சீனாவிடம் அமெரிக்கா மூன்று லட்சம் கோடி டாலர் கடன் வாங்கியுள்ளது'', என அமெரிக்க பேராசிரியர் சாலமன் செல்வம் பெருங்குடியில் பேசினார்.
மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியில் பொருளியல், வணிகவியல் துறைகள் சார்பில் நடந்த சிறப்பு கருத்தரங்கிற்கு முதல்வர் கண்ணன் தலைமை வகித்தார். பொருளியல் துறை தலைவர் ஜெயக்குமார் வரவேற்றார்.
அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள கிளாப்லின் பல்கலை., சமூகவியல் துறை பேராசிரியர் சாலமன் செல்வம் பேசுகையில், ""உலகமயமாதலுக்கு பின் அமெரிக்க பொருளாதாரம் பெருமளவு சரிந்துவிட்டது. இதனை சீனா பயன்படுத்தி, உலகின் மாபெரும் சந்தை பொருளாதார வளமிக்க நாடாக மாறி வருகிறது. பெருமளவில் நடந்த வங்கி மோசடிகள், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளன. உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள மோசமான தாக்கத்தால், அமெரிக்க பொருளாதாரம் பின்னோக்கி செல்கிறது. சமீபத்தில் சீனாவிடம் மூன்று லட்சம் கோடி டாலர் அமெரிக்கா கடனாக பெற்றுள்ளது. இந்த கடனை அடைக்க முடியாது. அமெரிக்க மக்கள் தொகை 380 மில்லியனில் பத்து சதவீத மக்களுக்கு சமூக பாதுகாப்பு இல்லை. அடிப்படை மற்றும் காப்பீடு திட்டம் 40 சதவீத மக்களுக்கு இல்லை. அமெரிக்காவின் இந்த பொருளாதார சரிவை இந்தியா பயன்படுத்தி, ஏற்றுமதியை அதிகரிக்கவேண்டும்'' என்றார். வணிகவியல் துறை தலைவர் காமராஜ் நன்றி கூறினார். பின், மாணவர்களுடன் கலந்துரையாடல் நடந்தது.
No comments:
Post a Comment