கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம், தற்போது டில்லியை முகாமிட்டுள்ளது. சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பு, விதிமுறைகளின்படி நடந்ததா என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.எதிர்ப்பு எம்.எல்.ஏ.,க்கள் 16 பேரில், பா.ஜ.,வைச் சேர்ந்த 11 பேர் தகுதி நீக்கம் வேண்டுமானால் ஏற்கப்படலாம். ஆனால், சுயேச்சைகளான ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது, அரசியல் சட்ட சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. தவிர, அவ்வளவு எளிதாக ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுமா என்பது சந்தேகமே என்று தெரியவந்துள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ., அரசை கவிழ்க்கும் பொறுப்பை, மத சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமியிடம் காங்கிரஸ் வழங்கியிருந்தது. அதன்படி, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் 11 பேர் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் ஐந்து பேர் என, மொத்தம் 16 பேர், எடியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர்.இந்த 16 எம்.எல்.ஏ.,க்களும், கடந்த 5ம் தேதி அன்று, கவர்னரிடம் ஒரு கடிதம் அளித்தனர். அதில், எடியூரப்பா தலைமையில் நம்பிக்கை இழந்துவிட்டதாக தெரிவித்திருந்தனர். இதையடுத்து, பரபரப்பு ஏற்பட்டது. இந்த 16 பேரையும் தமிழகம், கேரளா, ஆந்திரா, கோவா என, பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, குமாரசாமி ஆட்கள் பாதுகாத்தனர்.நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தும்படி கவர்னர் ஆணையிட்டதின்போரில், அம்மாநில சட்டசபைக்கு நேற்று அழைத்து வரப்பட்டிருந்தனர்.
ஆனால், இவர்களை நம்பிக்கை ஓட்டெடுப்பில் கலந்து கொள்ள விடாமல் செய்யும் வகையில், இவர்களை, சபாநாயகர் பதவி நீக்கம் செய்துவிட்டார்.இதையடுத்து நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், எடியூரப்பா அரசு வெற்றி பெற்றது என்பது, இப்போது பரபரப்பான விஷயம். ஆனால், கவர்னருக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது என்றால், அது சுயேச்சைகள் மீது பாயுமா என்பதும் கேள்வி.அந்த வகையில், தற்போது பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் 11 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது வேண்டுமானால் செல்லுபடி ஆகும். ஆனால், கூடவே ஐந்து சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது தான் மிகப்பெரிய அரசியல் சாசன சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எடியூரப்பா அரசு வெற்றிபெற்ற விதம் குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணீஷ்திவாரி கருத்து தெரிவித்துபோது, "அரசியல் படுகொலை செய்துவிட்டு அரசை காப்பாற்றியுள்ளனர்' என்றார்.
பதிலுக்கு பா.ஜ., செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன், "காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படும் கவர்னர் பரத்வாஜ் இனிமேல் அந்த பதவியில் நீடிக்கக் கூடாது. அவரது ஆலோசனையின்படியே இந்த நாடகம் அரங்கேறியுள்ளது. உடனடியாக அவரை ஜனாதிபதி திரும்ப பெற வேண்டும்' என தெரிவித்தார்.
கர்நாடக சட்டசபையில் தற்போது நடந்து முடிந்துள்ள நம்பிக்கை ஓட்டெடுப்பு, விதிமுறைகளின்படி தான் நடந்ததா என்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. குரல் ஓட்டெடுப்பு மூலம் நடத்தப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.சபாநாயகரோ யாரும் டிவிஷன் ஓட்டெடுப்பு கேட்கவில்லை என்றிருக்கிறார். சபாநாயகர் செயல் சரியா என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தவிர, எம்.எல்.ஏ.,க்களை பதவி நீக்கம் செய்துள்ளது குறித்தும் ஆராயப்படவுள்ளது.பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களின் தகுதி நீக்கத்தை ஏற்க முடியும். ஏனெனில், கட்சிக் கட்டுப்பாடு என்பதைக் காக்கும் அஸ்திரமாக கட்சித் தாவல் தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
ஆனால், சுயேச்சைகளின் தகுதி நீக்கம், அரசியல் சாசன விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இந்த கேள்விகளுக்கு எல்லாம் தனது அறிக்கையில் கவர்னர் பரத்வாஜ் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை வைத்தே, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு இறுதி முடிவெடுக்கும்.ஆனாலும், ஜனாதிபதி ஆட்சிக்கு ஒப்புதல் பெறவேண்டுமெனில், பார்லிமென்டின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெற வேண்டும். ராஜ்யசபாவில் காங்கிரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பதால், அவ்வளவு எளிதில், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த முடியுமா என்பது சந்தேகமே என டில்லியில் தகவலறிந்த வட்டாரங்கள்
No comments:
Post a Comment