Search This Blog

Showing posts with label மேலவை. Show all posts
Showing posts with label மேலவை. Show all posts

Thursday, October 14, 2010

மேலவை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்: சிறப்பு முகாம்கள் தேதி மாற்றம்

மேலவை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதற்கு, வரும் 16, 17 தேதிகளில் நடத்த இருந்த சிறப்பு முகாம்கள், வரும் 23, 24ம் தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளன. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியதாவது: மேலவை தேர்தலுக்கான ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள் தொகுதிக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிக்காக, தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சிகளில் மண்டல அலுவலகங்களில் வரும் 16, 17, 30, 31ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை நாட்கள் வருவதால், 16 மற்றும் 17ம் தேதிக்கு பதிலாக, 23 மற்றும் 24ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். மற்றபடி, 30 மற்றும் 31ம் தேதிகளில் திட்டமிட்டபடி முகாம்கள் நடக்கும். இந்த முகாம்களில், அலுவலக நேரங்களில் விண்ணப்பங்களை பெற்று, அதை பூர்த்தி செய்து அங்கேயே சமர்ப்பிக்கலாம். ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் ஓட்டுப் போட தகுதியுள்ளவர்கள், இரண்டு படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.