Search This Blog

Monday, August 2, 2010

தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சிக்கு வர முடியாது: கக்கன் நூற்றாண்டு விழாவில் தலைவர்கள் பேச்சு

தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் அமைச்சர் கக்கனின் நூற் றாண்டு விழா மதுரையில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மதுரை மருத்துவ கல்லூரி மைதானத்தில் நடந்த இந்த விழாவில் தென் மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். விழா மைதானம் முழுவதும் காங்கிரசார் திரண்டு இருந்து நிகழ்ச்சியை கண்டு களித்தனர். முன்னதாக இசையமைப்பாளர் தேவா, பாடகர் சீர்காழி சிவ சிதம்பரம் ஆகியோரின் இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தன.
 
கக்கன் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிக்கு தமிழக காங்கிஸ் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமை தாங்கினார். அவர் பேசும்போது, முன் னாள் அமைச்சர் கக்கன் ஏழையாக பிறந்து ஏழை யாகவே மறைந்தார். அவரது வாழ்க்கையை நாம் அனை வரும் பின்பற்ற வேண் டும். தமிழக காங்கிரசில் புதிதாக 13 லட்சம் இளை ஞர்கள் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர். இது காங்கிரசுக்கு கிடைத்த பெருமை ஆகும் என்று குறிப்பிட்டார்.
 
முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங் கோவன் பேசியதாவது:-

கக்கனிக் வாழ்க்கை முறை மக்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை காட்டு கிறது. ஆனால் இன்றைக்கு சில தலைவர்களின் வாழ்க்கை மக்கள் இப்படி வாழக் கூடாது என்பதை காட்டுகிறது. இங்கே கூடி யுள்ள கூட்டம் தலை நிமிந்த கூட்டம். மத்திய அரசின் திட்டங்கள் ஏழை மக்களுக்கு சென்றடைய வேண்டும். இதனை மாநில அரசு கண்காணிக்க வேண்டும். தவறுகளை சுட்டி காட்டும் இயக்கம் தான் காங்கிரஸ்.
 
இந்த இயக்கம் தமிழ் நாட்டில் முழு நிலவாக இருக்கிறது. இந்த நிலவுக்கு சூரிய சக்தி தேவை இல்லை. இந்த நிலவு அபார சக்தியாக விளங்கி கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஆதரவு இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சிக்கு வர முடியாது. வரும் காலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அமைச்சர்கள் மேலிடத்தில் எடுத்து சொல்ல வேண்டும். அப்போது தான் தமிழகத்தில் காங்கிரஸ் வலிமையான இயக்கமாக திகழும்.
 
இவ்வாறு அவர் பேசினார்.
 
மத்திய மந்திரி ஜி.கே.வாசன் கூறியதாவது:-
 
தாழ்த்தப்பட்ட மக்களுக் காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 1000 கிராமங் களுக்கு வளர்ச்சி பணிகளை செய்ய ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அடிமட்ட தொண்டர்களுக்கும் அங்கீ காரம் காங்கிரசில் தான் கிடைக்கிறது. மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வருகிறோம். போராடுகிறோம்.
 
இதனால் தான் மற்ற கட்சிகளின் வெற்றி தோல் வியை நிர்ணயிக்கும் சக்தி யாக காங்கிரஸ் திகழ்கிறது. வரும் காலங்களில் இது மாற வேண்டும். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி முதன்மை இயக்காக மாற வேண்டும். விளம்பர போர்டு வைப்ப தில் நாம் மற்றவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை காட்டியுள்ளீர்கள். இனிவரும் காலங்களில் இதனை குறைத்து கொண்டு மக்கள் பணிகளில் ஆர்வம் காட்ட வேண்டும். கிராமங் களுக்கு சென்று மத்திய அரசின் திட்டங்களை எடுத்து சொல்ல வேண்டும்.
 
இவ்வாறு அவர் பேசினார்.
 
முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர் பேசுகை யில், அடுத்த தேர்தலில் தமிழகத்தில் அமைய உள்ள ஆட்சியில் காங்கிரஸ் இடம் பெற வேண்டும். 2016 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
 
விழாவில் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசிய தாவது:-
 
தாழ்த்தப்பட்ட சமுதாயத் தில் பிறந்து கக்கன், அம்பேத்கார் போன்ற தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி சாதனை படைத்துள்ளனர். தாழ்த்தப்பட்ட-தலித் சமு தாயத்தை சேர்ந்தவர்கள் தனி இயக்கங்கள் நடத்துவதால் தலித்-தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்வில் விடிவு ஏற்படும் என்ற நம்பிக்கை இல்லை. எனவே தலித்- தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் காங்கிரசுக்கு வரவேண்டும்.
 
தலித்-தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் காங்கிரசுக்கு வந்தால் இன்னொரு 50 ஆண்டு கால சாதனை படைக்க காங்கிரஸ் பேரியக் கம் தயாராக உள்ளது. முன்னாள் அமைச்சர் கக்கன் எளிமையாக நேர்மையாக இருந்தார். அவரை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும்.
 
இவ்வாறு அவர் பேசினார். 
 
விழாவில் முன்னாள் அமைச்சர் பூவராகன், கக்கன் மகள் கஸ்தூரி, முன்னாள் மாநில தலைவர்கள் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி, எம்.பி.க்கள் சுதர்சன நாச்சியப்பன், ஆருண், மாணிக்கதாகூர், சித்தன், ராமசுப்பு, காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம், எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.கே.ராஜேந் திரன், வசந்தகுமார், ராம சாமி, யசோதா, சுந்தரம் ஜெயக்குமார்,

முன்னாள் எம்.பி.ராம்பாபு, இளைஞர் காங்கிரஸ் மாநில தலை வர் யுவராஜா, திருச்சி மேயர் சுஜாதா, மாவட்ட தலைவர்கள் செல்வராஜ் பாண்டியன், தேவராஜன், தெய்வநாயகம், நெடுஞ்செழிய பாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் சி.ஆர்.சுந்தரராஜன், துணைத்தலைவர்கள் ஆபிர காம், முனியசாமி, சுப்புராம், மாநகர் பொது செயலாளர் டால்பின் சுரேஷ், எஸ்.ஆர்.தங்கராமன்,

பேராசிரியர் மதியழகன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரபாகரன், மாநில செய லாளர் ராஜேந்திர பிரசாத், மேற்கு தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுருளி வேலன், பொது செயலாளர்கள் பூமிநாதன், எட்வர்டு துரை, முன்னாள் மாவட்ட தலைவர்கள் டிராவல்ஸ் முத்துசாமி, பசுமலை ரவி, சுரேஷ்பாபு, பாலாஜி, மாவட்ட துணைத்தலைவர் ராமன், பொதுசெயலாளர்கள் ராஜாங்கம், முருகேசன், முன்னாள் கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, சங்கர்பாபு, மாநில செயலாளர்கள் அன்னபூர்ணா தங்கராஜ், காந்தி, கூடலூர் முருகேசன், பாரத் நாச்சியப்பன், டி.வி.ரமேஷ், மைதீன்பாஷா,

கல்வத் நூர்தின், செய்யது பாபு, விஜயராகவன், கொட்டாம்பட்டி யூனியன் சேர்மன் வி.திலகராஜ், மேலூர் காங்கிரஸ் பிரமுகர் ரவிச்சந்திரன், மேலூர் நகர் மன்ற கவுன்சிலர்கள் முருகன், மகாதேவன் மற்றும் உசிலை உதயகுமார், விமல்ராஜா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments: