Search This Blog

Tuesday, February 14, 2012

தி.மு.க.,வுக்கு இனி வளர்ச்சியில்லை: சொல்கிறார் ராமதாஸ்



தே.மு.தி.க.,வுடன் கூட்டணி வைத்தாலும், தி.மு.க., தேர்தல்களில் வெற்றி பெறாது. தி.மு.க.,வுக்கு இனி வளர்ச்சியில்லை. அக்கட்சி முடிந்து விட்டது,'' என மதுரையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கடுமையாக சாடினார்.

மதுரையில் கட்சியின் "புதிய அரசியல் புதிய நம்பிக்கை' செயல் திட்டத்தை வெளியிட்டு ராமதாஸ் கூறியதாவது: முல்லை பெரியாறு அணை பிரச்னைக்கு ஒரே தீர்வு தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழகத்துடன் இணைப்பது தான். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பா.ம.க., போட்டியிடாது. ஜான்பாண்டியன் கட்சி போட்டியிட்டால் ஆதரிக்கும். வரும் லோக்சபா தேர்தலில் தேசிய, திராவிட கட்சிகளுடன் பா.ம.க.,வுக்கு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. அந்த கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறோம். கடலுள்ளவரை, பூமியுள்ளவரை இந்நிலை தொடரும். திராவிடம் என பெயரில் துவங்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம். தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., ஒரு வேளை கூட்டணி வைத்தாலும், தேர்தல்களில் வெற்றி பெறாது. கடந்த தேர்தலில் தே.மு.தி.க.,வை கூட்டணியில் இழுக்க, தி.மு.க., எவ்வளவோ முயற்சித்தது. இப்போதும் முயற்சிக்கிறது. தி.மு.க.,வுக்கு இனி வளர்ச்சியில்லை. அக்கட்சி முடிந்து விட்டது. தே.மு.தி.க., கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றதால், எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடிந்தது. தனித்து நின்றிருந்தால், ரிஷிவந்தியத்தில் கூட விஜயகாந்த் தேறியிருக்க மாட்டார்

No comments: