:தேர்தல் கமிஷன் கெடுபிடி நடவடிக்கையால், கிராம மக்கள் கோரும் வளர்ச்சிப் பணிக்காக, தி.மு.க.,வினர் எம்.பி., பரிந்துரை கடிதம் மூலம் புதிய யுக்தியை கையாண்டு வருகின்றனர்.
தேர்தல் கமிஷன் கெடுபிடியால், வாக்காளர்களை, "கவர' முடியாத நிலையில் உள்ள தி.மு.க.,வினர், தற்போது புதிய யுக்தியை கையாண்டு வருகின்றனர். தேர்தலுக்கு பின், தொகுதி பக்கமே தலைகாட்டாத எம்.பி.,க்கள், தற்போது, லெட்டர்பேடு சகிதமாக வேட்பாளருடன் வலம் வர துவங்கி உள்ளனர்.தொகுதி நல மேம்பாடு நிதியாக எம்.பி.,க்களுக்கு இரண்டு கோடி ரூபாய் உள்ளது. இது, சமீபத்தில் ஐந்து கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம், "அதை செய்வோம், இதை செய்வோம்...' என, ஊர் முக்கிய பிரமுகர்களிடம் கூறி, ஓட்டு சேகரித்து வருகின்றனர்.
தி.மு.க., வேட்பாளர்கள், ஊராட்சிகளுக்கு நேரடியாக சென்று இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ நிர்வாகிகளை சந்தித்து, நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள பிரச்னையை கேட்டு அவற்றை தீர்ப்பதாகவும், இதற்கு எம்.பி., நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான பரிந்துரை கடிதத்தையும் எம்.பி., மூலம் வழங்குகின்றனர்.இது போன்ற கடிதம், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதியில் பரவலாக வழங்கப்படுகிறது.சொந்த ஊரில் நடைபெற உள்ள வளர்ச்சிப் பணியை தடுத்தால், கிராம மக்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் எனக் கருதி, அ.தி.மு.க., கூட்டணியினரும் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
No comments:
Post a Comment