பாரதிய ஜனதா அரசை கலைக்க வேண்டுமென்று கவர்னர் பரத்வாஜிடம் எதிர்க்கட்சியினர் வற்புறுத்தினர்.கர்நாடகா சட்டசபையில் குரல் வாக்கெடுப்பில், பா.ஜ., வெற்றி பெற்றதாக சபாநாயகர் போப்பய்யா அறிவித்ததும், காங்கிரஸ், ம.ஜ.த., மற்றும் பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் கவர்னர் பரத்வாஜை சந்திக்க ராஜ்பவன் சென்றனர்.
காலை 11 மணியளவில் குமாரசாமி தலைமையில் ம.ஜ.த., எம்.எல்.ஏ.க்களும், அதிருப்தி பா.ஜ., மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஜார்கிகோளி தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ராஜ்பவன் சென்று, கவர்னர் பரத்வாஜை சந்தித்து, அரசை உடனடியாக கலைக்க வேண்டுமென்று வற்புறுத்தினர்.கவர்னர் மாளிகையில் குமாரசாமி கூறுகையில், ""சட்டசபையில் ஒப்புதல் பெறப்பட்ட பா.ஜ., அரசின் மீதான குரல் வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன்.
எடியூரப்பா தன் பதவியின் கவுரவத்திற்கு மாறாக நடந்து கொண்டுள்ளார். ஹிட்லரை போல் அவர் நடந்து கொண்டுள்ளார். ஜனநாயகத்தை கொலை செய்துள்ளார். அரசியல் சாசன விதிமுறைகளுக்கு எதிராக நடந்து கொண்டுள்ள இந்த அரசை கலையுங்கள். உடனடியாக, மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை பிரகடனம் செய்ய வேண்டும் என்று கவர்னரை வலியுறுத்தி உள்ளளோம்,'' என்றார்.காங்கிரஸ் தலைவர் தேஷ்பாண்டே கூறுகையில், ""சட்டசபையில் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களை உள்ளே விடாமல் எடியூரப்பா ஜனநாயக படுகொலை செய்துள்ளார். எனவே இந்த ஆட்சியை உடனடியாக கலைத்து ஜனாதிபதி ஆட்சிக்கு உத்தரவிட வேண்டும்
No comments:
Post a Comment