சங்ககிரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் விஜயலட்சுமி பழனிசாமி வெற்றி பெற்றார். இங்கு அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சுமார் 35 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
நேரடி போட்டி
சேலம் மாவட்டம் சங்ககிரி தொகுதியில் தமிழக வேளாண்மை துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தி.மு.க. சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிசாமி அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டார்.
இவர்களை தவிர பா.ஜனதா சார்பில் பி.நடராஜன், இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மோகன்குமார், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சனாஉல்லாகான் மற்றும் 9 சுயேச்சைகள் போட்டியிட்டனர்.
அ.தி.மு.க. முன்னணி
இந்த தொகுதி ஓட்டுகள் சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று எண்ணப்பட்டன. ஓட்டு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே அ.தி.மு.க. வேட்பாளர் விஜயலட்சுமி பழனிசாமி அதிக ஓட்டுகள் பெற்று முன்னணியில் இருந்தார்.
ஒவ்வொரு சுற்று முடிவிலும் அவர் முன்னணியில் இருந்தார். அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் 2-வது இடத்தில் இருந்தார்.
அபார வெற்றி
இறுதியில் 19 சுற்றுகள் ஓட்டுகள் எண்ணப்பட்டதில் அ.தி.மு.க. வேட்பாளர் விஜயலட்சுமி பழனிசாமி 1,05,502 ஓட்டுகள் பெற்று, 35,070 ஓட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் 70,432 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார்.
இந்த தொகுதியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட முடிவு விவரம் வருமாறு:-
மொத்த ஓட்டுகள் - 2,14,549
பதிவான ஓட்டுகள் - 1,84,859
விஜயலட்சுமி பழனிசாமி (அ.தி.மு.க.) - 1,05,502
வீரபாண்டி ஆறுமுகம் (தி.மு.க.) - 70,432
மு.பூபதி (சுயே) - 1194
நடராஜன் (பா.ஜனதா) - 1124
எஸ்.கே.வெங்கடாசலம் (சுயே) - 1103
மு.மோகன்குமார்(இந்திய ஜனநாயக கட்சி) - 1095
புஷ்பராஜ் (சுயே) - 851
சனா உல்லாகான் (பகுஜன் சமாஜ் கட்சி) - 844
சு.சக்திவேல் (சுயே) - 551
க.சரவணன் (சுயே) - 537
எம்.மாது (சுயே) - 509
மா.இளங்கோ (சுயே) - 402
தினேஷ்குமார் (சுயே) - 383
மு.சந்திரன் (சுயே) - 337
No comments:
Post a Comment