Search This Blog
Wednesday, August 11, 2010
ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு : அமைச்சர்கள் குழு ஒப்புதல்
ஜாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த மே மாதம், நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு துவங்கியது. ஆனால், ஜாதி அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என, பெரும்பாலான கட்சிகள் கோரி வந்தன. ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஜாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என, வற்புறுத்தி வந்தன. பாரதிய ஜனதா கட்சியும் இதற்கு ஆதரவு தெரிவித்தது. மத்திய அமைச்சர்கள் பலரும் இந்த கோரிக்கையை ஆதரித்தனர். இந்நிலையில், ஜாதி அடிப்படையில் மக்கள் கணக்கெடுப்பு நடத்துவது குறித்து மத்திய அமைச்சர்கள் குழு நேற்று கூடி விவாதித்தது. வரும் டிசம்பர் மாதம் முதல், ஜாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த இந்தக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment