Search This Blog

Monday, August 2, 2010

அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் புதிய நிர்வாகிகள்: தமிழகத்தை சேர்ந்த 2 பேருக்கு பதவி

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஒப்புதலுடன் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் இன்று அறிவிக்கப்பட்டனர்.
 
காங்கிரஸ் பொதுச்செயலாளரும், இளைஞர் காங்கிரஸ் கண்காணிப்பாளருமான ராகுல்காந்தியின் ஒப்புதலுடன் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சடவ் நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
 
10 பொதுச்செயலாளர்கள், 9 செயலாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 2 பேருக்கு பதவி கிடைத்து உள்ளது.
அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவி கரூரை சேர்ந்த ஜோதிமணி என்பவருக்கு கிடைத்துள்ளது.

தமிழக காங்கிரஸ் வரலாற்றில் இப்பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் ஆவார். அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளராக இருந்த அவர் தற்போது பொதுச்செயலாளராக பதவி உயர்வு பெற்று உள்ளார்.
 
இதேபோல பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கும் பதவி கிடைத்து உள்ளது. அவருக்கு அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் பொறுப்பு கிடைத்து உள்ளது. அவர் ஏற்கனவே இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளராக இருந்தார்

No comments: