் எழுச்சி பெறும். தி.மு.க., தலைவர் கருணாநிதி, எதிர்கட்சி தலைவராக கூட சட்டசபைக்குள் போகமுடியதா நிலைக்கு யார் காரணம் என்பதை அறிந்திருப்பார். அந்த வகையில் கட்சி தலைவர் என்ற முறையில், நடவடிக்கை எடுத்து, சாமானிய தொண்டர்களுக்கு மதிப்பளித்தால், தி.மு.க.,வுக்கு உயிர் கொடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Friday, May 13, 2011

எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த்

தி.மு.க., அணி படுதோல்வி அடைந்துள்ளதால், எதிர்க்கட்சி அந்தஸ்தையும் அந்த அணி இழந்துள்ளது. அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற பிரதான கட்சியான தே.மு.தி.க., எதிர்க்கட்சி அந்தஸ்தை தக்கவைத்துள்ளது.

தேர்தலில் சுனாமி அலையாக பாய்ந்து வந்துள்ள அ.தி.மு.க., வெற்றியால் எதிர்க்கட்சி அந்தஸ்தை தி.மு.க., இழக்கிறது. காங்கிரசும் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறமுடியவில்லை. அ.தி.மு.க., கூட்டணியில் பிரதான கட்சியாக தே.மு.தி.க., உள்ளது. இக்கட்சி 41 தொகுதிகளில் போட்டியிட்டது. தி.மு.க.,வுடன் 18 தொகுதிகளிலும், காங்கிரசுடன் 15 தொகுதிகளிலும், பா.ம.க., வுடன் 6 தொகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகளுடன் ஒரு தொகுதியிலும், கொ.மு.க.,வுடன் ஒரு தொகுதியிலும் தே.மு.தி.க., போட்டியிட்டது.

அ.தி.மு.க.,வுக்கு அடுத்த இடத்தை தே.மு.தி.க., பெற்றுள்ளதால் அக்கட்சி, எதிர்க்கட்சி அந்தஸ்தை எட்டியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விஜயகாந்த் ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2001ம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராக அன்பழகனும், 1996ம் ஆண்டு தேர்தலில் சோ.பாலகிருஷ்ணனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த சட்டசபை தேர்தலில், "ஒன்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு' என்ற ரீதியில் தே.மு.தி.க., வின் ஒரே எம்.எல்.ஏ.,வாக விஜயகாந்த் மட்டுமே இருந்தார்.தற்போது தே.மு.தி.க., எதிர்க்கட்சி நிலையை அடைந்திருப்பதால், அக்கட்சி அபார வளர்ச்சி அடைந்துள்ளது. இதன்மூலம், அக்கட்சிக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம், நிரந்தர சின்னம், கொடி ஆகியவையும் கிடைக்க வாய்ப்புள்ளது.

34 ஆண்டு ஆட்சிக்கு முடிவு:சிவப்புக் கோட்டையை தகர்த்து மம்தா வரலா

மேற்கு வங்கத்தில், கடந்த 34 ஆண்டுகளாக இடதுசாரி கட்சிகள் கட்டிக்காத்து வந்த சிவப்புக் கோட்டையை, திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, இந்த தேர்தலில் தகர்த்து, வரலாறு படைத்துள்ளார். திரிணமுல் காங்கிரசுக்கு கிடைத்த அமோக வெற்றியின் மூலம், மேற்கு வங்க மாநிலத்தின் அடுத்த முதல்வராக, மம்தா பதவியேற்கவுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம், கடந்த 34 ஆண்டுகளாக, இடதுசாரி கட்சிகளின் கோட்டையாக விளங்கி வந்தது. கடந்த 1977ல், காங்கிரசின் சித்தார்த் சங்கர் ராய், முதல்வராக பதவி வகித்தார். அதற்கு பின், தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வசம் தான், ஆட்சியும், முதல்வர் பதவியும் இருந்து வந்தது. கடந்த 1977ல் இருந்து, 2000 வரை, கம்யூனிஸ்ட் கட்சியின் ஜோதிபாசு முதல்வராக பதவி வகித்தார். அவருக்கு பின், கடந்த பத்தாண்டுகளாக, கம்யூனிஸ்ட் கட்சியின் புத்ததேவ் பட்டாச்சார்யா, முதல்வராக இருந்து வருகிறார்.இந்நிலையில், மேற்கு வங்கத்துக்கு சட்டசபை தேர்தல் தேதி, கடந்த மார்ச்சில் அறிவிக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்னை கருதி, ஆறு கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில், ஆளும் இடதுசாரி கூட்டணி ஒரு அணியாகவும், மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் - காங்கிரஸ், மற்றொரு கூட்டணியாகவும் போட்டியிட்டன.

திரிணமுல் கட்சி, 227 தொகுதிகளிலும், காங்கிரஸ் 65 தொகுதிகளிலும் போட்டியிட்டன.ஆறு கட்டங்களாக நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள், நேற்று எண்ணப்பட்டன. இதில், துவக்கத்தில் இருந்தே, திரிணமுல் - காங்கிரஸ் கூட்டணி, பெரும்பாலான தொகுதிகளில் முன்னணியில் இருந்தது.மேற்கு வங்கத்தை பொறுத்தவரை, தனித்து ஆட்சி அமைக்க 148 தொகுதிகள் தேவை. ஆனால், திரிணமுல் காங்கிரஸ் கட்சி, இதைவிட அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில், திரிணமுல் - காங்கிரஸ் கூட்டணி 225 தொகுதிகளிலும், இடதுசாரி கூட்டணி கட்சிகள் 63 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. மேற்கு வங்க அரசியலில், இந்த வெற்றி, மிகப் பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. இடதுசாரி கூட்டணியில் அமைச்சர்களாக இருந்த, பெரும்பாலானோர் தோல்வியைத் தழுவினர்.

கொண்டாட்டம் : வெற்றிச் செய்தி கிடைத்ததும், கோல்கட்டாவில் உள்ள மம்தா பானர்ஜியின் வீட்டு முன், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர். "தீதி வாழ்க' என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது. அங்கு திரண்டிருந்த தொண்டர்கள், இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும், தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர். முக்கிய பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும், மம்தாவுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, அவரது இல்லத்துக்கு படையெடுத்து வந்தனர்.

இரண்டாவது சுதந்திரம் தங்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி குறித்து, மம்தா பானர்ஜி கூறுகையில், "இது மக்களுக்கு கிடைத்த வெற்றி. அன்னை, இந்தப் புனித மண், மனிதர்கள் ஆகியோருக்கு இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறேன். இந்த நாளை, மேற்கு வங்க மக்களுக்கு இரண்டாவது சுதந்திரம் கிடைத்த நாளாக கருதுகிறேன். வெற்றிக்காக உழைத்த தொண்டர்கள் மற்றும் பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாளுக்காக, மேற்கு வங்க மக்கள் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் காத்திருந்தனர்' என்றார்.

எதிர்பாராதது : தேர்தல் தோல்வி குறித்து இடதுசாரி கூட்டணி ஒருங்கிணைப்பாளர் பிமன் போஸ் கூறுகையில், "இந்த முடிவு எதிர்பாராதது. தோல்வியை ஏற்றுக் கொள்கிறோம். சட்டசபையில் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக, இடதுசாரி கட்சிகள் செயல்படும். தோல்விக்கான காரணம் குறித்து, கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி, விவாதிக்கப்படும்' என்றார். தகர்ந்தது கோட்டைஇந்த தேர்தல் வெற்றி மூலம், கடந்த 34 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த இடதுசாரி கூட்டணியின் வெற்றிக்கு, முற்றுப்புள்ளி வைத்துள்ளார், மம்தா. இதன்மூலம், இடதுசாரி கட்சிகள் கட்டிக் காத்து வந்த, சிவப்புக் கோட்டையையும் தகர்த்துள்ளார்.

மம்தா, தற்போது ரயில்வே அமைச்சராக இருப்பதால், அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு, முதல்வராக பதவியேற்கவுள் ளார். மேலும், மேற்கு வங்க மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையும் அவருக்கு கிடைக்கவுள்ளது. சித்தார்த் சங்கர் ராய்க்கு பின், மேற்கு வங்கத்தின் முதல்வர் நாற்காலியை அலங்கரிக்கப் போகும், கம்யூனிஸ்ட் கட்சியை சாராத முதல்வர் என்ற பெருமையும், மம்தாவுக்கு கிடைக்கவுள்ளது.

முதல்வர் புத்ததேவ் தோல்வி : கோல்கட்டா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் வீசிய, மம்தா ஆதரவு அலையில், முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவும் தோல்வி அடைந்தார். அவரது அமைச்சரவையில் இருந்த 17க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தோல்வி அடைந்தனர்.மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், ஜாதவ்பூர் தொகுதியில், இடதுசாரி கூட்டணி சார்பில், முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா போட்டியிட்டார். அவரை எதிர்த்து, மேற்கு வங்க முன்னாள் தலைமைச் செயலர் மணிஷ் குப்தா, திரிணமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார்.

மாநிலம் முழுவதும் வீசிய மம்தா ஆதரவு அலையில், இடதுசாரி கூட்டணிக் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் தோல்வி அடைந்தனர். முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவும் தோல்வி அடைந்தார். அவருக்கு, 87 ஆயிரத்து 288 ஓட்டுகள் கிடைத்தன. மணிஷ் குப்தா, ஒரு லட்சத்து மூன்றாயிரத்து 72 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டு வித்தியாசத்தில், அவர் தோல்வியை தழுவினார். இதுதவிர, இடதுசாரி கூட்டணி அரசில் அமைச்சர்களாக இருந்த 17க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தோல்வியைத் தழுவினர். தேர்தல் தோல்வியை அடுத்து, முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, நேற்று கவர்னர் மாளிகைக்கு சென்று, கவர்னர் எம்.கே.நாராயணனை சந்தித்து, தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

Wednesday, May 11, 2011

திமுகவுக்கு 137, அதிமுகவுக்கு 89 இடங்கள் கிடைக்கும்-நக்கீரன் எக்ஸிட் போல்

நக்கீரன் வார இதழ் நடத்தியுள்ள வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணிக்கு 137 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 89 இடங்களும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஊடகமும் ஒரு விதமான கருத்துக் கணிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், நக்கீரன் வார இதழ் ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.

நக்கீரன் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

பெண்களின் ஓட்டு திமுகவுக்கே

- திமுக கூட்டணியே இந்த முறை வெற்றி பெறும்.

- தி.மு.க. கூட்டணி கணிசமான இடங்களில் வெற்றி பெற முக்கிய காரணங்கள் இரண்டு. வாக்களித்த பெண்களில் அதிகம் பேர் தி.மு.க. கூட்டணிக்கே வாக்களித்துள்ளனர். தி.மு.க. அரசின் நல்வாழ்வுத் திட்டங்களை நேரடியாக அனுபவித்தவர்கள் இவர்கள்.

பணத்துக்கே மக்கள் வாக்களித்துள்ளனர்

- இரண்டாவது காரணம்... பணம். ஓட்டுக்குப் பணம் என்பது மிகவும் ஆரோக்கியமற்ற, ஜனநாயகத்திற்கே ஆபத்தான விஷயம். அதனை இம்முறை அனைத்து கட்சிகளும் செய்துள்ளன. செய்யாத கட்சி யென்று இல்லை. பணம் வாங்கியவர்களில் பாதிபேர் "தர்மம்' கருதி யார் அதிக பணம் தந்தார்களோ அவர்களுக்கு வாக்களித்துள்ளனர்.

வீணாய்ப் போன காங்கிரஸ்

- காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளுக்கு அடம் பிடிக்காமல் நாற்பது தொகுதிகளை சரியாகத் தேர்வு செய்து தகுதியான வேட்பாளர்களை நிறுத்தியிருந்தால் 35 தொகுதிகளை வென்றிருக்கும் -தி.மு.க. கூட்டணி இன்னும் தன்னம்பிக்கையோடு நின்றிருக்கும். காங்கிரசின் செயல் கூட்டணியின் கணுக்காலை கூட இருந்து வெட்டியமைக்குச் சமம். அக்கட்சி 63 தொகுதிகளில் 23 தொகுதிகளை வென்றாலே மிகப்பெரிய விஷயம்.

வடிவேலுவின் பங்கு அதிகம்

- ஜெயலலிதா, வைகோவை நடத்திய விதம் உட்பட தன் ஆணவத்தால் தி.மு.க. கூட்டணிக்கு உதவியிருக்கிறாரென்றால் விஜயகாந்த்தை "பஞ்சர்' செய்து முடக்கிப் போட்டதில் வடிவேலுவின் பங்கு முக்கியமானது. தே.மு.தி.க. பத்து தொகுதிகளை வென்றால் அது பெரிய அதிசயம்.

- நல்வாழ்வுத் திட்டங்களே தி.மு.க.-வை கரை சேர்க்கிறது

திமுக கூட்டணிக்கு 137

நக்கீரன் நடத்திய எக்ஸிட் போல் கணிப்பின்படி திமுக கூட்டணிக்கு 137 இடங்கள் கிடைக்கலாம்.

அதிமுக கூட்டணிக்கு 89

அதிமுக கூட்டணிக்கு 89 இடங்கள் கிடைக்கலாம்.

திமுகவுக்கு மட்டும் இத்தேர்தலில் 84 இடங்கள் கிடைக்கும். காங்கிரஸுக்கு 24, பாமக 19, விடுதலைச் சிறுத்தைகள் 6, முஸ்லீம் லீக் 3, மூவேந்தர் முன்னேற்றக் ழகம் 1 என மொத்தம் 137 இடங்களை திமுக பிடிக்கிறது.

அதிமுக கூட்டணியில் அதிமுகவுக்கு மட்டும் 73 இடங்கள் கிடைக்கும். தேமுதிகவுக்கு 7, கொங்கு இளைஞர் பேரவைக்கு 1, சிபிஎம்முக்கு 5, சிபிஐக்கு 2, மனித நேய மக்கள் கட்சிக்கு ஒரு சீட் என மொத்தம் 89 இடங்கள் கிடைக்கும்.

விஜயகாந்த்துக்கு கஷ்டம்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் வெற்றி பெறும் இழுபறியாக காணபப்படுகிறதாம். ரிஷிவந்தியம் தொகுதியில் அவருக்கும், காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜுக்கும் இடையே கடும் மோதல் நிலவுகிறது. இதனால் விஜயகாந்த் வெற்றி பெறுவார் என உறுதியாக கூற முடியவில்லை என்கிறது நக்கீரன்.

அதேபோல திருவள்ளூர், ஆர்.கே.நகர், தளி, சூலுர், மடத்துக்குளம், அரியலூர் சேலம் தெற்கு ஆகிய தொகுதிகளிலும் இழுபறி காணப்படுகிறது.

திமுக வெல்லக் கூடிய தொகுதிகள்

அம்பத்தூர், திருவொற்றியூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, பல்லாவரம், தாம்பரம், உத்திரமேரூர், காட்பாடி, ராணிப்பேட்டை, கே.வி.குப்பம், குடியாத்தம், திருப்பத்தூர், வேப்பணஹள்ளி, பென்னாகரம், பாப்பிரெட்டிபப்பட்டி, திருவண்ணாமலை, கீழ்ப்பென்னாத்தூர், ஆரணி, வந்தவாசி, வானூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், சங்கராபுரம், கெங்கவல்லி, ஏற்காடு, சங்ககிரி, சேலம் மேற்கு, ராசிபுரம், சேந்தமங்கலம், ஈரோடு கிழக்கு, அந்தியூர், கூடலூர், குன்னூர், கோவை தெற்கு, கிணத்துக்கடவு, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், திருச்சி மேற்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், துறையூர், பெரம்பலூர், குன்னம், பண்ருட்டி,குறிஞ்சிப்பாடி, தாராபுரம், கவுண்டம்பாளையம், கீழ்வேளூர், மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம், திருவிடைமருதூர், கும்பகோணம், தஞ்சாவூர், கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, மானாமதுரை, மேலூர், மதுரை கிழக்கு, மதுரை மத்தி, உசிலம்பட்டி, பெரியகுளம், கம்பம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, திருவாடானை, தூத்துக்குடி, திருச்செந்தூர், ஒட்டப்பிடாரம், சங்கரன்கோவில், தென்காசி, ஆலங்குளம், பாளையங்கோட்டை.

காங்கிரஸ் வெல்லும் தொகுதிகள்

திருத்தணி, சோளிங்கர், வேலூர், ஓசூர், செங்கம், செய்யார்,திருச்செங்கோடு, ஊட்டி, வால்பாறை, நிலக்கோட்டை, மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மதுரை வடக்கு, ராமநாதபுரம், விளாத்திகுளம், கடையநல்லூர், நாங்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர்.

விடுதலைச் சிறுத்தைகள்

செய்யூர், அரக்கோணம், ஊத்தங்கரை, திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், சீர்காழி.

பாமக வெல்லக் கூடிய தொகுதிகள்

கும்மிடிப்பூண்டி, மதுரவாயல், செங்கல்பட்டு, திருப்போரூர், காஞ்சிபுரம், ஆற்காடு, அணைக்கட்டு, ஜோலார்ப்பேட்டை, தர்மபுரி, போளூர், செஞ்சி, ஓமலூர், மேட்டூர், பவானி, ஜெயங்கொண்டம், நெய்வேலி, புவனகிரி, மயிலம், ஆலங்குடி.

அதிமுக வெற்றி பெறக் கூடிய தொகுதிகள்

பொன்னேரி, பூந்தமல்லி, ஆவடி, மாதவரம், திரு.வி.க.நகர், ராயபுரம், அண்ணாநகர், தி.நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், ஸ்ரீபெரும்புதூர், மதுராந்தகம், பர்கூர், கிருஷ்ணகிரி, பாலக்கோடு, கலசப்பாக்கம், திண்டிவனம், உளுந்தூர்ப்பேட்டை, கள்ளக்குறிச்சி, ஆத்தூர், எடப்பாடி, வீரபாண்டி, நாமக்கல், குமாரபாளையம், ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம், பெருந்துறை, கோபி, மேட்டுப்பாளையம், அவினாசி, திருப்பூர் வடக்கு, பல்லடம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், சிங்காநல்லூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, நத்தம், வேடசந்தூர், கரூர், குளித்தலை, மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, முசிறி, கடலூர், பூம்புகார், வேதாரன்யம், பாபநாசம், திருவையாறு, ஓரத்தநாடு, விராலிமலை, திருமயம், திருப்பத்தூர், சோழவந்தான், மதுரை மேற்கு, திருமங்கலம், ஆண்டிப்பட்டி, போடி, ராஜபாளையம், சிவகாசி, பரமக்குடி, முதுகுளத்தூர், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, வாசுதேவநல்லூர், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், கன்னியாகுமரி, நாகர்கோவில்.

தேமுதிக தொகுதிகள்

ஆலந்தூர், சேலம் வடக்கு, விருத்தாச்சலம், திருப்பரங்குன்றம், விருதுநகர், ராதாபுரம், பத்மநாபபுரம்

கொங்கு இளைஞர் பேரவை

பரமத்தி வேலூர்

சிபிஎம்

பெரம்பூர், அரூர், திருப்பூர் தெற்கு,, திண்டுக்கல், மதுரை தெற்கு.

சிபிஐ

திருத்துறைப்பூண்டி, பவானிசாகர்

மனித நேய மக்கள் கட்சி

ஆம்பூர்.