Search This Blog

Tuesday, September 14, 2010

கண்டன ஆர்ப்பாட்டம் - குமுதம் வார இதழைக் கண்டித்து

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் அன்னை சோனியா காந்தியைக் தவறான முறையில் சித்தரித்து குமுதம் வார இதழில் பயோ டேட்டா என்கிற பகுதியில் எழுதியமைக்காக அந் நிறுவனத்தை கண்டித்து த்மிழகம் முழுவதும் வட்ட மற்றும் மாவட்ட அளவிலான காங்கிரஸ் கமிட்டி சார்பிலே கண்டன ஆர்பாட்டம் நடைப் பெற்றது.

அதே போன்று எங்கள ஊரிலும் 11-09-10 அன்று மாலை சுமார் 4 மணியளவிலே வட்டாச்சியாளர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்பாட்டாம் நடைப்பெற்றது. அதில் நானும் முத்ல் முதலாக கலந்து கொண்டேன்.

அதிலே தான் என்னுடைய கண்ணி பேச்சு தொடங்கியது என்று கூறுவதிலே நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

முதல் முதலாக பேசுவதென்பது சற்று கடினமாக இருந்தது. என்ன பேசுவது என்றே தெரியவில்லை கொஞ்சம் கஷ்டபட்டு தான் பேசவேண்டிருந்தது.

எப்படி ஆரம்பிப்பது, எந்த மாதிரி ஒரு நடையில், பாவனையில் இருக்கவேண்டும் என்பதுவும் தெரியவில்லை எந்தெந்த விஷயங்களை சொல்லவேண்டும் அதை எப்படி சொல்ல வேண்டும் என்பதிலே குழப்பம் அந்த சமயத்தில் எப்படி கோர்வையாக பேசவேண்டும் என்பது உள்ளிட்ட விஷயங்கள் குழப்பின எப்படியோ பேசி முடித்தப் பின் என் அருகில் இருந்த மாவட்ட செயளாலர் அருமை அண்ணன் தங்கமணி சொன்னார் நீங்கள் பேசபேசத் தான் மேடை பேச்சு, பொதுக் கூட்டப் பேச்சு எல்லாம் வரும் கவலைப் படாதே என்று சொன்னார் அப்பொழுது தான் நான் ஆறுதல் அடைந்தேன் சற்று தைரியம் வந்தது என்னாலும் பேச முடியும் எல்லாராலும் போற்றும் வகையிலும் பேச முடியும் என்கிற தன்னம்பிக்கை பிறந்தது.

இரண்டாம் நாள் : 12-09-10

இளைஞர் காங்கிரஸாரின் உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடைப்பெற்றது அதில் நானும் கலந்து கொண்டேன் அங்கு நிறைய இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்களை பார்க்க மற்றும் சந்திக்க முடிந்தது.

இருந்தாலும் அந்த நிகழ்ச்சியிலே கட்டுப்பாடான ஒருங்கிணைப்பு இல்லை ஒரு புரோட்டா கால் படி யார் யார் எல்லாம் எப்பொழுது பேசுவது. ஒவ்வொன்றன் பின் ஒவ்வொன்றாக என்னவெல்லாம் செய்வது என்கிற வரிசையின்றி இல்லாமல் இருந்தது.

இதனையெல்லாம்  சீர்படுத்தவேண்டும்.

கூட்டத்தில் எப்பொழுதும் சலசலப்பு இருந்து கொண்டே இருந்தது. கூட்டத்தில் கை பேசி ஒலித்துக் கொண்டும் யாராவது வருவதும் போவதுமாக இருந்தார்கள்.

ஒழுக்கம் இல்லாத நிகழ்ச்சியாக பார்க்க முடிந்தது.

இதற்கு ஒரு உதாரணத்தை சொல்ல விரும்புகிறேன்.

மூத்த காங்கிரஸ் நிர்வாகி S.K. கருப்பண்ணன் அவர்கள் இளைஞர் காங்கிரஸாருக்கு அறிவுரை வழங்கி வாழ்த்திப் பேசிக் கொண்டிருந்தார் அப்பொழுது திடீரென கூட்டத்தில் இருந்து வந்த ஒரு உறுப்பினர் அவரிடம் இருந்த மைக்கைப் பிடுங்கி ஏதோ சொன்னான் அவரோ என்ன செய்வதன்றி திகைத்துப் போய் நின்றார். இது போன்று வேரொருவர் பேசிக் கொண்டிருக்கும் போது வெளியிருந்து கூட்டைத்தை நோக்கி ஐந்து அல்லது ஆறுப் பேர் கொண்ட கும்பல் கோஷ்மிட்டுக் கொண்டும் அவர்களுடன் பத்திரிக்கையாளர்களும் வந்தார்கள்.

அந்த கூட்டத்தைப் பார்த்து நகர காங்கிரஸ் தலைவர் வெங்கடேஷ் அவர்கள் அமைதிப் படுத்தி பத்திரிக்கை நிருபர்களை வெளியில் அனுப்பினார்.

இது போன்று தேவையற்ற நிகழ்வுகள் நடைப் பெற்றது.

இதில் கலந்து கொண்ட நிர்வாகிகள் :

S.K. கருப்பண்ணன், அருணாசலம், S.N. ராஜன், சிவா, சத்திய மூர்த்தி, வெங்கடேஷ், இளைஞர் காங்கிரஸ் ச.ம.தலைவர் மதி மற்றும் பாரளுமன்ற தலைவர்.

No comments: