Search This Blog

Tuesday, May 17, 2011

மேட்டூர் தொகுதியில் இறுதிவரை பரபரப்பு: கடும் இழுபறியில் தே.மு.தி.க. வெற்றி பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தோல்வி

மேட்டூர் தொகுதியில் கடும் இழுபறியில் தே.மு.தி.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் வெற்றி பெற்றார். இங்கு முடிவு அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் இறுதிவரை பரபரப்பு நிலவியது.

பா.ம.க.-தே.மு.தி.க.

சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி மாநில தலைவர் ஜி.கே.மணி போட்டியிட்டார். அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தே.மு.தி.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் களம் கண்டார்.

சேலம் மாவட்டத்தில் பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் நேரடியாக போட்டியிட்ட ஒரே தொகுதி இந்த தொகுதிதான். இந்த தொகுதிக்கான ஓட்டுகள் மேச்சேரி காவேரி பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று எண்ணப்பட்டன.

கடும் இழுபறி

இதில் தொடக்கத்தில் பா.ம.க. வேட்பாளர் ஜி.கே.மணி கூடுதல் ஓட்டு பெற்று முன்னணியில் இருந்தார். ஆனால், இறுதிச்சுற்றுகளில் தே.மு.தி.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் முன்னிலை பெற்றார். அவருக்கும், ஜி.கே.மணிக்கும் ஒவ்வொரு சுற்றுகளிலும் கடும் போட்டி நிலவியது.

இறுதிச்சுற்று நெருங்கும் சமயம் தே.மு.தி.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு ஓட்டுகள் சற்று கூடுதலாக கிடைத்ததால் அவரது வெற்றி நம்பிக்கை துளிர்த்தது. ஆனால், 15-வது சுற்றில் ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனால் முடிவு அறிவிப்பதில் இரவுவரை பரபரப்பு நிலவியது.

தே.மு.தி.க. வெற்றி

எந்திரத்தின் கோளாறு சரி செய்யப்பட்டப்பின், தே.மு.தி.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். அவர் 75,672 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜி.கே.மணியை காட்டிலும் 2,594 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார். 73,078 வாக்குகள் பெற்று ஜி.கே.மணி தோல்வி அடைந்தார்.

அதிகாரப்பூர்வ முடிவு விவரம் வருமாறு:-

பதிவான ஓட்டுகள்:- 2,12,608

பதிவான ஓட்டுகள்:- 1,69,607

1) எஸ்.ஆர்.பார்த்திபன் (தே.மு.தி.க.)- 75,672

2) ஜி.கே.மணி (பா.ம.க.)- 73,078

3) கே.பத்மராஜன் (சுயே.)- 6,273

4) ஏ.பாக்கியம் (சுயே.)-2738

5) ஆர்.செந்தில்குமார் (இந்திய ஜனநாயக கட்சி)- 2487

6) பி.பாலசுப்பிரமணியன் (பா.ஜனதா)- 2286

7) எஸ்.கே.பார்த்திபன் (சுயே.)- 1338

8) ஆர்.மணி (சுயே.)-1254

9) வி.ரஞ்சித் (சுயே.)- 1254

10) பி.முருகன் (சுயே.)-1110

11) பி.பார்த்திபன் (சுயே.)-672

12) ஜி.பார்த்திபன் (சுயே.)-605

13) கே.பழனி (சுயே.)-473

14) கே.பழனிசாமி (சுயே.)- 367.

No comments: