Search This Blog

Sunday, October 10, 2010

காங்கிரஸ் மாநாடு திருச்சி


காங்கிரஸ் கட்சியின் 125-வது ஆண்டு விழா, அகில இந்திய காங்கிரஸ் தலைவராக 4-வது முறையாக பொறுப்பேற்ற சோனியாகாந்திக்கு பாராட்டு விழா மற்றும் திருநாவுக்கரசர் ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் கட்சியில் இணையும் விழா என முப்பெரும் விழா திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் நடந்தது.
 
இதையொட்டி மன்னார்புரம் மைதானத்தில் காங்கிரசார் லட்சக்கணக்கில் திரண்டு விட்டனர். மாலை 4 மணிக்கு கூட்டம் என்றாலும் 2 மணி முதலே.. மைதானத்தில் கூட்டம் திரள தொடங்கி விட்டது.
 
5.35 மணிக்கு கூட்டம் நடக்கும் இடத்துக்கு வந்த சோனியா காந்தி மக்கள் வெள்ளத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். 
தொண்டர்களை பார்த்து அடிக்கடி கையசைத்துக் கொண்டேயிருந்தார்.
 
சோனியா பேசும்போது இந்த கூட்டம் என் மனதை தொட்டு விட்டது என்று கூறி மகிழ்ந்தார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் போல திரண்ட கூட்டத்தை பார்த்து உணர்ச்சி பிழம்பாக நிற்கிறேன் என்றார்.
 
முன்பு ராஜீவ்காந்தியோடு தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது எவ்வாறு உணர்ச்சி வசப்பட்டேனோ அதே உணர்ச்சி வசத்தோடு நிற்கிறேன் என்றார் சோனியா. இது காங்கிரஸ் கட்சியின் புதிய சரித்திரத்தை தொடக்கத்தை எழுதுகிற ஒரு நிகழ்வு. ஒவ்வொருவரும் ஒன்றுபட்டு உழைத்து புதிய சரித்திரத்தை எழுத வேண்டும் என்று சோனியா வேண்டுகோளும் வைக்க தவறவில்லை.
 
தமிழகத்தில் நாம் கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணியை மதிக்கி றோம். ஆனால் காங்கிரஸ் தனித்துவத்தை இழந்துவிடாமல் கண்ணும் கருத்துமாக செயல்படுவது முக்கியம் என்று “பஞ்ச்” வைத்தார் சோனியாகாந்தி. அப்போது இ.வி.கே.எஸ்.இளங்கோவன் முகத்தில் சிரிப்பு வெளிப்பட்டது.
 
தமிழகம் உள்பட நாடுமுழுவதும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்திராஅவாஸ் யோசனா என்ற ஏழைமக்களுக்கு வீடு கட்டும் திட்டம் கிராம வேலை உறுதி திட்டம் போன்ற திட்டங்களை இளைஞர் காங்கிரஸ் உள்பட அனைவரும் கிராமங்கள் தோறும் சென்று மக்களிடம் எடுத்து கூற வேண்டும். புதிய தொடக்கத்தை எழுத நீங்கள் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்றார் சோனியாகாந்தி.
 
கூட்டம் முடிந்ததும் மேடையை விட்டு இறங்கி கூட்டத்தினரை நோக்கி சென்று சோனியா கையசைத்தார். தொண்டர்கள் கொடுத்த கதர்துண்டுகளை பெற்றுக் கொண்டார்.
 
மேடையில் பேசிய மத்திய மந்திரி ப.சிதம்பரம் இந்தியாவில் நீங்கள் ஆட்சி செய்ய வழி நடத்துவது போல தமிழகத்திலும் நீங்க வழிநடத்த வேண்டும் என்றார். அதே போன்று மத்திய மந்திரி ஜி.கே.வாசன் காங்கிரஸ் 43 வருடமாக மற்றகட்சிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிற கட்சியாக உள்ளது. இதை மாற்றி வருங்காலத்தில் முதல் இயக்கமாக வரவேண்டும் என்றார். திருநாவுக்கரசர் பேசும் போது வருகிற தேர்தலில் கூட்டணி. அடுத்த வரும் தேர்தலில் ஆட்சி அமைப்போம் என்றார். 
 
முன்னதாக திருச்சி வந்த சோனியாகாந்தியை, விமான நிலையத்தில், கனிமொழி எம்.பி. சால்வை கொடுத்து வரவேற்றார்.
 

No comments: