Search This Blog

Thursday, July 29, 2010

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு எப்போது

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டால் தான், ஒவ்வொரு ஜாதியினருக்கும் எவ்வளவு இடஒதுக்கீடு அளிக்கலாம் என்பதை முடிவு செய்ய இயலும்' என, தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: அருந்ததியர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் தனி இடஒதுக்கீடு வழங்கி வருவதை முன்னுதாரணமாகக் காட்டி, வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சொல்லியிருக்கிறார். அவர் வைத்துள்ள கோரிக்கையில் இருக்கும் அடிப்படை நியாயங்களைப் பற்றி எல்லாம் இந்தத் தருணத்தில் நான் விரிவாக விவாதிக்க விரும்பவில்லை. அருந்ததியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உள் ஒதுக்கீட்டையும், சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உள் ஒதுக்கீட்டையும், வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீட்டுடன் ஒப்பிடுவது பொருத்தமாக இருக்காது. "தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கென நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லாது' என சுப்ரீம் கோர்ட்டில், 1994ம் ஆண்டு வழக்கு தொடுக்கப்பட்டது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது சுப்ரீம் கோர்ட் இடைக்கால தீர்ப்பு ஒன்றை வழங்கியிருக்கிறது.

அந்த இடைக்காலத் தீர்ப்பில், "ஒரு மாநிலம் 50 சதவீத இடஒதுக்கீட்டு அளவை விஞ்ச வேண்டுமென்றால், அதை நியாயப்படுத்துவதற்குத் தேவையான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்' எனச் சொல்லப்பட்டுள்ளது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையில், நாம் தேவையான புள்ளிவிவரங்களை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அளித்து, அந்த ஆணையம் நாம் அளிக்கும் புள்ளிவிவரங்களை ஆராய்ந்து, இடஒதுக்கீட்டு அளவை முடிவு செய்யும் வாய்ப்பை உருவாக்க வேண்டும். இந்தப் புள்ளிவிவரங்களைச் சேகரிப்பதற்கு, நமக்கு ஜாதிவாரியான மக்கள் தொகை விவரங்கள் வேண்டும். அதற்கு, ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழகத்தில் மட்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ள, 400 கோடி ரூபாய் தேவை. இந்த நிதியை, மத்திய அரசிடம் பெறலாம் என, பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஆலோசனை வழங்கியிருக்கிறது.

சுப்ரீம் கோர்ட் இடைக்கால தீர்ப்பின்படி, தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டால் தான், வன்னியர்களுக்கு எவ்வளவு இடஒதுக்கீடு அளிக்கலாம்; ஒவ்வொரு தனிப்பட்ட ஜாதியினருக்கும் எவ்வளவு இடஒதுக்கீடு அளிக்கலாம் என்பதை முடிவு செய்ய இயலும். அப்படிச் செய்தால் தான், சட்டப்படி அந்த முடிவுகள் செல்லுபடியாகும். வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு பிரச்னையில், அவசர முடிவு எதையும் மேற்கொள்வதற்கு, சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால தீர்ப்பு இடம் தரவில்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொண்டு, நமது மாநிலத்துக்கான இடஒதுக்கீட்டு அளவை நிர்ணயம் செய்து, அதற்குப் பிறகு தனி ஒதுக்கீடு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது தான் சட்டப்படியான அணுகுமுறையாக அமையும். இதில் அவசரம் காட்டினால், பிரச்னை திசை திரும்பிவிடக் கூடும் என்பதாலும், இருப்பதையும் இழந்துவிடக் கூடாது என்பதாலும், தொடர்புடைய அனைவரும் இந்தப் பிரச்னையில் இணக்கமான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என நான் பெரிதும் விரும்புகிறேன். எனவே, இருப்பதை இழக்காமல் இடஒதுக்கீடு அமைய இணைந்து செயல்படுவோம். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

Wednesday, July 28, 2010

தமிழகத்தில் மீண்டும் மதுவிலக்கு அமல்?விரைவில் நல்ல முடிவு

"மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு இந்த அரசு பரிசீலித்து வருகிறது. விரைவில் அதுபற்றி நல்ல முடிவு எடுக்கப்படும்' என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அவரது, "கேள்வி - பதில்' அறிக்கை:டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று ராமதாஸ் அறிக்கை விட்டிருக்கிறார். அந்த கோரிக்கைகளை மட்டுமல்ல; மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டுமென்று அவர் வலியுறுத்தி வரும் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கும் இந்த அரசு பரிசீலித்து வருகிறது. விரைவில் அது பற்றி நல்ல முடிவு எடுக்கப்படும்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரில் ஆர்ப்பாட்டம் நடத்தச் சொல்லி, தொண்டர்களை உசுப்பிவிட்டு அறிக்கை விட்டு வந்த ஜெயலலிதா, தற்போது மாதத்துக்கு ஒரு முறை, தானே அவற்றில் கலந்து கொள்வது, தேர்தல் நெருங்கி விட்டதைத் தான் காட்டுகிறது.

தினபூமி பத்திரிகை ஆசிரியர் கைது பற்றி, 23ம் தேதி நாளிதழ்கள் செய்தி வெளியிட்டிருந்தன. உடனடியாக போலீஸ் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, விவரம் கேட்டு விட்டு, என்ன காரணம் இருந்தாலும் உடனடியாக அவர்களை விடுவிக்க வேண்டுமென கூறி, அவர்களும் ஒரு சில மணி நேரத்தில் விடுவிக்கப்பட்டனர். இது என்னுடைய நடைமுறை.பத்திரிகையாளர்களுக்கு வக்காலத்து வாங்கி அறிக்கை விடுத்துள்ள அம்மையாரின் கதை தமிழக மக்களுக்கு மறந்துவிட்டதா, என்ன?

மத்திய அரசு மானியத்தில் தான் ஒரு ரூபாய் அரிசி வழங்கப்படுவதாக இளங்கோவன் பேசியிருக்கிறார். அப்படி என்றால், எல்லா மாநிலங்களிலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்கலாமே.அவசர உதவிக்கான 108 ஆம்புலன்ஸ் திட்டத் தொகை முழுவதையும் கூட மத்திய அரசு அளித்து வருவதாகப் பேசியிருக்கிறார். அதுவும் தவறான செய்தி தான். அந்தத் திட்டம், உலக வங்கியிடமிருந்து தேவையான நிதியை தமிழக அரசு கடனாகப் பெற்று, ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கி நடத்தப்படுகிற திட்டம். இந்தத் திட்டத்துக்கான நடைமுறை செலவில், ஒரு பகுதியை மட்டும் தான் மத்திய அரசு வழங்குகிறது.

ராதாபுரம் பஸ் நிலையத்துக்கு காமராஜர் பெயரைச் சூட்டியது, அ.தி.மு.க.,வுக்கு கிடைத்த வெற்றி என ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். ஆமாம். அவர் என்ன செய்து விடுவாரோ என பயந்து கொண்டு தான் அந்தப் பெயர் சூட்டப்பட்டது. காமராஜரிடம் அந்த அம்மையாருக்கு அவ்வளவு பக்தி, பாசம். அவரது ஆட்சிக் காலத்தில் காமராஜர் பெயராலும், கக்கன் பெயராலும் அவர் தீட்டிய திட்டங்கள், திறந்து வைத்த பஸ் நிலையங்கள் எத்தனை? சிரிப்பு தான் வருகிறது. காமராஜர், கக்கன் புகழ் பாட தி.மு.க., அரசு நிறைவேற்றிய திட்டங்களை மறந்து விடலாமா; மறதிக் குடுக்கை.இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தண்டவாளங்களை தகர்ப்போம் :காடுவெட்டி குரு எச்சரிக்கை

அரியலூர் :""வன்னியருக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கும் வரை, எங்கள் போராட்டம் ஓயாது,'' என்று வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு தெரிவித்தார்.

அரியலூர் - பெரம்பலூர் மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில், கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியருக்கு 20 சதவீதம் தனி இடம் ஒதுக்க வேண்டி, அரியலூர் காமராஜர் திடலிலிருந்து அரியலூர் தாலுகா அலுவலக வளாகத்துக்கு பேரணி மேற்கொள்ளப்பட்டது.

வன்னியர் சங்க மாநில தலைவர் காடுவெட்டி குரு பேசியதாவது:வன்னியர் சங்கத்தை 1980ல் உருவாக்கிய ராமதாஸ், கல்வி, வேலை வாய்ப்பில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் செய்தார். ஆனால், 107 ஜாதியை ஒருங்கிணைத்து, 20 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கினார் முதல்வர் கருணாநிதி. அனைத்து சமுதாய மக்களையும் ஜாதி வாரியாக கணக்கெடுத்து, இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். "ஜாதி இல்லை' என தமிழக முதல்வர் கருணாநிதி கூறினாலும், ஜாதி வெறியோடு தான் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆட்சி நடத்தினர்.தமிழகம் முழுவதும் உள்ள இரண்டரை கோடி வன்னியருக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு, போராட்டம் நடத்தப்படுகிறது. 20 சதவீதம் பிரித்து தரவில்லை என்றால், கருணாநிதி அரசு, மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.

ராஜஸ்தானில் குர்ஜார் இன மக்களைப் போல, ரயில் மறியல் போராட்டம் நடத்தி, தண்டவாளத்தை பெயர்த்தெடுக்கும் போராட்டம் நடத்தப்படும். ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில், பெரும்பான்மை ஜாதிக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டும், கடந்த 63 ஆண்டாக தனி இட ஒதுக்கீடு இல்லை. வன்னியருக்கு தனி இட ஒதுக்கீடு கொடுக்கும் வரை, எங்கள் போராட்டம் தொடரும்.இவ்வாறு குரு பேசினார்.

தமிழகம் தாங்காது அன்புமணி எச்சரிக்கை : காஞ்சிபுரம் மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில், வன்னியர்களுக்கு20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, காஞ்சிபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி கலந்து கொண்டு பேசியதாவது:இங்கு நடைபெறுவது முதல் கட்ட போராட்டம். தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். எங்கள் கோரிக்கைக்கு தமிழக அரசு செவி சாய்க்காவிட்டால் தமிழகம் தாங்காது. தயவு செய்து எங்களை அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு தள்ளாதீர். நாங்கள் கோரிக்கைகளை வலிறுத்தி அமைதியாகப் போராட்டம் நடத்துகிறோம். அடுத்தக் கட்ட போராட்டம் குறித்து சொல்ல மாட்டோம். தம்பிகள் எழுச்சி கண்டு ஆங்காங்கே போராட்டம் நடத்தினால், நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம். எங்கள் சொந்தங்களை கட்டுப்படுத்த முடியாது. தமிழகம் முழுவதும் இரண்டரை கோடி வன்னியர்கள் உள்ளோம். நாங்கள் சலுகை கேட்டு போராடவில்லை.

உரிமை கேட்டு போராடுகிறோம். இது ஜாதி போராட்டம் அல்ல; நீதி கேட்டு போராட்டம். எங்கள் உரிமையைப் பெறுவதற்காக தேவைப்பட்டால் 7 ஆண்டுகள் சிறை செல்லவும் தயாராக உள்ளோம்.கோரிக்கையை நிறைவேற்ற 1987ம் ஆண்டு நடந்த சாலை மறியல் போராட்டம் போல் மீண்டும் போராட்டம் நடத்த விடாதீர்கள். எங்களை சீண்டி விடாதீர்கள். உணர்ச்சி வசப்பட்டால் எங்களை கட்டுப்படுத்த முடியாது.இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.

ரேஷன் கடைகளில் வீணாகும் அரிசி, கோதுமை அள்ளிவிட அரசு முடிவு

அரசு உணவுக் கிடங்குகளில், அதிகளவிலான உணவுப் பொருட்கள் நிரம்பி வழிவதால், வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு, பொது வினியோகத் திட்டத்தின் மூலம், 30 லட்சம் டன் அரிசி மற்றும் கோதுமையை அடுத்த ஆறு மாதங்களுக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறது.

அரசு உணவுக் கிடங்குகளின் கொள்ளளவு, மூன்று கோடியே 19 லட்சம் டன் மட்டும் தான். ஆனால், தற்போதைய நிலையில் அவற்றில் ஐந்து கோடியே 78 லட்சம் டன் அரிசி மற்றும் கோதுமை இருப்பதால், உணவுக் கிடங்குகள் நிரம்பி வழிகின்றன.மேலும், சமீபத்தில் உ.பி., உட்பட சில பகுதிகளில், மழையில் நனைந்த நிலையில், திறந்த வெளிகளில் உணவு தானியங்கள் இருந்தது  கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் மனுவாக விசாரணைக்கு வந்த போது, உணவுப் பொருட்கள் கிடைக்காத ஏழைகளுக்கு தரலாமே, உணவு  தானியத்தை ஏன் வீணடிக்க வேண்டும் என்ற கேள்வியை நீதிபதிகள் எழுப்பி கவலை தெரிவித்தனர். இப்பிரச்னை குறித்து ஏற்கனவே மத்திய அரசும்  முடிவு காண விரும்பியது.அதன்படி, ஏ.பி.எல்., என்ற வறுமைக் கோட்டிற்கு மேலே உள்ள குடும்பங்களுக்கு 10 லிருந்து 35 கிலோ வரையிலான அரிசி 8 ரூபாய் 30 காசுக்கும், அதே அளவிலான கோதுமை, 6 ரூபாய் 10 காசுக்கும் வழங்கப்படும். இந்த நடைமுறை ஆறு மாதங்களுக்கு இருக்கும். தமிழகம் உட்பட சில மாநிலங்களில் மேலும் சலுகை விலையில் தரும் பட்சத்தில் சலுகை கூடுதலாக கிடைக்கும்.

இதுகுறித்து மத்திய உணவுத் துறை அமைச்சர் சரத்பவார் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:அடுத்த ஆறு மாதங்களுக்கு ஏ.பி.எல்., குடும்பங்களுக்கு பொது வினியோக திட்டத்தில், அரிசி, கோதுமை வழங்கும்படி மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளோம்.  அதற்கு தேவைப்படும் அரிசி அல்லது கோதுமை அளவை மாநிலங்கள் நிர்ணயித்து முடிவு செய்ததும் அதன்படி அனுப்பப்படும்.சர்க்கரை விலை: சர்க்கரை விலை நிர்ணயத்தை முடிவு செய்து, சர்க்கரை ஆலைகள் வசமே ஒப்படைப்பது, இந்த ஆண்டின் கரும்பு உற்பத்தியைப் பொருத்துத்தான் அமையும். தற்போது சர்க்கரை மீதான ஆதார விலை முதல், பொதுச் சந்தையில் விற்பது வரையிலான விலை வரை மத்திய அரசு தான் நிர்ணயம் செய்கிறது.

இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு(ஐ.எஸ்.எம்.ஏ.,) மற்றும் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (என்.எப்.சி.எஸ்.எப்.,) ஆகிய இரண்டு அமைப்புகளும், மாதா மாதம் பொது வினியோகத் திட்டத்துக்கு சர்க்கரை ஆலைகளிடமிருந்து வாங்கும் திட் டத்தைக் கைவிட்டு, பொதுச் சந்தையில் வாங்க வேண்டும் என்றும், அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்திலிருந்து சர்க்கரையை நீக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.விளைச்சல் ஆண்டு இந்த செப்டம்பரோடு முடிவதால், ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இந்த ஆண்டின் மொத்த சர்க்கரை உற்பத்தி பற்றிய தகவல்களைத் திரட்டி விடுவேன். அதன் பின் சர்க்கரை உற்பத்தியைப் பொருத்துத் தான் விலை நிர்ணயத்தைக் கைவிடுவது பற்றி முடிவெடுக்க முடியும்.சர்க்கரை விலை நிர்ணயம் மீதான எந்த முடிவும், நுகர்வோர், விவசாயிகள் மற்றும் ஆலைகளை பாதிக்கும் வகையில் இருக்காது.

இதுகுறித்து சர்க்கரை ஆலைக் கூட்டமைப்புகளுடன் பேசத் தயாராக உள்ளோம். மத்தியத் தொகுப்பிலிருந்து நேபாளத்துக்கு ஒரு லட்சம் டன்னும், வங்கதேசத்துக்கு இரண்டு லட்சம் டன்னும் அரிசி, கோதுமையை ஏற்றுமதி செய்ய, பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சரவை உயர்மட்டக் குழு அனுமதி அளித்துள்ளது.இவ்வாறு சரத் பவார் கூறினார்.ஆனால், சர்க்கரை விலை நிர்ணயம் அரசுக் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால், பொதுச் சந்தையில் அதன் விலை கிலோ 60 ரூபாயாக அதிகரித்து விடும் என்ற அச்சம் நிலவுகிறது. மகாராஷ்டிர காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கன்யாலால் கித்வானி கூறுகையில், "இத்திட்டம், தரகர்களுக்கும் பதுக்குவோருக்கும் தான் லாபம் தரும்' என்றார்.

அரசு மீது கட்காரி புகார் : உணவு தானியங்களை சரியாக பாதுகாக்காமல், மக்க விட்டபின், அவை, மது தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு குறைந்த விலையில் விற்கப்படுகிறது என்று,  பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி கூறினார்.

அவர் கூறியதாவது:லட்சக்கணக்கான டன் அரிசி, கோதுமை அரசு உணவுக் கிடங்குகளிலும் வேறு பல இடங்களிலும் சீரழிகின்றன. மக்கிப் போன அரிசி, கோதுமையை மது தயாரிக்கும் கம்பெனிகளுக்கு கிலோ இரண்டு ரூபாய்க்கு விற்கப்படுவது குறித்து மத்திய அரசு கவலை கொள்ளவில்லை.விவசாயிகளிடமிருந்து மிகவும் குறைந்த விலைக்கு உணவுப் பொருட்களை மத்திய அரசு கொள்முதல் செய்கிறது. ஆனால் மக்கிப் போன தானியங்கள், கிலோ இரண்டு ரூபாய்க்கு மதுபான தொழிற்சாலைகளுக்கு விற்கப்படுகின்றன.பொருளாதார மேதைகள் பலர் ஆட்சி புரிந்தும் தற்போதைய ஆட்சியில்  பணவீக்கம் இரட்டை இலக்கத்தை எட்டியிருக்கிறது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில், பணவீக்கம் 3 சதவீதம் தான் இருந்தது.

லோக்சபாவில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு

"விலைவாசி உயர்வு தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு அனுமதி தர முடியாது' என, லோக்சபா சபாநாயகர் மீராகுமார் நிராகரித்ததால், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் நேற்று அமளியில் இறங்கின. இதனால், பார்லிமென்டின் அனைத்து நடவடிக்கைகளும் இரண்டாவது நாளாக முடங்கின.

விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. அதன்படி விவாதம் நடத்தினால், முடிவில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். இதற்கு அரசு  தயாரில்லை. இதனால், நேற்று இரண்டாவது நாளாக சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. லோக்சபா நேற்று கூடியதும் கேள்வி நேரத்தை எடுத்துக் கொள்ள சபாநாயகர் மீராகுமார் முற்பட்டார். எதிர்க்கட்சிகள் விடவில்லை. இதனால், வேறு வழியின்றி, "ஒத்திவைப்பு தீர்மானம் ஏன் வேண்டும்' என, வலியுறுத்தி பேச எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு அளித்தார்.

முதலில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ்," சமீபத்தில் நடத்திருக்க வேண்டும். மக்களை பாதிக்கும் வகையில் அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னையாக இருக்க வேண்டும். இந்த இரண்டும்தான் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர தேவை. இந்த இரண்டு காரணங்களுமே இப்போது இருக்கின்றன. 2004ம் ஆண்டிலிருந்து விஷம் போல விலைவாசி ஏறுகிறது. எனவே ஒத்திவைப்பு தீர்மானம் என்பது மிகவும் பொருத்தமானது,'' என்றார்.

முலாயம்சிங் பேசும்போது,"" 90 சதவீத மக்கள் அவதிப்படுகின்றனர். 10 சதவீதம் பேர் விலைவாசி உயர்வால் பாதிக்கப்படாதவர்கள். இவர்களுக்காக மட்டுமே இந்த அரசு இருக்கிறது'' என்றார்.

பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த தாரசிங் சவுகான் பேசும்போது, ""ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தே ஆக வேண்டும். விலைவாசி பிரச்னையை அரசு மூடி மறைத்து விட முடியாது,'' என்றார்.

சரத்யாதவ் பேசும்போது, ""பருவமழை நன்றாக இருக்கும். டிசம்பரில் விலைவாசி குறையும் என, பிரதமர் பேசுகிறார். பருவமழையை மட்டும் நம்பி நடக்கும் அரசாங்கமும், அதன் பிரதமரும் இந்த நாட்டிற்கு தேவைதானா என்று புரியவில்லை,'' என்றார்.

பாசுதேவ்ஆச்சார்யா பேசும்போது,""ஏற்கனவே 1971, 1973, 1986, 1994ம் ஆண்டுகளில் கொண்ட வரப்பட்ட ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு சபாநாயகர் அனுமதி வழங்கியுள்ளார். இடதுசாரிகளின் தயவால் நடந்த கடந்த ஆட்சியில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை உயர்த்த எவ்வளவோ முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், முடியவில்லை. இப்போது இடதுசாரிகளின் கடிவாளம் இல்லை என்பதால் இஷ்டம்போல் விலையை ஏற்றுகின்றனர்,'' என்றார்.

குருதாஸ் தாஸ்குப்தா பேசும் போது,""சர்வதேச சந்தை நிலவரப்படி பெட்ரோல், டீசல் விலை இனி இருக்கும். இது மிகவும் ஆபத்து. சர்வதேச சந்தையில் விலையை நிர்ணயிப்பவர்கள் புரோக்கர்கள். இவர்களுக்கு இந்திய சாமானிய மக்கள் இனி அடிமையாக வேண்டும்,'' என்றார்.

திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த சுதிப் பண்டோபாத்யா பேசும்போது, ""விலைவாசி உயர்வு   கவலையளிக்கக் கூடிய விஷயமே. இதை சபையில் விவாதிக்க வேண்டும். ஆனாலும், இதற்காக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஓட்டெடுப்பு இல்லாத வேறு பிரிவுகளின்கீழ் இந்த விவாதத்தை நடத்தினால் நல்லது'' என்றார்.

தி.மு.க.,வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு,""எதிர்க்கட்சிகளுக்கு துணிச்சல் இருக்குமேயானால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரலாம். அதை விட்டுவிட்டு ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து அரசாங்கத்திற்கு பூச்சாண்டி காட்டுவது ஏன்? விலைவாசி பிரச்னைக்காக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வருவதை தி.மு.க., எதிர்க்கிறது,'' என்றார்.

அரசு தரப்பில், பிரணாப் முகர்ஜி பேசும்போது,""1956 மே மாதம் 30ல் அனந்த சயன அய்யங்காரும், 1971ல் தில்லானும் சபாநாயகர்களாக இருந்தபோது ஒத்திவைப்பு தீர்மானம் குறித்து பின்வருமாறு தீர்ப்பு கூறியுள்னர். அதில், "அரசியல் சட்டத்தின் கீழ் தனது பொறுப்பையும், கடமையையும் ஒரு அரசாங்கம் செய்யத் தவறாத வரை, அந்த அரசிற்கு எதிராக அவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரத் தேவையில்லை' என்று கூறியுள்ளனர். எங்களுக்கு ஒன்றும் விலைகளை உயர்த்த ஆசை இல்லை. விலை உயர்வுக்கு மாநில அரசுகள் போடும் அதிக வரிகளும்கூட ஒரு காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது,'' என்றார்.

இதையடுத்து, சபாநாயகர் மீராகுமார், ""1971ல் சபாநாயகர் தில்லான் அளித்த தீர்ப்பில், அரசியல் சட்டப்படி அரசு  தனது கடமையை ஆற்ற தவறும் போதுதான் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும். இல்லையெனில், அதற்கு அவசியமில்லை என்று கூறியுள்ளார். விலைவாசி உயர்வு பிரச்னையில் அரசு தனது கடமையை ஆற்றிக் கொண்டு இருப்பதாகவே கருதுகிறேன். எனவே ஒத்திவைப்பு தீர்மானம் தேவையில்லை,'' என்றார்.

இதை ஏற்காத எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சபையின் மையத்திற்கு சென்று அமளியில் இறங்கவே, சபை ஒத்திவைக்கப்பட்டது. சபாநாயகரின் தீர்ப்பை ஏற்க மறுத்து, எதிர்ப்பு தெரிவிப்பது பார்லிமென்ட் வரலாற்றில் இதுவே முதல்முறை.

ராஜ்யசபாவிலும் ரகளை : ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ் விலைவாசி பிரச்னை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என, ராஜ்யசபாவிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் இறங்கின. இதனால், சபை இரு முறை ஒத்திவைக்கப்பட்டது.ராஜ்யசபா நேற்று கூடியதும், பா.ஜ.,வைச் சேர்ந்த நந்தகுமார் சாய், புதிய எம்.பி.,யாக  பதவியேற்றார். இது முடிந்ததுமே, பா.ஜ., உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து, "கேள்வி நேரத்தை ரத்து செய்ய வேண்டும். ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு என்ன பதில்' என்று கேட்டு அமளியில் இறங்கினர். இதனால், சபையில் குழப்பம் ஏற்பட்டது.எதிர்க்கட்சித் தலைவர் அருண்ஜெட்லி பேசும்படி,  சபைத் தலைவர் அன்சாரி அனுமதித்தார். ஆனால், அவர் பேசுவது எதிர்க்கட்சிகளின் கூச்சல் குழப்பத்தினால் தடை ஏற்பட்டது. இதையடுத்து சபை  ஒத்திவைக்கப்பட்டது. மதியம் 12 மணிக்கு மீண்டும் கூடியபோதும் இதே நிலை காணப்படவே, அப்போது துணைத் தலைவர் ரகுமான்கான், நாள் முழுவதற்கும் சபையை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

கொறடா உத்தரவை மீறிய சோனியா, ராகுல் : புதுடில்லி:  விலைவாசி உயர்வு தொடர்பாக லோக்சபாவில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீவிரமாக இருந்ததால், காங்கிரஸ் எம்.பி.,க்கள் அனைவரும் நேற்று தவறாமல் பார்லிமென்டிற்கு வர வேண்டும் என, அந்தக் கட்சி சார்பில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருந்தும், சோனியாவும், ராகுலும் நேற்று சபைக்கு வரவில்லை.

இதுபற்றி காங்கிரஸ் தகவல் தொடர்பாளர் மணீஷ் திவாரியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் கூறியதாவது:கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் சோனியாவும், ராகுலும் பார்லிமென்டிற்கு வரவில்லை எனில், சில தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்திருக்கலாம். அவர்கள் இருவருக்கும் கட்சி மற்றும் அமைப்பு ரீதியான பொறுப்புகள் நிறைய உள்ளன. முன்பே திட்டமிடப்பட்ட சில பணிகள் இருந்துள்ளதால், அவர்கள் சபைக்கு வரவில்லை. இல்லையெனில், கட்டாயம் சபைக்கு வந்திருப்பர்.இவ்வாறு திவாரி கூறினார்.

Sunday, July 25, 2010

காங். கோஷ்டிகளை நேரில் பார்க்க விரும்புவோர் மதுரைக்கு வரலாம்-இளங்கோவன்

மத்திய அரசு [^] வழங்கும் மானியத்தில்தான் தமிழகத்தில் ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி ரேஷன் திட்டமும், 108 ஆம்புலன்ஸ் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது என மூத்த காங்கிரஸ் தலைவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் [^] கூறினார்.

இளங்கோவனின் இந்தக் கருத்தை தமிழக அரசு பலமுறை மறுத்ள்ளது. ஒரு ரூபாய் அரிசித் திட்டத்துக்கும் மத்திய அரசுக்கும் சம்பந்தமில்லை என்று திமுக மறுத்து வருகிறது. தெரிவித்தார்.

இந் நிலையில் தேனி அருகே சின்னமனூரில் காமராஜர் சிலையைத் திறந்து வைத்துப் பேசிய இளங்கோவன்,

காமராஜர் ஆட்சியில் கக்கன் உள்பட 5 அமைச்சர்கள் சுயநலமில்லாமல் உழைத்ததால்தான், திமுக உள்பட அனைத்துக் கட்சியினரும் காமராஜர் ஆட்சியை இன்றுவரை பெருமையாகப் பேசுகின்றனர். காமராஜர் தொழில்துறை அமைச்சராக இருந்தபோதுதான், தமிழகத்தில் பல தொழிற்சாலைகள் உருவாகின.

இன்று ஆட்சியில் இருப்பவர்கள், தங்களது குடும்பத்தினரை எவ்வாறு ஆட்சிப் பொறுப்புக்குக் கொண்டு வருவது என்பதில்தான், அதிக நேரத்தைச் செலவிட்டு வருகின்றனர்.
நான் பஞ்சாப் அரசியலை சொன்னேன், நீங்கள் எதாவது நினைத்தால் நான் பொறுப்பல்ல.

காமராஜர் 10,000 நாட்கள் மக்களுக்காகச் சிறையில் இருந்துள்ளார். இன்றைய ஆட்சியாளர்களைப் போல் மக்களுக்கு பணம் கொடுத்தாலோ, நிலம் கொடுத்தாலோ, பெண்களுக்கு நகை கொடுத்தாலோ ஆட்சி நிலைக்காது என்று தெரிந்துதான் காமராஜர் கல்வியைத் தந்தார், மாணவர்களுக்குச் சீருடையும், மதிய உணவையும் தந்தார்.

மதிய உணவுத் திட்டத்திற்கு பல எதிர்ப்புகளையும் மீறி ரூ. 100 கோடியில் திட்டத்தை துவக்கினார் காமராஜர். ஆனால், அப்போது அந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு மானியம் ஒரு பைசா கூட வழங்கவில்லை.

இன்று, தமிழக அரசின் 1 ரூபாய் ரேஷன் அரிசித் திட்டத்துக்கு, மத்திய அரசு ரூ. 7 மானியம் வழங்குகிறது. 108 ஆம்புலன்ஸ் திட்டத் தொகை முழுவதையும் மத்திய அரசு அளித்து வருகிறது.

தமிழகத்தின் நகர்ப்பகுதிகளில் செல்லும் மிதவை பஸ், சொகுசு பஸ்கள் மத்திய நகர்ப்புறத்துறை அமைச்சர் ஜெயபால் ரெட்டி வழங்கியது. ஆனால், இதுபோன்ற செய்திகள் [^] மக்களைச் சென்றடையாமல் தடுக்கப்படுகின்றன.

காங்கிரஸ் கட்சி குடும்பப் பாசத்தைவிட நாட்டுப் பாசம் மிகுந்த கட்சி. சோனியா காந்தி [^] நினைத்திருந்தால் பிரதமர் ஆகியிருப்பார். அவரது மகன் ராகுல்காந்தி துணைப் பிரதமராகிவிட முடியும். மகள் பிரியங்கா டெல்லி முதல்வர் ஆகியிருக்கலாம். மருமகன் ஏதாவது ஒரு மாநிலத்தின் ஆளுநர் ஆகியிருக்க முடியும். ஆனால், பதவிகளை விரும்பாதவர் சோனியாவும் அவரது குடும்பமும்.

காங்கிரஸ் மீது அக்கறை உள்ளவர்களும், காங்கிரஸ் கோஷ்டிகளை நேரில் பார்க்க விரும்புபவர்களும் மதுரைக்கு ஜூலை 31ம் தேதி வாருங்கள் என்றார் இளங்கோவன்.

குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயபால் மரணம் சென்னை ஆஸ்பத்திரியில் உயிர் பிரிந்தது

ஜுலை.26-

சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயபால் நேற்று மரணம் அடைந்தார்.

ஜெயபால் எம்.எல்.ஏ. மரணம்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் எஸ்.ஜெயபால் (வயது 55). கடந்த ஜுன் மாதம் 2-ந் தேதி திடீரென்று அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

பின்னர் சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு ரத்தப்புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை 10.30 மணிக்கு ஜெயபால் எம்.எல்.ஏ. மரணம் அடைந்தார்.

மு.க.ஸ்டாலின் அஞ்சலி

ஜெயபால் எம்.எல்.ஏ. மரணம் பற்றிய தகவல் கிடைத்ததும் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆஸ்பத்திரிக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பீட்டர் அல்போன்ஸ், யசோதா, ஹெலன் டேவிட்சன் எம்.பி. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து அவரது உடல் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு அவரது சொந்த ஊரான நாகர்கோவில் அருகே உள்ள பெருவிளைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இன்று (திங்கட்கிழமை) மாலை ஜெயபால் எம்.எல்.ஏ. உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

வாழ்க்கை குறிப்பு

ஜெயபால் எம்.எல்.ஏ.வின் சொந்த ஊர் நாகர்கோவில் அருகே உள்ள பெருவிளை ஆகும். பெருவிளையை சேர்ந்த சிவசுப்பிரமணியம் நாடார்-தங்கம்மாள் தம்பதிகளின் மகனான ஜெயபால் எம்.எல்.ஏ.வுக்கு ஜெயசந்திரன் என்ற தம்பியும், சிவகுரு, சரோஜினி, புஷ்பவதி, ஜெயந்தி, கலைசெல்வி என்ற 5 சகோதரிகளும் உள்ளனர். மூத்த சகோதரி செல்லதங்கம் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டார்.

ஜெயபால் எம்.எல்.ஏ. பெருவிளையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவருக்கு புஷ்பம் என்ற மனைவியும், சிவபிரபு, சிவபிரசாந்த் என்கிற 2 மகன்களும், சிவபிரியா என்ற மகளும் உள்ளனர்.

ஜெயபால் எம்.எல்.ஏ.வின் மகன் சிவபிரபு நாகர்கோவில் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவராக உள்ளார். சென்னையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் சிவபிரபு மெக்கானிக்கல் பிரிவில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். சிவபிரசாந்த் சிவில் பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சிவபிரியா நாகர்கோவிலில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் எம்.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

1955-ம் ஆண்டு மே மாதம் 19-ந் தேதி பிறந்த ஜெயபால், தொடக்க கல்வியை பெருவிளை பள்ளியிலும், உயர்நிலை கல்வியை ஸ்காட் கிறிஸ்தவ பள்ளியிலும் படித்தார். பின்னர் பி.எஸ்சி பட்டப்படிப்பை நாகர்கோவிலில் உள்ள இந்து கல்லூரியில் முடித்தார்.

பல்வேறு பதவிகள்

மாணவர் பருவத்திலேயே காங்கிரஸ் கட்சியில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். 1980-ம் ஆண்டு ராஜாக்கமங்கலம் ஒன்றிய காங்கிரஸ் செயலாளராக பதவியேற்று தீவிர அரசியலில் ஈடுபட்டார்.

1986-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை பெருவிளை பஞ்சாயத்து தலைவராக பணியாற்றினார். 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலராக பதவிவகித்தார். 1996-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 15 ஆண்டுகளாக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்து வந்தார்.

தமிழ்நாடு மாநில காங்கிரஸ் (த.மா.க.) கட்சியை மூப்பனார் தொடங்கியபோது அவருடன் இணைந்து செயல்பட்டார்.

கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார். அப்போது அவரை எதிர்த்து போட்டியிட்ட பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் எம்.ஆர்.காந்தியை விட 20 ஆயிரத்து 997 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றிபெற்றார்.

பெற்ற வாக்கு விவரம்

கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது குளச்சல் தொகுதியில் போட்டியிட்டு அவர் பெற்ற ஓட்டு விவரம் வருமாறு:-

எஸ்.ஜெயபால் (காங்கிரஸ்)- 50,258.

எம்.ஆர்.காந்தி (பாரதீய ஜனதா)- 29,261.

கே.டி.பச்சைமால் (அ.தி.மு.க.)- 20,407.

எஸ்.வெலிங்டன் (தே.மு.தி.க.)- 4,941.

சி.லிங்கபெருமாள் (சுயேச்சை)- 656.

கே.சுரேந்திரன்நாயர் (ஏ.பி.எச்.எம்)- 626.

எஸ்.என்.தர்மேந்திராகுமார் (ப.ச)- 449.

எஸ்.தாமஸ் (சுயேச்சை)- 310.

எச்.குமாரசாமி (சுயேச்சை)- 164.

கருணாகரன் (சுயேச்சை)- 142.

சி.பாலகிருஷ்ணன் (சுயேச்சை)-109.

அமைச்சர் சுரேஷ்ராஜன்

மரணமடைந்த ஜெயபால் எம்.எல்.ஏ.வின் வீட்டிற்கு சுற்றுலா மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் சென்று அங்கிருந்த உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் மற்றும் காங்கிரஸ் கட்சியினரும் அங்கு சென்று உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. ஜெயபால் மரணம் அடைந்த தகவல் நேற்று காலையில் குமரி மாவட்டம் முழுவதும் பரவியது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி கொடியை அரைக்கம்பங்களில் பறக்க விட்டனர்.

இடைத்தேர்தல் இல்லை

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளதால் குளச்சல் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை. சமீபத்தில் கோவையில் பூந்தமல்லி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுதர்சனம் மாரடைப்பால் மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயபால் எம்.எல்.ஏ. மறைவை தொடர்ந்து தமிழக சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் பலம் 34 ஆக குறைந்தது.

Wednesday, July 21, 2010

இடஒதுக்கீட்டில் ஜெ., இரட்டை வேடம்

இடஒதுக்கீடு பிரச்னையில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இரட்டை வேடம் போட்டதாக, தமிழக முதல்வர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை:மண்டல் கமிஷன் பரிந்துரைகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீது, 1992ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி ஒன்பது நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், தீர்ப்பு அளித்தது. பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், "இடஒதுக்கீடுகள் எதுவும் 50 சதவீதத்துக்கு மேல் போகக்கூடாது' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இடஒதுக்கீட்டை 69 சதவீதம் என்பதற்கு மாற்றாக, 50 சதவீதம் மட்டுமே செல்லும் என சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பின் விளைவாக, தொழிற்கல்வியில் 69 சதவீதம் இடங்களை ஒதுக்குவது குறித்த போராட்டம், மாணவர்கள் மத்தியில் பெரிதாக எழுந்தது. இடஒதுக்கீடு எத்தனை சதவீதம் என்பதை நிர்ணயிக்கும் உரிமையை, அந்தந்த மாநில அரசுகளுக்கே வழங்கும் வண்ணம், அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்பது தான் தி.மு.க.,வின் கோரிக்கையாக இருந்தது.

இடஒதுக்கீடு பிரச்னையில் ஜெயலலிதா அரசு அப்போது இரட்டை வேடம் போடுவதைப் போல ஒரு கருத்து இருந்தது. அதற்கு காரணம், 1993 நவம்பர் 22ல் சுப்ரீம் கோர்ட்டில் அளித்த ஒப்புதல் பிரமாணப் பத்திரத்தில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஏற்று தமிழகத்தில் 1993 - 94ம் ஆண்டுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஜெயலலிதா அரசின் சார்பில் சம்மதம் கொடுத்தது தான்.உடனடியாக நான் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக, சமூக அமைப்புகள் இணைந்து, 69 சதவீத இடஒதுக்கீட்டை வற்புறுத்தி மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்தின.பார்லிமென்டின் இரு அவைகளையும் கூட்டி, அரசியல் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்து நிறைவேற்ற ஆதரவளிக்கக் கோரி அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், 1994 ஜூன் 27ம் தேதி கடிதம் எழுதினேன். இதன் பிறகு, ஜூலை 18ம் தேதி ஜெயலலிதாவும், இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் எழுதினார்.

இப்பிரச்னைக்காக, அதே ஆண்டு ஜூன் 17ம் தேதி தி.மு.க., உட்பட அனைத்து எதிர்க்கட்சிகள் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன் மறியல் நடத்தப்போவதாக அறிவித்தபோது, அதே நாளில் பந்த் நடத்த ஜெயலலிதா அழைப்பு விடுத்தார். உடனே மறியலை 20ம் தேதிக்கு ஒத்திவைத்தோம்.மறியலால் வன்முறை ஏற்படும் என ஜெயலலிதா அரசு கூறி, அனுமதி மறுத்ததோடு, ஜூன் 20ம் தேதி காலையில் என்னையும், நல்லகண்ணு, ராமதாஸ், திருநாவுக்கரசர் ஆகியோரையும் கைது செய்து, மாலையில் விடுவித்தது.இடஒதுக்கீட்டுக்கான முயற்சிகளை நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது மட்டுமல்ல; அதன் பின், முதல்வராக பொறுப்பேற்றிருந்த நிலையிலும் சமூக நீதி பற்றிய இந்த சாராம்சங்களை வலியுறுத்தி, அதற்குத் துணை நிற்க வேண்டுமென காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் மற்றும் பிரதமர்களுக்கும், அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன் என்றார்.

ஊழல் அரசியல்வாதிகள் - திருடர்களாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

பீகாரி 11 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக எதிர்கட்சிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

முன்பு ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆட்சியில் இருந்த போது 900 ஆயிரம் கோடிக்கு மாட்டுத் தீவன ஊழல் நடைபெற்றது அது போல 11 மடங்கு ஊழல் நடந்துள்ளதாக எதிர்கள் புகார் தெரிவித்தும் போராட்டமும் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.


முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, பீகார் சட்டசபையில் நேற்று இரண்டாவது நாளாக கடும் கூச்சல், குழப்பம், அமளி நிலவியது. சபாநாயகரை நோக்கி செருப்பும் வீசப்பட்டது. இதையடுத்து, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் 67 பேர், மழைக்கால கூட்டத்தொடர் முழுவதற்கும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

பீகாரில், 2002-03 மற்றும் 2007-08ம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்களில் 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக ஆடிட்டர் ஜெனரல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.  இதனால், முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, பீகார் சட்டசபையில் நேற்று முன்தினம் எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.  மைக்குகளை உடைத்ததோடு, மேஜை, நாற்காலிகளையும் சேதப்படுத்தினர். ஒரு கட்டத்தில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால், சபையை நாள் முழுவதற்கும் சபாநாயகர் உதய் நாராயண் சவுத்ரி ஒத்திவைத்தார். கர்நாடகாவில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது போல, பீகார் சட்டசபையிலும், சட்டசபை மேலவையிலும் 80க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் நடத்தினார். இரவு முழுவதும் சட்டசபையிலேயே தங்கியிருந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை பீகார் சட்டசபை கூடியதும் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், லோக்ஜனசக்தி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், இ.கம்யூ., (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள், அரசுக்கு எதிராக கோஷம் போட்டனர்.  கருவூலகங்களில் இருந்து முறைகேடாக 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவில்  பணம் பெறப்பட்டதால், அதற்கு பொறுப்பேற்று முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் சுஷில்குமார் மோடி ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். சபையின் மையத்தில் அமர்ந்தபடி தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இருக்கைக்கு திரும்பும்படி சபாநாயகர் விடுத்த வேண்டுகோளையும் புறக் கணித்தனர். 

இதையடுத்து, தர்ணாவில் ஈடுபட்ட 67 எம்.எல்.ஏ.,க்களை சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தை சபையில் பார்லிமென்டரி விவகார அமைச்சர் பிரிஜேந்திர பிரசாத் யாதவ் கொண்டு வந்தார்.  அது எதிர்க்கட்சிகளின் பலத்த அமளி, எதிர்ப்புக்கு இடையே குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேறியது. சட்டசபையின் தற்போதைய மழைக்கால கூட்டத் தொடர் முடியும் வரை அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சஸ்பெண்டான 67 எம்.எல்.ஏ.,க்களில் 42 பேர் ராஷ்டிரிய ஜனதா தளத்தையும், 11 பேர் லோக்ஜனசக்தி கட்சியையும், மீதமுள்ளவர்கள் மற்ற கட்சிகளையும் சேர்ந்தவர்கள். பின், அவர்கள் சபைக் காவலர்கள் மூலம் சபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அப்படி வெளியேற்றப்படும் போது, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ஆர்.சி.பஸ்வான் என்ற எம்.எல்.ஏ., சபையின் வாயிலில் மயங்கி விழுந்தார். உடன் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதன்பின் அதே கட்சியைச் சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ., பப்லு தேவை சபைக்காவலர்கள் வெளியேற்ற முற்பட்ட போது, மற்ற உறுப்பினர்கள் தடுக்க முற்பட்டனர்.  இந்த மல்லுக்கட்டின் போது, சபாநாயகரின் இருக்கையை நோக்கி செருப்பு ஒன்றும் வீசப்பட்டது.  செருப்பை யார் வீசியது என்பது தெரியவில்லை. இருந்தாலும் அந்தச் செருப்பு, சபாநாயகர் மீது படவில்லை. இதேபோல், பீகார் சட்டசபை மேலவைக்கு வெளியேயும் பெரும் அமளி மற்றும் நாடகம் நடந்தது. நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.சி., ஜோதி குமாரி என்பவரை, சபைக்கு உள்ளே நுழைய விடாமல் காவலர்கள் தடுக்க முற்பட்ட போது, அவர் பூந்தொட்டிகளை தூக்கி வீசி எறிந்து ரகளையில் ஈடுபட்டார். இதையடுத்து, அவரை பெண் காவலர்கள் சில அடி தூரத்திற்கு இழுத்துச் சென்று விட்டனர். சபையின் வெளியேதான் இந்த நிலைமை என்றால், உள்ளேயும் கடும் அமளி நிலவியது. ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.எல்.சி., சஞ்சய் பிரசாத், மேஜை மீதிருந்த மைக்குகளை பிடுங்கி ஆளும் கட்சியினரை நோக்கி எறிந்தார்.  சட்டசபை மேலவையில் ரகளையில் ஈடுபட்டதற்காக நேற்று முன்தினமே 14 எம்.எல்.சி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இது போன்ற அரசியல்வாதிகளை மக்களால் திருத்த முடியாது. ஏன்றால் அரசியல்வாதிகளிடமும் பெரும் தொழில் அதிபர்களிடமும் தான் பணம் நிறைய உள்ளது அவர்கள் தான் அரசியல்வாதிகளையும் அரசாங்கத்தையும் நிர்ணியிக்கும் சக்தி அதனால் திருடர்களாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

Sunday, July 18, 2010

காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் திடீர் தள்ளிவைப்பு


உட்கட்சி தேர்தல் தேதி தள்ளி வைக்கப்படுகிறது என தேர்தல் பொறுப்பாளர் ரவிமல்லு நேற்று முன்தினம் அதிரடியாக அறிவித்தார். இதனால், உட்கட்சி தேர்தல் நடக்குமா அல்லது கோட்டா சிஸ்டத்தில் பங்கீடு செய்யப்படுமா என்ற குழப்பம், அக்கட்சித் தொண்டர்களிடம் எழுந்துள்ளது.தமிழக காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுமென, தேர்தல் தேதி அட்டவணையை நேற்று முன்தினம் தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அறிவித்தார்.

அன்றிரவு தேர்தல் தேதி மாற்றி வைக்கப்பட உள்ளது என, தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் ரவிமல்லு அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். தங்கபாலு தெரிவித்த அறிவிப்பில், ஓட்டுச்சாவடி மற்றும் ஊராட்சி தேர்தலுக்கான மனு தாக்கல் நேற்று துவங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒரே நாளில் தேர்தலுக்கு எப்படி தயாராக முடியும்? என்ற கேள்வியை எதிர்கோஷ்டிகள் தரப்பில் எழுப்பப்பட்டன.

உட்கட்சி தேர்தல் குறித்து தன்னிடம் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டை மத்திய அமைச்சர் ஒருவர், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத்திடம் புகார் தெரிவித்தார்.அதேபோல், முன்னாள் அமைச்சர் ஒருவர் மனு தாக்கல் செய்வதற்கும், மனுவை திரும்ப பெறுவதற்கும் போதுமான கால அவகாசம் அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் மேலிடத்திற்கு தெரிவித்தார். மற்றொரு மத்திய அமைச்சரின் ஆதரவாளர்கள், கட்சித் தலைமையின் தன்னிச்சையான இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என முடிவு எடுத்தனர்.

இந்நிலையில் டில்லி மேலிடம், கோஷ்டித் தலைவர்களின் புகார்களை ஏற்றுக் கொண்டதால், உட்கட்சி தேர்தல் அறிவிப்பை தள்ளி வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து, தேர்தல் பொறுப்பாளர் ரவிமல்லு, "புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்' என்ற அறிக்கையை வெளியிட்டார். தேர்தல் நடத்த வேண்டும் என்பதில் தங்கபாலு ஆதரவாளர்கள் தீவிரமாக இருந்தனர். ஆனால், தேர்தல் தேதி அறிவிப்பு தள்ளி வைக்கப்பட்டதும் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தேர்தல் மூலம் உள்ளாட்சி முதல் மாநில நிர்வாகிகள் வரை பதவிகளை கைப்பற்ற வேண்டும் என்பதில் தங்கபாலு ஆதரவாளர்கள் சில மாவட்டங்களில் முன்கூட்டியே திட்டமிட்டு தயாராக இருந்தனர்.ஆனால், கோஷ்டித் தலைவர்களில் சிலர் உட்கட்சி தேர்தலை சந்திக்க விரும்பவில்லை. கோட்டா சிஸ்டத்தில் பதவிகளை பங்கு போட்டுக் கொள்வதில் அவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.தேர்தலை நடத்தினால், தங்களுக்கு வேண்டிய ஆதரவாளர்களுக்கு பதவி கிடைக்காமல் போய்விடும் என்பதால், தேர்தல் நடத்த வேண்டாம் என்பதில் சில தலைவர்கள் உறுதியாக இருக்கின்றனர்.

இந்த மாதம் இறுதிக்குள் வட்டம், நகரம், மாவட்ட நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்கள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். அதேபோல், அடுத்த மாதம் 10ம் தேதிக்குள் மாநில தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகள் தேர்தலும் நடத்தி முடிக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் தேர்தல் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.தேர்தலுக்கு அஸ்திவாரமாக விளங்கும் தேர்தல் அதிகாரிகள் நியமனம், மாவட்ட அளவில் மட்டுமே நடந்துள்ளது.

வட்டார அளவில் தேர்தல் நடக்கும் போது, வட்டார தேர்தல் அதிகாரி நியமிக்க வேண்டும், ஓட்டுச்சாவடி அளவில் தேர்தல் நடக்கும் போது, ஓட்டுச்சாவடி தேர்தல் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இந்த பணிகளை இனி முடித்து விட்டு, தேர்தலை ஜனநாயக முறையில் நடத்துவதற்கும் அக்கட்சியில் போதுமான அவகாசம் இல்லையென தொண்டர்கள் புலம்புகின்றனர்.எனவே, உட்கட்சி தேர்தல், தமிழக இளைஞர் காங்கிரஸ் தேர்தலைப் போல அந்தந்த பகுதிகளில் பகிரங்கமாக நடக்குமா அல்லது கோட்டா சிஸ்டத்தில் பதவிகள் பங்கீடு செய்யப்படுமா?

25 கிலோ இலவச அரிசி திட்டம் அமைச்சர் சிதம்பரம்

றுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கு மாதந்தோறும் 25 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது,'' என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் நேற்று தெரிவித்தார்.புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி ஒன்றியத்தில் சமுதாயக் கூடங்களை திறந்து வைத்தார் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம்.

தேசிய வேலை உறுதியளிப்பு திட்டம், ஏழை மாணவர்களுக்கு கல்வி கடனுதவி, விவசாயிகளுக்கு மானியத்தில் கடன் வழங்குதல், "108' ஆம்புலன்ஸ் திட்டத்துக்கு நிதியுதவி உட்பட பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது.வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கு மாதந்தோறும் 25 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. மத்திய அரசுக்கு, மாநில அரசு ஆதரவாக இருக்கிறது; தொடர்ந்து இந்த ஆதரவு இருக்க வேண்டும். அப்போது தான் பொதுமக்கள், விவசாயிகளுக்கும் பல்வேறு சலுகைகள், திட்டங்களை சிறப்பாக வழங்க முடியும் என்றார்ச்.

Friday, July 16, 2010

சீனாவிடம் கோடிக்கணக்கில் கடன் வாங்கிய அமெரிக்கா

சீனாவிடம் அமெரிக்கா மூன்று லட்சம் கோடி டாலர் கடன் வாங்கியுள்ளது'', என  அமெரிக்க பேராசிரியர் சாலமன் செல்வம் பெருங்குடியில் பேசினார்.

மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியில் பொருளியல், வணிகவியல் துறைகள் சார்பில் நடந்த சிறப்பு கருத்தரங்கிற்கு முதல்வர் கண்ணன் தலைமை வகித்தார். பொருளியல் துறை தலைவர் ஜெயக்குமார் வரவேற்றார்.

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள கிளாப்லின் பல்கலை., சமூகவியல் துறை பேராசிரியர் சாலமன் செல்வம் பேசுகையில், ""உலகமயமாதலுக்கு பின் அமெரிக்க பொருளாதாரம் பெருமளவு சரிந்துவிட்டது. இதனை சீனா பயன்படுத்தி, உலகின் மாபெரும் சந்தை பொருளாதார வளமிக்க நாடாக மாறி வருகிறது. பெருமளவில் நடந்த வங்கி மோசடிகள், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளன. உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள மோசமான தாக்கத்தால், அமெரிக்க பொருளாதாரம் பின்னோக்கி செல்கிறது. சமீபத்தில் சீனாவிடம் மூன்று லட்சம் கோடி டாலர் அமெரிக்கா கடனாக பெற்றுள்ளது. இந்த கடனை அடைக்க முடியாது. அமெரிக்க மக்கள் தொகை 380 மில்லியனில் பத்து சதவீத மக்களுக்கு சமூக பாதுகாப்பு இல்லை. அடிப்படை மற்றும் காப்பீடு திட்டம் 40 சதவீத மக்களுக்கு இல்லை. அமெரிக்காவின் இந்த பொருளாதார சரிவை இந்தியா பயன்படுத்தி, ஏற்றுமதியை அதிகரிக்கவேண்டும்'' என்றார். வணிகவியல் துறை தலைவர் காமராஜ் நன்றி கூறினார். பின், மாணவர்களுடன் கலந்துரையாடல் நடந்தது.

தமிழக சட்ட மன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி


தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை டில்லிக்கு அழைத்து ராகுல் பேசியுள்ளார். சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் நிலையில், தமிழகத்தின் மீது ஆர்வம் காட்டத் துவங்கியுள்ள ராகுல், மாநிலத்தில் அரசியல் நிலவரம் மற்றும் கூட்டணி சாதக, பாதகங்கள் உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார்.

காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன், தி.மு.க., தலைமை நல்ல நட்புறவுடன் இருந்து வருகிறது. இருப்பினும், சோனியாவின் மகனும் அக்கட்சியின் எதிர்காலத் தலைவராக முன்னிறுத்தப்படுபவருமான ராகுல், தமிழகத்துக்கு எப்போது வந்தாலும் தி.மு.க., தலைவரை சந்திக்காமல் சென்று விடுவது முக்கியமாக பேசப் பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஒருசிலர் மற்றும் முக்கிய நிர்வாகிகளை டில்லிக்கே அழைத்து ராகுல் ஆலோசனை நடத்தியுள்ளார். நம்பர் 12, துக்ளக் சாலையில் உள்ள வீட்டில் கடந்த செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய மூன்று நாட்களும் இந்த சந்திப்பு நடந்தது. ராகுலை சந்தித்தவர்களில் விடியல் சேகர், அருள் அன்பரசு, காயத்ரிதேவி, ராஜ்குமார், ராம்பிரபு, விஷ்ணுபிரசாத் ஆகிய எம்.எல்.ஏ.,க்கள் முக்கியமானவர்கள். இதுதவிர கார்த்தி சிதம்பரமும் சந்தித்துள்ளார். இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, காஞ்சிபுரம் புரு÷ஷாத்தமன், தூத்துக்குடி பெருமாள் உள்ளிட்ட மாநில மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளும் ராகுலை சந்தித்துள்ளனர். இவர்கள் அனைவருமே ராகுலை தனித்தனியே சந்தித்தனர். ஒவ்வொருவருக்கும் தலா 15 நிமிடங்கள் வரை ஒதுக்கப்பட்டது.

ராகுலை சந்திப்பதற்கு முன்பாக ஒவ்வொருக்கும் ஒரு விண்ணப்பம் தரப்பட் டது. அந்த விண்ணப் பத்தில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. "நீங்கள் என்ன சாதனை செய்துள்ளீர்கள், கட்சியில் உங்களது பணி எந்த அளவில் பேசப்படுகிறது, சமூகதளத்தில் உங்களது பங்களிப்பு என்ன, நடந்து முடிந்த இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் காணப்பட்ட நிறை குறைகள் என்ன, உங்களுக்கு மீண்டும் தேர்தலில் சீட் தந்தால் ஜெயிப்பீர்களா, தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரண்டில் யாரை வலுவான எதிரியாக கருதுகிறீர்கள், உங்கள் தொகுதி எஸ்.பி., - கலெக்டர் ஆகியோர் பெயர் என்ன?' என்பன போன்ற கேள்விகள் அதில் கேட்கப்பட்டிருந்தன. இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பிறகே, ராகுலை சந்தித்துள்ளனர். ராகுலுடன் நடந்த சந்திப்பின்போது, ஜிதின் பிரசாதா மற்றும் கனிஷ்கா ஆகியோர் உடன் இருந்தனர். இவர்கள் ஒவ்வொருவரிடமும் வேறு வேறுவிதமான விஷயங்களை ராகுல் பேசியதாக தெரிகிறது. ஒருசிலரிடம் தமிழக அரசியல் நிலவரமும், இன்னும் சிலரிடம் கட்சி நடவடிக்கைகள் குறித்தும், மேலும் சிலரிடம் கூட்டணி மற்றும் மக்களின் மனநிலை ஆகியவை குறித்த கருத்துக் களை ராகுல் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. தவிர, மாநில காங்கிரஸ் எந்த அளவில் செயல்படுகிறது என்பது பற்றியும் ராகுல் விசாரித்து அறிந்துள்ளார். மற்ற மாநிலங்கள் போல் அல்லாது தமிழகத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., என இரு பெரும் கட்சிகளை எதிர்த்து காங்கிரஸ் அரசியல் செய்தாக வேண்டியுள்ளது. இந்த சூழ்நிலையில், காங்கிரஸ் தலைமையில் புதிய அணி அமைத்தால் தமிழகத்தில் அது எந்த அளவில் எடுபடும் என்றும் முக்கியமாக பேசப்பட்டதாக, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக சட்டசபைக்கு அரசியல் கட்சிகள் தயாராகும் வேளையான தற்போது, ராகுல் திடீரென காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை சந்தித்துப் பேசியிருக்கிறார்.

நேரம் வரும் போது ஒன்றுபடுவோம்

"காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டிகள் இருந்தாலும், நேரம் வரும்போது அனைவரும் ஒன்று சேர்ந்து கொள்வோம்' என, காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசினார்.பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையில், திருப்பூர் குமரன் கல்வி மற்றும் தர்ம அறக்கட்டளையால் அமைக்கப்பட்ட காமராஜரின் வெண்கலச் சிலை திறப்பு விழா நேற்று மாலை நடந்தது.

இந்த சிலையை திறந்து வைத்து முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசுகையில், ""காங்கிரஸ் கட்சியில் தலைவர்களுக்குள் ஒற்றுமை இல்லையென கூறி வருகின்றனர். இன்று, மூன்று தலைவர்கள் ஒரே மேடையில் சேர்ந்துள்ளோம். காமராஜர், மூப்பனாரை விட நாங்கள் பெரிய தலைவர்கள் கிடையாது.


தனித்து நின்று ஆட்சி அமைக்க வேண்டும் என்ற மூப்பனார் எண்ணம் நிறைவேற வேண்டும். அதற்காக செயல்பாடுகளில் தான் அனைவரும் முனைப்பாக இருக்கிறோம். காங்கிரசில் கோஷ்டிகள் மகாத்மா காந்தி காலத்தில் இருந்தே இருக்கிறது; காமராஜர் காலத்திலும் கோஷ்டி இருந்தது. மற்ற கட்சியில் அண்ணன் - தம்பி கோஷ்டி கூட உள்ளது. காங்கிரஸ் தலைவர்களுக்குள் கோஷ்டிகள் இருந்தாலும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் கட்சியை வளர்க்கின்றனர்; நேரம் வரும் போது ஒன்று சேர்ந்து கொள்வோம்,'' என்றார்.


விழாவில், மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கி மத்திய அமைச்சர் வாசன் பேசுகையில், ""இந்த விழா, காங்கிரஸ் முதல் இயக்கமாக வருவதற்கு அடித்தளமாக அமையும் என்பதை என்னால் உணர முடிகிறது. காங்கிரசின் குடும்ப விழாவாக இவ்விழா நடக்கிறது. காங்கிரஸ் தலைவர்களுக்குள் மாற்று கருத்து கிடையாது.


நாங்கள் ஒற்றுமையாகவே இருக்கின்றோம். 43 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இல்லாவிட்டாலும், தமிழகத்தில் பிற கட்சிகளின் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் கட்சியாக இருக்கிறது. இந்த இயக்கம் முதல் இயக்கமாக வர வேண்டும். ராகுல் கரத்தை பலப்படுத்த வேண்டும். சோனியாவின் எண்ணங்களை நிறைவேற்ற வேண்டும். அதற்கான உறுதிமொழியை காமராஜர் பிறந்த நாளில் ஏற்போம்,'' என்றார்.


முன்னதாக விழாவிற்கு தலைமையேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பேசுகையில், ""காமராஜர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் பாலங்கள், அணைகள், பள்ளிகள் அதிகளவில் கட்டப்பட்டன. அது போன்று மீண்டும் ஒரு பொற்காலம் தமிழகத்தில் வர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் விரும்புகின்றனர். அந்த அளவிற்கு காமராஜர் ஆட்சி தனி யுகமாக இருந்தது. காங்கிரஸ் கட்சியை முன்னிலைப்படுத்துவதற்கு அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்,'' என்றார்.

Thursday, July 15, 2010

அமெரிக்கா போல இந்திய ரூபாய்க்கு இனி தனிச்சின்னம்


இந்திய ரூபாய்க்கான புதிய சின்னம், அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா உட்பட முன்னணி நாடுகளைப் போல இனி நமது கரன்சிக்கு என்று இதன் மூலம் பிரத்யேக அடையாளம் அமையும்; அடுத்த சில மாதங்களில் இது நடைமுறைக்கும் வரும் என, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.


பொருளாதாரத் துறையில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. மேலும், உலக பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறையில் இந்தியா குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. ஆனால், டாலருக்கு நிகராக மாற்று செலாவணியாக யூரோ போல அல்லது பவுண்ட் - ஸ்டெர்லிங் போல வரும் முன், ரூபாய்க்கு என்று தனியாக சின்னம் அவசியமாகிறது. மேலும் பாகிஸ்தான், இலங்கை மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளின் கரன்சியும், "ரூப்யா' என்றழைக்கப்படுகிறது. ஆகவே, டாலருக்கு, பவுண்டிற்கு, ஜப்பான் யென்னிற்கு தனிச்சின்னம் போல இந்திய ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, கடந்த பட்ஜெட்டில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், இந்திய கலாசாரத்தை பறை சாற்றும் வகையிலும், சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலும் புதிய சின்னம் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

போட்டி: இதையடுத்து, புதிய சின்னத்தை வடிவமைக்க மத்திய நிதி அமைச்சகம் போட்டி ஒன்றை அறிவித்தது. அதன்படி புதிய சின்னம், சர்வதேச அளவில் பயன்படுத்தப்படும் பொதுவான கீ-போர்டில் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். இந்திய தேசிய மொழிகளின் எழுத்துருவை பெற்றிருக்க வேண்டும்; பார்த்தவுடன் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைப்பு இருக்க வேண்டும் என நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டது. மேலும், போட்டியின் முடிவில் தேர்ந்தேடுக்கப்படும் சின்னத்தை வடிவமைத்தவருக்கு, இரண்டரை லட்ச ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என நிதி அமைச்சகம் தெரிவித்தது. இதையடுத்து, நாடு முழுவதும் இருந்து மத்திய நிதி அமைச்சகத்துக்கு 3,000 புதிய சின்னங்கள் வந்து குவிந்தன. அதிலிருந்து புதிய சின்னத்தை தேர்வு செய்ய மத்திய நிதி அமைச்சகம், ஐந்து பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைத்தது. இக்குழுவினர், புதிய சின்னங்களை பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து, இறுதியில் ஐந்து சின்னங்களை தேர்வு செய்தனர். பின், அந்த ஐந்து சின்னங்களில் ஒன்றை தேர்வு செய்து ஒப்புதல் அளிக்க மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்கு அனுப்பினர். புதிய சின்னத்தை தேர்வு செய்வதற்காக மத்திய அமைச்சரவை குழு நேற்று கூடி ஆலோசனை நடத்தியது.

கூட்டத்திற்கு பின் நிருபர்களிடம் பேசிய மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறியதாவது: உயர்மட்டக் குழு பரிந்துரைத்த ஐந்து சின்னங்களில், மும்பை ஐ.ஐ.டி., மாணவர் உதயகுமார் உருவாக்கிய சின்னத்தை இந்திய ரூபாய்க்கான புதிய சின்னமாக அறிவிக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அவருக்கு இரண்டரை லட்ச ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும். புதிய சின்னம் தேவநாகிரி, "ரா' மற்றும் ரோமன் "ஆர்' ஆகிய இரண்டு எழுத்துருவையும் கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களில் புதிய சின்னம் இடம் பெறும். அடுத்த ஆறு மாதங்களில், நாடு முழுவதும் புதிய சின்னம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். தவிர, அடுத்த 18 முதல் 24 மாதங்களில், சர்வதேச அளவில் இந்திய ரூபாய்க்கான புதிய சின்னத்தை நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கம்ப்யூட்டர் கீ-போர்டில் புதிய சின்னத்தை பயன்படுத்தும் வகையில் பிரத்யேக வசதி உருவாக்கப்படும். காகிதங்களில் பிரின்ட் அவுட் எடுக்க வசதியாக சாப்ட்வேர்களிலும் புதிய சின்னம் பதிவு செய்யப்படும். நாணய மதிப்பிற்கு தனிச்சின்னம் கொண்ட ஐந்தாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும். அமெரிக்காவின் டாலர், பிரிட்டனின் பவுண்ட் - ஸ்டெர்லிங், ஐரோப்பிய நாடுகளின் யூரோ, ஜப்பான் நாட்டின் யென் ஆகியவை ஏற்கனவே சர்வதேச அளவில் நடைமுறையில் உள்ளன. இவ்வாறு அம்பிகா சோனி கூறினார்.

கவுரவத்தைக் காட்டும் சின்னம்: கவுரவம் மிக்க சின்னத்தை டிசைன் செய்த உதயகுமார், கவுகாத்தி ஐ.ஐ.டி.,யில் டிசைன் பிரிவு துணைப் பேராசிரியராக இன்று முதல் பணியில் சேர்கிறார். தான் வடிவமைத்த டிசைன் தேர்வானது குறித்து பெருமிதம் கொண்டார். அவர் அளித்த பேட்டி: கிட்டத்தட்ட பலரும் இதே போல டிசைன் அனுப்பியிருந்தனர். ஆனால், ரோமானிய எழுத்தான "ஆர்' என்பதின் மேல்பகுதியில் படுக்கைக் கோடு போல அமைக்கப்பட்டிருப்பது, இந்திய நாட்டின் தேசியக் கொடி பறந்து கவுரவம் தருவது போன்ற தோற்றம், நாட்டின் பெருமையை உயர்த்தும் என்ற நோக்கில் வடிவமைத்திருக்கிறேன். அதோடு, தேவநாகரி எழுத்தும் இதில் இருப்பது சிறப்பு. இரு படுக்கைக் கோடுகள் கொண்ட அமைப்பு தேசியக் கொடியை நினைவுபடுத்தும்.இவ்வாறு உதயகுமார் கூறினார். தேசிய சின்னம் தயாரித்ததுடன், துணைப் பேராசிரியர் பதவியும் ஒரே நாளில் கிடைத்திருப்பது, அவருக்கு இரட்டை சந்தோஷம் தரும் விஷயம்.

Wednesday, July 14, 2010

நக்சல் பாதித்த பகுதிகளில் ஹெலிகாப்டர் சேவை : முதல்வர் மாநாட்டில் முடிவு

நக்சல் பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்கள் ஆகியவற்றை விரைவாக எடுத்துச் செல்வதற்கு, ஹெலிகாப்டர்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் உள்ள 400 காவல் நிலையங்களை, 800 கோடி ரூபாய் செலவில் முழுமையாக நவீனமாக்கவும் மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

நக்சலைட்களால் பாதிப்பு ஏற்பட்டுள்ள மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களின் ஆலோசனைக் கூட்டம், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நேற்று டில்லியில் நடைபெற்றது.பிரதமரின் ரேஸ் கோர்ஸ் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நக்சலைட்களின் ஆதிக்கம் உள்ள மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் பங்கேற்றனர். மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், பீகார், சத்திஸ்கர், ஆந்திரா, ஒரிசா மாநிலங்களின் முதல்வர்களும், ஜார்க்கண்ட் கவர்னரும், மேற்கு வங்கத்திலிருந்து அம்மாநில சுகாதார அமைச்சரும், மத்திய, மாநில அரசுகளின் உயர் அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.நக்சலைட்களின் நடவடிக்கைகளால் பாதிப்பு உள்ளாகிக் கொண்டிருக்கும் பகுதிகளில் உள்ள முகாம்களில், துணை ராணுவப் படையினர் மற்றும் சி.ஆர்.பி.எப்., போலீசார் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் தங்கியுள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகள் ஆகியவற்றை எடுத்துச் செல்வதில் தற்போது சிரமம் நிலவுகிறது.

இதை தவிர்க்கும் வகையில், உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகள் ஆகியவற்றை பாதிப்புகள் உள்ள பகுதிகளுக்கு விரைவாக கொண்டு செல்வதற்காக, ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவது என இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது .மேலும், இந்த பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் போதுமான வசதிகள் இல்லாத நிலையும் காணப்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், 800 கோடி ரூபாய் செலவில் காவல் நிலையங்களில் நவீன வசதிகள் செய்து தரப்படும். இதற்கென 400 காவல் நிலையங்கள் கண்டறியப்பட்டு தேர்வு செய்யப்படும். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வசதிகள் ஏற்படுத்த தலா 2 கோடி ரூபாய் வரை செலவிடப்படும். இந்த பணிகள் இரண்டு ஆண்டுகளில் முடிவு பெறும்.

இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசும் போது கூறியதாவது: நக்சலைட்களின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, "ஒருங்கிணைக்கப்பட்ட தலைமைக் கட்டமைப்பு' ஏற்படுத்த மாநில அரசுகள் முன்வர வேண்டும். இந்த அமைப்புக்கு ஓய்வு பெற்ற ராணுவ தலைமை ஜெனரலை தலைவராக நியமிக்கலாம். நக்சலைட்கள் பாதிப்பு உள்ள நான்கு மாநிலங்களுக்கும் என தனி போலீஸ் ஐ.ஜி., பதவி உருவாக்குவதோடு, நக்சல் ஒடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய ரிசர்வ் போலீசாருக்கு என தனி தலைமை ஏற்படுத்தவும் மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்.

சத்திஸ்கர், ஜார்க்கண்ட், ஒரிசா மற்றும் மே.வங்கம் ஆகிய நான்கு மாநிலங்கள் இதில் ஒருங்கிணைக்கப்படும்.ஆயிரத்து 330 கோடி ரூபாய் செலவில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் மக்களுக்குத் தேவையான குடிநீர், சாலை வசதி, மருத்துவ வசதி உள்ளிட்டவை இந்த நிதியின் மூலம் செய்து தரப்படும். இதுதவிர, மத்திய அரசின் மூலம் 950 கோடி ரூபாய் செலவில் நக்சலைட்கள் பாதிப்பு உள்ள மாநிலங்களில் சாலை போக்குவரத்து மேம்படுத்தப்படும். பழங்குடியின மக்களின் அடிப்படை பிரச்னைகளையும், அவர்களின் தேவைகளையும் பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களும் கிராம சபாக்கள் மூலம் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு சிதம்பரம் கூறினார். தவிரவும் அமைச்சர் சிதம்பரம், "ஆண்டுதோறும் சராசரியாக அப்பாவி மக்கள் 500 பேர் மாவோயிஸ்டுகளால் கொல்லப்படுகின்றனர் என்றும், அவர்களை "போலீஸ் இன்பார்மர்' என்று கூறி நியாயப்படுத்தும் வகையில் செயல்படுகின்றனர்' என்றார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர்களுக்குள் கருத்து வேறுபாடுகளும் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், "வறுமை ஒழிப்பு மிகவும் முக்கியமானதாகும். வர்க்க பேதம் தான் அடிப்படை பிரச்னை. இதை மறைத்துவிட்டு வெறுமனே சட்டம் ஒழுங்கு பிரச்னை போல கருதி, போலீஸ் நடவடிக்கையை மேற்கொள்வது மட்டுமே சரியான தீர்வை தராது' என்றார். ஆனால், நிதிஷின் கருத்துக்கு முற்றிலும் மாறுபட்டு சத்திஸ்கர் முதல்வர் ராமன் சிங்கின் பேச்சு அமைந்திருந்தது. அவர் பேசும் போது, "தீவிரவாதத்துக்கும் நக்சலைட்களுக்கும் பெரிய வித்தியாசம் எல்லாம் கிடையாது.  தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு எப்படியெல்லாம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமோ அவற்றை நக்சலைட்கள் ஒழிப்பிற்கும் பயன்படுத்த வேண்டும். தீவிரவாதத்தை எப்படி அரசாங்கம் கையாள்கிறதோ, என்ன மாதிரியான அணுகுமுறை மேற்கொள்கிறதோ அதை அப்படியே நக்சலைட் பிரச்னைக்கும் மேற்கொண்டால் தான் சரியாக இருக்கும்.நக்சலைட்களுடன் சமாதான பேச்சு வார்த்தை பேசக்கூடாது. நக்சலைட்கள் ஆயுதங்களை கீழே போடவே மாட்டார்கள். அவர்கள் இருக்கும் வரை, அரசின் வளர்ச்சித் திட்டங்களை அடித்தட்டு மக்களிடம் கொண்டு போய் சேர்க்க விடமாட்டார்கள்' என்றார்.

சட்ட விரோத குவாரி விவகாரம் வெடிக்கிறது : சட்டசபையில் அமளி

சட்ட விரோத குவாரி தொழில் மோசடியை சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க வலியுறுத்தி, கர்நாடகா சட்டசபை மற்றும் மேலவையில் காங்கிரஸ், ம.ஜ.த., எம்.எல்.ஏ.,க்கள் மூன்றாவது நாளாக நேற்றும் தர்ணாவில் ஈடுபட்டனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர சபாநாயகர் போப்பய்யா முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. கடும் கூச்சல், குழப்பம் நிலவியதால், சபை நடவடிக்கைகளை ஒத்தி வைத்தார்.

கர்நாடகாவில் சட்ட விரோதமாக குவாரி தொழில் நடந்து வருவதாகவும், இதன் மூலம் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன. இது குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன. இந்தப் பிரச்னையால், கர்நாடகா சட்டசபையில் கடந்த மூன்று நாட்களாக எந்த பணியும் நடக்கவில்லை.கடந்த திங்கட்கிழமை, செவ்வாய் கிழமை இரவில் காங்கிரஸ் உறுப்பினர்கள், சட்டசபை மற்றும் மேலவையில் படுத்து உறங்கினர்; இரவு நேர உணவையும் அங்கேயே முடித்தனர்.அதே நேரத்தில், "சட்ட விரோத குவாரி தொழிலில் ஈடுபடும் மாநில அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என, ஜனாதிபதி பிரதிபாவை கர்நாடக கவர்னர் பரத்வாஜ் சந்தித்து வலியுறுத்தியதும், இந்த விவகாரத்தில் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போலாகிவிட்டது.

இந்நிலையில், கர்நாடகா சட்டசபை கூட்டத்தொடர் நேற்று துவங்கும் முன்னர் சபாநாயகர் போப்பய்யா, அனைத்து கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டினார். இக்கூட்டத்தில் பங்கேற்ற சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா உட்பட சிலர், "சட்ட விரோத குவாரி தொழில் மோசடி குறித்து சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட வேண்டும்' என, சபாநாயகரே அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கோரினர்.முன்னாள் முதல்வர் குண்டு ராவின் ஆட்சிக் காலத்தில் விவசாயிகள் மீது நடந்த துப்பாக்கிச் சூடு, ராமகிருஷ்ண ஹெக்டே ஆட்சிக் காலத்தில் பாட்டிலிங் ஊழல், பங்காரப்பா ஆட்சிக் காலத்தில் கிளாசிக் கம்ப்யூட்டர் ஊழல், வீரப்ப மொய்லி ஆட்சிக் காலத்தில் ஜெ.எம்.எம்., ஊழல், எஸ்.எம்.கிருஷ்ணா ஆட்சிக் காலத்தில் போலி முத்திரைத்தாள் ஊழல் ஆகியவற்றை விசாரணைக்கு ஒப்படைத்தது போல, சட்ட விரோத குவாரி தொழில் மோசடி விவகாரத்தையும் விசாரிக்குமாறு முதல்வர் எடியூரப்பாவை வற்புறுத்த வேண்டும் என்றும் சபாநாயகர் போப்பய்யாவை கேட்டுக் கொண்டனர்.

முதல்வர் வேண்டுகோள்: இதன் பின், சட்டசபை துவங்கியவுடன் எதிர்க்கட்சிகள் தர்ணா போராட்டத்தை துவக்கினர். முதல்வர் எடியூரப்பா பேசுகையில், ""எந்த விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்த தயாராக உள்ளேன். எம்.எல்.ஏ.,க்களின் செயல்பாடுகள் குறித்து சபையில் விவாதிப்போம்; அப்போது தான் உண்மை என்ன என்பது தெரியவரும். லோக் ஆயுக்தா தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த சந்தோஷ் ஹெக்டேவின் ராஜினாமாவை வாபஸ் பெற வைக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத குவாரி தொழில் மோசடி குறித்து விசாரணை நடத்த, லோக் ஆயுக்தாவிற்கு அதிக அதிகாரம் அளிக்கப்படும். இது குறித்து சி.பி.ஐ., விசாரித்தால் தோல்வியாகும். பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கலாம் வாருங்கள்; இந்த தர்ணாவை கைவிடுங்கள்,'' என்றார்.

முதல்வர் எடியூரப்பா கேட்டுக் கொண்ட பின்னரும், எதிர்க்கட்சிகள் செவி சாய்க்கவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய காங்கிரஸ் வசூலித்த நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பது குறித்து விசாரணை நடத்த,சபாநாயகர் முன் நிற்க வேண்டுமென முதல்வர் எடியூரப்பா வலியுறுத்தினார். முதல்வர் எடியூரப்பாவின் இந்த பேச்சு, காங்கிரஸ் உறுப்பினர்களை ஆத்திரமடையவைத்தது. காங்கிரஸ் உறுப்பினர்கள், முதல்வருக்கு எதிராக பேசத் துவங்கினர்.

இந்நிலையில், முதல்வர் எடியூரப்பாவுக்கும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையாவுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. ஒரு புறம் காங்கிரஸ், ம.ஜ.த., உறுப்பினர்கள், மற்றொரு புறம் பாரதிய ஜனதா உறுப்பினர்கள் என அனைவரும் உரத்த குரலில் வாக்குவாதத்தில் இறங்கியதால், சபையில் குழப்ப சூழ்நிலை உருவானது.சபை ஒழுங்காக நடக்கும் வகையில் இரு தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்கும்படி சபாநாயகர் மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்தார். எந்த உறுப்பினரும் ஒத்துழைக்கவில்லை. இதையடுத்து, "மாநில மக்கள் உங்களை மன்னிக்கப் போவதில்லை' என்று கூறி, சட்டசபையை நாளைக்கு (இன்று) தள்ளி வைத்தார்.இதே போன்று கர்நாடகா மேலவையிலும் எந்த பணிகளும் நடக்கவில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவைத் தலைவர் சங்கரமூர்த்தி, சபையை நாள் முழுவதற்கும் ஒத்தி வைத்தார்.

நம்பிக்கை தரும் பேச்சு இருக்குமா? இஸ்லாமாபாத்தில் கிருஷ்ணா

மும்பை தாக்குதலுக்குப் பின், முதன்முறையாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, நேற்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்குச் சென்றார். மூன்று நாள் அரசு முறைப் பயணத்தில் அவர், பாகிஸ்தான் அதிபர் மற்றும் பிரதமரையும் சந்திக்க உள்ளார்.மும்பை தாக்குதலுக்குப் பின், இந்திய அமைச்சர்கள் பாகிஸ்தான் செல்வதைத் தவிர்த்தனர். இரு தரப்பு பேச்சு வார்த்தைகளும் தடைபட்டன.

இந்நிலையில், பூடான் தலைநகர் திம்புவில் நடந்த, "சார்க்' மாநாட்டில் சந்தித்த இரு நாட்டின் பிரதமர்களும், இருதரப்பிலும் நம்பகத்தன்மை வலுப்படவும், உறவுகளில் நம்பிக்கை மேம்படவுமான பேச்சு வார்த்தை துவங்கப்பட வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டினர்.இதையடுத்து, நேற்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்குச் சென்றார். மூன்று நாள் அரசு முறைப் பயணத்தில் அவர், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷியுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார். மேலும் பாக்., அதிபர் சர்தாரி, பிரதமர் ரசா கிலானி ஆகியோரை சந்திக்கிறார்.

இதுகுறித்து அமைச்சர் கிருஷ்ணா கூறுகையில், "இரு தரப்பிலான அமைதி, நட்புணர்வு மேம்படும் முயற்சியில் இது ஒரு புதிய பயணமாக அமையும். இந்திய மக்களின் சார்பில் நான், அமைதி மற்றும் நட்புணர்வு செய்திகளைத் தாங்கி இங்கு வந்திருக்கிறேன்.இரு தரப்பின் நன்மை குறித்த அனைத்து பிரச்னைகள் குறித்தும் பேசுவோம். கடந்த மாதம் பாகிஸ்தான் வந்து சென்ற உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்த கருத்தான, மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் குறித்த நமது கவலையை மீண்டும் வலியுறுத்துவோம்.இவ்வாறு அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்தார்.இரு தரப்பிலான உறவுகள் மேம்படுவதற்கு மக்கள் தொடர்பு, சிறைக் கைதிகள் பரிமாற்றம் மற்றும் வர்த்தக உறவுகள் ஆகியவை மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

35 லட்சம் ஏழைகளுக்கு இலவச “கியாஸ்” இணைப்பு மத்திய அரசு புதிய திட்டம்

வீடுகளுக்கு சமையல் கியாஸ் இணைப்பு வழங்க ரூ.1250 டெபாசிட் கட்டணம் ரூ.150 ரெகுலேட்டர் கட்டணம் ஆகியவை செலுத்த வேண்டும்.
 
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளுக்கு இந்த தொகையை மானியமாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி ஏழைகள் டெபாசிட் பணம் ஏதும் கட்டாமலேயே இலவச இணைப்பு பெறலாம்.
 
முதற்கட்டமாக 35 லட்சம் ஏழைகளுக்கு மானிய விலையில் கியாஸ் இணைப்பு வழங்கப்படுகிறது. இதனால் மத்திய அரசுக்கு ரூ.490 கோடி செலவாகும்.
 
இது தொடர்பாக மத்திய மந்திரி ஜிதின் பிரசாதா கூறியதாவது:-
 
ராஜீவ் காந்தி கிராம கியாஸ் வழங்கும் திட்டத்தின் கீழ் மானிய விலையில் கியாஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். முதல் கட்டமாக 35 லட்சம் இணைப்பு வழங்கப்படும். பின்னர் இதை விரிவுபடுத்த திட்டமிட்டு உள்ளோம்.
 
தற்போது நகரம் மற்றும் சிறு நகர பகுதிகளிலேயே கியாஸ் இணைப்புகள் கிடைக்கின்றன. கிராம பகுதிகளிலும் இணைப்பு கிடைக்க திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.

விலைவாசியை கட்டுப்படுத்தும் கடமை : சிதம்பரம் ஒப்புதல்


விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. கட்டுப்படுத்த முடிந்த பொருட்களின் விலை உயர்வை நிச்சயம் கட்டுப்படுத்துவோம்,'' என மத்திய அமைச்சர் சிதம்பரம் பேசினார்.


மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருப்பூரில் நேற்று நடந்தது. காங்., மாநில தலைவர் தங்கபாலு தலைமை வகித்தார்.

கடந்த 2004ல் நடந்த லோக்சபா தேர்தல் முக்கியமான ஒன்று. அதற்கு முந்தைய எட்டு ஆண்டுகள் காங்., ஆட்சிப் பொறுப்பில் இல்லை. அந்த எட்டு ஆண்டுகளில் பொறுப்பேற்ற அரசுகளின் நிலையான சாதனை ஒன்றைக்கூட சொல்ல முடியாது. குறிப்பாக, ஆறு ஆண்டுகள் ஆண்ட பா.ஜ.,வின் சாதனை என்ன? பொருளாதார வீழ்ச்சிதான் ஏற்பட்டது. ஐந்தாண்டுகளின் சராசரி பொருளாதார வளர்ச்சி 5.5 விகிதம். நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டது. வெளிநாடுகளிலும், உலக வங்கியிலும் கடன் வாங்கினோம். வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களிடமும் கடன் வாங்கினோம். 2004 தேர்தலில் ஏற்பட்ட திருப்பு முனைக்கு தமிழகம் முக்கிய காரணம். 40க்கு 40 சீட்களை தந்து உதவியது. காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியேற்றதும் எண்ணற்ற சாதனைகள் செய்துள்ளோம்.

நான்கு கோடி விவசாயிகளுக்கு 67 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதை குறை சொல்லும் பா.ஜ., ஆட்சியில் இரும்பு ஆலை, மோட்டார் வாகன உற்பத்தி, சர்க்கரை ஆலை போன்ற பெருமுதலாளிகளின் கடன்களைத்தான் தள்ளுபடி செய்தனர். கல்விக்கடன் திட்டத்தை காங்., உறுதிப்படுத்தியது. கடந்த மார்ச் இறுதி வரை 19 லட்சத்து 41 ஆயிரத்து 885 மாணவர்களுக்கு 35 ஆயிரத்து 946 கோடி ரூபாய் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் ஐந்து லட்சத்து 63 ஆயிரத்து 429 மாணவர்களுக்கு 7,189 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. மதிய உணவுத்திட்டத்தில் நாடு முழுவதும் தினமும் 13 கோடி குழந்தைகள் பயன்பெறுகின்றனர். காங்., பிரதமர்கள் தன்னலமற்று செயல்பட்டு வந்துள்ளனர்.

பயிர்க் காப்பீட்டு திட்டம், தனிமனித ஓய்வூதிய திட்டம், முதியோர் ஓய்வூதிய திட்டம், வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் என எண்ணற்ற மக்கள் நலன் பயக்கும் திட்டங்களைத் தந்துள்ளோம். 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் வேலை உறுதித் திட்டம் மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆரம்பக் கல்வி எல்லாருக்கும் உறுதியாக செயல்படுத்தி உள்ளோம். கல்விக்கு உறுதி, வேலைக்கு உறுதி போலவே உணவுக்கு உறுதித் திட்டமும் விரைவில் அமல்படுத்தப்படும். வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்கு மாதம் 25 கிலோ அரிசி அல்லது கோதுமை மூன்று ரூபாய்க்கு வழங்கப்படும்.

இம்மூன்றும் வெறும் திட்டமல்ல; சட்டமாகவே கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே, நிரந்தரமாக இருக்கும். 2004-09ம் ஆண்டுகளில் சராசரி பொருளாதார வளர்ச்சி ஒன்பது சதவீதம். உலக பொருளாதார மந்த நிலை ஏற்பட்ட கடைசி ஆண்டிலும் 6.7 சதவீத வளர்ச்சியை எட்டினோம். 2009-10ம் ஆண்டில் அமெரிக்கா இரண்டு சதவீதம், இங்கிலாந்து ஒரு சதவீதம், கிழக்கு ஆசிய நாடுகள் மூன்று சதவீதம் வளர்ச்சியை மட்டுமே எட்டியுள்ளன. ஆனால், இந்தியா 7.4 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. நடப்பாண்டில் 8.5 சதவீத வளர்ச்சியை நாம் எதிர்பார்க்கிறோம். சர்வதேச பொருளாதார மையம் இந்தியா 9.4 சதவீத வளர்ச்சியை எட்டும் என கணித்துள்ளது. தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சியால் பணப்புழக்கம் அதிகரித்து வருகிறது. ஏற்றுமதி, இறக்குமதி, உற்பத்தி அதிகரித்து சம்பளமும் உயர்கிறது. வரும் 15 ஆண்டுகளுக்கு சராசரி வளர்ச்சி ஒன்பது சதவீதத்தை எட்டி விட்டால், வறுமை ஒழிந்து விடும்.

பொருளாதார வளர்ச்சியைப் போலவே, சில சங்கடங்களும் இருக்கத்தான் செய்யும். விலைவாசி உயர்ந்துள்ளதாக கூறுகின்றனர்; ஏற்றுக்கொள்கிறோம். நாம் உலகின் மிகச்சிறந்த பொருளாதார மேதையை பிரதமராகப் பெற்றுள்ளோம். ஜி-20 மாநாட்டில், "மன்மோகன் சிங் பேசினால் உலகம் உற்றுக் கேட்கும்' என்ற ஒபாமாவின் வார்த்தைகளை யாரும் மறுத்துவிட முடியாது. எல்லா நாடுகளிலும் விலைவாசி உயர்ந்துள்ளது. விவசாயத்தை புறக்கணிக்க முடியுமா. நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. கோதுமை, கரும்பு, பருப்பு, பால் என அனைத்து வேளாண் பொருட்களின் கொள்முதல் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், விலைவாசியும் உயரத்தான் செய்யும். கொள்முதல் விலையை உயர்த்தக் கூடாது என்று கூற முடியுமா.

கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தித் தான் ஆக வேண்டும். பேரல் 25 டாலருக்கு விற்றாலும், 140 டாலருக்கு விற்றாலும் விலையை ஒரே மாதிரியாக வைத்திருக்க முடியாது. சிலவற்றின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியாது. கட்டுப்படுத்த முடியாதவற்றை ஈடுகட்டும் விதத்தில், பஞ்சப்படி, சம்பளம், அடிப்படைக்கூலி போன்றவற்றை உயர்த்துவோம். அப்பொருட்களின் மீதான மானியத்தை உயர்த்தி, மக்களின் மீதான சுமையைக் குறைப்போம். மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்திருக்கிறது என்பதும் உண்மை. விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டிய கடமை எங்களுக்கும் இருக்கிறது. கட்டுப்படுத்த முடிந்த பொருட்களின் விலை உயர்வை நிச்சயம் கட்டுப்படுத்துவோம். இவ்வாறு சிதம்பரம் பேசினார். முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன், அகில இந்திய காங்., உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் உட்பட பலர் பங்கேற்றனர்.

இனி மாதாமாதம் 2, 17ம் தேதிகளில் பெட்ரோல் விலை மாறும்

பெட்ரோல் விலை இனி 15 நாள்களுக்கு ஒரு முறை நிர்ணயிக்கப்படவுள்ளன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்ப இந்த விலைகள் முடிவு செய்யப்படும்.

மத்திய அரசி்ன் எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (பிபிசிஎல்), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (ஹெச்பிசிஎல்) ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து இந்த விலையை நிர்ணயம் செய்யவுள்ளன.

பெட்ரோல் மீதான விலைக்கட்டுப்பாட்டை மத்திய அரசு கடந்த மாதம் நீக்கியது. இதையடு்த்து அதன் விலை லிட்டருக்கு ரூ. 3.50 உயர்ந்தது.

விலைக் கட்டுப்பாடு நீக்கப்பட்டதால் சர்வதேச சந்தை நிலவரத்துக்கேற்ப பெட்ரோல் விலையை மாற்ற வேண்டும். சர்வதேச கச்சா எண்ணெய் விலை தினந்தோறும் மாறும் என்பதாலும், இதனால் விலையை தினமும் மாற்றி அமலாக்குவது சிரமம் என்பதாலும், 15 நாள்களுக்கு ஒரு முறை புதிய நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி மாதந்தோறும் 2ம் தேதிகளிலும் 17ம் தேதிகளிலும் விலை மாற்றி அமைக்கப்படும்.

இந்த மாதம் 2ம் தேதி போய்விட்டதால் ஒருமுறை மட்டுமே விலை மாற்றம் மேற்கொள்ளப்படும். அடுத்த மாதம் முதல் மாதம் முதல் இருமுறை விலை மாற்றம் செய்யப்படும்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மாற்றியமைக்கும் விலையைப் பொறுத்து தனியார் எண்ணய் நிறுவனங்களான ரிலையன்ஸ், எஸ்ஸார், ஷெல் உள்ளிட்ட நிறுவனங்களும் விலை நிர்ணயம் செய்யும் என்று தெரிகிறது.

ரிலையன்ஸ் பெட்ரோல் வழக்கமாகவே அதிக விலைக்கு விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்ர் பாஜக தலைமையிலான மத்திய அரசு 2002ம் ஆண்டில் பெட்ரோல், டீசல் மீதான விலைக் கட்டுப்பாட்டை நீக்கியது. அந்த நடைமுறை 21 மாதங்கள் அமலில் இருந்தது.

பின்னர் மக்களவைக்கு தேர்தல் வந்ததால் விலைக் கட்டுப்பாடு நீக்கப்பட்டு, மத்திய அரசு நிர்ணயிக்கும் விலைக்கே பெட்ரோல், டீசலை விற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு, விலைகளும கட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.

ஆனால், 21 மாதங்கள் மக்களை பிழிந்து எடுத்த எண்ணெய் நிறுவனங்கள். அப்போது பாஜக மீது கடும் அதிருப்தி ஏற்பட்டு ஆட்சி பறிபோகவும் இந்த விலை உயர்வுகள் ஒரு காரணமாக இருந்தன.

இந் நிலையில் இப்போது காங்கிரஸ் கூட்டணியும் விலைக் கட்டுப்பாட்டை நீக்கி மக்களை எரிச்சலில் ஆழ்த்தியுள்ளது. 2002ம் ஆண்டு இதே வேலையைச் செய்த பாஜக, இப்போது மட்டும் தேசிய அளவில் விலைக்கட்டுப்பாடு நீக்கத்தை எதிர்த்து பந்த் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

டீசலைப் பொறுத்தவரை அதன் விலைக் கட்டுப்பாடு நீக்கப்படவில்லை. இதனால் மத்திய அரசு உயர்த்தாத வரை அதன விலை உயராது. சர்வதேச விலையைவிட இந்தியாவில் டீசல் லிட்டருக்கு ரூ. 1.80 குறைவாக விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tuesday, July 13, 2010

உலகில் 10 விளையாட்டு வீரர்களில் அதிகமாக வருமானம் பெரும் தோனி

கிரிக்கெட்டில் மட்டுமல்ல, விளம்பர உலகிலும் கொடி கட்டிப் பறக்கிறார் கேப்டன் தோனி. சுமார் 210 கோடி ரூபாய்க் கான விளம்பர ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் சச்சினை(ரூ. 180 கோடி) முந்தி, சாதனை படைத்துள்ளார்.


இந்திய அணியின் வெற்றி கேப்டன் தோனி. கடந்த 2007ல் "டுவென்டி-20' உலக கோப்பை கைப்பற்றி வரலாறு படைத்தார். டெஸ்ட் அரங்கில் இந்திய அணிக்கு "நம்பர்-1' இடம் பெற்று தந்தார். பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்(ஒரு நாள் போட்டி) பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். கேப்டன், பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர் என மூன்று பணிகளிலும் பட்டையை கிளப்பும் இவருக்கு, ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. இவரை ஒப்பந்தம் செய்ய ஐ.எம்.ஜி., பெர்சப்ட் உள்ளிட்ட 9 விளம்பர நிறுவனங்கள் போட்டியிட்டன. "கேம்பிளான்' என்ற நிறுவனம் 10.5 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சமீபத்தில் தோனி வழக்கு தொடுத்தார். எனவே, இம்முறை மிகவும் கவனமாக இருந்தார்.

இறுதியில் ரிதி ஸ்போர்ட்ஸ் மானேஜ்மென்ட் மற்றும் மைண்ட்ஸ்கேப் நிறுவனங்கள் சேர்ந்து தோனியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டன. மூன்று ஆண்டுகளுக்கு சுமார் 210 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தில் தோனி கையெöழுத்திட்டு உள்ளார். இதையடுத்து விளம்பரம் மூலம் அதிகம் சம்பாதித்து வந்த இந்திய வீரர்  சச்சினை முந்தினார். கடந்த 2006ல் இவரை, மூன்று ஆண்டுகளுக்கு "ஐகானிக்ஸ்' நிறுவனம் 180 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது. சமீபத்தில் சாக்ஷியை கைப்பிடித்த தோனிக்கு, 210 கோடி ரூபாய் ஒப்பந்தம் மிகப் பெரிய திருமண பரிசாக அமைந்து உள்ளது.

 இது குறித்து ரிதி ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் பொது மானேஜர் சஞ்சய் பாண்டே கூறுகையில்,""தோனியுடன் 3 ஆண்டுகளுக்கு 210 கோடி ரூபாய்க்கு விளம்பர ஒப்பந்தம் செய்து கொண்டது உண்மை தான். கடந்த வாரம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட் டோம். இனி தோனியின் விளம்பரங்கள் அனைத்தையும் நாங்கள் கையாள்வோம்,'' என்றார். நாட்டில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரரான தோனி, தற்போது பெப்சி, ரீபோக், கோத்ரெஜ் உள்ளிட்ட 22 நிறுவனங்களின் பொருட்களுக்கு "மாடலாக' உள்ளார். ஒரு பொருளுக்கு, ஆண்டு ஒன்றுக்கு 6 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார். சச்சின் 15 பொருட்களுக்கு விளம்பரம் செய்கிறார். இவர், 5 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார்.


 தற்போது விளம்பர நிறுவனங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. சம்பந்தப்பட்ட வீரர் "மாடலாக தோன்றும் ஒவ்வொரு பொருட்களுக்கான சம்பளத்தில் இருந்து 30 சதவீதம் வரை "கமிஷனாக' பெறுகின்றன. வரும் 2011ல் இந்தியாவில் உலக கோப்பை போட்டி நடக்க இருப்பதால், கிரிக்கெட் வீரர்களுக்கு மவுசு அதிகரிக்கும். எனவே, தோனியின் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இது குறித்து ரிதி ஸ்போர்ட்ஸ்-மைண்ட்ஸ்கேப் நிறுவனங்களின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் சங்கீத் ஷிரோத்கர் கூறுகையில்,""ஆண்டுக்கு குறைந்தபட்சம் 70 கோடி ரூபாய் என்ற கணக்கில் தான் 210 கோடி ரூபாய்க்கு தோனியுடன் ஒப்பந்தம் செய்துள் ளோம். அதிகமான பொருட்களுக்கு இவர், விளம்பரம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். இதன் மூலம் எங்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தற்போது உலகில் அதிகம் சம்பாதிக்கும் கோல்ப் வீரர் டைகர் உட்சுக்கு நிகரான அந்தஸ்தை தோனி பெற்று உள்ளார்,'' என்றார்.

பிரம்மாண்ட கூட்டத்தில் ஜெயலலிதா ஆவேசம்

தி.மு.க., அரசின் திட்டங்கள், சாதனைகள் அனைத்துமே மாயத்தோற்றங்கள். பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு, ஆன்-லைன் வர்த்தகம் மற்றும் பதுக்கல் முறைகேடுகளால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது,'' என அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, கோவையில் நேற்று நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் குற்றம்சாட்டினார். கோவை நகரமே குலுங்கும் அளவுக்கு நடந்த பிரமாண்ட கூட்டத்தில் தி.மு.க.,வையும், மாநில அரசையும் ஆவேசமாக தாக்கிப் பேசினார். காங்கிரசையோ, மத்திய அரசையோ அவர் விமர்சிக்கவில்லை.

தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் மின்வெட்டை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் பொதுக்கூட்டம், கோவை வ.உ.சி., மைதானத்தில் நேற்று பகலில்  நடந்தது.

ஒரு லட்சம் பேர் கலந்து கொண்ட இந்த பிரமாண்ட கூட்டத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா பேசியதாவது:நான்கு ஆண்டுகால தி.மு.க., ஆட்சியில் தமிழகம், தமிழ்மொழி, தமிழர்கள் வளர்ச்சியடையவில்லை. ஆனால், "தமிழ்' என்ற பெயரைச்சொல்லி ஒரு குடும்பம் மட்டும் அபரிமிதமான வளர்ச்சி அடைந்திருக்கிறது. பேச்சுரிமை, எழுத்துரிமை உள்ளிட்ட தமிழர்களின் அனைத்து உரிமைகளும் பறிபோய்கொண்டிருக்கின்றன. கருணாநிதியின் தமிழின விரோத செயல்களை பட்டியலிடுபவர்கள், தாக்கப்படுகிறார்கள். தமிழை வழக்காடு மொழியாக்கு, என்று கூறுவோர் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். தி.மு.க., அரசு பதவியேற்று நான்கு ஆண்டுகளாகிவிட்டன; ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இது தேர்தல் ஆண்டு. எப்போது வேண்டுமானாலும் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படலாம்.பதினெட்டு வயது நிரம்பிய ஒவ்வொருவரும் தங்களுக்கு ஓட்டுரிமை இருக்கிறதா, என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். பின், ஓட்டளிப்பதை உறுதி செய்ய வேண்டும். தி.மு.க., அரசின் தோல்விகள் ஏராளம்.

அரசின் சாதனைகள் அனைத்தும் மாயத்தோற்றங்கள். மனிதன் உணவின்றி வாழமுடியாது. சாப்பிட அரிசி மட்டும் இருந்தால் போதாது. பருப்பு, உப்பு, மிளகாய், மசாலா, காய்கறிகளும் தேவை. இவற்றை சமைக்க மண்ணெண்ணெய் அல்லது எரிவாயு தேவை. இவற்றின் விலை நான்கு ஆண்டுகளில் இரண்டு முதல் மூன்று மடங்கு வரை உயர்ந்துவிட்டது. உணவுப்பொருட்களுக்கான பணவீக்கம் 17 விழுக்காடு உயர்ந்துள்ளதாக, அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  நான்கு ஆண்டுகளுக்கு முன் 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட பொருட்கள், தற்போது 240 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. இந்த அளவுக்கு விலைவாசி ஏன் உயர்ந்தது? இதற்கு பல காரணங்கள் உள்ளன.விவசாய உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. பாசனத்துக்கு தண்ணீர் இல்லை. அண்டை மாநிலங்களில் இருந்து நமக்கு வரவேண்டிய தண்ணீர் வரவில்லை. சில இடங்களில் நிலத்தடி நீர் கிடைக்கிறது. நிலத்தடி நீரை பம்பு மூலம் இறைக்க மின்சாரம் இல்லை. விவசாயப்பணிகள் முறையாக நடைபெறாததால், விவசாய தொழிலாளர்கள் வேறு வேலை தேடி நகருக்கு செல்கிறார்கள்.

இதன் விளைவாக விவசாய பணிகளும், உற்பத்தியும் குறைந்துவிட்டன. தி.மு.க., ஆட்சியில் சட்டம்  ஒழுங்கு அடியோடு கெட்டுவிட்டது. கொலை, கொள்ளைகள் தினசரி நிகழ்வுகளாகிவிட்டன. ஒரு காலத்தில் இந்தியாவின் பெருமைமிகு மாநிலமாக விளங்கிய தமிழகம், இப்போது தரம் தாழ்ந்துவிட்டது. தமிழகத்தை பார்த்து இந்தியாவே வெட்கித் தலைகுனிகிறது. இந்நிலை மாறவும், தமிழகத்தையும், தமிழ் மக்களையும் காக்கவும், வரும் தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவளியுங்கள்; கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா ஆவேசமாக பேசினார்.

பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., வரவேற்புரை நிகழ்த்திய பின், பேசத்துவங்கிய ஜெயலலிதா, ஒரு மணி நேரம் வரை வேகம் குறையாமல் தமிழக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.தனது உரையில், காங்கிரசை விமர்சிக்கவே இல்லை. மத்திய அரசை விமர்சிப்பதையும் தவிர்த்தார்.பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்துவதை போன்று மிகவும் பொறுமையாக, தி.மு.க., அரசின் ஒவ்வொரு திட்டத்தையும் எடுத்துக்கூறி, அத்திட்டங்களால் எவ்வித பயனுமில்லை என முழங்கினார்.  பேச்சுக்கு இடையே அவ்வப்போது தொண்டர்களை பார்த்து கேள்விகளை எழுப்பி, பதில் பெற்றார்.சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்த ஜெயலலிதா, கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு அதே விமானத்தில் உடனடியாக சென்னை திரும்பினார்.

வெள்ளிச்செங்கோல், வீரவாள் பரிசு :  கோவையில் அ.தி.மு.க., நடத்திய கண்டன பொதுக்கூட்டம் மற்றும் ஆர்பாட்டத்தில் பங்கேற்ற இக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு, கட்சியின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஜெயராமன் 5 கிலோ எடையில் உருவாக்கிய வெள்ளிச் செங்கோலை நினைவுப் பரிசாக வழங்கினார். அப்போது ஜெயராமன் கூறியதாவது: கடந்த 1986 ம் ஆண்டு ஜூலை 13 ம்தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த விழாவில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆருக்கு, ஜெயலலிதா செங்கோல் வழங்கினார். அந்த செங் கோலை அவர் வைத்துக் கொள்ளாமல் மீண்டும், ஜெ.,விற்கு திரும்ப வழங்கினார்.அந்த நிகழ்வை நினைவு படுத்தும் வகையில் அதே தேதியில் அதே போல செங்கோலை, நான் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெ.,க்கு செங்கோல் வழங்குகிறேன், என்றார். வீரவாள்: எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி பொதுச்செயலாளர் கே.ஆர்.ஜெயராம், வெள்ளியில் தயாரிக்கப் பட்ட வீரவாளை ஜெ.,விற்கு பரிசாக வழங்கினார். இது மூன்று கிலோ எடை கொண்டது. வாள் தனியாகவும், உரை தணியாகவும் இருந்தது. இரண்டரை அடி நீளம் கொண்டது.கூட்டத்தாரை நோக்கி வீரவாளை உயர்த்தி காண்பித்து வெற்றி நமதே என்று கூறினார், ஜெ.,

கட்சி நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் : அ.தி.மு.க., விலுள்ள அனைத்து கட்சி நிர்வாகிகளுக்கும் கோவையில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் முக்கியத்துவம் கொடுத்து மேடைஏறி அமரச்செய்தனர். பொதுக்கூட்டம் துவங்குவதற்கு முன்பே மேடைக்கு, சுலோசனா சம்பத், விசாலாட்சி நெடுஞ்செழியன் முதல் வரிசையில் அமர்ந்தனர். அவர்களை தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பொன்னையன், செம்மலை, கருப்புசாமி, தளவாய்சுந்தரம், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், இலக்கிய அணித் தலைவர் பழ., கருப்பையா, மைத்ரேயன், துரைகோவிந்தராஜன், சோழன் சீத்தாபழனிசாமி ஆகியோர் அமர்ந்தனர்.ஜெ., மேடையில் பேசத்துவங்கும் போது வேலுசாமி, ஜெயராமன், செங்கோட்டையன், ஜெயக்குமார், சேகர்பாபு, மலரவன், சின்னச்சாமி, வேலுமணி உள்ளிட்டோர் மேடை ஏறிஅமர்ந்தனர்.வழக்கமாக ஜெயலலிதா பங்கேற்கும் கூட்டங்களில் சிலருக்கு மட்டுமேமேடையில் அமருவதற்கு வாய்ப்பு வழங்கப்படும்.ஆனால், கோவையில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பாகுபாடுகளை மறந்து, கட்சி வளர்ச்சிப்பாதையில் செல்வதற்காக அனைத்து தரப்பை சேர்ந்த கட்சி நிர்வாகிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து மேடையில் அமரச்செய்தனர். மேடையின் மேற்பகுதியில் ஜெ., நின்று பேசும் இடத்தில் இரண்டு குளிர்சாதன பெட்டிகள் பொருத்தப்பட்டிருந்தது.இது தவிர மேடையின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் தலா இரண்டு வீதம் நான்கு ஏர்கூலர்கள் பொருத்தப்பட்டிருந்தன.

Monday, July 12, 2010

சீமானின் அறிக்கை



தமிழக மீனவர் செல்லப்பன் அவர்கள் சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்டது குறித்த சம்பவத்தில் நேற்று நான் பேசிய பேச்சினை வைத்து தமிழகக் காவல்துறை என் மீது பொய் வழக்குப் பதிவு செய்துள்ளது. என்னைக் கைது செய்ய முனைப்பு காட்டி வருகின்றது.

600 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கடந்த 60 ஆண்டுகளாக சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அவர்களின் விலைமதிப்பற்ற வலைகள், படகுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. தமிழக மீனவர்கள் சிங்களனால், தினசரி கொல்லப்படும் பொழுதோ, அவர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் பொழுதோ, அவமானப்படுத்தப்படும் பொழுதோ, மீனவனின் வலை அறுக்கப்படும் பொழுதோ மத்திய மாநில அரசுகள் துளியும் கவலைப்படவில்லை.

மென்மையான முறையில் கடிதம் எழுதினார்கள். குறைந்தபட்சம் ஒரு கண்டனம் கூட தெரிவிக்க வில்லை. ஆனால் மத்திய,மாநில ஆளும் அரசுகள், நேற்று நான் பேசிய பேச்சுக்கள் சிங்களனின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுவதாக கருதி என்னைக் கைது செய்ய தனிப்படை அமைத்து வலை வீசித் தேடுகின்றன.

600 தமிழ் மீனவர்களின் உயிருக்கு இல்லாத மதிப்பு நம் இனம் அழித்த சிங்களனுக்கு இருப்பதை நினைத்தால் நாம் வாழ்வது தமிழ்நாட்டிலா இல்லை இலங்கையிலா என்னும் எண்ணம் எழுகின்றது.

ஆஸ்திரேலியாவில் ஒரு மாணவன் தாக்கப்பட்டால் கொதிக்கும் இந்திய மனம் என்ணற்ற மீனவனின் உயிருக்கு சிறு அசைவைக் கூட தெரிவிக்க மறுக்கின்றதே?

பாகிஸ்தானி கசாப் மும்பையில் துப்பாக்கியில் சுட்டால் எல்லை கடந்த பயங்கரவாதம் என்று பாகிஸ்தானை எதிர்க்கும் இந்தியா, தினசரி மீனவனை கொலை செய்யும் இலங்கை அரசுடன் விருந்து வைத்து மகிழ்கின்றதே? ஏன்?

பிஜி தீவில் குஜராத்தி தாக்கப்படும் பொழுது துடிக்கும் இந்தியா இங்கு சாகும் மீனவன் பற்றிக் கவலைப்படாமல் கிரிக்கெட் விளையாட வழியனுப்பி வைக்கின்றதே? ஏன்?

செத்தவன் தமிழன் என்பதால் தான் எல்லோரும் பாராமுகம் காட்டுகின்றார்களா?இது தான் இந்திய ஒருமைப்பாட்டின் லட்சணமா?

சென்ற வருடம் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் சிங்கள ஏகாதிபத்தியத்தால் கொல்லப்பட்டு தமிழினம் ஒடுக்கப்பட்ட பொழுது அதற்கு பேருதவியும் பெரும் ஆதரவும் அளித்த மத்திய, மாநில அரசுகள் இன்று நம் எல்லையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவன் கொல்லப்படும் பொழுதும் இலங்கைக்கு உறுதுணையாய் இருப்பது தமிழர்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாகின்றது.

எண்ணற்ற மீனவன் செத்துக் கொண்டிருக்கும் பொழுது உணர்வுள்ள தமிழர்கள் எங்களால் தமிழ் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் கடிதம் எழுதவோ,அல்லது பாராட்டு விழாவில் கூச்சமில்லாமல் நனையவோ அல்லது கண் துடைப்புக்காய் ஆர்ப்பாட்டம் நடத்தவோ முடியாது. இன விடியலுக்கான பணியைச் செய்தே தீருவோம். அடக்குமுறைச் சட்டங்கள் காட்டி என்றும் எங்களை அச்சுறுத்த முடியாது.

சிங்கள இனவெறியன் ராஜபக்‌ஷேவின் விருப்பத்திற்கு ஏற்ப சோனியாவின் மத்திய அரசும் இங்குள்ள தமிழக அரசும் வேண்டுமானால் செயல்படலாம். உண்மைத் தமிழன் என்னால் செயல்பட முடியாது. ஆகவே அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் தொடர்ந்து போராடுவோம் என்பதைத் தெரிவித்து கொள்கின்றேன் என்று கூறியுள்ளார் சீமான்.
இந்த நிலையில், இன்று சென்னை பிரஸ் கிளப்பில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கப் போவதாக சீமான் அறிவித்திருந்தார். ஆனால் அவர் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் முன்பாகவே கைது செய்வதற்காக போலீஸார் பெருமளவில் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இருப்பினும் சீமான் வரவில்லை. அவருக்குப் பதில் நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த பேராசிரியர் தீரன், திருச்சி வேலுச்சாமி, சாகுல் ஹமீது ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அவர்களிடம் சீமான் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, சீமான் எங்கும் ஓடி ஒளியவில்லை. பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிய பின், சட்டப்படி கைதாவார். இப்போது அவர் வெளியில் வரமுடியாத சூழ்நிலையில் உள்ளார். கண்டிப்பாக உங்கள் கண் முன் அவர் நிற்பார் என்று தெரிவித்தனர்.

அவர்கள் பேசி முடித்த சில நிமிடங்களில் சீமான் அங்கு வந்தார். இதையடுத்து தயாராக குவிக்கப்பட்டிருந்த போலீஸார் சீமானை சுற்றி வளைத்துக் கைது செய்து அங்கிருந்து கொண்டு சென்றனர்.

இது தமிழ்நாடா அல்லது இலங்கையா? சீமான் ஆவேசம்!

Sunday, July 11, 2010

எண்ணெய் கம்பெனிகளுக்கு மானியம்

எண்ணெய் கம்பெனிகள் இழப்பீட்டைத் தவிர்க்க மானியம் தருவதை விட, பள்ளிக்கூடம், மருத்துவமனை ஆகியவை கட்ட அரசு பணம் செலவழிக்கலாம். எண்ணெய் கம்பெனிகள் இதனால் லாபம் சம்பாதிக்கின்றன; மாறாக பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிக் குறைப்பு பற்றி அரசுகள் பேசுவது இல்லை' என்று திட்டக்கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா கூறினார்.
எண்ணெய் கம்பெனிகள் அதிக லாபம் சம்பாதிக்கின்றன என்று இடதுசாரி கட்சிகள் கூறுகின்றன. அவர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை மானியமாக அரசு தருகிறது. அதாவது மற்ற பயனீட்டாளர்களுக்கு தரப்படும் சலுகைக்காக  அந்த நஷ்டத்தை  ஈடு செய்கிறது அரசு.  கடந்த 2009-2010ல் ஐ.ஓ.சி., நிறுவனம் ஈட்டிய லாபம் 10 ஆயிரத்து 220 கோடி ரூபாய். நாம் இப்படி எண்ணெய் கம்பெனிகள் படும் நஷ்டத்திற்கு மானியம் தருவதை விட, பள்ளிகள், மருத்துவமனைகள் கட்ட நிதி தரலாம்.தவிரவும் பெட்ரோல், டீசல் மீது அதிக அளவில் வரி விதிப்பு இருக்கிறது. அப்படியானால், வருவாய் எப்படி வரும் என்று கேட்கலாம். வேறு வழியில் வரி விதித்து விட்டு இந்த வரியை  நீக்கலாம். ஆனால், இக்கருத்தை எத்தனை பேர் ஏற்பர்?

அதுவும் பெட்ரோலில் அதிக வருவாய் ஈட்டி அதில் கிடைப்பதை மண்ணெண்ணெய், சமையல் எரிவாயுவுக்கு தரலாம். மக்கள் தங்கள் சொந்த வாகனங்களின் பயன்பாட்டை குறைத்துக் கொண்டு, அரசு பஸ் மற்றும் பொதுவான வாகன வசதிகளை நாடலாம்.

கமல்நாத்திற்கு பதில்: அதேபோல, சாலை போட்டு நிர்வாகம் செய்யத் தெரிந்தவர்கள் மட்டுமே அரசை நிர்வகிக்க வேண்டும்; வெறுமனே  ஆசனத்தில் அமர்ந்தபடி தடிமனான புத்தகங்களை உருவாக்குவோரால் பயனில்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் கமல் நாத் கூறியதை ஏற்க முடியாது. ஒரு புத்தகத்தை உருவாக்குவதும், திட்டமிட்டு சாலை போடுவதும் இரு வேறு வேறு தனிப்பட்ட விஷயங்கள்.சரியான முறையான கணக்குகள் திட்டமிடாதபடி அழகான சாலைகள் போட இயலாது. இலக்கை நிர்ணயிக்கும் போது அதற்கான திட்டமிடலும் தேவை. அதனால், கமல்நாத் கருத்தை ஏற்க முடியாது. எல்லா அமைச்சகங்களும் தங்கள் தேவையை விட 100 சதவீதம் கூடுதலாகக் கேட்கின்றன. அந்த அளவைக் குறைப்பது திட்டக்கமிஷன் வேலை.இவ்வாறு மாண்டேக் சிங் அலுவாலியா கூறினார்.

Thursday, July 8, 2010

“காமராஜர் பிறந்தநாளை திருவிழாவாக கொண்டாடுங்கள்” காங்கிரஸ் தொண்டர்களுக்கு தங்கபாலு வேண்டுகோள்


தமிழகத்தின் காரிருள் நீக்க வந்தப்பேரொளி, பாரதத்தின் தவப்புதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் 108-வது பிறந்தநாள் வருகிற 15-ந்தேதி என்பதை அறிவீர்கள்.
 
நாட்டின் விடுதலைப்போர்க்களத்தில் தனது வீரஞ் செறிந்த பங்களிப்பால் தியா கச்சுடரென வரலாற்றில் தனி அத்தியாயமாய் உருவாகிப்புகழ் பெற்றவர். 9 ஆண்டு கால சிறைக்கொடுமைகளை- ஈடேதுமில்லாத கேடுகளை அன்னியர் ஆட்சியில் அன்னை நாட்டின் மீட்புக்காக அனுபவித்தவர்.
 
விடுதலைக்குப்பின் 9 ஆண்டுகால தமிழகத்தின் முதல்-அமைச்சராய் கல்விப் புரட்சிக்கு வித்திட்டு, ஆறுகளில் பல அணைகளைக்கட்டி விவசாயத்தை மேம் படுத்தி, சிறிய, பெரிய தொழில்வளத்தைப் பெருக்கி, சாலைகள் அமைத்து எண்ணற்ற சாதனைகள் பலப்பல புரிந்து சரித்திரத்தில் இடம் பெற்ற மாபெரும் தலைவர் அவர்.
 
தமிழக ஆட்சி நிர்வாகத் தில் புனிதத்தையும், கட்சிப்பணிகளில் மகத்துவத்தையும் உருவாக்கி வெற்றி கண்டதால் பாரதத்தின் உன்ன தப்பொறுப்புக்கு உயர்த்தப்பட்டு போற்றப்பட்டார். சோதனையான காலங்களில் பாரதத்தின் உயர்வு கருதி இரு பிரதமர்களை தேர்வு செய்த அரசியல் சாணக்கியத்துவத் தின் மூலம் தனது ஆற்றல்மிகு பெருமையை உலகறியச் செய்தார்.
 
ஏழ்மையில் பிறந்தவர். தான் ஆற்றிய தியாகத்தால் பெற்ற உயர்ந்த பதவிகளில் சுகம் காணாமல் ஏழைகள் உயர வழி காணவும், தமிழகம் வளர வகைகள் தேடவும், பாரதம் மிளிர பணிகள் செய்யவும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித் துக்கொண்ட வரலாற்று நாயகர் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாள் என்று அரசு சார்பில் அனைத்துப்பள்ளிகளிலும் கொண்டாடப்படுகிறது. நன்னாளில் அனைத்து சிறப்புகளோடும் காங்கிரஸ் சகோதர, சகோதரிகள் அவரவர் பகுதிகளில் பெருந்தலைவ ரின் பிறந்தநாள் விழாவை மக்கள் திருநாளாகக் கொண்டாட வேண்டும்.

Wednesday, July 7, 2010

தோனி தேனிலவுக்கு குவின்ஸ்டவுன் செல்கிறார்

தோனி-சாக்ஷி புதுமண தம்பதிக்கு சொந்த ஊரான ராஞ்சியில், ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி(28). இவரது பள்ளி தோழி சாக்ஷி சிங் ராவத்(23). இவர்களது திருமணம் உத்தரகண்ட் தலைநகர் டேஹ்ராடூனில் உள்ள பண்ணை வீட்டில் எளிமையாக நடந்தது.

திருமணம் முடிந்த இரண்டு நாட்களுக்குப் பின் தோனி, சாக்ஷி ஜோடி நேற்று காலை சொந்த ஊரான ராஞ்சி திரும்பியது. நேற்று தோனி தனது 29 வது பிறந்த நாளை கொண்டாடினார். தோனிக்கு திருமண மற்றும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க ராஞ்சி விமானநிலையத்தில் உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள் உட்பட ஏராளமானோர் கூடியிருந்தனர். ஆனால், வழக்கம் போல மீடியாவை புறக்கணித்த தோனி, காரில் வெளியேறினார். இதனால் மீடியா உட்பட பலரும் ஏமாற்றம் அடைந்தனர். 
ராஞ்சியில் உள்ள தோனியின் வீட்டருகே அவரது ரசிகர்கள் ஏராளமானோர் காலை முதல் காத்திருந்தனர். தோனியின் பிறந்த நாளை முன்னிட்டு "கேக்' வெட்டிக் கொண்டினர். தனது வீட்டின் பால்கனியில் மனைவி சாக்ஷியுடன் இணைந்து ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார் தோனி. இது குறித்து தோனியின் தீவிர ரசிகரான அடுல் என்பவர் கூறுகையில்,"" இன்று எங்களுக்கு இரட்டை மகிழ்ச்சி. நான்கு நாட்களுக்கு முன் தோனி திருமணம் செய்து கொண்டார். இன்று அவரது பிறந்த நாள். இரண்டையும் சேர்த்து கொண்டாடுகிறோம்,'' என்றார்.

தோனி-சாக்ஷி தம்பதியினர் தேனிலவுக்கு எந்த இடத்துக்கு செல்கிறார்கள் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேனிலவுக்கு குயின்ஸ்டவுன் வருமாறு, நியூசிலாந்து சுற்றுலா வளர்ச்சித் துறை தோனிக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து இதன் தலைமை நிர்வாகி டோனி எவரிட் கூறுகையில், "" தோனி-சாக்ஷி ஜோடியை தேனிலவுக்காக குயின்ஸ்டவுன் அழைப்பதில் பெருமை கொள்கிறோம். தேனிலவு கொண்டாட அவர்களுக்கு இது சரியான இடமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை,'' என்றார். கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, தேனிலவுக்கு நியூசிலாந்து மிகச்சரியான இடம் என்று தோனியும் கூறியிருக்கிறார். இதனால் தோனி-சாக்ஷி ஜோடி நியூசிலாந்து செல்ல அதிக வாய்ப்பு உள்ளது.

கக்கன் நூற்றாண்டு விழா

மதுரையில், முன்னாள் அமைச்சர் கக்கன் நூற்றாண்டு விழாவை எந்த இடத்தில் கொண்டாடுவது என்பதில் காங்கிரசாருக்குள் மோதல் எழுந்துள்ளது.

காங்கிரஸ் 125வது ஆண்டு விழாவையொட்டி, பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக விருதுநகரில் , ஜூலை 17ல் காமராஜர் விழா, மதுரையில் ஜூலை 31ல் முன்னாள் அமைச்சர் கக்கன் நூற்றாண்டு விழா, கோவையில் தியாகி சத்தியமூர்த்தி விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தாண்டு இறுதியில், சென்னையில் நடக்கும் நூற்றாண்டு நிறைவு விழாவில், அகில இந்திய தலைவர் சோனியா பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில், காங்கிரசார் வாசன், சிதம்பரம், தங்கபாலு, இளங்கோவன், சுதர்சனநாச்சியப்பன் என தனித்தனி கோஷ்டிகளாக செயல்படுகின்றனர். ஒற்றுமையாக இருந்து கக்கன் விழாவை கொண்டாடுவதாக அறிவித்தாலும், யார் முன்னின்று நடத்துவது என்பதில், கோஷ்டிகளுக்குள் மறைமுக போட்டி நிலவுகிறது. கக்கன் பிறந்த நாளன்று மேலூர் அருகே தும்பைபட்டியிலுள்ள மணிமண்டபத்திற்கு, ஒவ்வொரு கோஷ்டியினரும் தனித்தனியாக சென்றனர். தற்போது ஒவ்வொரு கோஷ்டியினரும், தங்கள் தலைவர் படங்களுடன் பிளக்ஸ், சுவர் விளம்பரங்களை செய்து வருகின்றனர். கடந்த 4ம் தேதி தங்கபாலு தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து கோஷ்டியினரும் கலந்து கொண்டாலும், விழா பொறுப்பை ஏற்று நடத்த தயார் என சிதம்பரம் ஆதரவாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தால், அதுவே அவர்கள் அணியை வளர்க்க வாய்ப்பாக போய் விடும் என மற்ற கோஷ்டியினர் தயங்கினர்.

கக்கன் விழாவிற்காக, மதுரை மருத்துவக் கல்லூரி மைதானத்தை ஒதுக்கும்படி சிதம்பரம் ஆதரவாளரான விஸ்வநாதன் எம்.பி., ஜூன் 16ம் தேதி விண்ணப்பித்தார். அவருக்கு, ஜூன் 23ம் தேதி அனுமதி கிடைத்தது. அந்த இடத்தில் விழா நடத்தினால், அவர்களுக்கு சாதகமாகும் என மற்ற கோஷ்டியினர் கருதினர். மதுரை வடக்குமேல மாசி வீதியில் விழா நடத்த அனுமதி கோரி, நகர் தலைவர் தெய்வநாயகம்(வாசன் ஆதரவாளர்) போலீஸ் கமிஷனரிடம் தனியாக விண்ணப்பித்து அனுமதி பெற்றார். இதற்கு தங்கபாலு ஆதரவாளர்களான வடக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ்பாண்டியன் போன்றோர் ஒப்புக் கொண்டனர். விழா அழைப்பிதழில், இந்த இடத்தை குறிப்பிட்டு அச்சிடும்படி மேலிடத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

வாசன் மற்றும் தங்கபாலு ஆதரவாளர்கள் கூறியதாவது: பொதுவாக அரசியல் நிகழ்வுகள் வடக்குமேல மாசி வீதியில் நடக்கின்றன. கட்சியினர் வந்து செல்லவும் வசதியாக இருக்கும். அந்த இடத்தை தேர்வு செய்தோம். மற்றபடி உள்நோக்கம் இல்லை, என்றனர். சிதம்பரம் ஆதரவாளர்கள் கூறுகையில், ""மருத்துவக் கல்லூரி மைதானத்தை கேட்டுள்ளதாக முன்கூட்டியே தெரிவித்தும், தங்கபாலு, வாசன் ஆதரவாளர்கள் அதை காதில் வாங்கி கொள்ளவில்லை,'' என்றனர்.

அம்பாசமுத்திரம் அம்பானி

அம்பாசமுத்திரல் இருந்து அநாதையாக சென்னை வரும் சிறுவன் அம்பானி ஆக முயற்சிப்பதே அம்பாசமுத்திரம் அம்பானி படத்தின் கரு, கதை, களம், காமெடி எல்லாம்!

பிறக்கும்போதே அப்பாவை இழந்து படிக்கும்போது இலவச சேலை கூட்டத்தில் அம்மாவையும் இழந்து அநாதையாகும் கருணாசுக்கு உளரும் உறவும் ஒத்தாசை செய்யாமல் உபத்திரம் தந்ததால் சின்ன வயதிலேயே சென்னைக்கு வருகிறார். வந்த இடத்தில் பேப்பர் போடுவதில் ஆரம்பித்து பால், பலசரக்கு என பலவற்றையும் வீடு வீடாக போட்டு போராடுகிறார். இப்படி போராடி சம்பாதிக்கும் காசை எல்லாம் அம்பானி மாதிரி தொழில் அதிபர் ஆக வேண்டும் என்ற ஆசையில் சின்ன வயதில் சென்னை சிட்டியில் பேப்பர் போடும் வேலைக்கு தன்னை சிபாரிசு செய்த கோட்டா சீனிவாசராவ் அண்ணாச்சியிடம் கொடு்தது வைக்கிறார். அவர் கட்டும் பிரமாண்ட ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் ‌ஒரு கடை வாங்கி அதில் பெரிய பிஸினஸ் செய்துவிட வேண்டும் என்பது கருணாஸின் ஆசை. இதனூடே கருணாஸ் குடியிருக்கும் பகுதியில் பசிக்கும் நவ்நீத் கவூருக்கு இவர் மீது ஒருதலைக் காதல். வாழ்க்கையில் சாதிக்கும் வரை ஒரு சிலநிமிடங்கள் உட்கார்ந்து ஓய்வு எடுப்பதில்கூட உடன்பாடில்லாத கருணாஸ், நவ்நீத்தின் காதல் வலையில் வீழந்தாரா? அம்பானி ஆனாரா? என்பதை அம்பாசமுத்திரம் அம்பானி படத்தின் மீதிக்கதை சொல்லி இருக்கிறது.

தண்டபாணி அலைஸ் அம்பாசமுத்திரம் அம்பானியாக கருணாஸ் பாத்திரத்திற்கேற்ற பளீச் தேர்வு. காசு பணத்தை கருணாஸ் அலைந்து திரிந்து சேர்ப்பதற்கான காரணமும், அது இல்லாததால் அவருக்கு ஏற்பட்ட வலியும் வடுவும் நிரம்பிய பிளாஷ்பேக்கும் பிரமாதம்! நந்தினியாக நாயகியாக வரும் நவ்நீத் கவுர், விஜயகாந்த் உள்ளிட்டவர்களுடன் ஒருசில படங்களில் தலைகாட்டி பின் காணாமல் போனவர் என்றாலும், கருணாஸுக்கு கனகச்சிதமாக பொருந்துகிறார். படத்தின் கதையோட்டத்தில் நாயகி அநாதையாக்கப்படும் விதமும் நகரங்களில் நடக்கும் கொடூரங்களை தோலுரித்துக் காட்டும் விதமாக படமாகியிருப்பது பேஷ் பேஷ் சொல்ல வைக்கிறது.

கழுத்துக்கு கீழே குழந்தை உடம்புடனும், கழுத்துக்கு மேலே 300 ஹனிமூன்களை பார்த்த முகபாவத்துடனும் கருணாஸூடன் காட்சியளிக்கும் மாஸ்டர் சங்கரின் நடிப்பு நம்பிக்கை துரோக காட்சிகளிலும் சரி... நன்றியுணர்வு காட்சிகளிலும் சரி... நச்! இதுநாள்வரை வில்லனாகவே பார்த்து பழகிய கோட்டா சீனிவாசராவும் அந்த அண்ணாச்சி கேரக்டரும் ரொம்ப பெரிய பலம். லிவிங்ஸ்டன், வி.எம்.சி.ஹனிபா, டி.பி.‌கஜேந்திரன், ஸ்ரீரஞ்சனி, நிரோஷா, ஆர்.சுந்தர்ராஜன், டெல்லிக‌ணேஷ், மயில்சாமி, சிங்கமுத்து, நெல்லைசிவா உள்ளிட்டவர்களும் அவர்களது நடிப்பும் கூடபலமே! ஒத்தப்பாட்டுக்கு ஆகும் ரகசியாவும்கூட!!

கருணாஸின் இசையில் சோறு வச்சேன்... சோகப்பாடலும், ஒத்தக்கல்லு மூக்குத்தி... குத்துப்பாடலும் போன்றே கருணாஸின் மகன் கென் பாடியிருக்கும் தண்ட தண்டபாணி பாடலும் ஆடவும், பாடவும் வைக்கும் ரகம்! புலித்தேவனின் ஒளிப்பதிவும் ஓ.கே.!

அம்பானி ஆக நினைச்சதாலதான் ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்காவது முதலாளி ஆக முடிஞ்சது! எனும் க்ளைமாக்ஸ் வசனம் உள்பட படம் முழுக்க பஞ்ச் டயலாக் ஆக இல்லாமல் பாதிப்பை ஏற்படுத்தும் வசனங்களாக ஒலிக்கும் டயலாக்குகளுக்காகவே புதிய இயக்குனர் பி.ராம்நாத்தை பாராட்டலாம் எனும்போது, அவரது கதை, திரைக்கதை, இயக்கத்தை பாராட்டாமல் இருக்க முடியுமா?! சூப்பரப்பு!

Tuesday, July 6, 2010

மத்திய அமைச்சரவை மாற்றம் இப்போது தேவைதானா?

தனது பணிச்சுமையை குறைக்கும்படி அமைச்சர் சரத் பவார் கூறியதை அடுத்து, மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்வது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தீவிரமாக ஆலோசித்து வருகிறார். முக்கிய பதவியை இழப்பதால், தனது மகளுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார். இலாகா மாற்ற வேண்டும் என வாசன் வற்புறுத்தி வருவதால், அவரது இலாகாவையும், எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருவதால், ராஜாவின் இலாகாவையும் மாற்றுவது குறித்து மன்மோகன் சிங்கும், சோனியாவும் ஆலோசனை செய்து வருகின்றனர். மாற்றம் குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்.

மத்திய அமைச்சரவையில் மாற்றம் வரும் என்று பல நாட்களாக பேச்சு இருந்து வந்தது. தேர்தல்கள், பிரதமரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் என பல்வேறு காரணங்களால் இது தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. மத்திய உணவு அமைச்சர் சரத் பவார், சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் பொறுப்பை ஏற்றார். இதனால் எழுந்துள்ள கடும் சர்ச்சையை அடுத்து நேற்று முன்தினம் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். அப்போது தனது பணிச்சுமையை குறைக்கும்படி கேட்டுக் கொண்டார். அதே நேரத்தில், தன் மகளுக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனால், அமைச்சரவை மாற்றம் என்பதை தள்ளிப்போடாமல் விரைந்து முடிக்க வேண்டுமென பிரதமர் மன்மோகன் சிங் விரும்புகிறார். ஆனால், அவ்வாறு செய்யப்படும் அமைச்சரவை மாற்றத்தை சிறிய அளவில் செய்யலாமா அல்லது பெரிய அளவில் செய்துவிடலாமா என்றும் அவர் யோசித்து வருவதாக தெரிகிறது. காரணம், பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடருக்கு இன்றும் இரண்டு வாரங்களே உள்ளன.அமைச்சரவையில் உள்ள சில அமைச்சர்கள் மீது காங்கிரசுக்கும், சில அமைச்சர்கள் மீது பிரதமருக்கும் அதிருப்தி நிலவுகிறது. எனவே அமைச்சரவை மாற்றம் என்பது தவிர்க்க இயலாத ஒன்றாக ஆகிவிட்டது.

மத்திய அரசுக்கு தனிப்பெரும்பான்மைக்கு 273 எம்.பி.,க்கள் தேவைப்படும் பட்சத்தில் 269 பேர் மட்டுமே தற்போது ஆதரிக்கின்றனர். இதை பெரும்பான்மை ஆக்குவதற்கு அஜித் சிங்கிடம், காங்கிரஸ் பேசி வருகிறது. தற்போது ஐந்து எம்.பி.,க்களைக் கொண்ட அந்த கட்சியை காங்கிரசோடு இணைப்பதில் அஜித் சிங்கிற்கும், அவரது மகனுக்கும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. அஜித் சிங், காங்கிரசுக்கு வரும்பட்சத்தில் அவருக்கு உணவு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

விரைவில் சட்டசபை தேர்தல்கள் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையிலும் யோசிக்கப்படுகிறது. அந்த வகையில் மேற்குவங்கத்தை சேர்ந்தவரும், திரிணமுல் காங்கிரசை சேர்ந்தவருமான சுதிப் பண்டோபாத்யாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று தெரிகிறது. தவிர, காங்கிரசை சேர்ந்த அதீர் சவுத்ரி என்பவர் பெயரும் அமைச்சர் பதவிக்கு அடிபடுகிறது.உத்தர பிரதேசத்திற்கு கேபினட் அந்தஸ்த்தில் அமைச்சர் பதவி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து இணையமைச்சராக ஏற்கனவே உள்ள ஜெய்வாலை, கேபினட் அந்தஸ்த்துக்கு உயர்த்தலாம் என்று தெரிகிறது. குர்மி இனத்தைச் சேர்ந்த பென்னி பிரசாத் மற்றும் நடிகர் ராஜ் பாப்பர் ஆகியோரது பெயர்களும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

பீகாரில், வரும் அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. அங்குள்ள முஸ்லிம்களின் ஆதரவைப் பெறும்நோக்கில் அந்த மாநிலத்திலிருந்து தேர்வாகியுள்ள முஸ்லிம் எம்.பி., ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று தெரிகிறது. சில முக்கிய துறைகளின் அமைச்சர்கள் மீது பிரதமரும், சோனியாவும் பெரிய அளவில் அதிருப்தியில் உள்ளனர். இதன் காரணமாக அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டால், முக்கிய அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

அந்த வகையில் கபில் சிபல் மீது கடும் அதிருப்தி நிலவுகிறது. கேந்திரிய வித்யாலயாக்களில் எம்.பி.,க்களுக்கான கோட்டாவை ரத்து செய்து பின், காங்கிரஸ் தலைமை தலையிட நேர்ந்தது. வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை கொண்டு வருவது உள்ளிட்ட விஷயங்களில் மிகவும் அவசரப்பட்டு முடிவெடுக்கிறார் என்ற விமர்சனம் இவர் மீது உள்ளது. எனவே இவர் வர்த்தகத் துறைக்கு மாற்றப்பட்டு, இப்போது வர்த்தக அமைச்சராக உள்ள ஆனந்த் சர்மாவை வெளியுறவுத் துறைக்கு நியமிக்க வாய்ப்புள்ளது. எஸ்.எம்.கிருஷ்ணாவின் செயல்பாடுகள் மீது பிரதமருக்கு திருப்தி இல்லை என்பதால் வெளியுறவுத்துறை பொறுப்பிலிருந்து எடுத்துவிட்டு அவரை சட்டத்துறை அமைச்சராக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சட்ட அமைச்சராக உள்ள வீரப்ப மொய்லி, மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அமைச்சராக்கபடுவார்.

தமிழக அமைச்சர்களை பொறுத்தவரை, பலநாட்களாக வாசனே கேட்டுக் கொண்டு வருவதால் அவரை பணிச்சுமை குறைவாக உள்ள இலாகாவுக்கு மாற்றம் செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராஜா மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார்களை கூறிவருவதால் அவரது இலாகா மாற்றம் குறித்து தி.மு.க., மேலிடத்திடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.

Monday, July 5, 2010

"பந்த்' 15 ஆயிரம் பேர் கைது

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் நடத்திய "பந்த்' பிசுபிசுத்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத அளவிற்கு, பஸ், ரயில் மற்றும் ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களும் முடங்கவில்லை. மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் மறியல், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதாக 15 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி, பா.ஜ., - கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நேற்று ஒரு நாள், நாடு தழுவிய, "பந்த்'திற்கு அழைப்பு விடுத்தன.தமிழகத்தில், அ.தி.மு.க., - கம்யூனிஸ்டுகள் மற்றும் பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள், "பந்த்'துக்கு அழைப்பு விடுத்தன. ஆனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத அளவிற்கு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கிவிட்டது.இதனால், தலைநகர் சென்னையில் பஸ், ரயில் மற்றும் ஆட்டோ போக்குவரத்து முழு அளவில் நடந்தன. கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களும் முடங்கவில்லை. எதிர்க்கட்சியினர், முக்கிய இடங்களில் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன், மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., மகேந்திரன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் கதிரவன் தலைமையில் 50 பெண்கள் உள்ளிட்ட 200 பேர், சாலை மறியலில் ஈடுபட்டு கைதாயினர்.கிண்டி ரயில் நிலையத்தில் நடந்த ரயில் மறியல் போராட்டத்தின் போது, சிலர் ரயில்கள் மீது கல் வீசி தாக்கினர். ரயில் நிலையத்தின் மூன்று பிளாட்பாரங்களிலும், 700க்கும் மேற்பட்டவர்கள் ரயில்கள் முன் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால், சிறிது நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

அண்ணா சாலை, ஸ்பென்ஸ்சர்ஸ் சந்திப்பில், பா.ஜ., கட்சியினர் சாலை மறியல் நடத்தினர். அக்கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர் இல.கணேசன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர், அண்ணா சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.சமையல் காஸ் சிலிண்டரை பாடையில் எடுத்து வந்து, போராட்டம் நடத்தினர். இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் பல்வேறு இடங்களில் நடந்த மறியல், ஆர்ப்பாட்டத்தில் 1,200க்கும் மேற்பட்டோர் கைதாயினர்.திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட 2,200 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். தமிழகத்திலிருந்து கேரளா, கர்நாடகா செல்லும் பஸ்கள், குறிப்பிட்ட எல்லைப் பகுதிகளில் நிறுத்தப்பட்டன. ஆந்திராவில் சில பகுதிகளுக்கு மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டன.சில இடங்களில் பஸ்கள் மீது கல் வீச்சு சம்பவங்கள் நடந்தன.

கன்னியாகுமரியில் எட்டு பஸ்களும், மதுரை மற்றும் திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் செய்யாறு உள்ளிட்ட பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட பஸ்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.கடைகள், பஸ்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களும், கடைகளை கட்டாயப்படுத்தி மூடச் சொன்னவர்களும் என 270 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தத்தில், 15 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.இந்த ஆர்ப்பாட்டம், மறியல்களில் முழு வீச்சில் அ.தி.மு.க.,வினர் பங்கேற்கவில்லை என்ற கருத்து பரவலாகப் பேசப்படுகிறது.புதுச்சேரி: புதுச்சேரியில், "பந்த்' ஓரளவிற்கு முழுமையாக நடந்தது. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன; தனியார் பஸ்கள், ஆட்டோ, டெம்போக்கள் இயக்கப்படவில்லை. தமிழக அரசு பஸ்கள் மட்டுமே துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூ., எம்.எல்.ஏ.,க்கள் விசுவநாதன், நாரா. கலைநாதன் உட்பட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். காரைக்காலில் கடை, தெருக்கள் வெறிச்சோடி கிடந்தன.

மறியல் "கூட்டணியில்'ஒதுங்கிய அ.தி.மு.க., : மதுரையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் செய்தபோது, அ.தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்காமல் ஒதுங்கிக் கொண்டனர்.மதுரையில், நேற்று காலை 9 மணி முதல் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூ., கட்சியினர், ரயில்வே ஸ்டேஷன் கிழக்கு நுழைவாயில் அருகே வரத்துவங்கினர். அவர்களை, ரயில்வே ஸ்டேஷனில் அனுமதிக்காமல் போலீசார் கைது செய்து, திருமண மண்டபங்களுக்கு அழைத்துச் சென்றனர்.அ.தி.மு.க.,வைச் சேர்ந்த நிர்வாகிகள் மறியல் செய்யாமல், ஒதுங்கிக் கொண்டதால் கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்தனர்.போலீசார் கூறியதாவது:வரும் 13ல் கோவையில், ஜெ., தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதற்காக தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் அ.தி.மு.க.,வினர் வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், கோவைக்கு செல்ல மதுரை அ.தி.மு.க.,வினர் இப்போதே தயாராகி வருகின்றனர்.மறியலில் ஈடுபட்டு கைதானால், ஒருவேளை போலீசார், "ரிமாண்ட்' செய்து விடுவார்களோ என்று கருதியே அ.தி.மு.க.,வினர் நேற்று மறியலில் ஈடுபடாமல் ஒதுங்கினர்.இவ்வாறு போலீசார் கூறினர்.அ.தி.மு.க., செயலர் செல்லூர் ராஜு கூறுகையில், "மக்களுக்கான போராட்டம் என்பதால், அவர்கள் பாதிக்கும் வகையில் மறியல், ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என்று ஜெ., உத்தரவிட்டார். இதன் காரணமாகவே நாங்கள் மறியலில் ஈடுபடவில்லை' என்றார்.

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பந்த்:109 பெண்கள் உட்பட 916 பேர் கைது : சென்னை புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், ஆவடி, அம்பத்தூர், மாதவரம், மணலி, செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எதிர்க்கட்சிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக புறநகர் பகுதியில் 109 பெண்கள் உட்பட 916 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள், திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.பா.ஜ., சாலை மறியல்: தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் அருகே பா.ஜ., மாநில துணைத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 54 பேரை, போலீசார் கைது செய்து, அம்பேத்கர் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். மாலை அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.கிழக்கு கடற்கரை சாலையில் பந்த்: அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர், பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை உள்ளடக்கிய பகுதியில் காலை முதலே கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும், மருந்து கடை, பால் கடை மற்றும் உணவகங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. அடையாறு பகுதியில் திறந்திருந்த உணவகத்தை மூடச்சொல்லி வற்புறுத்திய எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலரை பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார் எச்சரித்து அனுப்பினர். பஸ் மற்றும் ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின. மாலை 6 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் வழக்கம் போல் செயல்பட்டன.கம்யூ., தொண்டர்கள் கைது: அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர் பகுதிகளில் "பந்த்'தின் போது அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் கடைகள் வழக்கம் போல் திறந்திருந்தன. ரயில் மற்றும் பஸ் போக்குவரத்திலும் எவ்வித பாதிப்பில்லை.அம்பத்தூர் எஸ்டேட் பஸ் நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட இ.கம்யூ., தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். ஆவடி பஸ் நிலையம் எதிரே மா.கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் காசிநாதன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.வடசென்னை: வடசென்னையின் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தாலும் பஸ், லாரி போக்குவரத்து வழக்கம் போல் இயங்கியது. பந்த் காரணமாக மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். மாதவரம் பகுதியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தர்ராஜ் தலைமையில் 70 பேரும், மணலியில் 79 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

தேவைப்பட்டால் இடதுசாரிகளுடனும் கைகோர்ப்போம்: கட்காரி

மக்கள் பிரச்சனைக்காக இடதுசாரிகளுடன்‌ கை கோர்க்க தயாராக உள்ளோம் என்று பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி பேசினார்.

மத்திய அரசை கண்டித்து பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகளும், இடதுசாரியினரும் நடத்திய பந்த் காரணமாக டில்லியில் இயல்பு வாழ்க்கை முழு அளவில் முடங்கியது. மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாயினர். பந்த் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ., தலைவர் கட்காரி, கட்சியின் தகவல் தொடர்பாளர் ஜாவேத்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ., சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், அகாலிதளம் உள்ளிட்ட கட்சிகள் ஓரணியாகவும், இடதுசாரிகள், சமாஜ்வாடி, தெலுங்கு தேசம், அ.தி.மு.க., மதசார்பற்ற ஜனதா தளம், இந்திய தேசிய லோக்தளம் உள்ளிட்ட பல கட்சிகள் மற்றொரு அணியாகவும் பந்த் அறிவித்திருந்தன.தலைநகர் டில்லியில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது.

முக்கிய பகுதிகளான சாந்தினிசவுக்கில் பா.ஜ.,வும் மற்றும் ஐ.டி.ஓ.,வில் இடதுசாரிகளும் ஆர்ப்பாட்டம் நடத்தின. இதனால், போக்குவரத்து ஸ்தம்பித்தது.கிரேட்டர் கைலாஷ் மற்றும் கன்னாட்பிளேஸ் பகுதி மார்க்கெட்டுகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. மேற்கு டில்லி பகுதியில் பா.ஜ.,வினர் பஸ் மறியலில் ஈடுபட்டதால், மக்கள் அவதிக்குள்ளாயினர். அதேபோல ஜனக்புரி மெட்ரோ நிலையத்தை பா.ஜ.,வினர் இழுத்து பூட்டிவிட்டனர். 15 நிமிடங்களுக்கு பிறகு போலீசார் வந்து தலையிட்டதன் பேரில், மீண்டும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது.

சாந்தினி சவுக்பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி, "மக்களின் பிரச்னைக்காக யாருடன் வேண்டுமானாலும் பா.ஜ., கைகோர்க்க தயாராக உள்ளது. தேவைப்பட்டால் இடதுசாரி கட்சிகளுடனும் பேச தயாராக உள்ளேன்' என்றார்.

ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு பிறகு பா.ஜ.,வும் இடதுசாரிகளும் ஒரே நாளில் ஒருங்கிணைந்து பந்த நடத்தியுள்ளன. கடந்த ஏப்ரலில் நடந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் கூட, இடதுசாரிகள் மட்டுமே தனியாக பங்கேற்றன.நேற்றைய பந்த் குறித்து மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் நிலோத்பல் பாசு கூறும்போது, "காங்கிரஸ் அல்லாத மாநிலங்களில் பந்த் முழு அளவில் வெற்றியும், மற்ற மாநிலங்களில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. "பந்த்'திற்கு முந்தைய தினம் பிரணாப் முகர்ஜி, ஒரு பைசா கூட விலையை குறைக்க மாட்டோம் என்று கூறினார். அவருக்கு மக்கள் சரியான பதிலடியை தந்துள்ளனர்' என்றார்.டில்லியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவும் கைது செய்யப்பட்டார். நேற்று நடந்த பந்த் காரணமாக வர்த்தகத் துறையினருக்கு டில்லியில் 600 கோடி ரூபாய் நஷ்டம் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.