மாற்றங்கள்
Search This Blog
Tuesday, June 5, 2012
போதிய நிதி இல்லாமல், சிந்துவெளி ஆய்வுகள் தேங்கும் நிலை ஏற்பட்டு, ஆய்வாளர்கள் கவலை அடைந்ததாக ஒரு செய்தி வந்திருக்கிறதே
சிந்துவெளி ஆராய்ச்சியில் கிடைத்த முத்திரைகள் அனைத்தையும் தொகுத்து, அவற்றின் குறியீடுகளை ஆய்வு செய்து, 1977ல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் நூல் ஒன்றை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, 1977க்குப் பின் கிடைத்த முத்திரைகளைத் தொகுத்து, அவற்றின் புகைப்படங்கள் அடங்கிய நூல் ஒன்றை 2010ல், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த தமிழ் அறிஞர் அஸ்கோ பர்போலா வெளியிட்டார்.உறுதி செய்யப்பட்டுள்ளதுதமிழகத்தில் கோவை மாவட்டம் சூலூர், செங்கல்பட்டு அருகே உள்ள சாணுர், மயிலாடுதுறைக்கு அருகே உள்ள செம்பியன் கண்டியூர் ஆகிய ஊர்களில், சிந்துவெளி காலத்தோடு ஒப்பிடக்கூடிய பொருள், அகழாய்வு மூலம் கிடைத்துள்ளது. இதுவரையில் நடந்த ஆராய்ச்சியின் மூலம், சிந்து வெளியில் திராவிடப் பண்பாடு தான் நிலவியது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த ஆராய்ச்சி தொடர வேண்டும். பல உண்மை விவரங்கள் வெளி உலகத்திற்குக் கொண்டுவரப்பட்டு, திராவிட நாகரிகத்தின் அசைக்க முடியாத ஆதாரங்கள் நிலைநாட்டப்பட வேண்டும். அதற்கு, நிதி ஒரு தடையாக இருந்துவிடக் கூடாது. மத்திய, மாநில அரசுகள் சிந்துவெளி ஆராய்ச்சிக்குத் தேவையான நிதி உதவிகளை வழங்க முன்வர வேண்டும்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
Monday, June 4, 2012
அரசுக்கு எதிராக சில சக்திகள் சதி: காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் சோனியா
"காங்கிரசுக்கு எதிரான சில சக்திகளும், எதிர்க் கட்சிகளும் இணைந்து, மத்திய அரசு மீதும், பிரதமர் மீதும், அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. இது, நமக்கு சோதனைக் காலம். இந்த சதியை முறியடிக்க வேண்டுமெனில், கோஷ்டி மோதலை கைவிட்டு, கட்சியினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்,'' என, காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், கட்சித் தலைவர் சோனியா பேசினார்.
பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், அக்கட்சியின் செயற்குழு கூட்டம், நேற்று டில்லியில் நடந்தது. இதில், பிரதமர் மன்மோகன் சிங், கட்சித் தலைவர் சோனியா, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொண்டனர்.
ஆதாரமில்லை:
இதில், கட்சித் தலைவர் சோனியா, துவக்க உரையின் போது பேசியதாவது:மத்திய அரசின் மீதும், பிரதமர் மீதும், காங்கிரசுக்கு எதிரான சக்திகளும், எதிர்க் கட்சிகளும் இணைந்து, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன.ஜனநாயக அமைப்பில், ஆளும் கட்சிக்கு எதிராக செயல்படுவது தான் எதிர்க் கட்சிகளின் பணி. ஆனால், சில சக்திகளும், இங்குள்ள எதிர்க் கட்சிகளும் செயல்படும் முறையை பார்த்தால், அரசுக்கு எதிராக, இவர்கள் சதி செய்வது போல் உள்ளது.நம் மீதான இந்த குற்றச்சாட்டுகளை முறியடிக்க, தீவிரமாக செயல்பட வேண்டும். தற்போது, சர்வதேச அளவில், பொருளாதார நெருக்கடி உள்ளது. இது, சாதாரண மக்களை பாதிக்கிறது. நம் நாடும், இந்த நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஒத்துழைப்பு இல்லை:மத்திய அரசு செயல்படுத்தும் கொள்கைகளை நடைமுறைப்படுத்த, காங்கிரஸ் அல்லாத மாநில அரசுகளிடம் இருந்து, போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.இது, சரியான ஜனநாயக நடைமுறை இல்லை. இந்தாண்டில், சில மாநிலங்களில், சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது. அதைத் தொடர்ந்து, 2014ல், லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. கட்சியை பலப்படுத்துவதற்கு, இது தான் சரியான நேரம்.
சோதனை காலம்:கட்சியில் உள்ள அனைத்து தரப்பினரும், ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். கட்சியினர், தங்கள் திறமையின் பெரும் பகுதியை, கோஷ்டி மோதலுக்கும், தேவையற்ற விஷயங்களுக்கும் செலவிடுகின்றனர்.கட்சியின் வளர்ச்சிக்காக, இந்த திறமையை பயன்படுத்தினால், கட்சி இரண்டு மடங்கு வளர்ச்சியை எட்டி விடும். அரசியல் கட்சி என்று வந்து விட்டால், தாங்கள் சார்ந்துள்ள அமைப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமே தவிர, தங்களின் தனிப்பட்ட விஷயங்களுக்கு, யாரும் முக்கியத்துவம் அளிக்கக் கூடாது.இந்த தவறை உணராவிட்டால், மிகப் பெரிய விளைவை சந்திக்க வேண்டியிருக்கும். இது, நமக்கு சோதனையான நேரம். எனவே, மிகவும் எச்சரிக்கையுடனும், சவாலுடனும் பிரச்னைகளை எதிர்கொண்டு, சமாளிக்க வேண்டும். எந்த ஒரு சவாலான சூழலையும் எதிர்கொள்ளும் திறன், காங்கிரஸ் கட்சியினருக்கு உள்ளது.இவ்வாறு சோனியா பேசினார்.
தீர்மானம்:செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொண்டு வந்தார். இதில் முக்கியமாக, ஜனாதிபதி வேட்பாளரை முடிவு செய்யும் அதிகாரத்தை, சோனியாவுக்கு அளிக்க வகை செய்யும் தீர்மானமும் கொண்டு வரப்பட்டு, தாக்கல் செய்யப்பட்டது.நிலக்கரி முறைகேடு குறித்த பிரச்னையில், அன்னா ஹசாரே குழுவினரும், எதிர்க் கட்சிகளும், பிரதமர் மன்மோகன் சிங் மீது, குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ள நிலையில், பிரதமருக்கு ஆதரவாக, காங்கிரஸ் தலைவர் சோனியா பேசியுள்ளது, பிரதமருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக, காங்., வட்டாரங்கள் தெரிவித்தன.
"தினமும் பொய் பிரசாரம்' :
செயற்குழு கூட்டத்தில், பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:காங்கிரஸ் அரசுக்கு எதிராக, தினமும், நம்ப முடியாத பொய் குற்றச்சாட்டுகளை, சிலர் கூறி வருகின்றனர். அரசுக்கு எதிராக பொய் பிரசாரம் செய்கின்றனர்.வானைத் தொடும் அளவு தொகையிலான கறுப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்றும் கூறுகின்றனர். இதில், சிறிய அளவில் கூட உண்மை இல்லை. பொது வாழ்வில், ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில், காங்கிரஸ் அரசு உறுதியுடன் உள்ளது.அரசின் நடவடிக்கைகள் வெளிப்படையாகவும், பொறுப்புடனும் இருக்க வேண்டும் என்பதற்காக, தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஊழலுக்கு எதிராக, நாங்கள் எடுத்துள்ள நடவடிக்கை, இதை நிரூபித்துள்ளது. சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.
Subscribe to:
Posts (Atom)