Search This Blog

Friday, May 13, 2011

எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த்

தி.மு.க., அணி படுதோல்வி அடைந்துள்ளதால், எதிர்க்கட்சி அந்தஸ்தையும் அந்த அணி இழந்துள்ளது. அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற பிரதான கட்சியான தே.மு.தி.க., எதிர்க்கட்சி அந்தஸ்தை தக்கவைத்துள்ளது.

தேர்தலில் சுனாமி அலையாக பாய்ந்து வந்துள்ள அ.தி.மு.க., வெற்றியால் எதிர்க்கட்சி அந்தஸ்தை தி.மு.க., இழக்கிறது. காங்கிரசும் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறமுடியவில்லை. அ.தி.மு.க., கூட்டணியில் பிரதான கட்சியாக தே.மு.தி.க., உள்ளது. இக்கட்சி 41 தொகுதிகளில் போட்டியிட்டது. தி.மு.க.,வுடன் 18 தொகுதிகளிலும், காங்கிரசுடன் 15 தொகுதிகளிலும், பா.ம.க., வுடன் 6 தொகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகளுடன் ஒரு தொகுதியிலும், கொ.மு.க.,வுடன் ஒரு தொகுதியிலும் தே.மு.தி.க., போட்டியிட்டது.

அ.தி.மு.க.,வுக்கு அடுத்த இடத்தை தே.மு.தி.க., பெற்றுள்ளதால் அக்கட்சி, எதிர்க்கட்சி அந்தஸ்தை எட்டியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விஜயகாந்த் ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2001ம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராக அன்பழகனும், 1996ம் ஆண்டு தேர்தலில் சோ.பாலகிருஷ்ணனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த சட்டசபை தேர்தலில், "ஒன்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு' என்ற ரீதியில் தே.மு.தி.க., வின் ஒரே எம்.எல்.ஏ.,வாக விஜயகாந்த் மட்டுமே இருந்தார்.தற்போது தே.மு.தி.க., எதிர்க்கட்சி நிலையை அடைந்திருப்பதால், அக்கட்சி அபார வளர்ச்சி அடைந்துள்ளது. இதன்மூலம், அக்கட்சிக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம், நிரந்தர சின்னம், கொடி ஆகியவையும் கிடைக்க வாய்ப்புள்ளது.

No comments: