Search This Blog

Monday, September 13, 2010

இரண்டாவது இடத்துக்கு காங்., முயற்சி : தங்கபாலு சூசகம்

தமிழகத்தில் காங்கிரஸ் தனது இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு முந்த வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர். அதையே கட்சித் தலைமையும் விரும்புகிறது,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்தார்.

திருச்சியில் அக்டோபர் ஒன்பதாம் தேதி, காங்கிரஸ் தலைவர் சோனியா பங்கேற்கும் கட்சியின் 125வது ஆண்டு விழா சிறப்பு பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில், முன்னாள் மத்தியமைச்சர் திருநாவுக்கரசர், ஆதரவாளர்களுடன் கட்சியில் இணையும் விழா நடக்கிறது. சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் குமரன் நினைவு நிகழ்ச்சி, விருதுநகரில் காமராஜர் பிறந்த நாள் பொதுக்கூட்டம், மதுரையில் முன்னாள் அமைச்சர் கக்கன் நினைவு நாள் பொதுக்கூட்டம், கோவையில் முன்னாள் அமைச்சர் சி.சுப்பிரமணியம் நினைவு சிறப்பு நிகழ்ச்சி ஆகியவற்றை காங்கிரஸ் கட்சி நடத்தியுள்ளது. அவ்வகையில் திருச்சியில் சிறப்பு பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. மத்தியமைச்சர்கள் குலாம்நபி ஆசாத், சிதம்பரம், வாசன், முன்னாள் மாநிலத் தலைவர்கள், எம்.பி., எல்.எல்.ஏ.,க்கள் மற்றும் இன்னாள், முன்னாள் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். பொதுக்கூட்டம் நடத்த வாய்ப்புள்ள இடத்தை பார்வையிட வந்துள்ளோம்.

எனக்கு காங்கிரஸ் கட்சியில் 40 ஆண்டு கால அனுபவம் உண்டு. சோனியாவின் தலைமையில் நாடு முழுவதும் கட்சி எழுச்சி பெறுகிறது. அதில், தமிழகமும் இணைய வேண்டும். நான் உட்கட்சி பூசல் பற்றி வெளியில் பேச மாட்டேன். அவ்வாறு பேசுவதை நாகரீகமாக கருத மாட்டேன். தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி சிறப்பாக செயல்படுகிறது. மத்திய அரசின் திட்டங்கள் மூலம் தமிழகம் மிகுந்த பயன்பெறுகிறது. தேர்தல் கூட்டணி குறித்து தற்போது பேசுவது மரபல்ல. நான் மாநிலத் தலைவராக பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு செயல்பாடும் வெளிப்படையாக மேற்கொள்ளப்படுகிறது.

தமிழகத்தில் 20 சதவீதம் ஓட்டு வங்கி பெற்றுள்ள மூன்றாவது பெரிய கட்சியாக காங்கிரஸ் உள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் தன்னை முன்னிலைப்படுத்தும் கட்சியாக உள்ளது; தனது இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு முந்த வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர். அதையே கட்சித் தலைமையும் விரும்புகிறது. அதற்கான பணிகளை மேற்கொள்கிறோம். தேர்தல் நேரத்தில், ஆட்சியில் பங்கு, அதுகுறித்து தொண்டர்களின் எண்ணம், விருப்பம் உள்ளிட்டவை குறித்து கட்சித் தலைமைக்கு தெரிவிக்கப்படும். எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டத் தலைவர்கள், முன்னணி தலைவர்கள் கூட்டம் நடத்தி கட்சி செயல்பாடு குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு தங்கபாலு கூறினார்.

லட்சக்கணக்கானோர் இணையும் விழா: முன்னாள் மத்தியமைச்சர் திருநாவுக்கரசர் கூறுகையில், ""காங்கிரஸ் தலைவர் சோனியா, பொதுச்செயலாளர் ராகுல், முன்னணி தலைவர்களுடன் கலந்தாலோசித்து, நான் மட்டும் அதிகாரப்பூர்வமாக காங்கிரஸில் இணைந்தேன். கடந்த 35 ஆண்டுகால அரசியல் வாழ்வில், என்னுடன் உள்ள தொண்டர்களும், இணைவதுக்கு விழா நடத்த சோனியாவிடம் அனுமதி கேட்டிருந்தேன். பல்வேறு சூழ்நிலை காரணமாக, அக்டோபர் ஒன்பதாம் தேதி திருச்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் இணைப்பு விழாவுக்கு அனுமதி கொடுத்துள்ளார். இதற்கு சோனியாவுக் நன்றி. கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் காங்கிரஸ் இணைகின்றனர்

No comments: