Search This Blog

Tuesday, March 15, 2011

பாமக தொகுதிப் பட்டியல் அறிவிப்பு-திண்டுக்கல், சோழவந்தானிலும் போட்டி

பாட்டாளி மக்கள் கட்சிக்கான தொகுதிப் பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டது.

தொகுதிகள் குறித்த ஒப்பந்தத்தில் நேற்று முதல்வர் கருணாநிதியும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் கையெழுத்திட்டனர். இதையடுத்து பாமக தொகுதிப் பட்டியல் வெளியானது.

அதன்படி பாமகவுக்கு சென்னையில் வேளச்சேரி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதியாகும். முன்னதாக இங்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடலாம் என்ற பேச்சு நிலவி வந்தது நினைவிருக்கலாம்.

அதேபோல பாமகவுக்கு சம்பந்தமே இல்லாத சோழவந்தான் (தனி), திண்டுக்கல் மற்றும் கோவில்பட்டி ஆகிய தொகுதிகளும் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

பாமக தொகுதிகள் விவரம்:

வேளச்சேரி
ஆலங்குடி
கும்மிடிப்பூண்டி
பாலக்கோடு
திருப்போரூர்
ஜோலார் பேட்டை
எடப்பாடி
மதுரவாயல்
அணைக்கட்டு
புவனகிரி
திண்டிவனம்
வேதாரண்யம்
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
ஓமலூர்
பூம்புகார்
பவானி
ஜெயங்கொண்டான்
பரமத்திவேலூர்
நெய்வேலி
தர்மபுரி
மேட்டூர்.
ஆற்காடு
போளூர்
செஞ்சி
மயிலம்
பர்கூர்
திண்டுக்கல்
சோழவந்தான் (தனி)
கோவில்பட்டி

No comments: