Search This Blog

Sunday, April 17, 2011

காங்., வேட்பாளர் தேர்வில் பணம்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலரும், நாமக்கல் எம்.எல்.ஏ.,வுமான ஜெயக்குமார், டில்லி காங்கிரஸ் வட்டாரத்தில் செல்வாக்கு உள்ள தமிழக காங்கிரஸ் பிரமுகர். தி.மு.க., வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச, காங்கிரஸ் தலைமை நியமித்த ஐவர் குழுவில் இடம் பிடித்தவர். தற்போது மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் ஜெயக்குமார், மனதில் பட்டதை, மறைக்காமல் பேசக்கூடியவர். தமிழக காங்கிரசின் தற்போதைய குளறுபடி குறித்து கேட்டபோது, அவரது பேச்சில் காரமும், வேகமும், ஆதங்கமும் ஒருசேர எதிரொலித்தது. இனி அவரது பேட்டி:
காங்கிரசில் இப்போது நடக்கும் குளறுபடிகளுக்கு யார் காரணம்?
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு தான் காரணம். அவருடைய செயல்பாடுகள் அனைத்தும், காங்கிரஸ் கட்சியின் நன்மைக்கும், வளர்ச்சிக்கும் எதிராகவே இருக்கிறது.
எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ., முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் உட்பட 19 பேரை கட்சியிலிருந்து தங்கபாலு நீக்கியுள்ளாரே?
அவர்களை நீக்க தங்கபாலுவுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்க அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி விதி, "19 எப் 5' தெளிவாக உள்ளது. இதன்படி, மாநில அளவில், கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க, குமரிஅனந்தன் தலைமையிலான குழு உள்ளது. அகில இந்திய அளவில், கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர் அந்தோணி தலைமையிலான குழு உள்ளது.
இதன் அடிப்படையில், தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள 19 @பர் மீது குமரிஅனந்தன் தலைமையிலான குழு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவும், 15 நாள் நோட்டீஸ் அனுப்பி, அதற்கு பதில் பெற்று, அந்த பதில் திருப்தி இல்லை என்றால் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற, நடைமுறைகள் எதுவும் எஸ்.வி.சேகர், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட 19 பேர் நீக்கத்தில் பின்பற்றப்படவில்லை. அதிகாரமே இல்லாமல், தங்கபாலு அவர் இஷ்டத்துக்கு செயல்பட்டுள்ளார்.
அவர்கள் மீது திடீரென்று நடவடிக்கை எடுக்க என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
அது தான் புரியவில்லை. ஓட்டுப் பதிவு நடைபெறும் வரை காத்திருந்துவிட்டு, உடனடியாக அவர்களை நீக்கியுள்ளார். இந்த நடவடிக்கையை எதிர்க்காமல் மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன் போன்றவர்களும் மவுனமாக இருக்கின்றனர்.
கூட்டணிக் கட்சிகளுடன் பேச அமைக்கப்பட்ட ஐவர் குழுவில் தங்கபாலுவின் செயல்பாடுகள் எப்படி இருந்தன?
தி.மு.க.,வுடன் தொகுதிப் பங்கீடு முடிந்ததும், ஐவர் குழுவை புறந்தள்ளிவிட்டு தங்கபாலு செயல்படத் துவங்கிவிட்டார். வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில், ஐவர் குழுவை அவர் கண்டு கொள்ளவே இல்லை.
காங்கிரஸ் சட்டŒபை குழு உறுப்பினர் ஒருவரை, வேட்பாளர்களை தேர்வு செய்யும் குழுவில் நியமித்து, முறையான தேர்வு நடத்தி, தலைமைக்கு அனுப்பலாம் என்று சிதம்பரம், வாசனிடம் சொன்னேன். அவர்கள் அதற்கு எதுவும் செய்யவில்லை. இதனால், தங்கபாலு அவர் இஷ்டம் போல் நடந்து கொண்டார். அதனால், பல குளறுபடிகள் காங்கிரசில் ஏற்பட்டுள்ளது. இதற்கு சிதம்பரமும், வாசனும் பொறுப்பேற்க வேண்டும்.
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெருமளவில் பணம் விளையாடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?
நானும் இந்த குற்றச்சாட்டை அறிவேன். மார்ச் 21 அல்லது 22ம் தேதி என்று நினைக்கிறேன். எனக்கு ஒரு போன் வந்தது. அதில், திரு.வி.க., நகர் வேட்பாளரை மாற்றம் செய்துள்ளார்கள். இதற்கு, கணிசமான பணம் கைமாறியுள்ளது என்று கூறினர். இதை உடனே உறுதி செய்ய களத்தில் இறங்கினேன். போனில் வந்த தகவல் உண்மைதான் என்று தெரிந்து கொண்டேன்.
யாருக்கு பணம் கைமாறியது? எவ்வளவு கைமாறியது?
தமிழகத்தில் உள்ள ஒரு முக்கியப் புள்ளிக்கு கைமாறியது. அது கணிசமான தொகை.
யார் அந்த நபர்? காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தங்கபாலுக்கு அதில் பங்கு உள்ளதா?
யார் அந்த நபர் என்று பெயரை சொல்ல முடியாது. தங்கபாலுவுக்கு அதில் தொடர்பு உள்ளதா? என்று எனக்கு தெரியாது.
இந்த குளறுபடிகளால் காங்கிரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதா?
காங்கிரஸ் நூற்றாண்டு அனுபவம் உள்ள கட்சி. இதற்கு, சில தலைவர்களால் களங்கம் ஏற்படுத்த முடியாது.
காங்கிரசின் தேர்தல் பணி எப்படி இருந்தது?
காங்கிரசின் தலைவர்களுக்கு தேர்தல் பிரசாரம் செய்வதற்கான எந்த திட்டங்களையும், மாநில காங்கிரஸ் செய்து தரவில்லை. சிதம்பரம், வாசன் போன்றவர்கள் அவர்களாகவே பிரசாரங்களைச் செய்து கொண்டனர். எந்தவிதமான ஒருங்கிணைப்பையும் மாநில காங்கிரஸ் கமிட்டி செய்யவில்லை.
இவ்வளவு நடந்தும், மாநில அளவிலான தலைவர்கள் எதையும் கண்டு கொள்ளவில்லையே?
தங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்து விட்டதால் அவர்கள் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களோ? என தெரியவில்லை. தேர்தல், அதையொட்டி நடந்த சம்பவங்கள் குறித்து சோனியாவுக்கு விரிவான அறிக்கையை தாக்கல் செய்வேன்.
தேர்தலில், தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்கு, காங்கிரசால் பின்னடைவு ஏற்பட்டால், தி.மு.க.,வுக்கு காங்கிரஸ் மீதுள்ள நல்லெண்ணம் குறையுமா?
காங்கிரசால் பின்னடைவு ஏற்பட்டால், அந்த அணுகுமுறை ஏற்படலாம்.

No comments: