Search This Blog

Thursday, July 1, 2010

தமிழில் கையெழுத்து

கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், இளைஞர்கள் மத்தியில் தமிழ் மொழியை வளர்க்கவும், காப் பாற்றவும் பல்கலைக் கழகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, சென்னை பல்கலைக் கழகம் முதற்கட்டமாக சில முயற்சிகளை மேற்கொள்ள சிண்டிகேட் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட் டது.இன்று முதல் சென்னை பல்கலை வளாகங்களின் பெயர் தமிழில் மாற்றப்படும். சேப்பாக் கம் வளாகம் தொல்காப்பியர் வளாகம் எனவும், மெரீனா வளாகம் பரிதிமாற் கலைஞர் எனவும், தரமணி வளாகம் மறைமலையடிகள் எனவும், சேத்துப் பட்டு வளாகம் சேக்கிழார் எனவும், மதுரவாயல் வளாகம் கம்பர் எனவும், கிண்டி வளாகம் பாரதியார் எனவும் பெயர் மாற்றம் செய்யப்படும். பிஎச்.டி., ஆராய்ச்சிக் கட்டுரையை ஆங்கிலத்துடன், தமிழிலும் மொழி பெயர்த்து சமர்ப் பித்தால், மொழி பெயர்ப்பிற்காக 20 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். துணைவேந்தர் தலைமையில் ஐந்து பேர் குழு, தமிழ் மொழிபெயர்ப்பை பரிசீலித்து இந்த உதவித் தொகையை வழங்கும்.

செம்மொழித் தமிழ் வழி ஆராய்ச்சி உதவித் தொகை புதிதாக உருவாக்கப்படுகிறது. இதில் பிஎச்.டி., ஆராய்ச்சியை தமிழில் மேற்கொள்பவர்களுக்கு மாதந்தோறும் 5,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். ஆண்டுதோறும் அறிவியல் பாடத் தில் 15 பேருக்கும், கலைப் பாடத் தில் 10 பேருக்கும் இந்த உதவித் தொகை வழங்கப்படும். கல்லூரிகளில் தமிழ் வழி படிப்பை இந்த ஆண்டு துவங்க விரும்பினாலும், அக்கல்லூரிகளுக்கு உடனடியாக ஆய்வு நடத்தி அனுமதி வழங்கப்படும். கல்லூரிகளில் வழங்கப்படும் படிப் பிற்கு பல்கலைக் கழக இணைப்பு பெற, இரண்டு லட்சம் ரூபாய் வரை கட்டணமாகச் செலுத்த வேண்டும். தமிழ் வழி படிப்புகளுக்கு இணைப்பு கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படும். சென்னை பல்கலைக் கழக ஆட்சி மொழியான தமிழை, நிர் வாகத்திலும் புகுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இம்மாதம் 5ம் தேதி முதல் சென்னை பல்கலைக் கழக பேராசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக தமிழில் கையெழுத்திட வேண் டும். தமிழ் மொழியில் கையெழுத்திடாத கோப்புகளை, துணைவேந்தர் பரிசீலிக்க மாட்டார். தமிழை தாய்மொழியாகக் கொள் ளாதவர்களும், தமிழில் கையெழுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப் படுவர். செப்., 15ம் தேதிக்குள், அனைத்து துறைகளுக்கும் தமிழ் மொழி மென்பொருள் வழங்கப்படும். அதற்கு முன், தேவையான பயிற்சி கொடுக்கப்படும். ஆவணங்களும், கோப்புகளும் முழுமையாக தமிழ் மொழியில் உருவாக்கப்படும். "தமிழ் லெக்சிகன்' முதல் தொகுதி வரும் டிசம்பருக்கும் வெளியிடப்படும். தமிழ் டிக்ஷனரியில் இடம் பெறாத புதிய தமிழ் வார்த்தைகளை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படும். தமிழ் ஆர்வலர்கள் புதிய தமிழ் வார்த்தைகளை, "tamilwordcorpus.unom@gmail.com' என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம். சென்னை பல்கலை இணையதளத்தை தமிழ் மொழியிலும் உருவாக்க முயற்சி மேற்கொள் ளப்படும். இவ்வாறு திருவாசகம் கூறினார். முன்னதாக, சென்னை பல்கலைக் கழக மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற அனந்தகிருஷ்ணனை, துணைவேந்தர் திருவாசகம் பாராட்டினார்.

சென்னை பல்கலைக் கழக பேராசிரியர்கள், ஊழியர்கள், இம்மாதம் 5ம் தேதி முதல் தமிழ் மொழியில் கையெழுத்து போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

No comments: