Search This Blog

Wednesday, October 27, 2010

அமைச்சர்களின் சொத்துக்கணக்கு: இளைஞர் காங்கிரசார் கோரிக்கை

மத்திய அரசின் சாதனைகளை விளக்குவதற்காக துவங்கப்பட்ட இளைஞர் காங்கிரஸ் பாதயாத்திரை தி.மு.க., எதிர்ப்பு யாத்திரையாக மாறியுள்ளது. ஆளுங்கட்சிக்கு எதிராக தொடர்ந்து விமர்சனங்களை வைத்து வரும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, "அமைச்சர்கள் சொத்துக்கணக்கை வெளியிட வேண்டும்' என்று, சமீபத்தில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில், காந்தி ஜெயந்தியன்று இளைஞர் காங்கிரஸ் சார்பில், கன்னியாகுமரியில் பாதயாத்திரை துவங்கியது. 125 சட்டசபை தொகுதிகள், 22 லோக்சபா தொகுதிகள் அடங்கிய 1,350 கி.மீ., தூரத்தை நடைபயணமாக நடக்க திட்டமிட்டு, பாதயாத்திரை நடந்து வருகிறது. சாதனைகளை விளக்குவதற்காக துவங்கப்பட்ட பாதயாத்திரை தமிழக அரசையும், தி.மு.க.,வையும் விமர்சிக்கும் யாத்திரையாக மாறியுள்ளது. பாதயாத்திரைக்கு தலைமை வகித்துள்ள இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா பல்வேறு இடங்களில் பேசும் போது, ஆளுங்கட்சிக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் ஆளுங்கட்சிக்கு கொடுத்து வந்த குடைச்சல் சற்று ஓய்ந்துள்ள நிலையில், ஊர், ஊராக சென்று இளைஞர் காங்கிரசார், அரசுக்கு எதிராக பிரசாரம் செய்வதால் ஆளுங்கட்சியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ராகுலின் நேரடி கட்டுப்பாட்டில் இளைஞர் காங்கிரஸ் இயங்குவதால், மாநிலத் தலைவர் தங்கபாலு உள்ளிட்ட தி.மு.க., ஆதரவு தலைவர்களும் இதை கண்டிக்க தயங்கி வருகின்றனர். "மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு மறைக்கிறது' என்று துவங்கிய விமர்சனங்கள், "சாலை வசதி சரியில்லை; அமைச்சர்கள் நடத்தும் பள்ளி, கல்லூரிகளில் கல்விக் கட்டணம் குறைக்கபடுமா' என, பல்வேறு விதமாக விரிவடைந்து வருகிறது. இதன் உச்சகட்டமாக, "தமிழக அமைச்சர்களின் பொருளாதார வளர்ச்சியை பார்த்து பொதுமக்கள் பிரமிப்படைந்துள்ளதை பாதயாத்திரையின் போது பார்க்கிறோம். எனவே, அமைச்சர்கள் சொத்து கணக்கை வெளியிட வேண்டும்' என, யுவராஜா வெளிப்படையாக அறிவித்துள்ளது ஆளுங்கட்சியை உச்சகட்ட கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. "மேலிடத் தலைமையின் ஆலோசனையில் பேரில் தான், நாங்கள் இவ்வாறு பேசுகிறோம்' என்றும் யுவராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கூறுகையில், "மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்து செல்கிறோம். சில இடங்களில் அவை சரியாக செயல்படவில்லை என்றால் அதனை தெரிவிக்கிறோம். இதற்காக அவர்களுக்கு (தி.மு.க.,)கோபம் வருகிறது. உதாரணமாக, 100 நாள் வேலைத்திட்டத்தில் பல இடங்களில் 40 ரூபாய் தான் கூலி தருகின்றனர். மகளிர் சுயஉதவிக் குழுக்களை கூட்டம் சேர்க்க மட்டும் ஆளுங்கட்சி பயன்படுத்துகிறது. அரசில் எல்லாம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று கருதுகிறோம். அதனால் தான், அமைச்சர்களின் சொத்துப்பட்டியல் கேட்டுள்ளோம்' என்றார்.

ஈரோட்டில் எழப்போகுது போர்குரல்: பாதயாத்திரை நாளை மறுநாள் ஈரோடு சென்றடைகிறது. அங்கு பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த இளைஞர் காங்கிரசார் திட்டமிட்டுள்ளனார். மத்திய அமைச்சர் வாசன், இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் கிரண்குமார் ரெட்டி, இளங்கோவன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பேசவுள்ளனர். ஈரோடு மாவட்டம் இளங்கோவனின் சொந்த மாவட்டம் என்பதால், அவரது ஆதரவாளர்கள் இங்கு அதிகமாக உள்ளனர். இளங்கோவன் லோக்சபா தேர்தலில் தோல்வியடைய தி.மு.க., தான் காரணம் என்ற கோபம் அவர்கள் மத்தியில் நீடித்து வருகிறது. இதனால், ஆளுங்கட்சிக்கு எதிரான உச்சபட்ச சீற்றம் இந்த கூட்டத்தில் எதிரொலிக்கும் என்பதால், அரசியல் வட்டாரம் பரபரப்பாகியுள்ளது. ஏற்கனவே ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சித்து வரும் யுவராஜாவும், இந்த கூட்டத்தில் தமிழக அரசுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைக்க திட்டமிட்டுள்ளதாக இளைஞர் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 29ம் தேதி, ஈரோட்டில் நடக்கும் பொதுக்கூட்டம் தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக உளவுத்துறையும் தெரிவித்துள்ளதால், ஆளுங்கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Sunday, October 24, 2010

சென்னை குடும்ப நல கோர்ட்டின் 10 அறிவுரைகள்

விவாகரத்துகள் பெருகி வரும் இக்காலகட்டத்தில் விவாகரத்து கோரி தம்பதிகள் நாடி வரும் சென்னை குடும்ப நலகோர்ட்டில், இனிமையான இல்லறத்திற்கு என்று தலைப்பில் 10 அறிவுரகளை பெரிய போர்டில் எழுதி வைத்துள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது.

சென்னை குடும்ப நல கோர்ட்டின் முதன்மை குடும்ப நல கோர்ட்டு வளாகத்திலும், முதலாவது மற்றும் இரண்டாவது குடும்ப நல கோர்ட்டு வளாகத்திலும் இந்த போர்டு வைக்கப்பட்டுள்ளது.

அதில் இடம் பெற்றுள்ள அறிவுரைகள்:

1. ஒரேசமயத்தில் இருவரும் கோபப்படாதீர்கள்.

2. வாக்குவாதம் ஏற்படுகின்ற பிரச்சினைகளில் ஒருவர் மற்றவரை ஜெயிக்கவிட்டு மகிழ்ச்சி அடையுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை எப்பொழுதுமே!

3. விமர்சனத்தையே வாஞ்சையுடனும், அன்புடனும் செய்து பாருங்கள்.

4. கடந்தகால தவறுகளைச் சுட்டிக் காட்டாதீர்கள்.

5. உலகத்திற்காக போலியாக வாழ்வதைக் காட்டிலும், உங்களுக்காகவே வாழ்ந்து பாருங்களேன்.

6. விவாதம் தவிர்க்க முடியாதது என்றால், கூடியவரைக்கும் அதை ஒத்திப்போடுங்கள்.

7. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஒரு அன்பான வார்த்தையோ அல்லது வாழ்த்தோ உங்கள் துணையிடம் உபயோகப்படுத்திப் பாருங்கள்.

8. செய்த தவறை உணரும்போது அதை ஒத்துக் கொள்ளவும் அல்லது அதற்காக மன்னிப்புக் கேட்கவும் தயங்காதீர்கள்.

9. இல்லற வாழ்க்கை இனித்திட, மூன்று தாரக மந்திரங்கள்.

- சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்ளுதல்
- அனுசரித்துப் போகுதல்
- மற்றவர்களை மதித்து நடத்தல்.

மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ள 10வது அறிவுரை.

விவாகரத்து கோரி வரும் தம்பதிகள் இந்த பத்து அறிவுரைகளையும் ஒரு பத்து நிமிடம் ஆற அமர நின்று ஒன்றுக்கு இரண்டு முறை படித்தாலே போதும், 'டைவர்ஸ்' கேட்டு வரும் ஜோடிகள் 'டைவர்ட்' ஆகிச் செல்லும் வாய்ப்பு உருவாகும்.

Saturday, October 23, 2010

காங்கிரஸ் போடும் கூட்டணிக் கணக்கு-பீகார் தேர்தலுக்குப் பிறகு அமல்

தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் தங்களது கூட்டணியைப் பலப்படுத்தும் முயற்சிகளில் மூழ்கியுள்ள நிலையில் காங்கிரஸும் தன் பங்குக்கு ஒரு பலே கணக்குடன் கமுக்கமாக காத்திருக்கிறது-சமயம் பார்த்து அதை வெளிப்படுத்த.

வழக்கமாக திமுகவும், அதிமுகவும்தான் கூட்டணிகளை நிர்ணயம் செய்யும். அவர்களோடு பிற கட்சிகள் தேர்தலுக்கு தேர்தல் வந்து போகும். இதுதான் வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் தற்போது காலம் மாறிப் போயுள்ளதால் இந்த இரு கட்சிகளின் இரும்புப் பிடியும், உடும்புப் பிடியும் தளர்ந்து போய் விட்டது.

கூட்டணிகளுக்கு தலைமை தாங்குவது வேண்டுமானால் இந்தக் கட்சிகளாக இருக்க முடியும். ஆனால் கூட்டணிகள் உருவாவது இவர்களின் கையில் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

காங்கிரஸ், தேமுதிக, பாமக. இந்த மூன்று கட்சிகளும்தான் இன்றைய தேதியில், வெற்றிக் கூட்டணியை நிர்ணயிக்கும் புதிய சக்திகளாக உருவெடுத்துள்ளன.

அதேசமயம், பாமக இருக்கும் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி என்பது பழைய கதை. இப்போது இந்த பெருமையில் பங்கு போட வந்து விட்டது தேமுதிக. தேமுதிகவும் இருக்கும் கூட்டணிதான் வெற்றி பெறும் கூட்டணி என்ற நிலை ஏற்பட்டுள்ளது. காரணம், அது தன் வசம் வைத்திருக்கும் லட்டு போன்ற வாக்கு வங்கி [^] . இவர்களுடன் காங்கிரஸும் சேரும்போது அந்தக் கூட்டணிக்கு நிச்சயம் வெற்றி என்பது அரசியல்வாதிகளின் கணக்கு.

விஷயத்திற்கு வருவோம். திமுக கூட்டணியில் காங்கிரஸ் [^] இருக்குமா, பாமக மீண்டும் வருமா என்பது சமீப காலமாக பேசப்பட்டு வரும் முக்கிய விஷயமாக உள்ளது. அதேபோல தேமுதிக கூட்டணிக்கு வருமா, பாமக மீண்டும் வருமா, கூடவே காங்கிரஸும் வருமா என்ற எதிர்பார்ப்பில் அதிமுக ஆதரவாளர்களும், அனுதாபிகளும் காத்துள்ளனர்.

ஆனால் காங்கிரஸ் தனிக் கணக்கோடு படு கமுக்கமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது இந்த அரசியல் விளையாட்டை என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

விஷயம் வெகு சிம்பிள். திமுகவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம். நமது தலைமையில் தனிக் கூட்டணி அமைப்பது. அதில், பாமகவையும், தேமுதிகவையும் இணைத்துக் கொள்வது. இந்தக் கூட்டணிக்கு நிச்சயம் கணிசமான இடங்கள் கிடைக்கும். தேர்தலுக்குப் பின்னர் எந்தக் கட்சிக்கு (திமுக அல்லது அதிமுக) அதிக இடங்கள் கிடைக்கிறதோ அந்தக் கட்சியுடன் இணைந்து (பாமக-தேமுதிக வராவிட்டால் தனியாக போய்) ஆட்சியமைப்பது. இதுதான் காங்கிரஸின் திட்டம் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

இது உண்மையாக இருக்குமோ என்று யோசிக்கும் அளவுக்கு சில விஷயங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன. அதில் ஒன்று சமீபத்தில் காங்கிரஸ் தரப்பிலிருந்து ஒரு முக்கியத் தலைவர், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாஸை தொடர்பு கொண்டு பேசினாராம். அவர், திமுகவுடன் சேரும் முடிவை தாமதப்படுத்துங்கள். அவசரம் காட்ட வேண்டாம். சிறப்பான கூட்டணிக்கு நாங்கள் தயாராகி வருகிறோம். அதுவரை பொறுத்திருங்கள் என்று தெரிவித்தாராம் அந்தத் தலைவர்.

இதேபோன்ற ஒரு வாக்குறுதி தேமுதிக தலைமைக்கும் போய்ச் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த புதிய கூட்டணிக் கணக்கை காங்கிரஸ் போடக் காரணம், ராகுல் காந்தி [^] என்கிறார்கள். அதேசமயம், சோனியா காந்தியின் விருப்பத்திற்கு மாறாகவும் ராகுல் காந்தி நடக்கவில்லையாம். அதாவது ஒரே கல்லில் 2 மாங்காய்களை அடிக்க காத்திருக்கிறார் ராகுல். 

ராகுலின் உத்தி என்னவென்றால், யாருடனும் சேராமல் தனிக் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம். இது நமது பலத்தை அறிய உதவும். தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியில் பங்கோடு கூட்டணி அமைக்கும் பொறுப்பை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சோனியாவை சமாதானப்படுத்தி விட்டாராம் ராகுல்.

இந்த தனிக் கூட்டணியால் காங்கிரஸுக்கு என்ன பலன் கிடைக்கும்? 

தமிழகத்தில் காங்கிரஸின் உண்மையான பலத்தை அறிய முடியும். காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் எப்படிப்பட்ட முடிவுகள் கிடைக்கும் என்பதை அறியலாம். எதிர்கால அரசியலில் காங்கிரஸ் கட்சி முக்கியக் கட்சியாக, பலமான கட்சியாக உருவெடுக்க இது அடித்தளமாக அமையும். இறுதியில் தனித்து ஆட்சியைப் பிடிக்கக் கூடிய நிலையை அடைய இந்த புதிய கூட்டணி ஒரு பிள்ளையார் சுழியாக அமையும் என்பதே ராகுலின் திட்டமாம்.

அதேசமயம், திமுக, அதிமுகவை தவிர்த்து விட்டு பாமக, தேமுதிகவுடன் இணைந்து தனித்துப் போட்டியிடுவதால் காங்கிரஸுக்குப் பெரும் பாதகம் ஏதும் வந்து விடப் போவதில்லை. தேசிய அரசியலில் கடைப்பிடிக்கப்படும் உத்தியை இங்கு புகுத்துகிறார் ராகுல். அதாவது தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியும், இன்ன பிற மதச்சார்பற்ற கட்சிகளும் தனித் தனியாக போட்டியிடுவது வழக்கம். ஆனால் தேர்தலுக்குப் பின்னர் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து கூட்டாஞ்சோறு ஆக்கிச் சாப்பிடுவது வழக்கம். அதே பாணியை இப்போது தமிழக அரசியலுக்குள் கொண்டு வரப் பார்க்கிறார் ராகுல்.

இந்தப் புதிய கூட்டணி குறித்த விஷயங்களை படு ரகசியமாக வைத்துள்ளது காங்கிரஸ். பீகாரில் நடக்கும் தேர்தலுக்காக இந்த அமைதியாம். பீகார் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பில்லை. ஆனால் லாலு கூட்டணியை முந்தி 2வது இடத்தைப் பிடித்தாலே அது மிகப் பெரிய வெற்றி என்ற நிலையில்தான் காங்கிரஸ் உள்ளது.

அப்படி நடந்து பீகாரில் நம்பர் டூ கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்தால், தமிழகத்தில் தனிக் கூட்டணி என்ற ரிஸ்க்கை எடுக்கும் முடிவை காங்கிரஸ் பகிரங்கமாக அறிவிக்கும் என்கிறார்கள். தற்போது பீகாரில் காங்கிரஸ் கட்சியை மைக்ராஸ்கோப்பை வைத்து தேட வேண்டிய நிலையில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் (ராகுல்) போட்டுள்ள இந்த புதிய கணக்கு தமிழகத்தில் எப்படி வரவேற்கப்படும், தமிழக வாக்காளர்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக மாறுவார்களா அல்லது வழக்கம் போல ஏதாவது ஒரு 'மு.க'வை (திமுக அல்லது அதிமுக) தனிப் பெரும்பான்மை பலத்துடன் தேர்ந்தெடுப்பார்களா என்பதை போகப் போகத்தான் பார்க்க வேண்டும்

Friday, October 22, 2010

மக்களை வாழ விடாமல் வதைக்கிறது தி.மு.க., அரசு : விஜயகாந்த் தாக்கு

அரசு என்பது மக்களை வாழச் செய்ய வேண்டும்; ஆனால், மக்களை வாழ விடாமல் வதைத்துக் கொண்டிருக்கிறது தி.மு.க., அரசு,'' என, திருப்பூரில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.
திருப்பூர் யூனியன் மில் ரோடு ஸ்ரீ சக்தி தியேட்டர் முன், திருப்பூர் வடக்கு மாவட்ட தே.மு.தி.க., சார்பில், மத்திய அரசின் பஞ்சு ஏற்றுமதி கொள்கையை கண்டித்தும், நலிந்து வரும் ஜவுளித் தொழிலை பாதுகாத்திட வலியுறுத்தியும், பஞ்சு ஏற்றுமதியை தடை செய்யக் கோரியும், தொழிலாளர் நலன் பாதுகாத்திடவும், விவசாயிகள் நலன் காக்க பருத்திக்கு நியாயமான விலை நிர்ணயிக்க கோரியும், மத்திய மாநில அரசுகளை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது.

பொதுக்கூட்டத்துக்கு தலைமை வகித்து, தே.மு.தி.க., நிறுவன தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:பஞ்சு, நூல் ஏற்றுமதியால் தொழில் நலிவடைகிறது. தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைகின்றனர். விவசாயிகளின் நலனில் மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை. மிகப்பெரிய தொழிலதிபர்கள் பயனடையும் வகையில் மட்டுமே, அரசின் தொழிற்கொள்கைகள் இருந்து வருகின்றன. அரசு என்பது மக்களை வாழ வைக்க வேண்டும். மக்களை அழிப்பதற்கு அரசு இல்லை. ஆனால், தி.மு.க., அரசு மக்களை வதைத்து, அழித்துக் கொண்டிருக்கிறது.போன ஆண்டில் ஒரு கேண்டி பஞ்சு 23,000 ரூபாயாக இருந்தது; இப்போது, 43,000 ரூபாயாக உள்ளது. நூல் ஒரு கிலோ விலை 150 ரூபாயில் இருந்து, இப்போது 205 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுகளால் விவசாயிகளுக்கு விலை கிடைக்கவில்லை. ஐந்து லட்சம் தொழிலாளர்கள், திருப்பூரை விட்டு வேலையில்லாமல் சொந்த ஊர் சென்று கொண்டிருக்கின்றனர்.இந்த கூட்டம் காசு கொடுத்து சேர்த்த கூட்டம் இல்லை; என்னை நம்பி வந்த கூட்டம். எனக்கு ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும், மக்கள் பிரச்னைகளை கையில் எடுத்து பேச வந்திருக்கிறேன். அவர்களது நலனுக்காக போராட வந்திருக்கிறேன்.

எனது கல்யாண மண்டபத்தை இடித்தாலும், வருமானவரி சோதனை நடத்தினாலும், மக்கள் பிரச்னைக்காகத்தான் போராடுகிறேன்.தமிழகத்தில் ஏழு லட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். ஆனால், 90 ஆயிரம் பேருக்கு தான் வேலைவாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், திருப்பூரை தேடி வருகிற தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை தரும் நிலையில், தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன.தொழிலை காப்பாற்றுவதை விட சொத்து சேர்ப்பதிலும், கொள்ளை அடிப்பதிலும்தான் அரசு அதிக அக்கறை காட்டுகிறது. கருணாநிதி, அவரது மகன்களின் சொத்து கணக்கை காட்ட வேண்டும் என்று தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகளே கூறி வருகின்றன.கருணாநிதி மகன் ஸ்டாலின், "விஜயகாந்த் கட்சி ஆரம்பித்திருக்கிறார். அவருக்கு கட்சியை பற்றி என்ன தெரியும்,' என்று கூறுகிறார்.

நான் ஆரம்பித்த கட்சியை பற்றி எனக்கு நன்றாக தெரியும். வறுமையை ஒழிப்பதுதான் என் நோக்கம்.என்னை நம்பி லட்சக்கணக்கான தொண்டர்களும், தாய்மார்களும் இருக்கிறார்கள். ஆனால், அண்ணாதுரை ஆரம்பித்த கட்சியை பறித்துக் கொண்ட கருணாநிதிக்குதான் கட்சியை பற்றி தெரியாது. இன்னும் ஆறு மாதத்துக்கு பிறகு கருணாநிதி ஆட்சி இருக்காது.மறுபடியும் தி.மு.க., கட்சி ஆரம்பிக்கட்டும், எத்தனை பேர் சேருவார்கள் என்பதை பார்க்க வேண்டும். மரியாதை கொடுத்து பேச வேண்டும். அந்த மரியாதையை தரவில்லை என்றால், மரியாதை கெட்டுவிடும் என தி.மு.க., வினரை எச்சரிக்கிறேன். நாவடக்கம் இல்லாமல் பேசுவதை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.அடுப்பு, டிவி, இலவச அரிசி தரும் தி.மு.க., அரசு, ஓட்டுக்கு நோட்டு தருவது ஏன்? சாதனைகளை சொல்லி ஓட்டு வாங்க வேண்டும். ஆனால், தி.மு.க., ஆட்சியில் எல்லாம் வேதனை. அடுப்பு, டிவி, இலவசமாக வீடு எல்லாம் மக்கள் தந்த வரிப்பணம். மக்கள் வரிப்பணத்தை வாங்கி, மக்களுக்கு இலவசங்களை தந்து ஏமாற்றுவதுதான் தி.மு.க., அரசு. கொள்ளையடிக்கத்தான் ஆட்சியே நடத்துகின்றனர்.

உண்மையை சொன்னால் விஜயகாந்த் கெட்டவன் என்கின்றனர். வசனம் பேசுகிறான் என்கின்றனர். நான் சினிமாவில் தான் டயலாக் பேசுவேன். வாழ்க்கையில் வசனம் பேச மாட்டேன். 1967ம் ஆண்டில் போராடி அண்ணாதுரை தி.மு.க., ஆட்சியை கொண்டு வந்தார். இன்றைக்கும் ஆட்சியை காப்பாற்ற, காங்., உடன் விழுந்து விழுந்து கூட்டணி வைக்கிறார் கருணாநிதி.விலைவாசி எல்லாம் உயர்ந்து மக்கள் கஷ்டபட்டிருக்கும் நிலையில், டெல்லிக்கு சென்று, விலைவாசியை கட்டுப்படுத்த என்ன பேசினார் ஸ்டாலின்? அடுத்த தேர்தலில் விஜயகாந்த் யாருடன் கட்சி வைக்கிறார் என்று அலைகின்றனர். காங்., உடன் கூட்டணி சேருவார் என்று கணக்கு போடுகின்றனர். இலை போட்டு பிரியாணி விருந்து வைக்கிறேன் என்கிறார்கள்.

உண்மையான ஆட்சி நடத்தாமல், இப்படி கேவலமாக அரசியல் நடத்துவதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டுவிடாது. தே.மு.தி.க., என்றும் மக்களுக்காகதான். கொள்கை மாற மாட்டேன். வறுமையை ஒழிப்பதுதான் என் கொள்கை. இதன் மறைபொருள், மக்களின் வருமானத்தை பெருக்க வேண்டும் என்பதுதான். அதற்கு ஏற்பாடு செய்தால் தான் வறுமை ஒழியும்.தமிழனுக்கு பிரச்னை என்றால் கடுகளவும் விட்டுத் தர மாட்டேன் என்பார் கருணாநிதி; ஆனால், கடல் அளவில் விட்டுத் தருவார். கச்சத்தீவை தாரை வார்த்தவர் கருணாநிதி. முல்லை பெரியாறு திட்டத்தை தாரை வார்த்தவர் கருணாநிதி. காவிரியை தாரை வார்த்தவர் கருணாநிதி. தமிழை வித்தவர் கருணாநிதி.பத்து லட்சம் மக்கள் தொகை கொண்ட திருப்பூரில் போதிய பஸ் வசதி இல்லை. பெண்களுக்கு தனி பஸ்கள் இல்லை. குளிக்கவும், குடிக்கவும் போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. வேலை வாய்ப்பை இழக்கின்றனர்.தமிழில் பெயர் வைக்க சொல்லும் கருணாநிதி, அவர்களது பேரன்கள் வைக்கும் திரைப்பட தயாரிப்பு நிறுவன பெயர்களை தமிழில் மாற்றவில்லை.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.முன்னதாக, திருப்பூர் மாவட்ட தே.மு.தி.க., வடக்கு மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் வரவேற்றார். அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞரணி மாநில செயலாளர் சுதீஷ், தேர்தல் பிரிவு செயலாளர் அக்பர், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம் ஆகியோர் பேசினர். திருப்பூர் மாநகர செயலாளர் பழனிசாமி நன்றி கூறினார்.

விஜயகாந்த் பொதுக்கூட்ட துளிகள்...

* பகல் 3.00 மணிக்கு பொதுக்கூட்டம் என அறிவித்திருந்தாலும், 2.00 மணியில் இருந்தே நிகழ்ச்சி இடத்தில் தே.மு.தி.க., வினர் திரள ஆரம்பித்து விட்டனர். இதனால், 3.30 மணியளவில் பெருமளவில் கூட்டம் திரண்டிருந்தது.
* 3.25 மணிக்கு அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனும், 3.55 மணிக்கு மாநில இளைஞரணி செயலாளர் சுதீஷும் மேடைக்கு வந்தனர்.
* மாலை 4.00 மணிக்கு பண்ருட்டி ராமச்சந்திரன், சுதீஷ் முன்னிலையில், 15 நிமிடங்கள் வரை பஞ்சு, நூல் ஏற்றுமதிக்காக மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டன. இதில், தி.மு.க., அரசை தாக்கிய வாக்கியங்களே அதிகம் இடம்பெற்றிருந்தன.
* மாலை 4.25 மணிக்கு மேடைக்கு வந்தார் விஜயகாந்த். கருப்பு கூலிங் கிளாஸ் அணிந்திருந்த அவர், அதை அணிந்தபடியே மேடையில் பேசினார்.
* மாலை 4.30 மணிக்கு மைக்கை பிடித்த விஜயகாந்த், 5.50 மணி வரை பேசினார். இடையிடையே சில நிமிடங்கள் மைக் பழுதானது. கூட்டம் கட்டுப்பாடின்றி திரண்டதாலும் அவ்வப்போது பேச்சை நிறுத்தி விட்டு கூட்டத்தை அமைதிபடுத்த முயன்றார் விஜயகாந்த்.
* தி.மு.க., அரசையும், கருணாநிதி, ஸ்டாலின் போன்றவர்களையும் தாக்கி பேசிய விஜயகாந்த், அ.தி.மு.க., தொடர்பாக எந்த கருத்துகளையும் கூறவில்லை.
* கூட்டம் அதிகரித்து, மேடையை நோக்கி பலரும் வர முயன்றதால் மேடையின் முன்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, பலரும் திக்குமுக்காடினர். ஸ்பீக்கர்கள், பேனர் தட்டிகள் கட்டியிருந்த கம்பங்கள், தியேட்டர் காம்பவுண்ட் சுவர்கள், கட்டட மேல்பகுதிகளில் நின்றும், அமர்ந்தும் பலரும் விஜயகாந்த் பேச்சை
ரசித்தனர்.

மாநாடு நடத்த திட்டம்: தொண்டர்களுக்கு அழைப்பு :பொதுக்கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், ""விஜயகாந்த் கட்சிக்கு கொள்கை கிடையாது என்கின்றனர்; கொள்ளையடிக்கிற கொள்கை கிடையாது. ஏழைகளை வாழ வைக்க வேண்டும் என்பதுதான் என் கொள்கை. என்னால் ஆன நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறேன். தையல் மெஷின்கள், கம்ப்யூட்டர்கள், பெண்கள் நாட்டின் கண்கள் திட்டம், ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தந்திருக்கிறேன்.""அடுத்து மாநாடு ஒன்று நடத்தலாம் என்றிருக்கிறேன். இதே போல் அனைவரும் கூட்டம், கூட்டமாக குடும்பத்துடன் வந்து பங்கேற்க வேண்டும். ஊழல் அரசியல்வாதிகளை புறமுதுகிட்டு ஓடச் செய்ய வேண்டும். அவர்களை ஊரை விட்டே விரட்ட வேண்டும்,'' என்றார்.

Thursday, October 21, 2010

காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் மக்கள் நல திட்டங்கள்




மத்திய அரசின் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்கள்

திட்டம் 1  : இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம் ( IAY ) இந்த                 ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு ரூ.1800 கோடி.
நோக்கம்  : மத்திய அரசின் இந்த திட்டம், கிராமப்புறத்திலிருக்கும் குடிசைகள் மற்றும் தற்காலிக வீடுகள் அனைத்தும் டைல்ஸ்கள் பதிக்கப்பட்ட ( Single Bed Room, Kitchen, Hall, Bathroom மற்றும் Portico ) கட்டிடமாக மாற்றித்தருவதே இதன் நோக்கமாகும். இதன் கட்டுமானச் செல்வில் 75% மத்திய அரசின் பங்காக தரப்படுகின்றது.

திட்டம் 2  : தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கித் திட்டம் (NABARD ) இந்த ஆண்டிற்காண நிதி ஒதுக்கீடு ரூ.4,500 கோடி.
நோக்கம்  : இந்திய அரசின் பாரத் நிர்மான் திட்டத்தின் முதல் அங்கமான கிராமப்புற நீர்ப்பாசன வசதிக்கு உதவிடவே ( NABARD )  வங்கிகள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் கிராமப்புற மக்களுக்கு அளிக்கப்படும் கடனுதவிகளுக்கு, மத்திய அரசே நேரடியாகவே நிதி உதவி செய்கிறது.

திட்டம் 3  : பிரதான் மந்திரி கிராமின் சதக்யோஜனா திட்டம்          (PMGSY )  நிதி ஒதுக்கீடு ரூ.30,737 கோடி.
நோக்கம்  :  பருவ காலங்களில் ஏற்படும் இயற்கை தாக்கங்களை எதிர்கொண்டிடும் வலுவான சாலைகளை கிராமங்களில் அமைத்திடுவது. மத்திய அரசே இதற்கு முழுவதுமாக நிதி ஆதாரம் அளிக்கிறது.

திட்டம் 4  : ஊரக உள்கட்டமைப்பு பணிகள நிறைவேற்றிடும் திட்டம் ( Bharat Nirman ) நிதி ஒதுக்கீடு ரூ. 1,72,000 கோடி.
நோக்கம்  : கிராமப்புறத்தில் நீர்ப்பாசன வசதிகளை மேன்மைபடுத்துவது, சாலைகளை நன்கு சீரமைப்பது (PMGSY) -ம் இதைச் சேர்ந்ததே. நல்ல குடிநீர் வசதி அமைத்து தருவது, காங்கிரீட் வீடுகள் கட்டித் தருவது. (IAY இதைச் சேர்ந்தது) தொலைபேசி வசதி ஏற்படுத்தி தருவது. மின்வசதி ஏற்படுத்தி தருவது - ஆகியவை. இவை அனைத்தும் ஒரு கிராமத்திற்கு கிடைத்திருந்தால் அதற்கு முக்கியக் காரணம் மத்திய அரசு தான்.

திட்டம் 5  : முழு சுகாதாரதிட்டம் ( Total Sanitation Campaign - TSC ) நிதி ஒதுக்கீடு ரூ.5,100 கோடி.
நோக்கம்  :  பொதுவிடங்கள் மாசுபடுதலை தடுத்தல். கிராமங்களில் கழிவரைகள் கட்டப்பட்டிருக்கின்றன. மொத்த செலவில் மத்திய அரசு 75% ஏற்றுக் கொண்டிருக்கிறது.

திட்டம் 6  : பிற்படுத்தப்பட்ட பகுதிக்கான மான்யத் திட்டம் ( BRGF).
நோக்கம்  : நாட்டில் சில பகுதிகள் மிகவும் பிந்தங்கியதாக இருக்கின்றன அவற்றை முன்னேற்றிட மான்யத்தொகை அளிக்கப்படுகிறது. மாநில அர்சு எதை பிற்படுத்தப்பட்ட பகுதி என அறிவிக்கிறதோ அந்தப் பகுதிக்கு இந்த நிதி முழுவதுமாக செலவிடப்படுகின்றது.

திட்டம் 7  : சர்வ சிக்‌ஷா அபிக்ஞான் (SSA) நிதி ஒதுக்கீடு ரூ. 60,000 கோடி.
நோக்கம்  : அனைத்து சிறுவர்களும் பள்ளிக்கு சென்றிட வேண்டும். இதன் மூலம் பள்ளிகளுக்கு தேவையான அனைத்து கட்டமைப்புகளும் செய்துத் தரப்படுகிறது. இது முழுமையாக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மூலமாக நிறைவேற்றிடும் திட்டமாகும்.

திட்டம் 8  : மதிய உணவுத் திட்டம் (MDMS) நிதி ஒதுக்கீடு ரூ. 33000 கோடி.
நோக்கம்  : பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு சூடான நன்கு சமைக்கப்பட்ட சத்துணவு அளித்திட வேண்டும். இது  பெருந்தலைவர் காமராசர் வழிகாட்டி அமைத்திட்ட திட்டமாகும். இதன் மூலம் 11.74 கோடி  மாணவர்கள் பயன் பெறுகிறார்கள். இதற்குரிய. அத்தனை செலவினையும் மத்திய அரசே ஏற்கிறது.

திட்டம் 9  : ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்டம் (ICDS) நிதி ஒதுக்கீடு ரூ.33,000 கோடி.
நோக்கம்  : 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு மற்றும் உடல்நலமின்மை ஆகியவற்றை குறைத்திடுவதற்காகவும், அவர்களை அவ்வப்போது மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தவும் அவர்களுக்கு தற்காப்பு ஊசிகள் போட்டிடவும், அவர்களுக்கு சத்தான உணவினை ஊட்டிடவும் ஏற்பாடு செய்துடும் இத்திட்டம் மிகவும் பெரிய திட்டமாகும். இதற்காக 12,43 கோடி அங்கன்வாடி கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இதுவரை 20 கோடி குழந்தைகள் (0-6 வயது வரை) பயன் பெற்றுள்ளனர்.

திட்டம் 10  : தேசிய ஊரக உடல் நலத்திட்டம் (NRHM) நிதி ஒதுக்கீடு ரூ.22,000 கோடி.
நோக்கம்  : 7 வருடங்களில் கிராமப்புறங்கள் அனைத்திலும் நல்லதோர் உடல் நலத்திட்டத்தை அமுல் செய்திட முனையும்  திட்டம் கிராமப் புறங்களிலிருக்கும் மக்கள் தொகை பெருக்கம், தொத்து வியாதிகள், இயற்கை முரண்பாடுகள் ஆகியவற்றினால் ஏற்படக்கூடிய சீரழிவுகளை எதிர்கொள்கிறது இத்திட்டம்.
கிராமப்புறாந்தோறும் தாய்சேய் மரணத்தை தடுத்திடவும் அதற்குரிய மருத்துவர்களை தயாரித்திடவும், அவர்களுக்குரிய கட்டமைப்புகளை ஏற்படுத்திடவும், இத்திட்டம் முனைகிறது. ஒரு கிராமத்திற்கு ஒரு அனுமதிக்கப்பட்ட சமூக நல மருத்துவ சேவையாளர் (Accredited Social Health  Activist - ASHA ) என்ற விகிதத்தில் மொத்தம் 6.47 லட்சம் ASHA -க்கள் இதற்காக நியமிக்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வேண்டிய மருத்துவப் பயிற்சியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக இதுவரை, மத்திய அரசு ரூ.31,000 கோடி ரூபாய் மாநில அரசுகளுக்கு நிதி வழங்கியுள்ளது.


திட்டம் 11  : மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிட்டம் ( MGNREGS).
நோக்கம்  : கிராமப்புறத்தில் வாழும் ஏழை மக்களுக்கு குறைந்தது 100 நாட்களுக்கு வேலைவாய்ப்பு உத்திரவாதம் அளித்திட வேண்டும் இதனை காங்கிரஸ் அரசின் சாதனைத் திட்டம் எனக்கூறலாம். இதனை முழுவதும் வெற்றிகரமாக நடத்தி முடித்திருப்பவர் அன்னை சோனியாகாந்தியே. இதன் பெருமையனைத்தும் அவரையே சாரும். இத்திட்டத்திற்காக ஆண்டு தோறும் சுமர் ரூ.45,000 கோடி செல்விடப்பட்டுள்ளது. இதில் 90% செல்வினங்களை மத்திய அரசே ஏற்றுக்கொள்கிறது.  இளைஞர்கள் முதல் முதியோர்கள் வரை அவர்களது கிராமத்திலேயே வேலைவாய்ப்பு பெறக்கூடிய வகையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தவறுகள் நடைபெறாத வண்ணம் கண்காணிப்பதற்காக ஒவ்வொருவருக்க்ம் பயோ மெட்ரிக் கார்டு வழங்கி கணினி மூலம் கண்காணிக்கப்பட உள்ளனர்.

திட்டம் 12  : மகளிர் சுயஉதவிக் குழுக்கள் திட்டம் (WSHG)
நோக்கம்  : கிராமத்தில் வாழும் பெண்கள் தாங்களே சுயமாக சம்பாத்யம் செய்திடுமளவில் சிறுதொழிலில் ஈடுபடுவதற்கு நிதிவசதி செய்து கொடுப்பது. மகளிர் செய்திடும் சிறுதொழில்களுக்கு கடனுதவி செய்வதில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளே சுமார் 80% அளவிற்கு கடனுதவி வழங்குகின்றன.

நன்கு கூர்ந்து கவனித்தால் மேற்குறிப்பிட்ட  12 திட்டங்களும், கிராம வளர்ச்சிக்காகவே ஏற்படுத்தப்பட்டிருப்பது தெரியும். இதற்குரிய நிதி ஆதாரத்தின் மிகப்பெரும் பங்கினை மத்திய அரசே அளிக்கிறது என்பது நன்கு விளங்கிடும். இத்திட்டத்தை நிறைவேற்றிடும் பொறுப்பு முழுக்க முழுக்க கிராமப் பஞ்சாயத்துகளுக்கு மாவட்ட நிர்வாகம் மூலமாக கொடுக்கிறது. இதனை இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு தெருமுனைப் பிரச்சாரத்தின் மூலமாகவும், திண்ணைப் பிரச்சாரத்தின் மூலமாகவும் தெரியப்படுத்திட வேண்ட்ம்.

மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்கள்:

ஜவர்கலால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டம் (JNNURM)

  நகர்ப்புற ஏழை, நடுத்தர மக்களுக்கு வேண்டிய சாலை, போக்குவரத்து, குடிநீர், வடிகால், மின்வசதி போன்ற அடிப்படை கட்டமைப்புக்களை அமைத்துத் தருதல், நிதி ஒதுக்கீடு ரூ.7,500 கோடி.

    இந்தியாவிலேயே நகர்ப்புறம் அதிகமாக இருக்கும் மாநிலம் தமிழ்நாடு தான். சுமார் 40 சதவிகிதம் பகுதிகள் நகர்ப்புறமாக இருக்கின்றன எனவே JNNURM-ல் ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் 50 சதவீதம் தமிழ்நாட்டிற்கே செலவிடப்பட்டிருக்கிறது. நகர பூங்காக்கள், மேம்பாலங்கள், சாலைகள் விரிவாக்கம், புதிதாக பேருந்துகளை சேர்த்தல் ஆகியவை தமிழ்நாட்டில் அதிகமாகச் செய்ல்படுத்தப் பட்டிருக்கின்றன. இவையாவும் மத்திய அரசு அளித்திடும் உதவி மூலம் தான் நடைபெறுகிறது.

ராஜீவ் காந்தி அவாஸ்யோஜனா (RAY) :

நகர்ப்புற ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தருதல், நிதி ஒதுக்கீடு ரூ.1,000 கோடி.

108 அவசர மருத்துவ உதவித்திட்டம் :
   வயது முதிர்ந்த மற்றும் இயலா ஏழை மக்கள் திடீரென நோய்வாய்ப்பட்டால், 108க்கு போன் செய்தால் அவசர மருத்துவ வசதி கிடைக்கும். இதற்கான நிதியை மத்திய அரசு வழங்குகிறது.
  இத்திட்டத்தின் வழியாக இதுவரை 2,30,000 நோயாளிகள் பயன் அடைந்துள்ளனர். 12,400 நோயாளிகள் மிக ஆபத்தான நிலையில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர். 30,000 பிரசவங்கள் நடைபெற்று உள்ளன.

கல்விக்கடன் திட்டம்
 
  +2 படிக்கும் மாணவ, மாணவிகள் முதல் பட்டப்படிப்பு, முதுகலைப்பட்டப்படிப்பு, பொறியியல், மருத்துவம், விவசாயம், சட்டம், நிர்வாகம், கணினி, CA உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கு கல்விக்கடன் வழங்கப்படுகின்றன. தற்போது கல்விக்கடனுக்கு வட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள்து.
    உயர்கல்வி பயிலும் 19.41 லட்சம் மாணவர்களுக்கு ரூ.35 ஆயிரத்து 196 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் 4 லட்சத்திற்கும் உட்பட்ட கடன் பெறுபவர்களுக்கு வட்டியில்லா கடன், இதற்கு முன்பாக மாணவர்கள் கடன் பெற்று வட்டி கட்டியிருந்தால் அந்த வட்டித் தொகை திருப்பி தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வுத்திட்டம்:

 வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு மாதம்ரூ.200 உதவித்தொகை மத்திய அரசு வழங்குகின்றது.

சிறுபான்மையினர் நலத்திட்டம் :

     சிறுபான்மையின் மக்களுக்கு வளர்ச்சித் திட்டங்கள் சென்றடையும் வகையில் பிரதமரின் புதிய 15 அம்ச திட்டத்தை மத்திய அரசு துவக்கியுள்ளது. ( சச்சார் கமிட்டி அறிக்கை அடிப்படையில்)
இராஜீவ்காந்தி கிராம மின் மயமாக்கல் திட்டம் :

  இத்திட்டத்தின் மூலம் அனைத்து கிராமத்திற்கும் மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இராஜீவ்காந்தி கிராம எல்.பி.ஜி.விட்ராக் திட்டத்தின் கீழ் 16 கோடி சமையல் எரிவாயு இணைப்பு :

   2015 க்குள் 75% இந்திய குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
  நீங்கள் உபயோகிக்கும் ஒவ்வொரு எல்.பி.ஜி. சிலிண்டருக்கும் மத்திய அரசு 224 ரூபார் 38 பைசா மானியமாக வழங்குகிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு :
  நாடு முழுவதும் 25 லட்சம் அரசு ஊழியர்களைக் கொண்டு பிப்ரவரி 2011க்குள் மக்கள் தொகை கணக்கெடுப்பை முடிக்கப்பட வேண்டும் என்றும், தொடர்ந்து நாட்டு மக்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கவும் நிதி ஒதுக்கி திட்டமிடப்பட்டுள்ளது.

அனைவருக்கும் தொலைதொடர்பு இணைப்பு :

   60 கோடி தொலைபேசி இணைப்புகள் என்ற அளவில் உலகிலேயே 2வது பெரிய தொலைபேசி நெட்வொர்க் உள்ள நாடாக இந்தியா உள்ளது. தற்போது மாதந்தோறும் 2 கோடி இணைப்புகள் தரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாம் உலகிலேயே முதல் இட்த்தில் இருக்கிறோம். உலகில் மூன்றில் ஒரு பங்கினர் சாதாரண சேவை கூட பெறமுடியாத நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


அகல ரயில்பாதை திட்டம் மற்றும் ரயில்வே மேம்பாலங்கள் அமைத்தல் :
  நாடு முழுவதும் 800 கி.மீ. தொலைவிற்கு மீட்டர்கேஜ் பாதைகள் அகல ரயில்பாதைகளாக மாற்றப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கெல்லாம் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்:
   மத்திய மாநில அரசுகளின் எத்தகைய செயல்பாடுகளை பற்றியும் ஒரு சாதனை இந்திய குடிமகனும் தகவல் அறிய வழிவகுக்கும் சட்டம்.


மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் :
  உள்ளாட்சியில் இதுவரையிலும் 33 சதவீதம் பெண்களுக்கான பொறுப்புகளுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு முதல் வரும் உள்ளாட்சி தேர்தல்களில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழித்திடும் சட்டம்:
   குடும்பத்திலிருக்கும் விதவை மற்றும் அபலைப் பெண்களுக்கு அவர்களது உறவினர்களால் உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ வன்முறை ஏற்படுத்தினால் இச்சட்டத்தின் மூலம் தடுத்திடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.


காடுகளில் வாழ்வோர் மற்றும் பழங்குடியினருக்கு நில உடமை சட்டம்:
  காடுகளில் வாழும் பழங்குடி மக்களுக்கு அவர்களது நில உடமைகளை அவர்களுக்கே உரித்தாக்கிடும் சட்டம். இதை மாநில அரசுகள் தான் செய்லபடுத்திட வேண்டும்.


எரிசக்தி தன்னிறைவு சட்டம் :
   உலக நாடுகளில் அணுசக்தி விநியோகம் செய்யும் 45 நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து எரிசக்தியில் தன்னிறைவு அடைவதே இச்சட்டத்தின் நோக்கம். இது வரையில் இந்தியா, ரஷ்யா, பிரான்ஸ், கனடா, வெனிசுலா, அர்ஜெண்டினா, நைஜீரியா, கஜகஸ்தான் போன்ற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் அமெரிக்க, ஆஸ்திரேலியா நாடுகளுடன் ஒப்பந்தம் செய்ய உள்ளது.


நலிந்த விவசாயிகளுக்கு வங்கிக்கடன் தள்ளுபடி:
 இந்தியா முழுவதும் 4 கோடி விவசாயிகள் பெற்ற வங்கிக்கடன் ரூ.67 ஆயிரம் கோடி ரத்து செய்யப்பட்டுள்ளது.


பிரதம மந்திரியின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்:
  நமது பிரதமர் திரு.மன்மோகன்சிங் அவர்கள் ஆகஸ்ட் 15, 2007 அன்று அறிவித்த இந்த திட்டம் ஒரு மத்திய அரசு திட்டமாகும். வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு அளிக்கவே இது உருவானது. தற்போது 26 மாநிலங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்தும் பணியை தொடங்கிவிட்டன. இதுவரை 1,61,25,560 காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.


அரிசிக்கு மத்திய அரசு மானுயம் ( அந்த்யோதியா அண்ண யோஜனா திட்டம்) (AAY)
   இத்திட்டத்தின் மூலம் ரூ.17.90 மதிப்புள்ள ஒரு கிலோ அரிசியை ரூபாய் மூன்றிற்கு வழங்குகிறது. இதில் மத்திய அரசு மானியம் ஒரு கிலோவிற்கு 14.90 பைசா அளிக்கிறது.


அரிசிக்கு மத்திய மானியம் (வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு) (BPL)
  இத்திட்டத்தின் மூலம் ரூ.17.90 மதிப்புள்ள ஒரு கிலோ அரிசியை ரூ. 5.56 க்கு வழங்குகிறது. இதில் மத்திய அரசு மானியம் ஒரு கிலோவிற்கு ரூ. 9.60 பைசா அளிக்கிறது.


மண்ணென்ணைக்கு மத்திய அரசு மானியம்:
 இத்திட்டத்தின் மூலம் ரூ.30 மதிப்புள்ள ஒரு கிலோ அரிசியை ரு.8.30 க்கு வழங்குகிறது. இதில் மத்திய அரசு மானியம் 1 லிட்டருக்கு ரூ.18 அளிக்கிறது.

டீசலுக்குமத்திய அரசு மானியம்
   ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.2.30 மானியமாக மத்திய அரசு வழங்குகின்றது.


பாரத் நிர்மான் ராஜீவ்காந்தி சேவை மையங்கள்(BNRGSK)
    இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்து மற்றும் வட்டாரங்களிலும் சேவை மையங்கள் கட்டப்படும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் (MGNREGS) கீழ் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்து அல்லது வட்டாரங்களிலும் இத்திட்டத்தின்படி சேவை மையக் கட்டிடத்தை கட்ட அதிகபட்சமாக முறையே ரூ.25 லட்சம் மற்றும் ரூ.10 லட்சம் தரப்படும். இதம் மூலம் கிராம பஞ்சாயத்து அல்லது வட்டாரங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் இந்திய குடிமக்கள்  தாங்கள் உரிமையை புரிந்துக்கொண்டு பயன்படுத்திக்கொள்ள வழி வகுக்கின்றது.


இந்திராகாந்தி தேசிய விதவைகள் ஓய்வூதியத் திட்டம்:
  இத்திட்டத்தின் மூலம் 40 வயதிலிருந்து 64 வயதுக்குள் இருக்கும் ஊனமுற்றவர்களுக்கு மாதம் ரூ.200 மத்திய அரசு  வழங்குகின்றது.


தாய் நலத்திட்டம் (JSY) :
        JSY 100% மத்திய அரசால் வழங்கப்படும் திட்டமாகும். பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் நிதி உதவி அளிப்பது, பிரசவத்தின் போது ஒரு சுகாதர நிலையத்தில் அரவணைப்பு அளிப்பது போன்ற உதவிகள் செய்வது வருகிறது. இதற்காக பகுதி வாரியாக சுகாதார ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். (JSY)-ன் முக்கிய நோக்கம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களில் ஒட்டுமொத்த தாய் இறப்பு விகிதாச்சாரம் மற்றும் நோய் இறப்பு விகிதத்தை குறைத்து மருத்துவமனை பிரசவங்களை அதிகப்படுத்துவதாகும்  இந்தத் திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களை சேர்ந்த அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் மற்றும் 19 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் இரண்டு குழந்தைகளை பெற்றெடுக்கும் வரை பயன் பெறலாம். 2009-2010ம் ஆண்டில் (டிசம்பர் 2009 வரை) 78 லட்ச்த்திற்கும் மேற்பட்ட பிரசவங்கள் இத்திட்டத்தின் கீழ் முடிக்கப்பட்டுள்ளன. பெண்கள் பாதுகாப்பான பிரசவத்திற்காக சுகாதார அமைப்புகளை தேடி வருகின்றனர். தாய் இறப்பு விகிதம் குறைந்துள்ளது.

கணினி மயமாக்கப்பட்ட ஆளுகை (மின் ஆளுகை)
  2009-10ல் மேலும் 39,615 பொது சேவை மையங்கள் தொடங்கப்பட்டன. பிறப்பு சான்றிதழ்கள், இறப்பு சான்றிதழ்கள், சாதி சான்றிதழ்கள், வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ்கள் வழங்குவது மகாத்மா காந்தி தேசிய கிராமிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை சார்ந்த சேவைகள், பயன்பாடு கட்டணம் வசூலிப்பது. வேலைவாய்ப்பு அலுவலக சேவைகள். தபால் சேவைகள், தேர்தல் எண் பதிவு, தகவல் அறியும் உரிமை சேவைகள், உரிமைகளின் ஆவணம், கணினி வாசல் மூலம் ஒருமைப்பாடு மற்றும் நிர்வாகத் தகவல் முறை. தேசிய கிராம சுகாதார திட்டம் பற்றிய விழிப்புணர்வு சேவைகள், விபத்து மேலாண்மை.
       (AIDS) கட்டுப்பாடு மற்றும் தொழுநோய் மருந்துகள் ஆகிய அனைத்து விஷயங்களும் இந்த மையங்களின் மூலம் கிடைக்கும். மீதமுள்ள 12 இந்திய மொழிகளிலும் கணினி எழுத்துக்கள் மற்றும் கருவிகள் உருவாக்கப்பட்டன். உத்திரப்பிரதேசம், அசாம் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 மாவட்டங்களின் கணினி மயமாக்கப்பட்ட மாவட்ட சோதனை செய்ல் திட்டங்கள் ஏவப்பட்டன. படிப்படியாக அனைத்து மாநிலங்களில் உள்ள மாவட்டங்களை இணைத்து கணினி முறையில் கண்காணிக்கப்படும்.

நாடு முழுவதும் 35 மாநிலங்களில், 640 மாவட்டங்களில் உள்ள 5,767 தாலுக்கக்கள், 7742 நகரங்கள், 6,08,786 கிராமங்கள், 24 கோடி வீடுகள் கொண்ட 100 கோடியே 20 லட்சம் மக்களை உள்ளடங்கிய இந்தியாவிற்கு செலவிடப்படும் தொகையை மத்திய அரசே நேரடியாக செய்ய முடியாது என்பதற்காக மாநில அரசுகளுக்கு துறைவாரியாக நிதியை பிரித்து கொடுத்து நாட்டு மக்களுக்கு சென்றடைய செய்கின்றனர்.

Monday, October 18, 2010

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாதது துர்பாக்கியம்: சிதம்பரம்

குன்னூர்:""காங்கிரஸ் கட்சியால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாதது துர்பாக்கியமானது,'' என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசினார்.
குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவப் பயிற்சி கல்லூரியில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி பெறுகின்றனர். இவர்கள் மத்தியில் உரையாற்றுவதற்காக நேற்று காலை 9 மணிக்கு, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தனி ஹெலிகாப்டர் மூலம் வெலிங்டன் எம்.ஆர்.சி., வந்தார்.

பின்னர், ராணுவ அதிகாரிகளிடம் உரையாற்றி விட்டு, காலை 11 மணிக்கு குன்னூர் லெவல் கிராசிங் பகுதியில் காங்கிரஸ் கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:சமீபத்தில், திருச்சியில் காங்., தலைவர் சோனியா பங்கேற்ற பிரமாண்ட பொதுக் கூட்டம், கட்சியின் செல்வாக்கை வெளிக்காட்டியுள்ளது; திருச்சியில், காங்கிரஸ் கட்சிக் கூட்டம் போடுவதற்கு முன், அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகள் பொதுக் கூட்டம் நடத்தின; அந்த கூட்டங்களை மிஞ்சும் அளவுக்கு கூட்டத்தைக் காண முடிந்தது.தமிழகத்தில் 43 ஆண்டுகளாக காங்கிரசால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை; இழந்த ஆட்சியை மீட்க முடியாத துர்பாக்கிய நிலையுள்ளது. பிற மாநிலங்களில் ஆட்சியை இழந்தாலும், மீண்டும் தக்க வைக்க கூடிய சக்தியை காங்கிரஸ் பெற்றுள்ளது. தமிழகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியாததற்கு பல காரணங்கள் இருக்கலாம்; அதற்கு நாங்களே கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆட்சியைப் பிடிப்போம் என்ற நம்பிக்கை முதலில் கட்சியினர் மத்தியில் வர வேண்டும்; அதற்கு தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ராஜிவுக்கு பின், காங்கிரஸ் கட்சிக்கு சோனியா தலைமை பொறுப்பேற்றுள்ளார்; எதிர்காலத்தில் கட்சியை நிர்வகிக்கும் தலைவராக ராகுல் அடையாளம் காட்டப்பட்டுள்ளார்; அவரை நாட்டு மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்; அவர் வழிகாட்டுதல் படி, நாட்டில் 13 லட்சம் இளைஞர்கள் காங்கிரசில் இணைந்துள்ளனர். வருங்கால சமுதாயத்தை உருவாக்கும் புதிய தலைமுறைக்கு, தலைமையேற்கும் பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது என்பதையே இது காட்டுகிறது.இவ்வாறு உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசினார்.

அத்வானி மீது சாடல் : காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக விமர்சனம் செய்துள்ள பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, "ஒமர் அப்துல்லா முதல்வர் பதவியில் இருந்த ராஜினாமா செய்ய வேண்டும்' எனக் கூறியிருப்பது குறித்து உள்துறை அமைச்சர் சிதம்பரத்திடம் கேட்ட போது, ""ஒமர் அப்துல்லாவின் அறிக்கையில் தவறுகள் இருப்பதாக தெரியவில்லை; அவரது அறிக்கையை முழுமையாக படிக்காமல் ஒரு வரியை மட்டும் படித்து விட்டு, அவரை ராஜினாமா செய்யச் சொல்வது விவேகமானது அல்ல,'' என்றார். 

அ.தி.மு.க., கூட்டத்தால் குலுங்கியது மதுரை : மிரட்டல்களை மீறி பல லட்சம் பேர் திரண்டனர்

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தலைமையில், மதுரையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், தொடர் மிரட்டல்களையும் மீறி  லட்சக்கணக்கானோர் குவிந்தனர். சித்திரைத் திருவிழா கூட்டத்தையும் மிஞ்சும் வகையில், திரண்ட தொண்டர்களால் மதுரையே குலுங்கியது.
கோவை, திருச்சியை தொடர்ந்து, மதுரையில் கடந்த மாதம் ஜெயலலிதா தலைமையில், அ.தி.மு.க., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டது. பல காரணங்களால் ஆர்ப்பாட்ட தேதி தள்ளிபோனது. அக்., 18ல்(நேற்று) ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.நீண்ட நாட்களுக்கு பிறகு, ஜெயலலிதா மதுரை வருவதால், தென்மாவட்ட கட்சி நிர்வாகிகள் உற்சாகமடைந்தனர். பல லட்சம் பேர் குவியும் வகையில், மதுரை ரிங் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டது.இந்நிகழ்ச்சி பெரும் வெற்றியை பெற வேண்டும் என்பதற்காக இரவு, பகலாக ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன் தலைமையில், அ.தி.மு.க., நிர்வாகிகள் உழைத்தனர்.

"மதுரை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கக் கூடாது, மீறினால் கடும் விளைவுகள் ஏற்படும்' என, ஜெயலலிதாவுக்கு தொடர் மிரட்டல்கள் விடப்பட்டன. அதை பொருட்படுத்தாமல், ஜெயலலிதா சென்னையில் இருந்து நேற்று மதியம் 1.45 மணிக்கு சிறப்பு விமானம் மூலம், மதுரை வந்தார்.அவருக்கு மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டர்கள் பிரசாதம் கொடுத்து வரவேற்றனர். பின் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். விமான நிலையம் முதல் மேடை வரை சீருடை அணிந்த மாணவரணியினர் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அளித்தனர்.விமான நிலையம் நோக்கி வந்த கட்சி நிர்வாகிகளின் கார்களை போலீசார் தடுத்ததால், தொண்டர்கள் மறியல் செய்ய முயன்றனர்.

அப்போது அவ்வழியே வந்த அ.தி.மு.க., பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம், "இந்த நேரத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. அவரது காருக்கு பின்னால் தான் நாம் செல்ல வேண்டும்' என சமரசம் செய்ததால், போலீசார் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.தொண்டர்களால் நிரம்பி வழிந்த ரிங் ரோட்டில், கட்சியினரின் வரவேற்பை பெற்றுக்கொண்டு, மாலை 4.18 மணிக்கு மேடைக்கு ஜெயலலிதா வந்தார். மாலை 4.44 மணிக்கு பேச்சை துவக்கி 6.39க்கு முடித்தார்.பேச்சின் பெரும்பகுதி மத்தியமைச்சர் மு.க.அழகிரியை தாக்குவதிலேயே இருந்தது. பின், தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து பேசினார்.

"இந்த ஆட்சியில் எனக்கும் பாதுகாப்பு இல்லை; பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லை' என்றார்.பெரியாறு பிரச்னையில் தி.மு.க., ஆட்சியின் நிலைப்பாடு குறித்து கண்டனம் தெரிவித்த அவர், தொடர் மின்வெட்டு, விலைவாசி, சட்டம் ஒழுங்கு, ரேஷன் அரிசி, லாட்டரி சீட்டு கடத்தல், சினிமா, கேபிள், "டிவி' துறைகளில் குடும்ப ஆதிக்கம் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆவேசமாக எடுத்துரைத்தார்.ஆளுங்கட்சியின் மிரட்டலுக்கு பயந்து, திருச்சி கூட்டம் குறித்து சரியாக செய்தி வெளியிடவில்லை என ஊடகங்களையும் சாட, ஜெயலலிதா தவறவில்லை.

இந்நிலையில், கூட்டம் நடந்த ரிங் ரோட்டின் சில பகுதிகளில் மழை பெய்தது. மேடை அருகே தூறல் விழுந்தது. அதை பொருட்படுத்தாமல் தொண்டர்கள், அவரது பேச்சை கவனித்தனர். மொத்தத்தில் சித்திரைத் திருவிழாவையும் மிஞ்சும் வகையில் லட்சக்கணக்கான தொண்டர்களை பார்த்த மதுரை மலைத்தது.போலீஸ் பாதுகாப்பு: ஜெ.,வுக்கு தொடர் மிரட்டல் காரணமாக, எப்போதும் இல்லாத அளவிற்கு தென்மண்டல ஐ.ஜி., கிருஷ்ணமூர்த்தி தலைமையில், மூன்று டி.ஐ.ஜி.,க்கள், ஏழு எஸ்.பி.,க்கள் தலைமையில், 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தேர்தல் வரட்டும்; மக்கள் முடிவு அப்போது தெரியும்! : அ.தி.மு.க., ஆட்சி அமைய "கவுன்ட் டவுண்' துவங்கியது :  ஜெயலலிதா பேசியதாவது:வைகை கரைக்கு நான் வரக்கூடாது என்பதற்காக, எனக்கு அனுப்பப்பட்ட அச்சுறுத்தல் கடிதங்களை அழைப்பிதழாக ஏற்று நீதிகேட்க வந்துள்ளீர்கள். தெற்கு தமிழகத்தின் நுழைவுவாயிலாக இருக்கும் மதுரை, பாண்டிய மன்னர்கள் ஆதரவுடன் தமிழ் சங்கங்கள் தோன்றிய மதுரை. மகாலை உருவாக்கிய திருமலை நாயக்கர் ஆட்சி செத மதுரை. சிலப்பதிகாரத்தின் மையமாக இருந்த மதுரை. குற்றமற்ற கணவனுக்கு தண்டனை கொடுத்ததால், கற்புக்கரசி கண்ணகியால் எரிக்கப்பட்ட மதுரை. வீர பெண்மணி ராணிமங்கம்மாள் ஆட்சி செத மதுரை. வன்முறை, சுயநலம் உள்ள மதுரையாக இருப்பதை எப்படியும் எதிர்ப்பீர்கள் என நம்புகிறேன். ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, காமராஜர், பக்தவத்சலம், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., உட்பட நானும் தமிழகத்தில் ஆட்சி செத போது, தமிழ்நாடு எப்படி இருந்தது?

கருணாநிதி தந்திரம்: "தம்பி தலைமை ஏற்கவா' என்று நெடுஞ்செழியனை அண்ணாதுரை அழைத்தார். "நீ முகம் காட்டினால் 30 லட்சம் ஓட்டுகள் கிடைக்கும்' என எம்.ஜி.ஆரை அண்ணாதுரை அழைத்தார். கருணாநிதியை அழைக்கவில்லை. ஆனால் தமிழக அரசியலில் போதாத காலம், கருணாநிதியை தந்திரங்கள் வென்றன. மீனாட்சி அம்மன் கோயில், சித்திரைத் திருவிழாவில் ஆற்றில் அழகர் இறங்குவது, கோரிப்பாளையம் பள்ளிவாசல், அமெரிக்கன் கல்லூரி ஆகியவை மதுரை என்றாலே நம் கண் முன் நிற்கும். ஆனால் இப்போது வன்முறை, கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளைதான் மனக்கண் முன் நிற்கின்றன.

இரு அரசுகள்: ஒருகாலத்தில் கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளால் தூங்கா நகராக இருந்த மதுரை, தற்போது தூங்க முடியாத நகராகிவிட்டது. தமிழகத்தில் இரண்டு அரசுகள் உள்ளன. கருணாநிதி முதல்வராகவும், ஸ்டாலின் துணை முதல்வராகவும் சென்னையில் இருக்கும் ஒரு அரசு. அழகிரி தலைவராகவும், "பொட்டு' சுரேஷ் துணைக்கு இருப்பவராகவும் மற்றொரு அரசு இருக்கிறது. மதுரைக்கு ஸ்டாலின் வரவேண்டுமானால், அழகிரியிடம் விசா வாங்கிகொண்டுதான் வரவேண்டும். லீலாவதி கொலை வழக்கை நினைவூட்ட விரும்புகிறேன். மக்களுக்காக தண்ணீர் கொண்டு வர பாடுபட்ட, மார்க்சிஸ்ட் கவுன்சிலர் லீலாவதி பஜாரில் கொலை செயப்பட்டார். நான்கு தி.மு.க.,வினர் குற்றவாளிகள் என கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இவர்கள் உள்ளாட்சி தேர்தலில் வன்முறைகளில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. தி.மு.க.,விற்கு வேலை பார்க்க பரோலில் விடுவிக்கப்பட்டனர்.

பயம் இல்லை: இதுபோன்ற சம்பவங்கள் இன்னும் தொடர வேண்டுமா என மக்களாகிய நீங்கள் முடிவு செய வேண்டும். எனக்கு மிரட்டல் விடப்பட்டது. அதை பற்றி நான் கவலைப்படவில்லை. தா.கிருஷ்ணன் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றதும், தி.மு.க.,வினர் அஞ்சுகின்றனர். ஜெயா "டிவி' எனது பேச்சை நேரடியாக ஒளிபரப்புகிறது. யாரோ ஒருவர் இதைகண்டு அஞ்சுகிறார். இவர்கள் மிரட்டலை பார்த்து நான் பயப்படவில்லை.அரசியலுக்கு வந்தது முதல் பல கொலை மிரட்டலை பார்த்துவிட்டேன். பொ வழக்குகள் போடப்பட்டன. கொலை முயற்சி நடந்தது. யார் அஞ்சுகிறார்கள், யார் அஞ்சவில்லை என இந்த கூட்டத்தை பார்த்தாலே தெரிகிறது. நான் முதல்வராக இருந்தபோது, மின்வெட்டு கிடையாது. உபரி மின்சாரத்தை பக்கத்து மாநிலத்திற்கு விற்றதன் மூலம் வருவா கிடைத்தது. அனைத்து அனல்மின் நிலையங்களும் பராமரிக்கப்பட்டன. தரமான நிலக்கரி பயன்படுத்தப்பட்டது. தற்போது அனல்மின்நிலையம் மோசமாக பராமரிக்கப்படுகின்றன. பொறியியல் கல்லூரிகள் கருணாநிதி குடும்ப கட்டுப்பாட்டில் உள்ளன. மதுரையில் ஐ.டி. பூங்கா பணிகள் தாமதமாக நடப்பதற்கு காரணம் இருக்கிறது. அழகிரி பெயரில் மாட்டுத்தாவணி அருகே பல கோடி ரூபா செலவில் கட்டடம் கட்டப்பட்டு, ஐ.டி. நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

கூட்டத்தை தடுத்த போலீஸ்: கோவை கூட்டத்திற்கு 8 லட்சம் பேர் திரண்டதை பத்திரிகைகள் செதியாக வெளியிட்டிருந்தன. இதை பொறுக்க முடியாத கருணாநிதி, பத்திரிகைகளை மிரட்டினார். திருச்சி கூட்டத்திற்கு 18 லட்சம் பேர் திரண்டனர். இதை பத்திரிகைகள் இருட்டடிப்பு செதுவிட்டன. என்னிடம் பேசிய வடமாநில தலைவர்கள், கோவை கூட்டம் குறித்து பாராட்டினர். ஆனால் திருச்சி கூட்டம் பற்றி அவர்களுக்கு தெரியவில்லை. பத்திரிகைகள் இருட்டடிப்பு செததுதான் காரணம். எனது கூட்டங்களுக்கு வாகனங்கள் தரக்கூடாது என உரிமையாளர்கள் மிரட்டப்பட்டனர். திருச்சி கூட்டத்திற்கு 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பிற்கு அனுப்பப்பட்டனர் என கருணாநிதி கூறினார். ஆனால் உண்மையில் கூட்டத்தை தடுப்பதற்காகதான் போலீசாரை அனுப்பினார். இந்த தடையை மீறி மக்கள் வெள்ளமென திரண்டனர். திருச்சி கூட்டத்தில் பணத்தை அள்ளி செலவழித்தார் கருணாநிதி. அப்படியும் கூட்டம் வரவில்லை. ஆனால் அதை "ஆஹா... ஓஹோ...' என எழுதச்சொன்னார். தமிழகத்தின் பத்திரிகைகளுக்கு மனச்சாட்சி உண்டா, என அவர்கள் நினைத்து பார்க்க வேண்டும். கருணாநிதி மிரட்டல்களுக்கு பத்திரிகைகள் பயந்துவிட்டன. மதுரையின் பிரம்மாண்ட கூட்டம் பற்றி உண்மையான செதியை வெளியிடுகிறனவா என்று நாளை பார்த்தால்தான் தெரியும். பத்திரிகைகளை நம்பி நாங்கள் இல்லை. மக்களை நம்பி உள்ளோம். தேர்தல் வரட்டும், மக்கள் முடிவு என்ன என்பது அப்போது தெரியும். கருணாநிதி குடும்பத்திற்கு ஆறு சினிமா கம்பெனிகள் உள்ளன. சென்ற ஜனவரி முதல் வெளியான 63 படங்களில் 34 படங்கள் இவர்கள் தயாரித்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில், மற்றவர்கள் தயாரித்த 40க்கும் மேற்பட்ட படங்களை வெளியிட தயாரிப்பாளர்களை அனுமதிக்கவில்லை. தியேட்டர் உரிமையாளர்களையும் எச்சரித்துள்ளனர்.

நல்ல தீர்ப்பு: மதுரையில் நடக்கும் இந்த கூட்டத்தை ஜெயா "டிவி' நேரடியாக ஒளிபரப்புகிறது. ஆனால் பல இடங்களில் கேபிள் ஆப்பரேட்டர்கள் மிரட்டப்படுகின்றனர். என்னை அரசியலில் இருந்து விரட்டவும், ஒழித்துக் கட்டவும் முயற்சி நடக்கிறது. நான் தொடர்ந்து அரசியலில் இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? எனது தலைமையில் எம்.ஜி.ஆர்., ஆட்சியை அமைக்க விரும்புகிறீர்களா? இதற்கு அடுத்த தேர்தலில் நல்ல தீர்ப்பை நீங்கள் வழங்க வேண்டும். இலங்கை பிரச்னைக்காக 3 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்ததுதான் கருணாநிதியின் காமெடி. வரும் தேர்தலில் கருணாநிதிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். கருணாநிதி முதல்வர், ஸ்டாலின் துணை முதல்வர், அழகிரி மத்தியமைச்சர், கனிமொழி எம்.பி., இப்படி உலகில் எங்காவது குடும்ப அரசியல் உண்டா? எனது ஆட்சியில் லாட்டரி விற்க தடைவிதித்தேன். இன்றும் அந்த தடை உள்ளது. ஆனால், தமிழ்நாடு முழுவதும் லாட்டரி விற்கப்படுகிறது. வாகனங்களில் கடத்துகிறார்கள்.

இலவச பம்ப் செட்: திருச்சி ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளின் துயரங்களை எடுத்து கூறினேன். மறுநாளே இலவச பம்புசெட் திட்டத்தை கருணாநிதி அறிவித்தார். 19 லட்சம் பேருக்கு இதை வழங்க 190 ஆண்டுகளாகும். இலவச வீடு வழங்கும் திட்டத்தில் 75 ஆயிரம் ரூபா வழங்குவதாக அறிவித்துள்ளார். இதில், ஒரு கழிப்பறை மட்டுமே கட்ட முடியும். நானூறு சதுரடி கொண்ட வீட்டிற்கு 3 லட்சம் ரூபா செலவாகும்.

ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம்: ஒரு காலத்தில் இந்தியாவில் பெருமைமிகு மாநிலமாக தமிழகம் இருந்தது. தற்போது தடம் மாறிவிட்டது. இந்தியாவே வெட்கி தலைகுனியும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இவர்கள் கொள்ளையடித்த பணத்தை கொண்டு, தமிழகத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் 1 லட்சம் ரூபாக்கு மேல் கொடுக்கலாம். தமிழக நலனுக்காக மைனாரிட்டி தி.மு.க., அரசை தூக்கி எறிய வேண்டும். அந்த சக்தி உங்களிடம் உள்ளது. அனைத்து நதிகளும் இறுதியில் கடலை நோக்கி செல்கிறது. ஒரே ஒரு நதி கடலில் கலக்காமல் கண்மாயில் முடிகிறது. அது வைகை. சிவனுக்கு ஆலகால விஷம் கொடுத்ததால், கடலில் கலக்கக்கூடாது என நதிக்கு ரோஷம் வந்தது. இப்படி நதிக்கு கூட ரோஷம், வீரமுள்ள மண் மதுரை. அ.தி.மு.க., ஆட்சி அமைவதற்கான "கவுன்டவுண்' முன்பே துவங்கிவிட்டது.மதுரைக்கு பூரண விடுதலை கிடைக்கும். தீய சக்திகள் அப்புறப்படுத்தப்படுவர். தமிழக மக்கள் முடிவெடுக்கும் நேரம் வந்துவிட்டது. பணத்தை கொடுத்தால், வாக்காளர்கள் அடிபணிந்து ஓட்டுப்போடுவர் என்ற நம்பிக்கையில் தி.மு.க., உள்ளது.

கூட்டணி எப்படி: கூட்டணி எப்படி இருக்குமோ என்ற சிறிய சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். எனது கணிப்பு சரியாக இருக்கும். மேலும், 2011 ல் கோட்டையை பிடிக்கும் ஒப்பற்ற இயக்கமாக அ.தி.மு.க.,இருக்கும். மதுரையில் 4 மணியிலிருந்து "கரன்ட்கட்' செயப்பட்டுள்ளதாக தற்போது எனக்கு ஒரு தகவல் வந்துள்ளது. எனது பேச்சின் நேரடி ஒளிபரப்பை யாரும் பார்க்கக்கூடாது என கருணாநிதி "பவர்கட்' செதுள்ளார். அடுத்த தேர்தலில் கருணாநிதியின் "பவரை' கட் செது, அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். செவீர்களா?இவ்வாறு ஜெயலலிதா பேசினார். முன்னதாக மதுரை நகர செயலாளர் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் செயலாளர் நத்தம் விஸ்வநாதன் பேசினர்.

 ஜெ.,கூறிய கூட்டணி கதை :  மதுரை ஆர்பாட்டத்தில் பேசிய ஜெ.,  கூட்டணி குறித்து சொன்ன கதை:பொறியாளர் ஒருவர் மூன்று கிலோ மீட்டருக்கு பாலம் கட்டினார். ""இப்பாலத்தில் செல்லும் வாகனங்கள் 30 டன் எடை கொண்டதாக இருக்க வேண்டும். அதற்கு மேல் ஒரு குண்டூசி எடையைக்கூட பாலம் தாங்காது; இடிந்துவிடும்,'' என்றார். ஒரு லாரி 30 டன் சரக்குகளை ஏற்றிக்கொண்டு, பாலத்தில் சென்றது. மறுமுனையில் லாரியை வரவேற்க, அதிகாரிகள் திரண்டிருந்தனர். லாரி மீது சில புறாக்கள் அமர்ந்திருந்தன. குண்டூசி எடைக்கு மேல் புறாக்கள் இருக்குமே என மக்கள் அச்சமடைந்தனர். ஆனால், லாரி மறு முனையை அடைந்தது. இது குறித்து அந்த பொறியாளரிடம் ," புறாக்கள் அமர்ந்ததால், 30 டன்னிற்கு மேல் எடை அதிகரித்திருக்குமே,' என மக்கள் கேள்வி எழுப்பினர். பொறியாளர்,""இந்த ஒன்றரை கிலோ மீட்டரை லாரி கடந்தபின், டீசல் செலவாகிவிட்டது. புறாக்கள் அமர்ந்திருந்தாலும், 30 டன்னிற்கு மேல் எடை அதிகரித்திருக்காது,'' என்றார். அதுபோல் எனது கூட்டணி கணக்கும், கணிப்பும் சரியாக இருக்கும் என்றார்.

பரிசல்காரன் கதை:  முதல்வர் கருணாநிதியை குற்றம்சாட்டி ஜெ., கூறிய பரிசல்காரன் கதை: நான்குபுறமும் தண்ணீரால் சூழப்பட்ட கிராமத்திற்கு செல்ல பரிசல்காரர் இருந்தார். ஒருநாள் அந்த பரிசலில் ஆட்கள் ஏறும்போது, அங்கு விளக்குமாறு விற்பவர், ஒரு குரங்காட்டி, ஒரு பாம்பாட்டியும் உடன் ஏறினார். அப்போது கடைசியாக வந்தவர், மோசமானவர் என்பதால், அவரை ஏற்ற பரிசல் காரர் மறுத்தார். பொதுமக்கள் அவரின் கை, கால்களை கட்டிப் போட்டுவிடுவோம். அதனால் ஆபத்து வராது என்றனர். ஆனால் பரிசல்காரன், "கட்டிப்போட்டாலும் ஏதாவது செதுவிடுவான் என்று கூறி ஏற்ற மறுத்தார். பொதுமக்கள் மீண்டும் வற்புறுத்தியதால், அவரது கை, கால்களை கட்டியபடி வரவேண்டும் என்ற நிபந்தனையுடன் ஏற்றினார். நடுவழியில் செல்லும்போது, அந்த நபர் தனதுவாயால் விளக்குமாற்று குச்சியை உருவி, குரங்கின் கண்ணில் குத்த, அது துள்ளி பாம்பாட்டியின் கூடை மீது விழுந்தது. இதனால் பாம்புகள் பரிசலுக்குள் சிதறி ஓட, அதில் பயணித்தவர்களும் பதறி நடுங்கி, ஓடினர். இதனால் பரிசல் நடு ஆற்றில் கவிழ்ந்தது. பரிதாபம் காட்டியவரால் படகு நீரில் மூழ்கி பலர் இறந்தனர். அதைப் போல தமிழக அரசியலில் புகுந்தவர்தான் திருக்குவளை தீய சக்தியான கருணாநிதி.

குலுங்கி குலுங்கி சிரித்த ஜெ.,: * விமான நிலையத்தில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்பட்ட ஜெ., வழிநெடுக தொண்டர்களின் வரவேற்பை பெற்றுக் கொண்டு மாலை 4.18 மணிக்கு மேடை ஏறினார்.
* "மைக்' முன்பு பேச ஆரம்பித்த கட்சி அமைப்பு செயலாளர் கருப்பசாமி, "மைக்" கீழாக சென்று "அம்மாவுக்கு வணக்கம்' என்று கும்பிட, ஜெ., சிரித்தார். பின், தொடர்ந்து பேசிய 
கருப்பசாமி, கருணாநிதியை கிண்டல் செய்து "எத்தனை பெரிய மனிதருக்கு" என்ற பாடலை பாட, ஜெ., குலுங்கி குலுங்கி சிரித்தார். 
* மதுரையின் பல இடங்களில் கேபிள் "டிவி' இணைப்பு துண்டிக்கப்பட்டதால், "டிவி'யில் நேரடி ஒளிபரப்பை காணமுடியவில்லை என புகார் எழுந்தது. சில இடங்களில் மின் தடை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது பற்றி மின்வாரிய மதுரை மண்டல தலைமை பொறியாளர் நச்சாடலிங்கம் ,"" மதுரையில் தினமும் இரண்டு மணி நேரம் அறிவிக்கப்பட்ட மின்தடை அமலில் உள்ளது. இதை ஆறு பிரிவாக பிரித்து அமல்படுத்துகிறோம். நேற்று கூடுதலாக மின்தடை செய்யவில்லை. அவ்வாறு கூறுவது தவறு,'' என்றார்.
* மதுரை ஒலி,ஒளி அமைப்பு பிரபலமானது. ஆனால் முதன்முறையாக சேலம் மகுடஞ்சாவடியில் இருந்து ஒலி,ஒளி அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர். தடை செயப்பட்ட கூம்புவடிவ ஒலிபெருக்கிகள் தாராளமாக பயன்படுத்தப்பட்டன.
*ஜெ., பேசிக்கொண்டிருக்கும்போதே, வெளியூர் தொண்டர்கள் தங்கள் ஊர்களுக்கு சாரை சாரையாக புறப்பட்டு சென்றனர். 
*இதற்கிடையே தூறல் விழுந்தது. அதை பொருட்படுத்தாமல் தொண்டர்கள் பேச்சை கவனித்தனர். 
* 12 ரூபா தண்ணீர் பாட்டில், 30 ரூபாக்கு விற்கப்பட்டது. 
* ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதா கண்டன கோஷங்கள் எழுப்புவார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஜெ கோஷங்கள் எதையும் எழுப்பாமல் பேச்சுடன் கூட்டத்தை முடித்துக் கொண்டார்.
*கருணாநிதி மற்றும் அவர் குடும்பத்தினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை ஜெயலலிதா கூறினாலும், வெகு ஜாக்கிரதையாக "தகவல்கள் தெரிவிக்கின்றன' என கூறினார். 
* பேச்சின் இடையே இருமல் ஏற்பட்டது. பேச்சில் ஒன்பது முறை எம்.ஜி.ஆர்.,பெயரை உச்சரித்தார். எம்.ஜி.ஆர்., பாடல் உட்பட ஆறு பாடல்களை பாடினார். இரண்டு கதைகள் மூலம் கருணாநிதி ஆட்சிக்கு வந்தது பற்றியும், கூட்டணி குறித்தும் விளக்கினார்.

ஜெ., பாதுகாப்பில் 3000 போலீசார்: நேற்று தென்மண்டல ஐ.ஜி., கிருஷ்ணமூர்த்தி தலைமையில், டி.ஐ.ஜி.,க்கள் சந்தீப் மித்தல்(மதுரை), சைலேஷ் குமார் யாதவ் (திண்டுக்கல்), அமல்ராஜ் (ராமநாதபுரம்), எஸ்.பி.,க்கள் மனோகரன் (மதுரை), தினகரன்(திண்டுக்கல்), பாலகிருஷ்ணன்(தேனி), பிரதீப்குமார் (ராமநாதபுரம்), பிரபாகரன் (விருதுநகர்), ஆஸ்ரக் கார்க் (நெல்லை), ராஜேந்திரன்(கன்னியாகுமரி) ஆகியோர் தலைமையில், 20 டி.எஸ்.பி.,க்கள், 50 இன்ஸ்பெக்டர்கள், 250 எஸ்.ஐ.,க்கள் உட்பட 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் 20 வெடிகுண்டு தடுப்பு பிரிவு குழுக்களும் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டன. நகரில் போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியன் தலைமையில் துணை கமிஷனர்கள் ராஜேந்திரன், சின்னசாமி மற்றும் உதவிகமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஜெ., ஆர்ப்பாட்டம்: ரிங் ரோடு ஸ்தம்பித்தது?* சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் மதியம் 12.40 மணிக்கு புறப்பட்ட ஜெ., மதுரைக்கு 1.40 மணிக்கு வந்தார். 
* ஜெ.,வை வரவேற்க மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து இரு பட்டர்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து மூன்று பட்டர்கள், சிறப்பு பூஜைகள் செத பிரசாதங்களுடன் வந்தனர்.
* மதுரை விமான நிலையம் முதல் ரிங் ரோடு வரை மாநில மாணவரணி செயலாளர் நயினார் நாகேந்திரன், கோவை புறநகர் மாணவரணி செயலாளர் சந்திரசேகர் தலைமையில் கட்சி தொண்டர்கள் சீருடை அணிந்து பாதுகாப்பிற்கு நின்றிருந்தனர்.
*அ.தி.மு.க., தொண்டர்கள் பெரும்பாலானோர் வேன், லாரி "டாப்'களில் ஆபத்தான வகையில் உட்கார்ந்து பயணித்தனர். போலீசார் கண்டுகொள்ளவில்லை.
* மதியம் 12.45 மணிக்கு கட்சி நிர்வாகிகள் கார்கள், விமான நிலையம் ரோட்டில் அனுமதிக்கப்படாததால், ரிங் ரோடு மற்றும் மண்டேலா நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 
* இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜெ., வரும் நேரத்தில் அ.தி.மு.க.,வினர் மறியலில் ஈடுபட முயன்றனர்.  அவர்களை நிர்வாகிகள் சமரசம் செதனர். 
* கூட்டணி கட்சிகளான ம.தி.மு.க., மூவேந்தர் முன்னணி கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், புதிய தமிழகம், பா.பி., கட்சியினர் கொடிகளுடன் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 
* மேடை அருகே புதிய தமிழகம் கட்சியினர் தாங்கள் கொண்டு வந்த பெரிய கொடிகளை அசைத்தனர். அதை பார்த்த அவைத் தலைவர் மதுசூதனன், "தொண்டர்களுக்கு மறைக்கும் வகையில் இருப்பதால் ஓரமாக சென்று அசைக்கவும்' என அந்த கட்சி தொண்டர்களை கேட்டு கொண்டார்.
* மேடை அருகே பிரம்மாண்டமான கட்-அவுட்களில் மீது ஏறியிருந்த தொண்டர்களை இறங்கி வருமாறு, தொடர்ந்து "மைக்'கில் மதுசூதனன், பாலகங்கா எம்.பி., கேட்டு கொண்டனர். 
*மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த இரு தொண்டர்கள், தங்கத்தால் அலகு குத்தி வந்தனர். 
*ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்காக 20 ஏக்கர் பரப்பளவில் தயார் செயப்பட்ட இடத்தில், வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை 10 மணி முதலே தொண்டர்கள் குவிந்தனர். அவர்களை மகிழ்விக்க குத்தாட்டம், இன்னிசை கச்சேரி நடந்தது. சென்னை ஆவடி முன்னாள் கவுன்சிலர் பானுமதி  மேடை அருகே குத்தாட்டம் போட்டார்.
* கடும்வெயிலை தாங்க முடியாமல் தொண்டர்கள் பலர் நிழல் தேடி அலைந்தனர். மூன்று கி.மீ., தூரத்திற்கு நெரிசல் இருந்ததால், ஆர்ப்பாட்டத்திற்கு பலர் ரிங் ரோடு வழியாக வரமுடியவில்லை.
* போலீசை நம்பாமல் ரிங் ரோடு முதல் ஆர்ப்பாட்ட மேடை வரை சீருடை அணிந்த தொண்டரணியினர் பாதுகாப்பிற்கு நின்றிருந்தனர். 
* மைக்செட் வசதிகள் போதுமானதாக இல்லாததால், சிவகங்கை ரோடு சந்திப்பில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள், "மேடை அருகே என்ன நடக்கிறது' என்று தெரியாமல் தவித்தனர்.
* இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தில் பெண்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் ரிங் ரோடு முழுவதும் ஆக்கிரமித்திருந்தன. 
* ஆர்ப்பாட்டம் நடந்த இடம் அருகே, பாண்டி கோயில் எதிர்புறம் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடை உட்பட சுற்றுப்புற பகுதி கடைகள் அனைத்தும் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டிருந்தன. இந்நிலையில்,நேற்று மதியம் தொண்டர்கள் டாஸ்மாக் கடையை உடைத்து, சூறையாடினர். அங்கு பாதுகாப்பிற்கு நின்றிருந்த 4 போலீசார் ஒன்றும் செய முடியாமல் தவித்தனர்.
* கூட்டம் அதிகமானதால், சிந்தாமணி ரிங் ரோட்டில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அதில் வந்த தொண்டர்கள் அருகில் உள்ள வீட்டு உரிமையாளர்களிடம், "எவ்வளவு கி.மீ., நடந்து செல்ல வேண்டும்' என்று கேட்டதற்கு, "ஏழு கி.மீ., நடக்க வேண்டும்' என்று கூறினர். "அவ்வளவு தூரம் எங்களால் நடக்க முடியாது என சோர்ந்து அங்கேயே நின்றனர்.

வழி மாறிய ஜெயலலிதா  தொண்டர்கள் ஏமாற்றம் :  நேற்று மதியம் 1.45 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் ஜெயலலிதா வந்தார். ரிங் ரோடு வழியாக மேடைக்கு வந்தார். கூட்ட நெரிசலால் ஜெயலலிதாவை பார்க்க முடியாத தொண்டர்கள், அவர் திரும்பும் போதாவது பார்க்கலாம் என காத்திருந்தனர். இதனால் ரிங் ரோட்டில் தொடர்ந்து நெரிசல் ஏற்பட்டது. மாலை 4.44 மணி முதல் 6.38 மணி வரை ஜெயலலிதா பேசினார். கூட்டம் முடிந்து இரவு 7.50 மணிக்கு சென்னை புறப்பட, ரிங் ரோடு வழியாக விமான நிலையம் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் ரிங் ரோட்டில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அந்த வழியே சென்றால் விமான நிலையத்தை அடைய குறைந்தது 2 மணி நேரமாகும் என்பதால், நகர் வழியாக செல்லலாம் என போலீசார் அ.தி.மு.க., நிர்வாகிகளிடம் கூறினர். அவர்கள் ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதை அவர் ஏற்று கொண்டதை தொடர்ந்து, கோமதிபுரம் ரோடு, கலெக்டர் அலுவலகம் சந்திப்பு, கோரிப்பாளையம், தெற்குவாசல், அவனியாபுரம் வழியாக விமான நிலையத்திற்கு சென்று இரவு 7.32 மணிக்கு சென்னை புறப்பட்டார். வந்த வழியிலேயே அவர் வராததால், ரிங் ரோடு பகுதிகளில் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.