Search This Blog

Monday, February 6, 2012

அரசியலில் சோனியா மருமகன் ராபர்ட் வதேரா

காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா, அரசியலில் குதித்தார். காங்கிரசைப் பலப்படுத்த ராகுலுக்கு உதவத் தயார் என்றும் அறிவித்துள்ளார்.உத்தர பிரதேச மாநிலத்தில், இந்த மாதமும், அடுத்த மாதமும் ஏழு கட்டமாகசட்டசபைத் தேர்தல் நடக்கிறது. இதில், முதல் கட்டமாக 55 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. அதே நேரத்தில், ஆறு கட்டமாக தேர்தல் நடக்கவுள்ள மற்ற தொகுதிகளில், மாயாவதி, முலாயம் சிங், ராகுல் மற்றும் பா.ஜ., மூத்த தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். அமேதி தொகுதியில், சோனியாவின் மகளான பிரியங்காவும் கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.ராகுலுக்கு உதவ தயார் :இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேராவும் தற்போது அரசியலில் குதித்துள்ளார். தான் தீவிர அரசியலில் சேர ஆர்வமாக இருப்பதாகவும், காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த ராகுலுக்கு உதவப் போவதாகவும் கூறியுள்ளார்.அமேதி அருகே உள்ள ஜி.எஸ்.எம்., நகருக்கு நேற்று முன்தினம் இரவு, தன் மகளுடன் வந்த ராபர்ட் வதேரா, நேற்று காலை, கவுரி கஞ்ச் என்ற இடத்திலும், பின்னர் சலோன் சட்டசபைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலும், மக்கள்

விரும்பினால், நான் தேர்தலில்காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவரது மகளும் உடன் இருந்தார். அரசியலில் சேர ஆசை:பின்னர் நிருபர்களிடம் பேசிய ராபர்ட் வதேரா கூறியதாவது: போட்டியிடுவேன்.எனக்கு அரசியலில் சேர ஆர்வம் உள்ளது. ராகுல் மற்றும் பிரியங்காவிற்கு எந்த உதவியும் தேவை இல்லை என்றாலும், அவர்களின் குடும்ப உறுப்பினர் என்ற முறையில், ராகுல் தெரிவித்த கருத்துக்களை, இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு எடுத்துக் கூறுவதற்காக வந்துள்ளேன். ராகுலின் செய்தியை மூலை முடுக்கிற்கு எல்லாம் கொண்டு செல்வதன் மூலம், மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.பிரதமர் பதவி தொடர்பாக ராகுலை மையப்படுத்தி கூறும் விஷயங்கள் பற்றி, நான் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. பிரதமராவது தொடர்பான கருத்துக்களுக்கு ராகுல் தான் பதிலளிக்க வேண்டும்.இவ்வாறு ராபர்ட் வதேரா கூறினார்
."பிரதமர் பதவி மீது ஆசையில்லை':உ.பி., மாநில சட்டசபைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், அங்கு தீவிர பிரசாரம் செய்து வருகிறார். வாரணாசியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:நான் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுவதாக, ஒரு தரப்பினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். எனக்கு அந்த ஆசை இல்லை என, என் சகோதரி பிரியங்கா நேற்று(நேற்று முன்தினம்) கூறினார். அவர்

கூறியது தான் உண்மை. பிரதமர் பதவிக்கு நான் ஆசைப்படவில்லை; அது என் விருப்பமும்இல்லை. இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், பிரதமராக வேண்டும் என்ற ஆசை இருக்கும்.ஆனால், எனக்கு உ.பி., மாநிலத்தின் மீது தான் விருப்பம் உள்ளது. இந்த நாட்டில் உள்ள, குறிப்பிட்ட சிலமக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். உ.பி.,யில் உள்ள, 1 சதவீத மக்களாவது என் மீது நம்பிக்கை வைத்திருப்பர் என எதிர்பார்க்கிறேன். இது தான் எனக்கு கிடைத்துள்ள ஒரே நன்மை.இந்த தேர்தலில் காங்கிரசுக்கு மிகக் குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும், மிகக் குறைந்த தொகுதிகள் கிடைத்தாலும் கூட, ஏழை மக்களுக்காக போராடுவதை கைவிட மாட்டேன். எனக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டுவதற்கு, நான்கு அல்லது ஐந்து பேரை அனுப்புவதால், நான் ஓடி விடுவேன் என நினைக்கின்றனர். அது நடக்காது.உ.பி.,யில் தொங்கு சட்டசபை ஏற்பட்டாலும், நாங்கள் எந்த கட்சியுடனும் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைக்க மாட்டோம். ஏழைகளுடனும், சாதாரண மக்களுடனும் மட்டுமே கூட்டணி அமைப்போம். இவ்வாறு ராகுல் பேசினார்.

No comments: