மத்திய அரசு வழங்கும் மானியத்தில்தான் தமிழகத்தில் ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி ரேஷன் திட்டமும், 108 ஆம்புலன்ஸ் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது என மூத்த காங்கிரஸ் தலைவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
இளங்கோவனின் இந்தக் கருத்தை தமிழக அரசு பலமுறை மறுத்ள்ளது. ஒரு ரூபாய் அரிசித் திட்டத்துக்கும் மத்திய அரசுக்கும் சம்பந்தமில்லை என்று திமுக மறுத்து வருகிறது. தெரிவித்தார்.
இந் நிலையில் தேனி அருகே சின்னமனூரில் காமராஜர் சிலையைத் திறந்து வைத்துப் பேசிய இளங்கோவன்,
காமராஜர் ஆட்சியில் கக்கன் உள்பட 5 அமைச்சர்கள் சுயநலமில்லாமல் உழைத்ததால்தான், திமுக உள்பட அனைத்துக் கட்சியினரும் காமராஜர் ஆட்சியை இன்றுவரை பெருமையாகப் பேசுகின்றனர். காமராஜர் தொழில்துறை அமைச்சராக இருந்தபோதுதான், தமிழகத்தில் பல தொழிற்சாலைகள் உருவாகின.
இன்று ஆட்சியில் இருப்பவர்கள், தங்களது குடும்பத்தினரை எவ்வாறு ஆட்சிப் பொறுப்புக்குக் கொண்டு வருவது என்பதில்தான், அதிக நேரத்தைச் செலவிட்டு வருகின்றனர்.
நான் பஞ்சாப் அரசியலை சொன்னேன், நீங்கள் எதாவது நினைத்தால் நான் பொறுப்பல்ல.
காமராஜர் 10,000 நாட்கள் மக்களுக்காகச் சிறையில் இருந்துள்ளார். இன்றைய ஆட்சியாளர்களைப் போல் மக்களுக்கு பணம் கொடுத்தாலோ, நிலம் கொடுத்தாலோ, பெண்களுக்கு நகை கொடுத்தாலோ ஆட்சி நிலைக்காது என்று தெரிந்துதான் காமராஜர் கல்வியைத் தந்தார், மாணவர்களுக்குச் சீருடையும், மதிய உணவையும் தந்தார்.
மதிய உணவுத் திட்டத்திற்கு பல எதிர்ப்புகளையும் மீறி ரூ. 100 கோடியில் திட்டத்தை துவக்கினார் காமராஜர். ஆனால், அப்போது அந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு மானியம் ஒரு பைசா கூட வழங்கவில்லை.
இன்று, தமிழக அரசின் 1 ரூபாய் ரேஷன் அரிசித் திட்டத்துக்கு, மத்திய அரசு ரூ. 7 மானியம் வழங்குகிறது. 108 ஆம்புலன்ஸ் திட்டத் தொகை முழுவதையும் மத்திய அரசு அளித்து வருகிறது.
தமிழகத்தின் நகர்ப்பகுதிகளில் செல்லும் மிதவை பஸ், சொகுசு பஸ்கள் மத்திய நகர்ப்புறத்துறை அமைச்சர் ஜெயபால் ரெட்டி வழங்கியது. ஆனால், இதுபோன்ற செய்திகள் மக்களைச் சென்றடையாமல் தடுக்கப்படுகின்றன.
காங்கிரஸ் கட்சி குடும்பப் பாசத்தைவிட நாட்டுப் பாசம் மிகுந்த கட்சி. சோனியா காந்தி நினைத்திருந்தால் பிரதமர் ஆகியிருப்பார். அவரது மகன் ராகுல்காந்தி துணைப் பிரதமராகிவிட முடியும். மகள் பிரியங்கா டெல்லி முதல்வர் ஆகியிருக்கலாம். மருமகன் ஏதாவது ஒரு மாநிலத்தின் ஆளுநர் ஆகியிருக்க முடியும். ஆனால், பதவிகளை விரும்பாதவர் சோனியாவும் அவரது குடும்பமும்.
காங்கிரஸ் மீது அக்கறை உள்ளவர்களும், காங்கிரஸ் கோஷ்டிகளை நேரில் பார்க்க விரும்புபவர்களும் மதுரைக்கு ஜூலை 31ம் தேதி வாருங்கள் என்றார் இளங்கோவன்.
No comments:
Post a Comment