Search This Blog

Monday, March 21, 2011

பா.ம.கவில் போட்டியிடும் வேட்பாளர்கள்

தி.மு.க. கூட்டணியில் இணைந்து பா.மக. 30 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 13 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டது. நேற்று 15 வேட்பாளர்கள் பட்டியலை டாக்டர் ராமதாஸ் ஒப்புதலுடன் ஜி.கே.மணி வெளியிட்டார்.

கும்மிடிப்பூண்டி தொகுதியில் அம்பத்தூர் நகரசபை தலைவர் கே.என்.சேகர் போட்டியிடுகிறார். வேளச்சேரி தொகுதியில் மாநகராட்சி 10-வது மண்டல குழு தலைவர் மு.ஜெயராமன் போட்டியிடுகிறார்.

மற்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் வருமாறு:-

ஓமலூர்-அ.தமிழ ரசு,

பர்கூர்-ராசா,

புவன கிரி-அறிவுச்செல்வன்,

காஞ்சீபுரம்-உலகராட்சகன்,

எடப்பாடி-மு.கார்த்திக்,

பவானி-கா.சு.மகேந்திரன்,

பரமத்திவேலூர்- வடிவேல் கவுண்டர்,

பூம்புகார்- அகோரம்,

செஞ்சி- அ.கணேஷ்குமார்,

பாலக்கோடு - பாடி.வெ.செல்வம்,

தர்மபுரி-பெ.சாந்தமூர்த்தி,

திண்டிவனம் (தனி) - மொ.ப.சங்கர்,

திண்டுக்கல்-ஜே.பால்பாஸ்கர்.

இதுவரை 28 தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய தொகுதிகளான மைலம், வேதாரண்யம் ஆகிய தொகுதிகளுக்கு இன்று மாலை வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள்.

No comments: