என்.எல்.சி., தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதையடுத்து, நேற்று நள்ளிரவே தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்.புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்துவது, நிலுவைத் தொகைகளை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி., தொழிலாளர்கள், கடந்த 30ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் செய்து வந்தனர்.
இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர, எல்.எல்.சி., நிர்வாகம், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர் துறை அதிகாரிகள் மட்டத்தில் நடத்த முத்தரப்பு பேச்சுவார்த்தை, ஐந்தாவது நாளாக சென்னையில் உள்ள நெய்வேலி இல்லத்தில் நேற்று தொடர்ந்து நடந்தது. காலை 11 மணிக்கு துவங்கிய பேச்சுவார்த்தை நள்ளிரவு 12.30 மணி வரை நீடித்தது. இதில், தொழிலாளர்களின் மூன்று அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற என்.எல்.சி., நிர்வாகம் ஒப்புக்கொண்டது. இதையடுத்து, தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று, நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் பணிக்கு திரும்பினர்.
No comments:
Post a Comment