எண்ணெய் கம்பெனிகள் இழப்பீட்டைத் தவிர்க்க மானியம் தருவதை விட, பள்ளிக்கூடம், மருத்துவமனை ஆகியவை கட்ட அரசு பணம் செலவழிக்கலாம். எண்ணெய் கம்பெனிகள் இதனால் லாபம் சம்பாதிக்கின்றன; மாறாக பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிக் குறைப்பு பற்றி அரசுகள் பேசுவது இல்லை' என்று திட்டக்கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா கூறினார்.
எண்ணெய் கம்பெனிகள் அதிக லாபம் சம்பாதிக்கின்றன என்று இடதுசாரி கட்சிகள் கூறுகின்றன. அவர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை மானியமாக அரசு தருகிறது. அதாவது மற்ற பயனீட்டாளர்களுக்கு தரப்படும் சலுகைக்காக அந்த நஷ்டத்தை ஈடு செய்கிறது அரசு. கடந்த 2009-2010ல் ஐ.ஓ.சி., நிறுவனம் ஈட்டிய லாபம் 10 ஆயிரத்து 220 கோடி ரூபாய். நாம் இப்படி எண்ணெய் கம்பெனிகள் படும் நஷ்டத்திற்கு மானியம் தருவதை விட, பள்ளிகள், மருத்துவமனைகள் கட்ட நிதி தரலாம்.தவிரவும் பெட்ரோல், டீசல் மீது அதிக அளவில் வரி விதிப்பு இருக்கிறது. அப்படியானால், வருவாய் எப்படி வரும் என்று கேட்கலாம். வேறு வழியில் வரி விதித்து விட்டு இந்த வரியை நீக்கலாம். ஆனால், இக்கருத்தை எத்தனை பேர் ஏற்பர்?
அதுவும் பெட்ரோலில் அதிக வருவாய் ஈட்டி அதில் கிடைப்பதை மண்ணெண்ணெய், சமையல் எரிவாயுவுக்கு தரலாம். மக்கள் தங்கள் சொந்த வாகனங்களின் பயன்பாட்டை குறைத்துக் கொண்டு, அரசு பஸ் மற்றும் பொதுவான வாகன வசதிகளை நாடலாம்.
கமல்நாத்திற்கு பதில்: அதேபோல, சாலை போட்டு நிர்வாகம் செய்யத் தெரிந்தவர்கள் மட்டுமே அரசை நிர்வகிக்க வேண்டும்; வெறுமனே ஆசனத்தில் அமர்ந்தபடி தடிமனான புத்தகங்களை உருவாக்குவோரால் பயனில்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் கமல் நாத் கூறியதை ஏற்க முடியாது. ஒரு புத்தகத்தை உருவாக்குவதும், திட்டமிட்டு சாலை போடுவதும் இரு வேறு வேறு தனிப்பட்ட விஷயங்கள்.சரியான முறையான கணக்குகள் திட்டமிடாதபடி அழகான சாலைகள் போட இயலாது. இலக்கை நிர்ணயிக்கும் போது அதற்கான திட்டமிடலும் தேவை. அதனால், கமல்நாத் கருத்தை ஏற்க முடியாது. எல்லா அமைச்சகங்களும் தங்கள் தேவையை விட 100 சதவீதம் கூடுதலாகக் கேட்கின்றன. அந்த அளவைக் குறைப்பது திட்டக்கமிஷன் வேலை.இவ்வாறு மாண்டேக் சிங் அலுவாலியா கூறினார்.
No comments:
Post a Comment