சட்டசபை தேர்தல் முடிவில், மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் 14 பேரும் தோல்வியை தழுவினர். இதன் மூலம், அவரது தமிழக அரசியல் களத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக, எதிர்கோஷ்டியினர் கருதுகின்றனர்.
தமிழகத்தில் காங்., செல்வாக்கு சரிந்து வரக்காரணமே, அமைச்சர்கள் சிதம்பரம், வாசன், முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு போன்றவர்களின் கோஷ்டி பூசல் தான். காங்., எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கிறதோ அது வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது. அது இபோது தலைகீழாக மாறியுள்ளது.மத்திய அமைச்சர் சிதம்பரம், தமிழக அரசியலில் கால் பதித்து, தனது மகன் கார்த்திக்கை பெரிய பதவியில் அமர்த்தி விடவேண்டும் என்ற ஆவலில், அரசியல் நடத்தினார். இதனால், காங்.,ல் கோஷ்டி அரசியல் உருவானது. தி.மு.க., கூட்டணியில் காங்.,க்கு 63 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில், சிதம்பரம் தனது ஆதரவாளர்களான, சிவகங்கை தொகுதியில் ராஜசேகரன், கே.ஆர்., ராமசாமி, ராம.சுப்புராம் உட்பட மாநிலத்தில், 14 பேருக்கு சீட்டுக்களை பெற்று தந்தார். முடிவில், இவர்கள் அனைவரும் தோல்வியடைந்து, இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டனர்.
இது குறித்து காங்., மூத்த நிர்வாகிகள் கூறுகையில்,"இத்தேர்தல் முடிவு, சிதம்பரத்தின் தமிழக அரசியல் களத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்து விட்டது. இனி, நிச்சயம் மாநில அரசியலுக்கு வரமாட்டார். காங்கிரசை வளர்த்தால் தான், நாம் அரசியல் செய்யமுடியும் என்பதை தலைவர்கள் மறந்து விடுகின்றனர். இதனால் தான், காங்., நாளுக்கு நாள் தனது பலத்தை இழந்து வருகிறது,' என்றனர்.
No comments:
Post a Comment