போலீஸ் துறையில் சிறப்பாக செயல்படும் அதிகாரிகளை ஊக்கப்படுத்தவும், அவர்களை மேலும் திறம்பட செயல்பட வைக்கவும் பதவி உயர்வு முறைகளில் மாற்றம் கொண்டுவர வேண்டியது அவசியம்,'' என பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
மாநில போலீஸ் டி.ஜி.பி.,க்களின் மூன்று நாள் மாநாடு டில்லியில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் நேற்று கலந்து கொண்டு பேசிய பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது: போலீஸ் துறையில் தற்போது பதவி உயர்வு என்பது சீனியாரிட்டி அடிப்படையில் உள்ளது. இதை மாற்ற வேண்டும். திறமையான செயல்பாடு மற்றும் உத்வேகத்தின் அடிப்படையில், பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும். இப்படி செய்வது போலீஸ் அதிகாரிகளுக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும். குறிப்பாக பயங்கரவாத செயல்களால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு தகுந்த பதவி உயர்வுகளை வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி, போலீஸ் படையினருக்கான உபகரணங்கள் வாங்கும் விஷயத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். தரமான உபகரணங்கள் வாங்குவதோடு, மிக விரைவாகவும் அவற்றை கிடைக்கச் செய்ய வேண்டும். இதற்கு கொள்முதல் நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும். போதுமான பரிசோதனை வசதிகள் உட்பட பல்வேறு வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். இதையெல்லாம் செய்தால், கொள்முதல் செய்வதற்காக கால நேரத்தை வீணடிப்பது குறையும்.
போலீஸ் படையினரின் செயல்பாடு பல வகையிலும் திறமையானதாக இருக்க மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. பயங்கரவாதிகள் ஊடுருவல், பயங்கரவாதம் மற்றும் நக்சல்வாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய துணை ராணுவப் படைகளில் அளிக்கப்பட்ட இடஒதுக்கீடு ஐந்து ஆண்டுகளுக்கு முன், 20 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. இந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்களைக் கொண்டு சில படைப்பிரிவுகளையும் பல மாநிலங்கள் உருவாக்கியுள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர வேண்டும். இதன்மூலம் நாட்டின் சில பகுதிகளில் உள்ள மக்கள், தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக கொண்டுள்ள எண்ணம் மாறும்.
பொதுமக்களின் போராட்டங்களை ஆயுத உதவியின்றி கையாள வேண்டும். இதற்காக புதிய நடைமுறைகளை உருவாக்க வேண்டும். இதுதொடர்பான பரிந்துரைகளை வழங்க உயர்மட்டக் குழு ஒன்றை அமைக்கும்படி மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை கேட்டுக் கொள்வேன். அந்தக் குழுவும் இரண்டு மூன்று மாதங்களில், பரிந்துரைகளை வழங்கும். காஷ்மீரில் பயங்கரவாத செயல்கள் தற்போது ஒடுக்கப்பட்டு விட்டாலும், அங்கு பொது ஒழுங்கு சரியில்லாமல் இருப்பது கவலை அளிப்பதாக உள்ளது.
சவால்கள்: நக்சல்கள் எல்லாம் நம்நாட்டவர்களே. அவர்கள் வன்முறையை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வந்தால், அவர்களுடன் பேச்சு நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. மேலும், நக்சல் வன்முறையால் பாதித்த பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கவும் அரசு உறுதி பூண்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக நாட்டில் போலீசார் மூலம் கையாளப்படும் விவகாரங்கள் எல்லாம் சிக்கலானதாக மாறிக் கொண்டிருக்கின்றன. சமூக பதட்டங்கள், மத தகராறுகள், அதிகரித்து வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், பிராந்திய, மொழி ரீதியான மற்றும் இனி ரீதியான வேறுபாடுகள் எல்லாம் போலீசாருக்கு மிகப்பெரிய சவால்களாக உள்ளன. அரசு சாரா நபர்களின் செயல்பாடுகள், பழமைவாத அமைப்புகள் மற்றும் இடதுசாரி பயங்கரவாதிகளாலும் நிலைமை மேலும் மோசமடைகிறது. இவை எல்லாம் தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
Search This Blog
Thursday, August 26, 2010
போலீஸ் அதிகாரிகள் திறம்பட செயல்பட்டால் பதவி உயர்வு அதிகம் படித்தவை அதிகம் விமர்சிக்க பட்டவை அதிகம் ஈ-மெயில் செய்தவை * ரம்ஜான் சிந்தனைகள் * மனைவியுடன் கள்ளத்தொடர்பால் நண்பனை கொன்றேன் : கொலை வழக்கில் கைதானவர் வாக்குமூலம் * ராகுலின் மவுசு குறைகிறதா? * ஓட்டுப்பதிவு இயந்திர திருட்டு விவகாரத்தில் திருப்பம் * வி.ஏ.ஓ.,வின் போலி சான்றிதழ் கொடுத்த டிராவல் ஏஜன்ட் சிங்கப்பூருக்கு ஓட்டம் * ரம்ஜான் சிந்தனைகள் * சட்டசபை தேர்தலில் 100 இடங்களில் பா.ம.க., போட்டி: ராமதாஸ் * நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி மின்சிக்கனம் தரும் "நீர்வழிச்சாலை' * "காவி பயங்கரவாதம்' வார்த்தை : சிதம்பரத்திற்கு கட்காரி எதிர்ப்பு * ஸ்ரீரங்கத்தில் ஜெ., தரிசனம்:100 ரூபாய் கட்டுகள் காணிக்கை * ரம்ஜான் சிந்தனைகள் * வி.ஏ.ஓ.,வின் போலி சான்றிதழ் கொடுத்த டிராவல் ஏஜன்ட் சிங்கப்பூருக்கு ஓட்டம் * நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி மின்சிக்கனம் தரும் "நீர்வழிச்சாலை' * இரட்டைக் குழந்தைகள் பிறப்பு அதிகரிப்பு ஏன்? டாக்டர்கள் "திடுக்' தகவல் * இந்திய டீன்-ஏஜ் வயதினருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு அதிகம் Click here இ-பேப்பர் AAnmeegam News
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment