வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித் தொகை வழங்கப்படும் என்று பாமகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாமக தேர்தல் அறிக்கையை அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளிட்டார். அதில் முக்கிய அம்சமாக, வறுமைக் கோட்டுக்கீழ் வாழும் மக்களுக்கு மாதம் ரூ.1,500 உதவித் தொகை வழங்கப்படும், சென்னையில் துணை நகரத்தை மக்களை பாதிக்காத வகையில் செயல்படுத்தினால் அதைத் தடுக்க மாட்டோம் என்று கூறப்பட்டுள்ளது.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், திமுக அரசுக்கு 5 ஆண்டுகளும் எந்த நிபந்தனையும் அற்ற ஆதரவு தருவோம். கூட்டணி ஆட்சி அமைக்கவோ, ஆட்சியில் அதிகாரமோ கோர மாட்டோம் என்றார்.
திமுக கூட்டணியின் சார்பில் பொது செயல் திட்டம் ஏதும் உண்டா என்று நிருபர்கள் கேட்டதற்கு, தேர்தலுக்காக தொகுதிப் பங்கீடு மட்டுமே வைத்துக் கொண்டுள்ளோம். இது கொள்கை அளவிலான கூட்டணி அல்ல, எனவே பொது செயல்திட்டம் பற்றி பேசத் தேவையில்லை என்றார்.
No comments:
Post a Comment