2006, 2011 தேர்தல்களில் பதிவான ஓட்டுகளையும், கட்சிகள் பெற்ற ஓட்டுகளையும் ஒப்பிட்டால், தி.மு.க., மிகப்பெரிய சரிவையும், அ.தி.மு.க., அமோக உயர்வையும் சந்தித்துள்ளன. பா.ம.க., - காங்கிரஸ் கட்சிகளும் சரிவில் இருந்து தப்பவில்லை.
இந்த தேர்தல்களை ஒப்பிட்டால், தி.மு.க.,வின் ஓட்டு சதவீதம், 2006 தேர்தலை விட, 2011ல் 4.08 சதவீதம் குறைந்துள்ளது. அ.தி.மு.க.,வின் ஓட்டு சதவீதம், 2006 தேர்தலை விட, 6.44 சதவீதம் அதிகரித்துள்ளது. காங்கிரசின் ஓட்டு சதவீதம், சென்ற தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் 0.92 சதவீதம் சரிந்துள்ளது.அதே நேரம், தே.மு.தி.க.,விற்கு, 2006ல் பெற்றதை விட இப்போது 0.5 சதவீத ஓட்டுகள் குறைந்துள்ளன. ஆனால், வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையும், பெற்ற ஓட்டுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், 2006ல் 232 தொகுதிகளில் தே.மு.தி.க., போட்டியிட்டதும், 2011ல் 41 இடங்களில் மட்டுமே போட்டியிட்டதும் தான். இது தான், சதவீதம் குறைய காரணம். பா.ம.க.,வின் ஓட்டுகளிலும் 0.42 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட், பா.ஜ., இந்திய கம்யூ., ஓட்டு சதவீதத்தில் பெரிய மாற்றம் இல்லை.
No comments:
Post a Comment