பிரபாகரனால் கொல்லப்பட்டதமிழ்த் தலைவர்களே அதிகம் தேர்தல் களத்தில் கூட்டணியுடனோ, தனித்தோ எப்படி போட்டியிட்டாலும் காங்கிரசுக்கு இலங்கை தமிழர் விவகாரம் நெருக்கடியை கொடுப்பது நிச்சயம். காங்கிரஸ் மேல் பாயும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்கிறார் காங்கிரஸ் எம்.பி., அழகிரிவிடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் நடந்த போரில் மனித கேடயமாக தமிழர்களை, புலிகள் நடத்தினர். கேடயமாக பயன்படுத்தப்பட்ட தமிழர்கள், வெளியே போக முடியாத அளவுக்கு கைதிகளாக புலிகளின் கட்டுப்பாட்டில் மூன்று ஆண்டுகள் இருந்தனர்.
அவர்களை, இந்தியாவும், உலக நாடுகளும் வெளியே கொண்டு வர திட்டம் தீட்டின; அந்தத் திட்டம் தான் பாதுகாப்புப் பகுதி. மக்கள் விலகிச் சென்ற பின், யுத்தம் நேரடியாக நடந்தது; புலிகள் தோல்வி அடைந்தனர். மூன்றரை லட்சம் தமிழர்கள் முகாமில் அடைக்கப்பட்டனர்.அந்த முகாமில் பல சிரமங்கள் இருப்பதாக செய்தி வந்தது. உடனே முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர் சிதம்பரம் ஏற்பாட்டில், நான் உட்பட பத்து எம்.பி.,க்கள் கொண்ட குழுவினர், உண்மை நிலவரம் கண்டறிய இலங்கைக்கு சென்றோம்.விடுதலைப் புலிகளையும், தனி ஈழத்தையும் காங்கிரஸ் ஆதரிக்கவில்லை. ஆயுதம் ஏந்தி போராடுவதை ஒரு போதும் தனது கொள்கையாக காங்கிரஸ் கருதியதில்லை. விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள், "தமிழகத்திற்கு ஒரு தாயகம் வேண்டாமா' என கேட்கின்றனர். "அந்தத் தாயகம் தனி ஈழம்' என்கின்றனர்.
காங்கிரசைப் பொறுத்தவரை, உலகத் தமிழர்களுக்கான தாயகம் இந்தியாவில் இருக்கும் தமிழகம்தான். இதை விட ஒரு சிறந்த தாயகம் இருக்க முடியாது. செல்வா போன்ற, இலங்கை தமிழ்த் தலைவர்கள், இந்தியாவில் இருப்பது போன்ற மாநில உரிமையோடு, ஒருதமிழ் மாநிலம் இலங்கை அரசியல் சட்ட திட்டத்திற்கு உட்படுத்திக் கொண்டு ஆட்சி புரிய வேண்டும் என விரும்பினர்.
ஜனநாயக ரீதியாக பெறக்கூடிய உரிமைகள் அவர்கள் படிப்படியாக பெற்றனர். "இந்த வேகம் போதாது; தனி ஈழம் தான் தீர்வாகும்' எனக் கூறி, பல போராளிகள் குழு, இளைஞர்களை கவர்ந்தன. அவர்களின் குறிப்பிட்டு சொல்லக் கூடியவராக பிரபாகரன் இருந்தார். வலிமையோடும்; வல்லமையோடும் அவர் திகழ்ந்தார்.பிரபாகரனுடைய அரசியல் கருத்து, எதிரிகளை ஜனநாயக ரீதியாக வீழ்த்துவதற்கு பதிலாக, ஆயுத ரீதியாக வீழ்த்துவதாக அமைந்திருந்தது. தனது கருத்தோடு மாறுபடுகிற பிற போராளிகளை, தலைவர்களை கொன்று குவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
இதன் விளைவாக, இலங்கையில், சிங்கள அரசால் கொõல்லப்பட்ட தமிழ்த் தலைவர்களை விட, பிரபாகரனால் கொல்லப்பட்டவர்கள் அதிகம்.தன் கருத்துக்கு மாற்று கருத்து இருக்கக் கூடாது என்ற ஹிட்லர் சிந்தனை, அவரிடம் மேலோங்கியது. அதன் விளைவு: ராஜிவை கொன்றார். இதனால் ஜனநாயகம் மீது நம்பிக்கையுடைய உலகத் தலைவர்கள் அவரைக் கைவிட்டனர். இறுதியாக, சிங்கள அரசோடு நடந்த யுத்தத்தில் அவரும் கொல்லப்பட்டார்.
இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகள் மறு நிர்மானம் செய்வதற்காக இந்தியா, ஆயிரம் கோடி பணம் வழங்கியுள்ளது. 50,000 வீடுகள் கட்டுவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. முதல் கட்டமாக, 5,000 டன் சிமென்ட் வழங்கப்பட்டுள்ளது. தமிழர் வாழும் பகுதியில் விவசாயத்தை மேம்பாடு செய்வதற்õக, எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில் ஒரு ஆலோசனை குழு அமைக்கப்பட்டு, அவர்களும் உதவி வருகின்றனர்.
இலங்கையில் உயர்கல்வி படிக்கும் தமிழ் மாணவர்களுக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவைகளுக்கெல்லாம் மேலாக அரசியல், அதிகாரம், பரவலாக்கப்பட்டு தமிழர்கள் வாழும் மாநிலங்களில் சுய ஆட்சியுடன் கூடிய மாநில உரிமை வழங்குவதற்காக இந்திய அரசாங்கம் முயன்று வருகிறது.இலங்கையில், அவர்களுடைய தேசியகீதம், சிங்கள மொழியிலும், தமிழ் மொழியிலும் பாடப்பட்டு வந்தது. தமிழில் பாட தடை விதிக்கப்பட்ட செய்தி வந்தவுடன், சிதம்பரம் மூலமாக இலங்கையுடன் பேசி, அதைப் போன்ற தடைகள் வரக்கூடாது என்று இலங்கை அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு, இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் உறுதுணையாக இருக்கின்றன.அரசியல், அதிகாரம், பரவலாக்கப்பட்டு தமிழர்கள் வாழும் மாநிலங்களில் சுய ஆட்சியுடன் கூடிய மாநில உரிமை வழங்குவதற்காக இந்திய அரசாங்கம் முயன்று வருகிறது.
No comments:
Post a Comment